ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு கூடுதலாக 57.90 கோடி டாலர் (ரூ. 3,480 கோடி) அபராதம் விதித் துள்ளது. கிருஷ்ணா கோதாவரி படுகையில் குறைவாக இயற்கை எரிவாயு உற்பத்தி செய்து வருவதற்காக இந்த அபராதத்தை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் விதித்துள்ளது. இத்தகவலை மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
இப்போது விதிக்கப்பட்ட கூடுதல் அபராதத் தொகையோடு சேர்த்து இந்நிறுவனம் ஒட்டுமொத்தமாக 237 கோடி டாலர் அபராதம் செலுத்த வேண்டும்.
கிருஷ்ணா கோதாவரி (கேஜி) படுகையில் இயற்கை எரிவாயு எடுப்பதற்கான உற்பத்தி பகிர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவது. அதாவது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அதன் கூட்டாளி நிறுவனங்களான பிரிட்டிஷ் பெட்ரோலியம் பிஎல்சி மற்றும் நிகோ ரிசோர்சஸ் ஆகிய நிறுவனங்கள் இங்கு எரிவாயு எடுப்பதற்கு செய்துள்ள முதலீடு மற்றும் நிர்வாகச் செலவு ஆகியவற்றை எரிவாயு விற்பனை மூலம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு முன்பாக அரசுக்கு லாபத் தொகையை பகிர்ந்து அளிக்க வேண்டும்.
இதன்படி அரசுக்கு வரவேண்டிய லாபத் தொகை 2010-11-ம் நிதி ஆண்டிலிருந்து 2013-14-ம் நிதி ஆண்டு வரை 19 கோடி டாலராக கணக்கிடப்பட்டுள்ளது.
மக்களவையில் பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுத்துமூலமாக அளித்த விளக் கத்தில் திருபாய் 1 முதல் 3 எண் எரிவாயுக் கிணறு மற்றும் கேஜி-டி6 எண்ணெய் வயல் ஆகியவற்றி லிருந்து 8 கோடி கன அடி கியூபிக் மீட்டர் எரிவாயுவை தினசரி உற்பத்தி செய்ய வேண்டும். ஆனால் ரிலையன்ஸ் நிறுவனம் தினசரி 3 கோடி கன அடி கியூபிக் மீட்டர் எரிவாயுவை மட்டுமே உற்பத்தி செய்கிறது. இது ஒவ்வொரு ஆண் டும் குறைந்துள்ளது. இந்த ஆண்டு எரிவாயு உற்பத்தி 80 மில்லியன் கன அடி கியூபிக் மீட்டராக உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
பெட்ரோலிய அமைச்சகம் கடந்த 10-ம் தேதி குறைவான உற்பத்திக்காக 57 கோடி டாலர் அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப் பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் இப்போது தீர்ப்பாயத்தின் முன் நிலுவையில் உள்ளது என்று பிரதான் தெரிவித்தார்.
இந்நிறுவனத்திடமிருந்து இயற்கை எரிவாயுவைப் பெறும் மத்திய அரசு நிறுவனங்களான கெயில் மற்றும் சென்னை பெட்ரோ லியம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் ரிலையன்ஸுக்கு எரி வாயுவைப் பெறுவதற்காக செலுத் தும் தொகையை அரசு கஜானா வுக்கு செலுத்தும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளன. எரிவாயுவுக்கு செலுத் தும் கட்டணத்தில் 50 சதவீத தொகையை இந்த இரண்டு நிறுவனங்களும் அரசுக்குச் செலுத்தும் என்று பிரதான் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக