வெள்ளி, 29 மே, 2015

கோழிப் பண்ணைகள் செய்யும் முறைகேடுகள்!

அதீத லாபத்துக்கு ஆசைப்பட்டு கோழிப் பண்ணைகள் செய்யும் முறைகேடுகள்!
கோழிக்கறியைச் சாப்பிடும் யாரும் கோழிப்பண்ணை எப்படிச் செயல்படுகிறது, கோழிகள் எப்படி வளர்க்கப்படுகின்றன, அங்கு சுகாதாரம் எப்படி இருக்கிறது என்ற கவலையே இல்லாமல், வேளாவேளைக்குக் கோழிக் கறியை அவசர அவசரமாக உள்ளே தள்ளுவது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.
இங்கிலாந்தின் மேற்குப்பகுதி நெடுகிலும் மிகப் பிரம்மாண்டமான ‘கோழி ஆலைகள்’ முளைத்து வருகின்றன. ‘பண்ணைகள்’ என்று கூறாமல் ‘ஆலைகள்’ என்று கூறுவதற்குக் காரணம், இவை ஆலைகளைப் போலவே செயல்படுவதுதான். நரகம்கூடப் பரவாயில்லை, இந்த ஆலைக்குள் நுழைந்தவுடனேயே உங்களுக்கு வாந்தி வருவதைப் போல புரட்டல் ஏற்படும். மூக்கைத் துளைக்கும் துர்நாற்றம் மட்டுமல்ல, கண்ணுக்கு எதிரில் தென்படும் அசிங்கங்களாலும்தான்.
பண்ணைகளா தொழிற்சாலைகளா?
மிகப் பெரிய 2 பிராய்லர் ஆலைகள் ஹெர்ஃபோர்ட் ஷைரின் தங்கப் பள்ளத்தாக்கில் திட்டமிடப்பட்டுவருகின்றன. பிரிட்டனில் உள்ள மிக அழகான இடங்களில் இதுவும் ஒன்று. இந்த ஆலைகளின் ஒவ்வொரு கொட்டகையும் 90 மீட்டர்கள் (279 அடி) நீளம். 40,000 கோழிகளை இங்கே வளர்க்க முடியும். 40 நாட்களுக்கு ஒரு முறை இந்தக் கோழிகள் வெளியே எடுக்கப்பட்டு, கொல்லப்பட்டு, இறைச்சி எடுக்கப்படும். பிரிட்டனில் இப்போதைக்குச் சுமார் 2,000 கோழி ஆலைகள் இருக்கின்றன. கடந்த 40 ஆண்டுகளில் இறைச்சியின் தேவை இரண்டு மடங்காகிவிட்டது. ஆலைகளில் ஓசையும் தூசும் துர்வாடையும் வாகனங்களின் இடையறாத போக்குவரத்தும் இருக்கும். எல்லாமே இயந்திரமயமாகிவிடுவதால் தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆனால், அவர்கள் அருவருப்பான வேலைகளைச் செய்ய வேண்டும். தினமும் செத்துவிழும் கோழிகளை எடுத்துவந்து பீப்பாய்களில் அடைக்க வேண்டும். எச்சங்களும் இறகுகளும் பரவிக்கிடக்கும் தரையிலிருந்து கோழிகளைச் சேகரிக்க வேண்டும். எல்லாக் கோழிகளும் பிடிக்கப்பட்டு வெட்டுவதற்கு எடுத்துச் செல்லப்பட்ட பிறகு, தரையைச் சுரண்டி, தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும்.
அப்போது கிளம்பும் புழுதியில் கோழிகளின் எச்சம், அவற்றின் உடல்களிலிருந்து உதிர்ந்த செதில் போன்ற தோல், சிறு பூச்சிகள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், அகநச்சுப் பொருட்கள், புறநச்சுப் பொருட்கள், கால்நடைகளுக்கான மருந்துகளின் எச்சம், பூச்சிமருந்துகளின் எச்சம், அம்மோனியா சல்பைடு, ஹைட்ரஜன் சல்பைடு போன்ற அனைத்தும் கலந்திருக்கும். இது மிகவும் கொடிய நச்சுக் கலவை. இந்தக் குப்பையைப் பெருக்கும் கோழிப்பண்ணைத் தொழிலாளர்களில் 15% பேர் கடுமையான மார்புச் சளியால் பாதிக்கப்படுகின்றனர்.
முறைகேடுகளின் காவல் தெய்வங்கள்
இந்தக் கோழி ஆலைகளின் கூரைகள், உள்ளே இருக்கும் நச்சுக்காற்றை வெளியேற்றும் வசதிகள் இல்லாதவை. இருந்தும் இதை பிரிட்டன், ‘மிகச் சிறந்த தொழில்நுட்பத்துடன் அமைந்த கூரைகள்’ என்று பெருமை பேசுகிறது. ஐரோப்பியக் கண்டத்தில் எந்த நாட்டிலும் இப்படியொரு அவலம் கிடையாது. இதுமட்டும் பண்ணையாக இல்லாமலிருந்தால் உள்ளிருக்கும் நச்சுக்காற்றை அவ்வப்போது வெளியேற்றும் நவீன காற்றுப் போக்கிகள் பொருத்தப்படாவிட்டால், இந்த ஆலைக்கே அனுமதி கிடைத்திருக்காது. இதில் உள்ளேயிருக்கும் தூசுகளை மட்டுமல்ல, துர்நாற்றத்தையும் அவ்வப்போது வெளியேற்றும் ஏற்பாடு மிகமிக அவசியம். ஆனாலும், ஆதிக்க சக்திகள் இந்தத் தொழிலுக்குக் காவல் தெய்வங்களாக இருப்பதால் இந்த முறைகேடுகள் கண்டுகொள்ளப்படுவதே இல்லை. இந்த ஆலைகள் ஆலைச் சட்டக் கட்டுப்பாடுகளிலிருந்தும் திட்டமிட்ட அமைப்பு முறைகளிலிருந்தும் வரி விதிப்பிலிருந்தும் விலக்கு பெற்றவை. ஹெர்போர்ட்ஷைர் கவுன்டி கவுன்சில், இந்தப் பண்ணைகளைப் பள்ளிகளுக்குப் பக்கத்தில்கூட அமைக்க அனுமதி வழங்கிவிட்டது. இதிலிருந்து வெளியாகும் நச்சுப் புழுதி குறித்தோ துர்நாற்றம் குறித்தோ அது கவலைப்படவில்லை.
கொழுக்க வைக்கும் கொடூரம்
கோழி ஆலைகளுக்குள் நடப்பதெல்லாம் கொடூரம். மிக வேகமாக வளர்ந்து விற்பனைக்குத் தயாராக வேண்டுமென்பதால், தீனியைத் திணித்து நகர விடாமல் நெருக்கமாக அடைத்துவைக்கிறார்கள். உடலின் எடை அதிகமாகிக்கொண்டே போவதால் நடக்கக்கூட முடியாமல் இவை கீழே கொட்டிக்கிடக்கும் ரசாயன, பூச்சிமருந்து, எச்சம், தீனி ஆகியவை கலந்த கலவை மீதே படுத்துவிடுகின்றன. பெரும்பாலான கோழிகளின் பாதங்கள் ரசாயனங்கள் காரணமாக வெந்துவிடுகின்றன. மார்பில் சதை கிழிந்து ரத்தம் வடிகிறது. தோலை உரித்து வெட்டிய பிறகு அவற்றின் எடை, தோற்றத்தைப் பொறுத்து வகைப்படுத்துகிறார்கள். இதில் ‘ஏ’ கிரேடு என்று வகைப்படுத்துவதை முழுதாக அப்படியே ‘பேக்’ செய்கிறார்கள். மற்றவற்றைக் கீறியும் வெட்டியும் எரித்தும் பாகம் பாகமாகச் சிதைக்கிறார்கள். சில உறுப்புகளைத் தனியே வெட்டியெடுத்து தனி விலை வைத்து விற்கிறார்கள்.
இந்த ஆலைகளால் தொற்றுநோய்கள் வேகமாகப் பரவுகின்றன. பிராய்லர் கோழிகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை ஊட்ட மருந்துகளை ஊட்டுகின்றனர். இந்த மருந்துகளைக்கூட டாக்டர்களின் பரிந்துரைப்படி, அவர்களுடைய மேற்பார்வையில்தான் அளிக்க வேண்டும். ஆனால், அது தொடர்பான ஆவணங்கள் ஆலைகளிடமும் இல்லை, அரசிடமும் இல்லை. இந்தக் கோழிகளுக்கு ஊட்டப்படும் நோய் எதிர்ப்புச் சக்தி மருந்துகள் அவற்றின் இறைச்சியில் கலந்துவிடுகின்றன. கோழி இறைச்சியைச் சாப்பிடும் மனிதர்கள் உடலிலும் அந்த மருந்துகள் சேர்கின்றன. ஏதேனும் வியாதிகளுக்காக மருந்து சாப்பிடும்போது அது பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. அவர்களுடைய உடலில் புகுந்த நோய் எதிர்ப்புக் கிருமிகள், சாதாரண நோய் எதிர்ப்பு மருந்துகளுக்குக் கட்டுப்பட மறுக்கின்றன. எனவே, அவர்களை நோய் தாக்கினால் கட்டுப்படுத்துவதே பெரும்பாடாகிவிடுகிறது.
அரசின் அலட்சியம்
இந்தக் கோழிகளுக்குப் பெரும்பாலும் சோயா மொச்சைதான் உணவாகத் தரப்படுகிறது. இதைப் பயிரிடுவதற்காகக் காடுகளை அழித்து பயிர் சாகுபடி செய்கிறார்கள். எத்தனை பிராய்லர் ஆலைகள் இருக்கின்றன என்ற புள்ளிவிவரம் உள்ளாட்சி அமைப்பிடம் இல்லை. மக்களைக் கேட்டால், கடந்த 12 மாதங்களில் மட்டும் 42 பிராய்லர் ஆலைகள் முளைத்திருப்பதாகக் கூறுகின்றனர். அரசின் புள்ளிவிவரமோ 2000 முதலே 21 ஆலைக்கு மட்டுமே அனுமதி கொடுத்திருப்பதாகத் தெரிவிக்கிறது. 2010 முதல் 31 புதிய ஆலைகளுக்கு ஒப்புதல் தந்திருப்பதாகப் பிறகு அதுவே ஒப்புக்கொள்கிறது. இந்தக் கோழி ஆலைகளை எப்படிக் கட்டுப்படுத்த வேண்டும், எப்படி நிர்வகிக்க வேண்டும் என்ற உத்தியெல்லாம் அரசிடம் இல்லை. இந்த ஆலைகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கேடுகுறித்து மதிப்பிட வேண்டும் என்றுகூட அரசு நினைக்கவில்லை.
அப்படியானால், கோழி எப்படி வளர்க்கப்பட வேண்டும்? ஆலைகளில் வைத்து வளர்க்காமல் சுதந்திரமாகத் திறந்த வெளியில் சுற்றித்திரியுமாறு (நாட்டுக் கோழிகளாக) வளர்க்க வேண்டும். ஆனால், இறைச்சிக்காகவும் பாலுக்காகவும் கால்நடைகளையும் கோழி போன்ற பறவையினங்களையும் வளர்க்கிறவர்கள் குறுகிய காலத்தில் நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் இயற்கைக்கு முரணாகத் தீனி கொடுத்தும் மருந்துகளை உள்செலுத்தியும் நாசப்படுத்துகிறார்கள்.
கோழி வளர்ப்பை புத்திசாலித்தனமாக செய்யத்தான் முடியவில்லை. உண்பதையாவது குறைத்துக்கொள்ளலாம் அல்லவா? கோழியிறைச்சியால் நமக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளை இப்படித்தான் குறைத்துக்கொள்ள முடியும். கோழி சாப்பிடாமல் பெரும்பாலானவர்களால் இருக்கவே முடியாது என்று தெரியும். நம்முடைய பாட்டனும் முப்பாட்டனும் கோழி இறைச்சி சாப்பிட்டவர்கள்தான். ஆனால், அப்போது கோழி இறைச்சி உருவான விதமும் இப்போது உருவாகும் விதமும் வேறல்லவா?
© ‘தி கார்டியன்’, சுருக்கமாகத் தமிழில்: சாரி

புதன், 27 மே, 2015

உதவித் தொகையுடன் அறிவியல் படிக்கலாம்

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களில் படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களை அறிவியல் பக்கம் இழுக்கும் வகையில் ஒரு சிறப்பு அறிவியல் உதவித்தொகைத் திட்டத்தை (Kishore Vaigyanik Protsahan Yojana-KVPY) மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயல்படுத்திவருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் மூன்று பிரிவுகளில் (Stream SA, Stream SX, Stream SB) மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு மாதாமாதம் பி.எஸ்சி படிக்க ரூ.5 ஆயிரமும், எம்.எஸ்சி படிக்க ரூ.7 ஆயிரமும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது தவிர, தனியாக இளங்கலை மாணவர்களுக்கு எதிர்பாராச் செலவுக்காக ஆண்டுக்கு ரூ.20 ஆயிரமும், முதுகலை மாணவர்களுக்கு ரூ.28 ஆயிரமும் வழங்கப்படும்.
மூன்று பிரிவினர்
Stream SA என்பது பிளஸ் ஒன் மாணவர்களுக்கானது. அவர்கள் 10-ம் வகுப்பில் கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தில் குறைந்தபட்சம் 80 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள் என்றால் 70 சதவீதம் போதும்.
இதேபோல, Stream SX என்பது பிளஸ்-2 மாணவர்களுக்கானது. அவர்களும் மேற்கண்ட மதிப்பெண் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். Stream SB என்பது முதல் ஆண்டு பி.எஸ்சி படிக்கும் மாணவர்களுக்குரியது. பிளஸ்-2வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் 60 சதவீத மதிப்பெண்களும் (இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் என்றால் 50 சதவீதம்) பெற்றிருக்க வேண்டும். இதே மதிப்பெண் தகுதி முதல் ஆண்டு பட்டப் படிப்பில் இருக்க வேண்டியது அவசியம்.
தேர்வுக்கான தேதி
மேற்சொன்ன மூன்று பிரிவுகளிலும் தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்வதற்காகத் திறனறித்தேர்வு (Aptitude Test) நடத்தப்படும். இந்தத் தேர்வுக்கெனக் குறிப்பிட்ட பாடத்திட்டம் நிர்ணயம் செய்யப்படவில்லை என்ற போதிலும் பொதுவாக மாணவர்களின் புரியும் திறனையும், ஆராயும் திறனையும் சோதிக்கும் வகையில் கேள்விகள் அமைந்திருக்கும். 10, 11, 12-ம் வகுப்புகள் மற்றும் முதல் ஆண்டு பட்டப் படிப்பு தரத்தில் கேள்விகளை எதிர்பார்க்கலாம்.
2015-ம் ஆண்டுக்கான மாணவர் அறிவியல் உதவித்தொகை திட்டத்துக்கான தேர்வு நவம்பர் 1-ம் தேதி நடத்தப்பட இருக்கிறது. இதற்கு ஜூலை 12-ம் தேதி முதல் ஆன்லைனில் (www.kvpy.org.in ) விண்ணப்பிக்கலாம். தேர்வு மற்றும் முழு விவரங்கள் அடங்கிய அறிவிப்பு நாளிதழ்களில் ஜூலை 2-ம் தேதி வெளியாகும்.
இந்த ஆண்டு (2015-2016) 11-ம் வகுப்பு அறிவியல் பிரிவில் சேரும் மாணவர்கள், பிளஸ் 2 செல்பவர்கள் (கணிதம், அறிவியல் பிரிவு) பி.எஸ்சி படிப்பில் சேர இருக்கும் மாணவர்கள் ஆகியோர் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட இணையதளத்தில் மாதிரித் தேர்வையும் (Mock Examn) ஆன்லைனில் எழுதலாம்.

http://ta.vikaspedia.in/


About Nehru

நேருவின் இடத்தில் வேறு யார் இருந்திருந்தாலும் இவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டிருக்க முடியாது!
நேருவின் வாழ்க்கையிலிருந்து ஒரு சம்பவத்தை ராமச்சந்திர குஹா தனது கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறார்.
அது 1942-ம் ஆண்டு. காந்தி தனது ஆசிரமத்தில் காங்கிரஸ் கூட்டம் ஒன்றை நடத்துகிறார். அந்தக் கூட்டம் முடிந்தவுடன் அலகாபாத் செல்வதற்காக ரயிலைப் பிடிக்க வேண்டிய அவசரத்தில் நேரு கிளம்புகிறார். ‘சீக்கிரமாகப் போய் ரயிலைப் பிடிப்பதற்குக் கடவுள் உன்னை ஆசிர்வதிப்பாராக’என்று கஸ்தூர் பா, நேருவை ஆசிர்வதித்திருக்கிறார். அந்த அவசரத்திலும் நேருவுக்குக் கோபம் தலைக்கேறுகிறது. ‘காட்டுமிராண்டித்தனமான போர்களை அனுமதிப்பவர்தான் கடவுளா? விஷவாயு கொண்டு யூதர்கள் படுகொலை செய்யப்படுவதை அனுமதிப் பவர்தான் கடவுளா? ஏகாதிபத்தியமும் காலனியாதிக்கமும் வேட்டையாட அனுமதிப்பவர்தான் கடவுளா?’ என்றரீதியில் நேரு பொரிந்துதள்ளியிருக்கிறார். சுற்றிலும் அப்படியொரு அமைதி. கஸ்தூர் பாவை எதிர்த்துப் பேசும் தைரியம் காந்திக்குக்கூடக் கிடையாது. சங்கடமான இந்தச் சூழலில் காந்தி நுழைகிறார், “பா, ஜவாஹர்லால் என்ன சொல்லியிருந்தாலும் நம்மையெல்லாம்விட கடவுளுக்கு மிகவும் நெருக்கமானவர் அவர்தான்” என்கிறார்.
நிலைமையைச் சமாளிப்பதற்காகவோ, நேருவைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காகவோ காந்தி சொன்ன வார்த்தைகளில்லை இவை. அப்படியெல்லாம் ஒருபோதும் சொல்லக்கூடியவரல்ல காந்தி. பிறகு ஏன் இப்படிச் சொன்னார்? இங்கே ‘கடவுள்’ என்ற சொல்லையும் அதற்கு காந்தி தன் வாழ்க்கையில் கொடுத்திருக்கும் அர்த்தத்தையும் நாம் பார்க்க வேண்டும். சத்தியத்தை மட்டுமே காந்தி தன் வாழ்நாள் முழுவதும் கடவுளாகக் கருதியவர். மதங்கள் குறிப்பிடும் கடவுள் தரிசனம் தனக்குக் கிடைத்ததில்லை எனவும், ஆனால் சத்தியத்தின் தரிசனம் கிடைத்திருக்கிறது எனவும் சொல்லியவர் அவர். அந்த சத்தியத்துக்கு மிகவும் நெருக்கமானவர் நேரு என்று தான் கருதியதால், மேற்கண்ட சம்பவத்தின்போது காந்தி அப்படிச் சொல்லியிருக்கக் கூடும். நேருவைத் தன் அரசியல் வாரிசாகவும், இந்தியாவின் முதல் பிரதமராகவும் காந்தி தேர்ந்தெடுத்ததை மேற்கண்ட சொற்களின் பின்னணியிலும் வைத்துப்பார்க்கலாம்.
சத்தியத்துக்கு நெருக்கமானவராக நேருவை காந்தி கண்டதுபோல் நாம் இன்று காண்பதில்லை, காணவும் முடியாது. அதற்கு அவரவர் சார்ந்த சித்தாந்தங்கள் மட்டுமின்றி, ஒரு பெரும் தேசத்தின் ஆட்சியாளராக இருந்ததால் அறிந்தோ அறியாமலோ நேரு இழைத்த தவறுகளும்கூடக் காரணம். ஆனால், நேரு ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் ஆகப்போகின்றன. அவர் இறந்து 51 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த வரலாற்றுப் போக்கில், விருப்புவெறுப்பற்று நேருவைப் பார்க்கக்கூடிய ஒரு வசதியான இடத்தில் நாம் இருக்கிறோம். ஆகவே, நேருவைப் பற்றிய நியாயமான ஒரு மதிப்பீடு காலத்தின் கட்டாயம்.
எஞ்சுவது சிலிர்ப்பே
கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டுக்கும் மேலாக நேரு மீது எவ்வளவு குற்றச்சாட்டுகள், அவதூறுகள், வசைகள்! நேருவின் நண்பர்கள், எதிர்ப்பாளர்கள், எதிரிகள் என்று அனைத்துத் தரப்பிலிருந்தும். இவையெல்லாம் நேருவையும், அவர் மீதான பொது மதிப்பீட்டையும் மாற்றியமைத்திருக்கின்றன. ஆனால், எல்லாவற்றையும் மீறி எப்படிப்பட்ட காரியத்தை அவர் செய்து முடித்திருக்கிறார் என்பதை நினைத்துப்பார்த்தால் எஞ்சுவது சிலிர்ப்பு மட்டுமே.
செல்வச் செழிப்பான நாடுதான் இந்தியா; அதாவது ஆங்கிலேயர் நுழைவதற்கு முன். அவர்கள் நம்மை விட்டுச் சென்றபோது நிலைமை அப்படியில்லை. உலகிலேயே அதிகமான பசித்த வயிறுகளைத்தான் இந்தியாவில் விட்டுச்சென்றார்கள். 1779-ல் ஆரம்பித்து 1944 வரை ஏற்பட்ட 14 பெரும் பஞ்சங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 6 கோடிக்கும் மேலே என்று கணிப்புகள் சொல்கின்றன. கடைசியாக 1944-ல் ஏற்பட்ட வங்காளப் பஞ்சத்துக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கிறார்கள். மீன்கள் நிறைந்திருந்த குளம் திடீரென்று வற்றி அந்த மீன்களெல்லாம் செத்து மடிந்ததைப் போல வங்காள நகரங்களின் தெருக்களிலெங்கும் பிணங்கள். பஞ்சமும் கொள்ளை நோயும் தாண்டவமாடின.
இந்த பஞ்சங்களைப் பற்றியும் அவற்றில் இறந்தவர்களின் எண்ணிக்கை பற்றியும் கொஞ்சமாவது நாம் அறிந்திருக்கிறோம். ஆங்கிலேயர் இந்தியாவை நேரு உள்ளிட்ட தலைவர்களின் கையில் தந்துவிட்டு போனபோது இருந்த மக்கள்தொகை முற்கண்ட பஞ்ச காலங்களில் இருந்த மக்கள்தொகையை விட மிகவும் அதிகம். அந்தத் தருணத்தில் மிக மோசமான ஒருவரின் கையிலல்ல, ஓரளவு திறமை கொண்டவரின் கையில் இந்தியாவின் ஆட்சி அதிகாரம் போயிருந்தால்கூட இந்தியாவின் நிலை என்ன ஆகியிருக்கும் என்பதை நம்மால் கற்பனை செய்துபார்க்க முடிகிறதா?
தேசத்துக்காகப் பிச்சைப்பாத்திரம் ஏந்தியவர்
சுதந்திரம் பெற்றவுடன் இந்த நிலைமை சீராகி, பஞ்சங்கள் இல்லாத நாடாகிவிடவில்லை இந்தியா. இந்த நிலையில் நேருவும் அவரது சகாக்களும் பஞ்சத்தை எப்படிச் சமாளித்தார்கள்? சமீபத்தில் ஜெயமோகன் இதுகுறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
“…கஜானா காலியான அரசை நேரு ஆட்சி செய்ய ஆரம்பித்தார். அப்போதும் பெரும் பஞ்சங்கள் தொடர்ந்தன. பிகாரும் உத்தரப் பிரதேசமும் உணவில்லாமல் தவித்தன… ஆனால் அதில் ஒருவர், ஒரே ஒருவர்கூடச் சாகாமல் இந்திய அரசு கவனித்துக்கொண்டது. அதற்குப் பொறுப்பேற்றவர்கள் இருவர். நேரு. இன்னொருவர், ஜெயப்பிரகாஷ் நாராயணன். நேருவின் அரசு பஞ்ச நிவாரணத்துக்காகக் களத்தில் நின்றது. ஜெயப்பிரகாஷ் நாராயணனின் மகத்தான கஞ்சித்தொட்டி இயக்கம் கிராமம் கிராமமாக மக்களுக்கு உணவூட்டிக் காத்தது. கலிஃபோர்னியாவில் பெர்க்லி பல்கலையில் ஒரு இந்திய நூல் பகுதி உள்ளது. அங்கே நேருவின் ஒரு கடிதத்தைக் கண்டேன். 1950-களின் பஞ்சத்தில் நேரு எழுதிய கடிதம் அது. அந்தப் பஞ்சத்தைச் சமாளிக்க நேரு அன்று உலகிலிருந்த அனைத்துத் தலைவர்களுக்கும் கடிதமெழுதினார்… உங்களிடம் என் நாட்டு மக்களுக்காகப் பிச்சைப்பாத்திரத்தை நீட்டுகிறேன் என எல்லா சுயமரியாதையையும் இழந்து கெஞ்சினார். அதிக நிதியுதவி செய்தது அமெரிக்க தேசம். அதில் மிக அதிக உதவிசெய்தது கலிஃபோர்னியா மாநிலம். கலிஃபோர்னியா மாநிலத்துக்கு நன்றி தெரிவிக்கும் நேரு அவர்கள் செய்த உதவியைத் திருப்பிச் செய்ய முடியாது, நன்றிக்கடனாகச் சில புத்தகங்கள் அனுப்புவதாகச் சொல்லி எழுதிய கடிதம் அது… அங்கே அறிமுகமான ஒரு நண்பர்தான் அதைக் கொண்டுசென்று காட்டினார்… ‘பாத்தீங்களா சார்… எப்டிக் கேவலப்படுத்துறானுங்கன்னு’ என்றார் அவர். ‘எனக்குப் பெருமிதமாக இருக்கிறது. தனக்காக நேரு கையேந்தவில்லை, தன் மக்களுக்காகக் கையேந்தினார் அந்தப் பெரிய மனிதர். அப்படி ஒரு தலைவனை அடைந்திருந்தோம், அதற்கான தகுதி நமக்கிருந்தது என நான் விம்மிதம் கொள்கிறேன்’ என்று சொன்னேன்” என்று ஜெயமோகன் எழுதிச்செல்கிறார்.
வரலாற்றின் மிகப் பெரிய மறுகுடியமர்த்தல்
அது மட்டுமா, நேருவின் ஆட்சிக் காலம்தான் உலகத்திலேயே மிகப் பெரிய, மிக மோசமான மனிதகுல இடப்பெயர்வைச் சந்தித்தது. பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டிய நிலையில் இருந்த நாட்டை மேலும் படுகுழியில் தள்ளுவதற்கு இதைவிட மோசமான நிலைமை இருக்க முடியாது. ஆனால், அப்படியெல்லாம் ஆவதற்கு நேருவும் அவரது சகாக்களும் அனுமதிக்கவில்லை. தேசப் பிரிவினையால் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் மேல். இவர்களில் ஆகப் பெரும்பாலானோரை நேருவின் அரசு மறுகுடியமர்த்திய அற்புதத்தை நம்மால் இன்று கற்பனைகூடச் செய்துபார்க்க முடியாது. ஒரு மலைக்கும் இன்னொரு மலைக்கும் நடுவே கயிறு கட்டி, பிடித்துக்கொள்ள ஏதுமில்லாமல் ஒருவர் நடப்பதைப் போன்ற மாபெரும் சாகசத்தை நேரு நிகழ்த்தியிருக்கிறார்.
நேரு இறந்தபோது வலதுசாரியும் அவரது பிரதான எதிர்ப்பாளருமான ராஜாஜி இப்படி எழுதினார்: “என்னை விட 11 ஆண்டுகள் இளையவர், என்னை விட 11 மடங்கு முக்கியமானவர், என்னை விட 11 ஆயிரம் மடங்கு இந்த தேசத்தால் நேசிக்கப்படுபவர்… திட்டங்கள் தீட்டுவதில் உள்ள பிழைகளுக்காக அவரை எதிர்த்து கடந்த 10 ஆண்டுகளாக அவரைக் கடுமையாக எதிர்த்துவந்திருக்கிறேன்… அதே நேரத்தில் இந்தப் பிழைகளையெல்லாம் அவரால் மட்டுமே சரிசெய்ய முடியும் என்பது எனக்குத் தெரியும்… எனது போராட்டத்தில் முன்பை விட என்னை மிகவும் பலவீனப்படுத்திவிட்டு அவர் போய்விட்டார்.”
நேருவைக் கடுமையாக எதிர்த்துவந்த ராஜாஜியும் இப்படி இளகிப்போனதற்கு என்ன காரணம்? அவரது வார்த்தைகளிலேயே சொல்வதானால், ‘நேருவின் இடத்தில் வேறு யார் இருந்திருந்தாலும் இவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டிருக்க முடியாது!’ என்பதுதான்.
- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

Modi One Year

தன்னுடைய ஆட்சியின் முதலாண்டை முடித்து இரண்டாமாண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது நரேந்திர மோடியின் பாஜக தலைமையிலான தேஜகூ அரசு.
பொதுவாக, ஆட்சியாளர்கள்தான் தங்களுடைய ஆட்சிப் பொறுப்பேற்பின் ஆண்டு நிறைவை மக்களுக்கு நினைவூட்டுவார்கள். இந்த ஆட்சியைப் பொறுத்த அளவில், அரசாங்கத்தை முந்திக்கொண்டு ஏனையோர் - முக்கியமாக எதிர்க் கட்சிகளும் ஊடகங்களும் - முன்னிற்பதைப் பார்க்க முடிகிறது. இதற்கு நியாயமான காரணமும் இருக்கிறது. தேர்தலுக்கு முன்பு மட்டும் அல்லாமல், தேர்தல் முடிந்தும் தொடர்ந்துகொண்டிருக்கும் அரசின் பிரச்சாரம் அப்படி. ஒருவர் மேடையில் நின்று பார்வையாளர்களைப் பார்த்து, சதா தன் புஜபலத்தைத் தட்டிக்காட்டிக்கொண்டே இருக்கும்போது, பார்வையாளர்களும் அவருக்கான நியாயத்தைச் செய்யத் தருணம் பார்த்துக்கொண்டிருப்பார்கள்தானே? இதோ, ஓராண்டு முடிந்துவிட்டது, தருணம் வந்துவிட்டது. மக்கள் தம் எதிர்வினையாற்றத் தொடங்கிவிட்டார்கள்.
மோடி அரசின் முதலாண்டு எப்படி?
ஆதரவாளர்களின் விமர்சனம் இது: “ஓராண்டுக்கு முன்பிருந்ததைவிடப் பொருளாதாரம் இப்போது நல்ல நிலையில் இருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு அதிகரித்திருக்கிறது. மூலதன வருகை அதிகபட்ச அளவை எட்டியிருக்கிறது. மனு செய்வதும் அரசு அங்கீகரிப்பதும் இணையத்தின் வழி நடைமுறையாக்கப்பட்டிருக்கிறது. நிலக்கரி வயல்கள், அலைக்கற்றை அலைவரிசை ஏலங்கள் வெளிப்படையாக நடைபெற்றன. கடந்த 23 ஆண்டுகளில் முதல் முறையாக 8.3% அளவுக்கு நிலக்கரி உற்பத்தி அதிகரித்திருக்கிறது. இதனால் பல மின்னுற்பத்தி நிலையங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. விளிம்புநிலை மக்களை முறைசார் நிதியாள்கைக்குள் கொண்டுவரும் ‘ஜன் தன்’ திட்டத்தின் மூலம் ஆறே மாதங்களில் 15 கோடிப் பேருக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டிருக்கிறது. மிகக் குறுகிய நாட்களில் ரூ. 12 ஆண்டு சந்தாவுக்கு ரூ. 2 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கும் ‘சுரக்‌ஷா பீம யோஜனா’ திட்டத்தில் 5.57 கோடிப் பேர் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். ரூ.330 ஆண்டு சந்தாவுக்கு, ரூ. 2 லட்சம் ஆயுள் காப்பீடு வழங்கும் ‘ஜீவன் ஜோதி யோஜனா’ திட்டத்தில் 1.7 கோடிப் பேர் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேல் கடந்த 12 மாதங்களில் அரசின் மீது ஊழல் புகார் ஏதும் இல்லை.”
எதிரிகளின் விமர்சனம் இது: “தன்னுடைய நிர்வாகக் கொள்கை யாக, ‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்’ என்பதை அறிவித்து ஆட்சிக்கு வந்த அரசு, இன்றைக்குக் கிட்டத்தட்ட ஒரு நபர் அரசாகி விட்டது. பிரதமர் அலுவலகம் சர்வ அதிகாரங்களின் பீடமாகக் காட்சி யளிக்கும் நிலையில், பிரதமரோ நாடாளுமன்றத்துக்கு அந்நியராக, விவாதங்களிலிருந்து விலகியவராக இருக்கிறார். வளர்ச்சியின் பெயரால், பெருநிறுவனங்கள் / பெருமுதலாளிகளுக்கான பிரதிநிதியாக அரச நிர்வாகத்தை மாற்றியமைத்திருப்பதோடு, சீர்திருத்தத்தின் பெயரால் விளிம்புநிலை மக்களின் ஆதாரங்களை அழிக்கிறது. சமூக நலத் திட்டங்களில் தன்னுடைய பொறுப்புகளை அரசு கைகழுவுகிறது. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில், மொத்த மானியச் செலவின் பங்கு 2.1%-லிருந்து 1.7% ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. கல்வித் துறைக்கான ஒதுக்கீடு ரூ.82,771 கோடியிலிருந்து ரூ.69,074 கோடியாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. சுகாதாரம் மற்றும் குடும்ப நலனுக்கான ஒதுக்கீடு ரூ.35,163 கோடியிலிருந்து ரூ.29,653 கோடியாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டில் ரூ.5,000 கோடி; பட்டியல் இனத்தவருக்கான ஒதுக்கீட்டில் ரூ.12,000 கோடி; மகளிருக்கான ஒதுக்கீட்டில் ரூ. 20,000 கோடி; ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட ஒதுக்கீட்டில் ரூ. 8,000 கோடி குறைக்கப்பட்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேல் எங்கும் காவிமயமாக்கல் சூழ்கிறது; அரசு கொண்டுவரத் துடிக்கும் நிலம் கையகப்படுத்தும் சட்டம் காலாகாலத்துக்கும் இந்திய வேளாண்மையையும் விளிம்புநிலை மக்களையும் வஞ்சிக்கும் கொடூரமான தாக்குதல்.”
இந்த இரு விமர்சனங்களிலுமே உண்மை இருக்கிறது. இரு விமர்சனங்களையும் உற்றுநோக்குபவர்களுக்கு ஒரு விஷயம் தெளிவாகப் புரியும். இந்த அரசாங்கம் செயல்படுகிறது; ஆனால், யாருக்காகச் செயல்படுகிறது என்பதில் சிக்கல் இருக்கிறது. வளர்ச்சி, வளர்ச்சி என்று மூச்சுக்கு முன்னூறு முறை கூறுகிறார்கள் பிரதமரும் அவருடைய சகாக்களும். அதற்காகக் கடுமையாக உழைக்கவும் செய்கிறார்கள். ஆனால், எதை அவர்கள் வளர்ச்சியாகக் கருதி உழைக்கிறார்கள் என்பதில் பெரும் சிக்கல் இருக்கிறது.
பிரதமர் மோடி தன்னுடைய முதல் ஆறு மாதங்களில், ‘இந்த அரசாங்கம் பெருநிறுவனங்களுக்கேற்ற அரசாங்கமாகச் செயல்படுகிறது’ எனும் குற்றச்சாட்டைப் பொருட்படுத்தவில்லை. இன்னும் சொல்லப்போனால், தன்னைத் தொழில் துறையின் பிரதிநிதியாகக் காட்டிக்கொள்வதில் அவரே பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால், ஓராண்டு முடியும்போது, அந்த விமர்சனத்தின் சூடு அரசாங்கத்தைப் பொசுக்க ஆரம்பிப்பதை உணர முடிகிறது. முதலாண்டு நிறைவையொட்டி, நாட்டு மக்களுக்கு மோடி எழுதியிருக்கும் கடிதத்தில் இடம்பெற்றிருக்கும், ‘அடித்தட்டு மக்கள் நலனே எங்கள் தாரக மந்திரம்’ எனும் வாக்கியம் அந்தச் சூட்டின் வெம்மையை நன்றாகவே வெளிப்படுத்துகிறது. பிரதமர் மோடியும் அவருடைய சகாக்களும் ஒரு விஷயத்தை உணர வேண்டும். ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது வெறும் நிதி சம்பந்தபட்ட விஷயம் மட்டும் அல்ல. சகலருக்குமான, சகலத்திலுமான வளர்ச்சியைத் தொழில் துறை மட்டுமே தந்துவிட முடியாது. மன்மோகன் சிங் ஆட்சியின் மோசமான காலகட்டத்தின் விளைவாக மோடியைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதாலேயே இந்த ஆட்சியை என்றென்றைக்கும் அந்த ஆட்சியுடன் ஒப்பிட்டு அரசாங்கம் ஆறுதலடைந்துகொள்ள முடியாது. மக்கள் நீங்கள் சொன்ன வார்த்தைகளுக்கும் முன்னெடுக்கும் செயல்பாடுகளுக்கும் இடைப்பட்ட இடைவெளியைக் கொண்டே உங்களை மதிப்பிடுவார்கள். தொழில் துறை மட்டும் அல்ல; ஒட்டுமொத்த தேசமும் நீங்கள் சொன்ன நல்ல நாட்களுக்காகக் காத்திருக்கிறது. அது வெற்று முழக்கங்களை அல்ல; ஆக்கபூர்வமான செயல்பாடுகளையே உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறது!
பிரதமர் மோடியின் ஓராண்டு சாதனை என்ன என்று கேட்கிறார்கள். நாட்டு மக்களுக்குத் தன்னம்பிக்கையையும் நன்னம்பிக்கையையும் ஊட்டியதுதான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் மிகப் பெரிய சாதனை.
பாஜக தலைமையிலான அரசு எந்தச் சூழலில் ஆட்சிக்கு வந்தது என்பதை நினைவில் வைத்துக்கொள்வது அவசியம்; நாடு முழுவதுமே திக்கு திசை தெரியாமல் தவித்த நேரம்; இதற்கு முந்தைய பிரதமர், பதவியில் இருந்தார்; அதிகாரத்தில் இல்லை; முடிவெடுப்பது தேக்கநிலையில் இருந்தது. நிர்வாகம் பலத்த அடி வாங்கியிருந்தது. மோசடிகள், சட்டவிரோத செயல்கள், லஞ்சம், ஊழல் போன்றவை வழக்கமாகியிருந்தன. உலக அளவில் இந்தியாவுக்குக் களங்கம் ஏற்பட்டது. முதலீடு வற்றிவிட்டது.
இப்படிப்பட்ட சூழலில்தான் ஆட்சியில் அமர்ந்தார் மோடி. 12 மாதங்கள் என்ற மிகக் குறுகிய காலத்தில், மிக வேகமாக வளரும் பொருளாதாரம் என்ற தோற்றத்தை இந்தியாவுக்கு மீட்டுத்தந்தது தேஜகூ அரசு; அது மட்டுமல்ல; நல்ல நிர்வாகம், விரைந்து முடிவெடுத்தல், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றையும் மீட்டெடுத்திருக்கிறது. 2015-ல் நடந்த அலைக்கற்றை ஏலத்தில் மிக உயர் அளவாக ரூ.1.10 லட்சம் கோடி அரசுக்குக் கிடைத்தது. முந்தைய ஆட்சியில் சில நிலக்கரி வயல்கள் மட்டுமே ஏலத்துக்கு விடப்பட்டன. இப்போது பொது ஏலத்தில் விற்கப்பட்டதால் ரூ.2 லட்சம் கோடி அரசுக்குக் கிடைத்தது. இதெல்லாம் அரசு நேர்மையாகவும் வெளிப்படையாகவும் சட்டப்படியும் முடிவெடுத்ததால் நடந்த சாதனைகள். நல்ல நிர்வாகத்துக்கான உதாரணங்கள்.
இந்திய வெளியுறவுத் துறைக்கும் கொள்கைக்கும் இதுவரை இருந்திராத வகையில் புத்துணர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் பக்கத்து நாடுகளிலும், ‘ஜி-20’ அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளிலும் இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்புகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் வளர்ச்சி முன்முயற்சிகளுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. உலக அரங்கில் இந்தியா வலுப்பெற்று வருவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சீர்திருத்தம், வளர்ச்சிக்கு அழுத்தம் தரப்படுகிறது. மாநிலங்களுக்கு நிதி ஊக்குவிப்பு தரப்பட வேண்டும் என்று பிரதமர் கருதுவதால், 14-வது நிதிக் குழுவின் பரிந்துரையை ஏற்று, வரி வருவாயில் 42%-ஐ மாநிலங்களுக்குக் கொடுக்க அரசு ஒப்புக்கொண்டது. தேச வளர்ச்சியில் மாநிலங்களின் பங்கேற்பு வலுப்படுத்தப்பட்டிருக்கிறது. ‘நிதி ஆயோக்’ அமைப்பில் மாநிலங்களுக்கு நேரடி பிரதிநிதித்துவம் தரப்பட்டிருக்கிறது. சரக்கு, சேவைகள் வரி விதிப்பு அமலில் மாநிலங்களையும் மத்திய அரசு வெற்றிகரமாக இணைத்துக்கொண்டிருக்கிறது. இது விரைவில் அமலாவது சாத்தியமாகியிருக்கிறது.
அரசின் முன்னுரிமைப் பட்டியலில் இருப்பவர்கள் ஏழைகளும் எளியவர்களும்தான். அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டிருக்கிறது. வங்கிக் கணக்கு வசதி இல்லாதவர்களுக்கு கணக்கு தொடங்க உதவுதல், நிதி இல்லாதவர்களுக்கு நிதி அளித்தல், முதியோர் ஓய்வூதியத்தை மேலும் பலருக்கும் அளித்தல் என்ற முன்முயற்சிகள் மூலம் வளர்ச்சி என்பது அனைவருக்குமானது என்பதை நிலைநிறுத்தத் தொடங்கியிருக்கிறது அரசு. வெறும் 6 மாதங்களில் 15 கோடிப் பேருக்கு ‘ஜன் தன்’ திட்டத்தின் கீழ் ஆறு மாதங்களுக்குள் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. விபத்தில் மரணம் அடையும் வங்கிக் கணக்காளர்களுக்கு இழப்பீடு வழங்கும் காப்பீடு திட்டம் மே 9-ல் தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு ரூ.12 மட்டுமே சந்தாவாகச் செலுத்த வேண்டிய இத்திட்டத்தில், 5.57 கோடிப் பேர் சேர்ந்துள்ளனர். ஆண்டுக்கு ரூ.330 மட்டும் செலுத்தும் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் முதல் 18 நாட்களில் மட்டும் 1.7 கோடிப் பேர் சேர்ந்துள்ளனர். சிறு, குறு தொழிலதிபர்களுக்காக புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ‘முத்ரா’ வங்கி 5.77 கோடிப் பேருக்குக் கடன் வழங்கும்.
நான் நிர்வகிக்கும் தகவல் தொடர்பு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், மக்களிடயே தகவல் தொடர்பு சாதனங்களின் வசதிகளைப் பெறுவதில் ஏற்றத் தாழ்வு கூடாது என்று ‘டிஜிடல் இந்தியா’ திட்டத்தை அமல்படுத்தத் தொடங்கியுள்ளது. மக்களுக்கு சேவை அளிப்பதில் எதிர்ப்படும் சிவப்பு நாடா முறையும் மற்றவர்களின் இடையூறும் களையப்படும். நகரங்களைத் தாண்டி சிறு நகரங்களுக்கும் வளர்ச்சி தொடங்க வேண்டும் என்பதற்காக சிறு நகரங்களிலும் ‘கால்-சென்டர்கள்’ தொடங்கப்படுகின்றன. ‘டிஜிடல்’ இந்தியா, ‘ஸ்கில்’ இந்தியா, ‘மேக் இன் இந்தியா’ என்ற 3 லட்சியங்களும் நாட்டின் முகத்தையே மாற்றிவிடும்.
அரசின் சேவைகளை மொபைல் போன்கள் வழியாகத் தர வேண்டும் என்ற பிரதமரின் ஆணை அமல்படுத்தப்படுகிறது. சாமானியர்கள் அரசுடன் இணைந்து பணியாற்ற ‘மை கவ்’ இணைய தளம் உதவுகிறது. அரசு வழங்கும் ஓய்வூதியம், மானியங்கள் போன்றவற்றைப் பயனாளிகளுக்கு நேரடியாகக் கொண்டுசேர்க்க ‘ஜன் தன்’, ‘ஆதார்’, ‘மொபைல்’ ஆகிய மூன்றும் பயன்படுத்தப்படவிருக்கிறது.
மோடியின் தலைமையில் இந்தியா நம்பிக்கை மிகுந்த நாடாக மாறியிருக்கிறது. வளமான எதிர்காலத்துக்கு இது சிறந்த உத்தரவாதம்.
ரவிசங்கர் பிரசாத், மத்தியத் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துக்கான அமைச்சர்

மத்தியில் பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற கடந்த ஓராண்டில் நாட்டில் சரிந்திருந்த பொருளாதாரத்தை மீட்டெடுத் துள்ளோம் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு திருப்பியுள்ளதோடு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி யுள்ளோம். இந்தியா மீது அந்நிய முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார். அரசின் மீது மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அதை ஈடு செய்யும் வகையில் வரும் நாள்களில் அரசின் செயல்பாடு அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.
நாட்டு மக்களுக்கு திறந்த மடல் மூலம் ஓராண்டு சாதனைகளைப் பட்டியலிட்டுள்ள மோடி, அதில் பொருளாதார வளர்ச்சி மீட்டெடுக் கப்பட்டுள்ளது. வேகமாக வளரும் பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற் றுள்ளது. கடந்த ஓராண்டில் நாட்டின் பணவீக்கம் கட்டுப்படுத் தப்பட்டுள்ளது.
நிதி நிர்வாகம் மேம்படுத்தப் பட்டுள்ளதால் அந்நிய முதலீட் டாளர்களுக்கு இந்தியா மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது.
இந்தியாவின் வளர்ச்சி குறித்து தரச்சான்று நிறுவனங்கள் சாதகமான மதிப்பீடுகளை வெளி யிட்டுள்ளன. இதனால் சர்வதேச அளவில் இந்தியாவின் மீதான நம்பிக்கை மேம்பட்டுள்ளது.
அரசு பல விஷயங்களில் மிகவும் துணிச்சலான முடிவை எடுத்துள்ளது.
அதில் குறிப்பிடத்தக்கது டீசல் மீதான கட்டுப்பாடுகளை முற்றிலுமாக நீக்கியதாகும். அத்துடன் காப்பீட்டுத் துறை மற்றும் பாதுகாப்புத் துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஒரே சீரான வரி விதிப்பைக் கொண்டு வருவ தற்காக சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக் கத்துக்கு தேவையான நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஓராண்டு முன்பு இந்தியாவை முன்னேற்றப்பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் பொரு ளாதார சரிவிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்றும் நம்பி என்னை தேர்வு செய்தீர்கள். இந்த எதிர்பார்ப்பில் அதிகபட்சம் பூர்த்தி செய்துள்ளோம். இருந்தாலும் இது தொடக்கம்தான். வரும் காலங்களில் உங்களது எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அரசின் நடவடிக்கைகள் அமையும் என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.
நடப்பு நிதி ஆண்டில் இந்தி யாவின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்துக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2014-15-ம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருந்ததையும் மோடி சுட்டிக் காட்டியுள்ளார்.
ஓராண்டுக்கு முன்பு நாட்டின் நிதிப்பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீத அளவுக்கு இருந்தது. இதை 3.9 சதவீதமாகக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டிருந்த சீர்திருத்த நடவடிக்கைகள் மிகவும் துணிச்சலாக கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனால் கிடைக்கும் பலன்கள் சமூகத்தின் அனைத்து தரப்பின ரையும் சென்று சேரும் வகையில் அதிலும் குறிப்பாக ஏழைகள், விவசாயிகள் பெண்கள் பயன டையும் வகையில் நடவடிக் கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
விவசாயிகள் தங்களது உற்பத்திப் பொருள்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்வதற்காக சர்வதேச வர்த்தக அமைப்பில் (டபிள்யூடிஓ) ஒரு சமாதான பிரிவை ஏற்படுத்தியுள்ளோம். இதன் மூலம் விவசாயத்துக்கு அளிக்கப்படும் மானியம் தொடர வழியேற்படுத்தப்பட்டுள்ளது.
அனைவருக்கும் வங்கிச் சேவை கிடைக்க மேற்கொண்ட நடவடிக்கையின் பலனாக 15 கோடி புதிய வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ. 15,800 கோடி புழக்கத்துக்கு வந்துள்ளது.
அனைவருக்கும் கட்டுபடி யாகும் சமூக பாதுகாப்பு திட்டங்கள், குறிப்பாக ஓய்வூதியம், ஆயுள் காப்பீடு, விபத்து காப் பீட்டுத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இத்திட்டம் தொடங்கப்பட்ட ஒரே வாரத்தில் 6.75 கோடி மக்கள் இத்திட்டங்களில் சேர்ந்துள்ளனர்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் பயனடையும் வகையில் ரூ. 20 ஆயிரம் கோடி முதலீட்டில் முத்ரா வங்கி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இத்துறையினருக்கு எளிய வகையில் கடன் கிடைக்க வழியேற்படுத்தப்பட்டுள்ளது.
கருப்பு பணத்தை ஒழிப்பதற் காக சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கருப்பு பண பதுக்கல் காரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைக்கான சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவில் தொழில் தொடங்குவதை எளிமை யாக்குவதற்காக `மேக் இன் இந்தியா’ திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் பல புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.
சமையல் எரிவாயு மானி யத்தை முதலீட்டாளர்கள் நேரடி யாகப் பெறும் வகையில் பயனீட்டாளர்களின் வங்கிக் கணக்கில் மானியத்தை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உரிய மக்களுக்கு மானியத் தொகை சென்றடைய வழியேற்பட்டுள்ளது.
காப்பீட்டுத் துறையில் நேரடி அந்நிய முதலீட்டு வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. ரயில்வேத் துறை மற்றும் பாதுகாப்புத் துறைகளில் அந்நிய முதலீடுகள் வரவேற்கப்பட்டுள்ளன.
வங்கித் துறையில் அரசியல் குறுக்கீடு என்பது கடந்த கால சம்பவங்களாக மாறிவிட்டன. நிலக்கரி சுரங்கங்கள் வெளிப் படையான முறையில் ஏலம் விடப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு ரூ. 3.35 லட்சம் கோடி கிடைத்துள்ளது.
நடப்பாண்டில் பொதுத் துறையில் அரசு ரூ. 1 லட்சம் கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இத்தொகை டிஜிட்டல் இணைப்புக்காகவும், பிற இணைப்புகளுக்காகவும் செல விடப்பட உள்ளது.
சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்தில் ஒருங்கிணைந்த மேம்பாட்டுக்கான வழிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முடங்கியுள்ள நெடுஞ்சாலைத் திட்டப் பணிகள் முடுக்கி விடப் பட்டுள்ளன. மின் உற்பத்தியும் முன்னெப்போதைக் காட்டிலும் இப்போது அதிகரித்துள்ளது. தேசிய கட்டமைப்பு முதலீட்டு நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு ரூ. 20 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளதையும் மோடி தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஃபிரான்ஸ் மன்னர் 15-ம் லூயி இப்படிச் சொன்னதால் மிகவும் பிரபலமடைந்தார், “எனக்குப் பிறகு பிரளயம்தான்”. பாஜக தலைமையிலான தேஜகூ அரசாங்கத்தின் ஓராண்டு ஆட்சி நிறைவுக்கு வந்திருக்கிறது. இந்தத் தருணத்தில் முன்கண்ட மேற்கோளை மோடி சற்றே திருத்தி, “நான் வருவதற்கு முன்பு சூனியம் இருந்தது; எனக்குப் பிறகோ பிரளயம்தான்” என்று சொல்வதுபோல் இருக்கிறது. அவர் பதவிக்கு வருவதற்கு முன்பு அயல்நாடு வாழ் இந்தியர்களெல்லாம் இந்தியாவில் பிறந்ததற்கே “வெட்கப்பட்டார்கள்” என்று இந்த மாதத்திலேயே வெளிநாட்டு மண்ணில் இரண்டு முறை சொல்லியிருக்கிறார் மோடி.
ஆறு தசாப்தங்களாக அடுத்தடுத்த அரசுகளால் சிதைவடைந்துபோயிருந்த இந்தியாவை மோடிதான் புனரமைத்துக்கொண்டிருக்கிறார் என்று இந்த ஓராண்டு காலத்தில் நமக்கு வெறுப்பேற்றும் அளவுக்கு எத்தனை முறை சொல்லப்பட்டிருக்கும். அந்தோ, அடல் பிஹாரி வாஜ்பாயின் ஆறாண்டு கால தேஜகூ ஆட்சி மறக்கப்பட்ட வரலாறாக ஆக்கப்பட்டதே!
சாதாரண இந்தியக் குடிமக்கள் இதுவரை போராடிப் பெற்றிருந்த ஏதோ கொஞ்சம் உரிமைகள் மீதும் தாக்குதல் நிகழ்த்தும் முயற்சிகள்தான் இந்த ஓராண்டில் நிகழ்ந்திருக்கின்றன என்பது தெளிவு. இந்த அரசு பின்னுக்குத்தான் சென்றுகொண்டிருக்கிறது. சுகாதாரம், கல்வி, சமூக நலத்திட்டங்கள், பட்டியல் இனத்தவர்/பழங்குடியினர் நலனுக்கான திட்டங்கள் போன்றவற்றுக்கான நிதியை வரவு-செலவுத் திட்டத்திலிருந்து பெருமளவில் குறைத்திருக்கிறார்கள்.
மூன்று புதிய சவால்கள் இந்தியாவுக்கு முன்னும் இந்திய மக்கள் முன்னும் எழுப்பப்பட்டிருக்கின்றன: நவதாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை விடாப்பிடியாக முன்னெடுத்தல், மதப் பிரிவினைவாதத்துக்குக் கொம்புசீவி விடுவதன்மூலம் இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடிப்படைகளின் மீது தாக்குதல் நிகழ்த்துதல், சர்வாதிகார ஆட்சியை நோக்கி மெதுவாக ஆனால், உறுதியாகச் செல்லுதல். இவற்றில் கடைசியாகச் சொல்லப்பட்டது, ஜனநாயக அமைப்புகளைச் சேதப்படுத்துவதிலும், நாடாளுமன்ற ஜனநாயகத்தில் புனிதமாகக் கருதப்படும் நடைமுறைகளை மீறுவதிலும் கண்கூடாகத் தெரிகிறது.
பொருளாதாரச் சவால்கள்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பின்பற்றிய நவதாராள மயப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை தேஜகூ அரசு மூர்க்கமாக முன்னெடுத்துச் சென்றுகொண்டிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவில் பெருநிறுவனங்கள் கையிருப்புகளைக் குவித்து வைத்திருக்கின்றன. இது, வேலையில்லாத் திண்டாட்டத்தை நோக்கி இந்தியாவை இட்டுச்சென்றுகொண்டிருக்கிறது. இதெல்லாம் போதாதென்று அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி கட்டுக்கடங்காமல் ஏறியிருக்கிறது.
விவசாயிகளின் துயரம் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து முதன்முறையாக ஒட்டுமொத்த விளைநிலங்களின் பரப்பு வெகுவாகக் குறைந்திருந்திருக்கிறது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. விவசாய இடுபொருட்களின் விலை கிடுகிடுவென்று ஏறியிருக்கும் அதே நேரத்தில், மானியங்களின் அளவு வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. இதன் விளைவாகக் கடனுக்கு மேல் கடன் வாங்கித் திருப்பிக் கட்ட முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் விவசாயிகள். தொழிலாளிகளின் நிலை மட்டும் என்ன வாழ்கிறதாம்? மொத்த உள்நாட்டு உற்பத்தியோடு ஒப்பிடும்போது ஊதிய விகிதம் 10% இருக்கிறது. இதுவே 1990-1991-ல் 25% இருந்தது.
மறுபுறம் பார்த்தால் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக ஆகிக்கொண்டே இருக்கிறார்கள். 2011-ல் வெளியிடப்பட்ட பட்டியலில் 100 கோடி அமெரிக்க டாலர்கள் வைத்திருந்த இந்தியர்களின் எண்ணிக்கை 55. இப்போதோ 100. இவர்கள் 100 பேரின் மொத்த சொத்து 34,600 கோடி டாலர்கள். இந்தியாவின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் முதல் 10 இடங்களில் இருப்பவர்களின் சொத்து மதிப்பு 2000-ல் 36.8% ஆக இருந்தது. 2014-ல் அது 49% ஆக அதிரடியாக உயர்ந்திருக்கிறது. ‘நல்ல காலம் வரும்’ என்று வாக்களிக்கப்பட்டதல்லவா, பெரும்பாலான மக்களுக்கு அது மாயை என்ற நிலையிலிருந்து துர்க்கனவாக மாறியிருக்கிறது.
மதப்பிரிவினைவாதம்
அரசின் ஆசிர்வாதத்துடன் மதப்பிரிவினைவாதமும் எந்நேரமும் கொதிநிலையிலேயே வைக்கப்பட்டிருக்கிறது. நவீன, மதச்சார்பற்ற, ஜனநாயக இந்தியக் குடியரசை சகிப்புத்தன்மையற்ற ‘இந்து ராஷ்டிரமாக’ மாற்றுதல் என்ற செயல்திட்டத்தை நோக்கி ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் பிரிவான பாஜக சென்றுகொண்டிருக்கிறது. ‘கர் வாப்ஸி’ என்ற பெயரில் நிகழ்த்தப்படும் மதவாதப் பிரச்சாரம், வெவ்வேறு மதத்தினருக்கு இடையில் நடைபெறும் திருமணத்தை ‘லவ் ஜிகாத்’ என்று பெயரிட்டு ஒடுக்கும் செயல் போன்றவற்றோடு வரலாற்றின் இடத்தில் புராணங்களையும் தத்துவத்தின் இடத்தில் மதத்தையும் வைப்பதற்காக வெறித்தனமான முயற்சிகளும் நடைபெறுகின்றன. இவற்றின் விளைவுகள்தான் பாடத்திட்டங் களையும் ஆய்வு நிறுவனங்களையும் காவிமயமாக்குவதற்கான முயற்சிகளெல்லாம். முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதான தாக்குதல்களும் பெருமளவு அதிகரித்திருக்கின்றன. இப்படியான வெறுப்பு அரசியலில் ஈடுபடுவோர் மீது அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
ஒட்டுமொத்த வாக்குகளில் வெறும் 31% மட்டுமே பெற்றிருந்தாலும் மக்களவையில் தனக்கிருக்கும் பெரும்பான்மை பலத்தைக் கொண்டு கிட்டத்தட்ட 50 சட்டங்களை பாஜக தரைமட்டமாக்கியிருக்கிறது, நாடாளுமன்றத்தில் விவாதங்களுக்கு உள்ளாக்காமலேயே. நாடாளுமன்ற விவாதம் என்பது எல்லா சட்ட முன்வைப்புகளையும் நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு உட்படுத்துவதைக் குறிக்கிறது. இந்த நிலைக்குழு, நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சியிலிருந்தும் உறுப்பினர்களைக் கொண்டிருப்பது. இப்படிச் செய்வது மசோதாக்களையெல்லாம் மெருகூட்டவோ அல்லது மறுபரிசீலனை செய்யவோ திருத்தி உருவாக்கவோ ஏதுவாகிறது.
15-ம் லூயியின் வாக்கு, பிரெஞ்சுப் புரட்சியை முன்கூட்டியே கணித்ததாகப் பலரும் நம்புவார்கள். அதேபோல் தனக்கு முந்தைய இந்தியாவை சூனியமாகச் சித்தரிக்க மோடி முயல்வது எதில் கொண்டுபோய் விடும் என்பதைக் காலம்தான் சொல்ல வேண்டும்.
- சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பொதுச்செயலாளர்.
© ‘தி இந்து’ (ஆங்கிலம்), சுருக்கமாகத் தமிழில்: ஆசை

கடந்த ஓராண்டில் இந்தியாவை மாற்றிவிட்டதாக நரேந்திர மோடி நம்புகிறார். வெளிநாடுகளில் குறிப்பாக அயல்நாடு வாழ் இந்தியர்களிடம் பேசும்போது இதை அவர் வலியுறுத்துகிறார். ஆனால், இந்தியாவில் பேசுவதில்லை. வறுமையில் வாடும் மக்களுக்கு வளமான வாழ்க்கையைத் தருவேன் என்று வாக்குறுதி தந்து ஆட்சிக்கு வந்தார். ஓராண்டு முடிவில் அவர் வாக்குறுதி தந்தபடி மாறுதல்களைக் கொண்டுவந்துவிட்டாரா என்று பார்க்க வேண்டும்.
நான் ஆட்சிக்கு வந்தால் பொருளாதாரம் 10% அல்லது அதற்கும் மேல் வளரும் என்று வாக்குறுதி தந்தார். தொழில் செய்வதற்கான நடைமுறைகளை எளிமையாக்குவேன் என்றார். ஓராண்டுக்குப் பிறகும் அதே நிலைமைதான். 2014 டிசம்பருடன் முடிந்த காலாண்டில் 2,941 பெரிய நிறுவனங்களின் லாப விகிதம் 16.9%. கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது குறைந்திருக்கிறது என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. தொழில் நிறுவனங்களின் லாபத்துக்குக் காரணியாக இருக்கும் முதலீடு, மக்களின் நுகர்வு, பெரிய நிறுவனங்களின் லாப-ஈவு போன்றவை தொடர்ந்து வலுவில்லாமலே இருக்கிறது. 2016 மார்ச் வரையில் இப்படித்தான் இருக்கும் என்று பலரும் கணித்துள்ளனர்.
பொருளாதார வளர்ச்சி தொடர்பாக அரசு பீற்றிக் கொள்ளும் சாதனைகள் அனைத்துமே அற்பமானவை. நிதி அமைச்சகம் (2015 மார்ச்) வெளியிட்ட தரவு களின்படி ரூ.18.13 லட்சம் கோடி மதிப்புள்ள 2,099 மிகப்பெரிய திட்டங்கள், பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள திட்ட மேலாண்மைக் குழுவிடம் செயல்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன. அரசின் வரவு-செலவுக்கு இடையிலான பற்றாக்குறையைவிட இந்த அளவு அதிகமாக - ரூ.7,12,000 கோடியாக (13.2%) - இருக்கிறது. 2013 செப்டம்பரில் ரூபாயின் மாற்று மதிப்பு டாலருக்கு நிகராக 66 என்றிருந்தபோது, மன்மோகன் சிங் அரசின் நிர்வாகத்தால்தான் ரூபாய் இப்போது அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது என்றார். இப்போதும் ஒரு டாலருக்கு 64 ரூபாய்தான் மாற்று மதிப்பாக நீடித்து, அதே அவசர சிகிச்சைப் பிரிவில் ரூபாய் படுத்துக்கிடக்கிறது.
தேர்தலுக்கு முன்னால் விலைவாசி உயர்வு உண்மையிலேயே பெரிய பிரச்சினையாக இருந்தபோது, தான் ஆட்சிக்கு வந்தால் விலைவாசியைக் கட்டுப்படுத்துவேன், குடும்பங்கள் தத்தளிக்க வேண்டாம் என்று வாக்குறுதி தந்தார். அவருடைய அரசின் அதிர்ஷ்டம் சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலியத்தின் விலை வீழ்ச்சி அடைந்தது. 2014 மே மாதம் ஒரு பீப்பாய் கச்சா பெட்ரோலிய எண்ணெய் 108 டாலர்களாக இருந்தது 60 டாலர்களாகக் குறைந்தது. இதனால், நிதியமைச்சரால் பற்றாக்குறையை இட்டு நிரப்ப முடிந்தது.
மொத்த விலைக் குறியீட்டெண்ணும் சரிந்தது. ஆனால், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியா வசியப் பண்டங்களின் விலை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. சாமானியர்களைப் பாதிக்கும் இந்த விலை உயர்வைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கோதுமை மாவு, பருப்பு, பால், கடுகு எண்ணெய், வனஸ்பதி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது.
தெரிந்தே பேசினார்
வெளிநாடுகளில் பதுக்கிய கோடிக் கணக்கான ரூபாய் கருப்புப் பணத்தை மீட்போம்; கருப்புப் பணத்தை மீட்டு வந்து ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் தலா 15 லட்ச ரூபாயைப் போடுவோம் என்றெல்லாம் சொன்னார்களே… என்னவாயிற்று? ஊழலை ஒழிப்பேன் என்றும் மோடி வாக்குறுதி அளித்தார். 21.4.2014-ல் பேசியபோது, கிரிமினல் பேர்வழிகளை நாடாளுமன்றத்திலிருந்து நீக்குவேன் என்றார். இதுவரை அப்படி எதையுமே அவர் செய்யவில்லை.
சமூக நலத் துறையில் பின்னடைவு
சமூக நலனைப் புறக்கணித்திருப்பதுதான் இந்த அரசின் மிகப் பெரிய, உண்மையான தோல்வி. விவசாயம், கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளும் சிறு வணிகர்களின் கவலைகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. கல்வி, சுகாதாரத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு கடுமையாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. வேளாண் துறை கடுமையான நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. வேளாண் துறை வளர்ச்சி 2014-ல் 3.7% ஆக இருந்தது 1.1% ஆகக் குறைந்துவிட்டது. இதற்கு முன் இருந்ததைவிட அதிக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். 80.85% விவசாயிகள் ஒரு ஹெக்டேருக்கும் குறைவான அளவு நிலங்களைத்தான் வைத்திருக்கிறார்கள் என்று மோடி அறிய வேண்டும். அதாவது, நிலம்தான் அவர்களுக்கு ஒரே வாழ்வாதாரம். அதை அவர்கள் இழந்தால் அவர்களுடைய வாழ்வுரிமையே பறிபோய்விடும்.
விவசாயத்தைத் தொடர்ந்து பீடித்துள்ள பிரச்சினைகளை எப்படித் தீர்ப்பது என்பதும் இந்த அரசுக்குத் தெரியவில்லை என்பது தெளிவாகிறது. ஒரு சில தொழிலதிபர்களுக்கு மட்டுமே சலுகையைத் தருகிறார் மோடி. இது மிக மோசமான சலுகைசார் முதலாளித்துவக் கோட்பாடாகும்.
அரசியலிலும் நிறுவனங்களிலும் - குறிப்பாக கல்வித் துறையில் - காவியைப் புகுத்தும் தீய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இது நம்முடைய ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. லவ் ஜிகாத், கர் வாப்ஸி என்ற கருத்துகள் ஆழ்ந்த கவலைக்குரியவை. இந்தியாவின் ஜீவன் என்ன விலை கொடுத்தாவது காப்பாற்றப்பட வேண்டும். இதுவரை நம்முடைய சமூகம் எந்த நன்மைக்காக எல்லாம் துணையாக நின்றதோ அவற்றையெல்லாம் நல்ல வழிமுறைகளிலும் மோசமான வழிமுறைகளிலும் அழிக்கவே இந்த அரசு முயல்கிறது!
கபில் சிபல், காங்கிரஸின் மூத்த தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர்.
© ‘தி இந்து’ (ஆங்கிலம்) சுருக்கமாகத் தமிழில்: சாரி





திங்கள், 25 மே, 2015

Nasa Image Photo Gallery

http://www2.jpl.nasa.gov/basics/index.php

http://www.bu.edu/astronomy/visualizations/AlienWorlds/ (Austronomy guide)

Status of SEZ

தற்போது ‘மேக் இன் இந்தியா’ என்று கூறிக்கொண்டிருப்பதை போல பத்து வருடங்களுக்கு முன்பு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (எஸ்.இ.இசட்) என்று கூறிக்கொண்டிருந்தார்கள். இந்தியாவின் ஏற்றுமதியை உயர்த்துவதற்காக உருவாக்கப்பட்டதுதான் சிறப்பு பொருளாதார மண்டலங்கள். ஆனால் இந்த மண்டலங்களின் தற்போதைய நிலை அவ்வளவு பிரமாதமாக இல்லை.
2005-ம் ஆண்டு இதற்காக ஒரு சட்டம் உருவாக்கப்பட்டது. மத்திய அரசு / மாநில அரசு / தனியார் நிறுவனங்கள் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைத்திருக்கிறார்கள். பல தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு அவை செயல்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது பல நிறுவனங்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை திருப்பி கொடுத்துவருகின்றன. எஸ்.இ.இசட் பற்றியும் அதன் தற்போதைய நிலைமை பற்றியும் ஒரு சிறப்பு பார்வை.
சரிவுக்கு காரணம்
சிறப்பு பொருளாதார மண்டலத்தில் செயல்படும் நிறுவனங்கள் ஈட்டும் லாபத்தில் குறைந்தபட்ச மாற்று வரி மற்றும் டிவிடெண்ட் விநியோக வரி விதிக்கப்பட்டது. 2011-ம் ஆண்டு முதல் இந்த உத்தரவு அமலில் உள்ளது. இதனால் எஸ்.இ.இசட் மீதான மதிப்பு குறைந்து வருகிறது.
குறைந்தபட்ச மாற்று வரி மற்றும் டிவிடெண்ட் விநியோக வரியை நீக்க வேண்டும் என்று தொழில் துறையில் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். குறைந்தபட்சம் குறைந்தபட்ச மாற்று வரியை பாதியாக (7.5%) குறைக்கவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருக்கிறது.
மத்திய அரசு எஸ்.இ.இசட்
மெப்ஸ் (எம்.ஒ.பி.இசட்) சென்னை
எஸ்.இ.இ.பி.இசட். மும்பை
நொய்டா எஸ்இஇசட்
கொச்சின் எஸ்.இ.இசட்
பால்டா எஸ்.இ.இசட். (மேற்கு வங்காளம்)
சி.ஏ.ஜி அறிக்கைபடி எதிர்பார்க்கப்பட்டதை விட 8 சதவீத அளவுக்கு குறைவான வேலை வாய்ப்புகளே எஸ்.இ.இசட் மூலம் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
2006 முதல் 2013-ம் ஆண்டு வரை ரூ.83,104 கோடி ரூபாய் வரிச் சலுகைகளை எஸ்.இ.இசட்கள் அனுபவித்திருக்கின்றன.
முறையாக அனுமதிக்கப்பட்டிருக்கும் எஸ்.இ.இசட்-கள் 436
கொள்கை அளவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் எஸ்.இ.இசட்கள் 32
தற்போது செயல்பாட்டில் இருக்கும் எஸ்.இ.இசட்கள் 199
தமிழ்நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எஸ்.இ.இசட்கள் 36
இதில் பெரும்பாலானவை ஐடியை சேர்ந்தவை. 9%
எஸ்.இ.இசட்கள் மட்டுமே உற்பத்தி துறையை சேர்ந்தவை.
நோக்கம்
உற்பத்தி மற்றும் சேவை துறையில் ஏற்றுமதியை அதிகரிப்பது.
முதலீடுகளை ஈர்ப்பது.
வேலை வாய்ப்புகளை உருவாக்குவது உள்ளிட்ட சில..
சலுகைகள்
கார்ப்பரேட் வரியில் 15 வருடத்துக்கு சலுகை
இறக்குமதி செய்ய உரிமம் தேவை இல்லை.
சேவை வரியில் இருந்து விலக்கு.
பத்திரப் பதிவு கட்டண விலக்கு.
ஏற்றுமதி
2013-14-ல் 4,94,077 கோடி ரூபாய்.

DR. SALLY RIDE - First American Woman In Space

https://sallyridescience.com/about-us/dr-sally-ride

Sally Ride, the first American woman to fly in space, cofounded Sally Ride Science in 2001 to inspire young people—especially girls—to stick with their interest in science and to consider pursuing careers in science and engineering. She served as CEO of the company until her death on July 23, 2012, after a 17-month battle with pancreatic cancer. 

Sally was finishing her Ph.D. in physics at Stanford University in 1977 when she answered a NASA newspaper ad seeking astronaut candidates. When she blasted off aboard the space shuttle Challenger on June 18, 1983, she became the first American woman—and, at 32, the youngest American—in space. Sally's historic flight made her a symbol of the ability of women to break barriers and a hero to generations of adventurous young girls. She flew on Challenger again in 1984 and later was the only person to serve on both panels investigating the nation's space shuttle disasters—the Challenger explosion in 1986 and the breakup of the shuttle Columbia on reentry in 2003. 

After retiring from NASA, Sally became a physics professor and an award-winning author of science books for children. She used her high profile to champion a cause she cared about passionately—igniting students' enthusiasm for science and piquing their interest in careers in science, technology, engineering, and math. At Sally Ride Science, she guided the creation of innovative classroom programs, classroom materials, and professional development programs for teachers and students. 

In 2013 Sally was posthumously awarded the Presidential Medal of Freedom, the nation’s highest
civilian honor.   

நூடுல்ஸ்களில் Monosodium glutamate (MSG) என்கிற ரசாயனப் பொருட்கள் கலப்பது உடலுக்கு தீங்கானது


ஃபேஸ்புக்: நண்பரா, எதிரியா?

ஃபேஸ்புக் - இதழியலின் அடுத்தகட்ட வளர்ச்சியா அல்லது வீழ்ச்சியா என்ற திகைப்பில் இருக்கிறார்கள் உலகளாவிய இதழியலாளர்கள். கடந்த வாரம் பிரபலமான 9 ஊடகங்கள் தங்கள் செய்திகளையும் கட்டுரைகளையும் நேரடியாகவே ஃபேஸ்புக்கில் வெளியிட ஆரம்பித்திருக்கின்றன. இதனால், ஃபேஸ்புக்கின் 140 கோடிப் பயனாளிகளும், அந்தக் கட்டுரைகளும் செய்திகளும் சம்பந்தப்பட்ட ஊடகங்களில் வெளியான உடனே ஃபேஸ்புக்கிலும் படிக்க முடியும்.
‘தி நியூயார்க் டைம்ஸ்’, ‘நேஷனல் ஜியாக்ரஃபிக்’, ‘பஸ்ஃபீடு’ ‘என்பிசி’, ‘தி அட்லாண்டிக்’, ‘தி கார்டியன்’, ‘பிபிசி’, ‘ஸ்பீகல் ஆன்லைன்’, ‘பில்டு’ ஆகியவைதான் அந்த ஊடகங்கள். இதழாளர்களுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி. இதனால், அதிக விளம்பர வருவாய் அந்த ஊடகங்களுக்குக் கிடைக்கும். தவிர, இந்த ஊடகங்களைச் சந்தைப்படுத்துவதன் மூலம் ஃபேஸ்புக்குக்குக் கிடைக்கும் வருவாயில் 70 சதவீதத்தை ஃபேஸ்புக்கே வைத்துக்கொள்ளும்.
தரமான, நடுநிலையான, நம்பிக்கையூட்டும் செய்திகளைத் தரும் அச்சு ஊடகங்களுக்கு இந்தியாவில் பாதிப்பு இல்லை. அதே சமயம், இணையயுகத்தின் வருகைக்குப் பிறகு தடுமாறிக்கொண்டிருக்கும் மேற்கத்திய ஊடகத்துறைக்கு ஃபேஸ்புக்கின் துணை மிகவும் ஆசுவாசமளிப்பது. வருமானத்தை அதிகரித்துக்கொள்ளவும் ஒரு வாய்ப்பு. செய்தி ஊடகங்களின் நிலைகுறித்து 2015-ல் ‘பியூ ஆராய்ச்சி மையம்’ வெளியிட்ட அறிக்கை, ‘அச்சு ஊடகத்தின் விளம்பர வருவாய் 2014-ல் பெருமளவு சரிந்திருக்கும் அதே வேளையில், இணையம் வழியாகக் கிடைக்கும் வருவாய் அதிகரித்திருக்கிறது’ என்று சொல்கிறது.
ஆனாலும், அச்சுப் பதிப்புகள் சந்தித்திருக்கும் விளம்பர வருவாய் இழப்பை இணைய வழி விளம்பரங்கள் ஈடுகட்டவே இல்லை. அமெரிக்காவில் அச்சு விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் 100 கோடி டாலர்கள் அளவுக்குச் சரிந்திருக்கிறது, இணைய விளம்பரங்களின் வருவாயோ 10 கோடி டாலர்கள் அளவுக்குத்தான் அதிகரித்திருக்கிறது.
பிரபல பதிப்பாளர்களெல்லாம் ஃபேஸ்புக்கின் ‘இன்ஸ்டண்ட் ஆர்ட்டிக்கிள்ஸ்’ தளத்தில் கால்பதித்துவிட்டார்கள். இன்னும் பலரோ கால்பதிக்கத் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். சில பதிப்பாளர்கள் ‘ஃபேஸ்புக்’கைத் தவிர்க்கப்போவதாகச் சொல்லியிருப்பதைப் புத்திசாலித்தனமான முடிவாகக் கருத இடமில்லை.
‘பியூ ஆராய்ச்சி மையம்’ எடுத்த கருத்துக் கணிப்பில் கலந்துகொண்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர், அதற்கு முந்தைய வாரம் அரசாங்கத்தையும் அரசியலையும் பற்றிய செய்திகளை ‘ஃபேஸ்புக்’ வழியாகச் சென்று படித்திருப்பதாகத் தெரியவந்தது. மேலும், இணையம் மூலம் செய்யப்படும் விளம்பரங்களில் ‘ஃபேஸ்புக்’கின் ஆதிக்கம் மிகவும் அதிகம். இந்த ஊடகங்களின் இணையதளங்களுக்குக் கிடைக்கும் விளம்பர வருவாயைவிட இது பல மடங்கு அதிகம்.
ஊடகங்கள் இந்த வகையில் ‘ஃபேஸ்புக்’குடன் உறவு வைத்துக்கொள்வது மிகவும் சிரமமான காரியம் அல்ல. செய்திப் பகிர்மானம் செய்யும் பொறுப்பைப் பல்லாண்டுகளுக்கு முன்பே தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிடம் ஒப்படைத்தது இதே ஊடக நிறுவனங்கள்தான் என்பதால், இப்போதைய நிலைக்குப் பொறுப்பும் இவர்களே.
பத்திரிகைத் துறை இப்போது செய்ய வேண்டிய முக்கியமான காரியம் ஒன்று உள்ளது. காலத்துக்கேற்ப தொழில்நுட்பங்களையும் ஊடகங்களையும் மாற்றிக்கொண்டாலும் தங்களுக்கே உரிய தனித்துவத்தையோ நெறிமுறைகளையோ விட்டுவிட்டு, அந்தத் தொழில்நுட்பங்களிடமும் புதிய ஊடகங்களிடமும் முற்றிலும் அடிபணிந்துவிடக் கூடாது. உள்ளடக்கத்தில் தரத்தையும் புதுமையையும் பின்பற்றும்வரை யாரிடமும் அடிபணியத் தேவையில்லை என்பதுதான் பத்திரிகை உலகின் தாரக மந்திரமாக இருக்க முடியும்.

பசுமை வல்லரசாகிறது ஜெர்மனி

புதுப்பிக்கவல்ல மின்சக்தியைப் பொறுத்தவரை ஜெர்மனிதான் இன்றைய நம்பிக்கை!

பெர்லினில் உள்ள அமெரிக்க அகாடமியில் நான் கழித்த ஒரு வாரம் எனக்கு இரண்டு நேரெதிரான உணர்வுகளை ஏற்படுத்தியது: முதலாவது, இன்றைய ஜெர்மனிக்கு சமாதானத்துக்கான நோபல் விருது வழங்கப்பட வேண்டும். இரண்டாவது, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சமாதான நிலைப்பாட்டிலிருந்து ஜெர்மனி மீண்டுவந்து, இன்னும் தீவிரமாகச் செயல்படக்கூடிய உலக சக்தியாக மாற வேண்டும். இரண்டையுமே நான் பாராட்டாகத்தான் சொல்கிறேன்.
முதல் விஷயத்தைப் பொறுத்தவரை ஜெர்மானியர்கள் தங்களின் மின்உற்பத்தியில் 30 சதவீதத்தைப் புதுப்பிக்கத்தக்க சக்தியாக மாற்றியிருக்கிறார்கள். 0% என்ற நிலையிலிருந்து கடந்த 15 ஆண்டுகளில் இந்த நிலையை அடைந்திருப்பது நமது பூமி, அதன் பருவநிலை ஆகியவற்றின் பாதுகாப்புக்குப் பெரும் பங்களிப்பு. ஜெர்மனின் எரிசக்தித் துறையின் இலக்கே ‘மாசற்ற எரிசக்திக்கான விலை’ என்பதுதான். இதன் அடிப்படையில் ஜெர்மானியர்கள் சூரிய சக்தி அல்லது காற்று மின்சக்தி சாதனங்களை மிக எளிதாகத் தங்கள் வீட்டில் நிறுவி, அவர்கள் தயாரிக்கும் மின்சாரத்துக்குத் தகுந்தபடி அதிக விலையை அவர்கள் பெறுவார்கள்.
இந்த முறையில் ஆரம்ப காலத்தில் மிகவும் செலவு பிடித்தது என்பது மறுப்பதற்கில்லை. அதற்கான மானியங்கள் கோடிக் கணக்கான யூரோக்களைத் தொட்டன. எல்லோருடைய மின்கட்டணத்தின் மூலமும் இந்த மானியம் சரிசெய்யப்பட்டது. புதுப்பிக்கத் தக்க மின்சக்தியை அதிக அளவில் உருவாக்குவது மட்டுமே அதன் இலக்கு அல்ல; இந்த வகையில் அதிக அளவில் உற்பத்தி செய்து இந்த உற்பத்தி முறைகளை மையநீரோட்டமாக மாற்றுவதன் மூலம் உற்பத்தி செலவைக் குறைப்பதும் எல்லோருக்கும் கட்டுப்படியாகக் கூடியதாக இவற்றை மாற்றுவதும்தான் அடிப்படை நோக்கம்.
தற்போது, சூரிய மின்சக்தியின் கட்டணம் 80% அளவுக்குக் குறைந்திருப்பதாலும், காற்று மின்சக்தி 55% அளவுக்குக் குறைந்திருப்பதாலும் எரிபொருள் கொண்டு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்துடன் போட்டியிடும் நிலைக்குக் கரிமமில்லா மின்சக்தி இப்போது வந்திருக்கிறது.
வருமானத்துக்கான புதிய வாசல்
“சீன சூரிய மின்தகடு தொழில்துறைக்கு ஏற்றம் கொடுத்திருப்பதைத்தான் ஜெர்மனியின் மின்சக்தியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் பெரும் வெற்றி என்று சொல்வேன்” என்கிறார் ரால்ஃப் ஃபூக்ஸ். ஜெர்மனி பசுமைக் கட்சியைச் சேர்ந்தவர் இவர். “பேரளவிலான சந்தையை நாங்கள் உருவாக்கினோம். அதனால், உற்பத்தி அதிகரித்ததோடல்லாமல் செலவும் பெருமளவு குறைந்திருக்கிறது” என்கிறார் அவர்.
உலகைக் காப்பாற்றும் முயற்சியாகத்தான் இந்த சாதனையை நாம் கருத வேண்டும். விலை குறைந்தவுடன் சாதனங்களை நிறுவுவதற்கான மானியங்களும் குறைந்திருக்கின்றன. சூரிய மின்சக்தி சாதனங்களைத் தங்கள் வீடுகளில் பொருத்தியிருக்கும் ஜெர்மானியர்களுக்கு அவற்றால் இப்போது வருமானமும் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. அதனால்தான், நிலக்கரி கிடைக்கும் பிரதேசங்களைத் தவிர, மற்ற பகுதிகளில் இந்தத் திட்டத்துக்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்திருக்கிறது.
ஜெர்மனியில் இன்று, 14 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளும், கூட்டுறவு அமைப்புகளும் தங்கள் கட்டிடங்களிலேயே தங்களுக்குத் தேவையான சூரிய / காற்று மின்சக்தியை உற்பத்தி செய்துகொண்டிருக்கின்றன. “கிட்டத்தட்ட 1,000 மின்சக்திக் கூட்டுறவு அமைப்புகள் தனியாரால் தற்போது நடத்தப்படுகின்றன” என்கிறார் ஆற்றல் துறைப் பொருளியல் நிபுணர் கிளாடியா கெம்ஃபெர்ட்.
பசுமைக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் துணைத் தலைவர் ஒலிவியர் கிரிஷர் என்னிடம் இப்படிச் சொன்னார்: “என்னுடைய நண்பர் ஒருவர் தினமும் வீடு திரும்பும்போது வெயில் இல்லையென்றால், எனக்கு ‘ஹலோ’ கூடச் சொல்ல மாட்டார். நேராக அவர் வீட்டின் கீழ்த்தளத்துக்குச் சென்று மீட்டரைப் பார்த்து, அன்றைய தினத்தில் எவ்வளவு மின்சாரத்தைத் தான் தயாரித்திருக்கிறேன் என்பதை அவர் தெரிந்துகொண்டுதான் மறுவேலை. சொந்தமாகவே நீங்கள் உங்களுடைய மின்சாரத்தை உற்பத்திசெய்துகொள்ள முடியும் என்பதுதான் இதன் தாத்பரியமே. புதுவிதமான முன்னேற்றமில்லையா இது!” இதன் காரணமாக ஜெர்மனியின் நிலக்கரி உற்பத்தி/ அணுமின் உற்பத்தி நிறுவனங்களில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. அவற்றில் ஒரு நிறுவனமான ‘ஈ.ஆன்’ தற்போது இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.
நிலக்கரி, எண்ணெய், எரிவாயு, அணுசக்தி ஆகியவற்றிலிருந்து கிடைக்கக் கூடிய கடைசிக் கட்ட லாபத்தைப் பிழிந்தெடுப்பதற்கான ஒரு நிறுவனமாகவும், புதுப்பிக்கவல்ல எரிசக்தியின் மீது கவனம் செலுத்துவதற்கான ஒரு நிறுவனமாகவும் அது பிரிக்கப்பட்டிருக்கிறது. ஜெர்மானியர்கள், “ஈ.ஆஃப்’, ‘ஈ.ஆன்’ என்று அந்த நிறுவனங்களைக் கிண்டலடிக்கிறார்கள்.
ஜெர்மனியில் மலிவான, அசுத்தமான பழுப்பு நிலக்கரி டன் கணக்கில் இன்னும் இருக்கிறது. சூரிய/ காற்று மின்சக்தியில் ஏதேனும் தட்டுப்பாடு ஏற்பட்டால், மாற்று ஏற்பாடாக அது பயன்படுத்தப்படுகிறது. தூய்மையான இயற்கை எரிவாயு மிகவும் செலவு பிடிப்பது என்பதாலும் அணுசக்தி கொஞ்சம் கொஞ்சமாக விலக்கிக்கொள்ளப்படுவதாலும் இந்த நிலை. இதுதான் இப்போதைக்கு இருக்கும் பிரச்சினை.
தேச சக்தியின் நிலை
புதுப்பிக்கவல்ல ஆற்றலின் கதை இப்படியென்றால், தேச சக்தியின் நிலை எப்படி இருக்கிறது? இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான இரண்டு தலைமுறைகளுக்குப் பிறகு, தனது எல்லையைத் தாண்டி எந்த அதிகாரத்தையும் செலுத்துவதில் ஜெர்மனிக்குள்ள தயக்கம் அதன் அரசியல் மனநிலையில் ஆழமாகப் பதிந்திருப்பது. ஜெர்மனியின் கடந்த கால வரலாற்றை வைத்துப் பார்க்கும்போது அது நல்ல விஷயம்தான். ஆனால், அதை வைத்துக்கொண்டு தனது நிலையைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள முடியாது.
ஜெர்மனிக்கு இன்று கூடுதல் வலு சேர்ந்திருக்கிறது. அதன் ஆட்சி நிர்வாகத் திறன், சட்டத்தின் ஆட்சியைத் திறம்பட நடத்துவது, நடுத்தர அளவு தொழில்களால் உருவான அதன் பொருளாதார வல்லமை போன்றவற்றால்தான் ஜெர்மனிக்கு இந்த சிறப்பியல்புகள் கிடைத்திருக்கின்றன. ஐரோப்பிய நாடுகள் எதற்கும் இல்லாத தனித்துவம் இது.
ஐரோப்பா மீது அமெரிக்காவுக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்தும் உலகளாவிய ராணுவ சக்தி என்ற நிலையின் கடைசி எச்சங்களிலிருந்தும் பிரிட்டன் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கிச் செல்கிறது. பிரான்ஸும் இத்தாலியும் பொருளாதாரத்தில் தள்ளாடிக்கொண்டிருக்கின்றன. நேட்டோ உறுப்பினர்கள் பலர் தங்கள் நாடுகளின் ராணுவங்களுக்கான செலவைக் குறைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், இன்னும் அதிக அளவிலான தலைமைப் பொறுப்பை ஜெர்மனி ஏன் தவிர்த்துக்கொண்டிருக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை.
உக்ரைன் மீதான ரஷ்ய ஊடுருவலுக்கு எதிரான முக்கியமான நடவடிக்கையாக ஜெர்மனியின் பொருளாதாரத் தடை அமைந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மத்தியத் தரைக்கடல் பிரதேசத்தில் அகதிகளின் வருகை வெள்ளம்போல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இதற்கு ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து தகுந்த கடல் வழி நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு ஜெர்மனி வினையூக்கியாகச் செயல்பட வேண்டும்.
ஐரோப்பாவின் மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது ஜெர்மனியின் பலம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், இதையெல்லாம் வெளியில் சொல்ல முடியாது. ஜெர்மனியின் வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் இந்தப் பிரச்சினையை இப்படி முன்வைத்தார்: “பெரிய அளவில் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டிய நிலைக்கு நாங்கள் வந்திருக்கிறோம். அதே நேரத்தில் ஜெர்மனியின் தலைமையை ஏற்பதில் மற்ற நாடுகள் எந்த அளவுக்குத் தயக்கம் காட்டுகின்றன என்பதையும் நாங்கள் அறிந்திருக்கிறோம் - எனவே, இதை ஐரோப்பிய ஒன்றியத்தின் வழியாகத்தான் நாங்கள் நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்.”
எனது கணிப்பு இதுதான்: ஜெர்மனிதான் ஐரோப்பாவின் பசுமைமிகு, சூரியசக்தி சார்ந்த முதல் வல்லரசாக ஆகும். இந்த இரண்டு பண்புகளையும் ஒரே நாட்டுக்கு உரித்தாக்க முடியுமா என்று கேட்கிறீர்கள். அவர்கள் நிச்சயமாக இப்படித்தான் ஆகப்போகிறார்கள், பாருங்கள்!
- © ‘தி நியூயார்க் டைம்ஸ்’, 
சுருக்கமாகத் தமிழில்: ஆசை

ஜான் நாஷ் - A Beautiful Mind


நோபெல் பரிசுபெற்ற கணிதமேதை ஜான் நாஷ் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவில் நடந்த கார்விபத்தில் காலமானார். "A Beautiful Mind," என்கிற உலகப்புகழ்பெற்ற திரைப்படம் அவரது வாழ்க்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது.

நோபெல் பரிசுபெற்ற கணிதமேதை ஜான் நாஷ் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவில் நடந்த கார்விபத்தில் காலமானார்.
"A Beautiful Mind," என்கிற உலகப்புகழ்பெற்ற திரைப்படம் அவரது வாழ்க்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது.
எண்பத்தி ஆறு வயதான ஜான் நாஷும் அவரது மனைவி அலிசியாவும் பயணம் செய்துகொண்டிருந்த டாக்ஸி சாலைத்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவருமே இறந்துவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Paranoid schizophrenia என்கிற தீவிர மன அழுத்தநோயால் தன் வாழ்நாளின் பெரும்பகுதி அவதிப்பட்ட ஜான் நாஷ், 1994ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நேபெல் பரிசை வென்றார்.
Game theory என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் கணித சூத்திரத்தில் ஜான் நாஷ் செய்துக்காட்டியிருக்கும் ஆழமான ஆய்வுப்பணியும் அதனால் கிடைத்திருக்கும் விளக்கங்களும் அவருக்குப்பிறகான பல தலைமுறைகளைச் சேர்ந்த கணிதவியலாளர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு வழிகாட்டியாக நின்று பயன்படும் என்று அவர் பணிபுரிந்த பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
புத்திசாலித்தனமான, பகுத்தறிந்து முடிவெடுக்கவல்லவர்கள் தமக்கிடையிலான மோதலின்போதும் ஒத்துழைப்பின்போதும் செயற்படும் விதங்கள் மற்றும் எடுக்கும் முடிவுகளுக்குள் பொதிந்திருக்கும் கணித சூத்திர மாதிரிகளின் அடிப்படைகளை புரிந்துகொள்ள உதவும் அல்லது அவற்றை விளக்கும் கணித கணக்கீட்டு சூத்திரமே Game theory என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படுகிறது. அந்த துறையின் பிதாமகராக ஜான் நாஷ் வர்ணிக்கப்படுகிறார்.
*****************
பொருளாதார அறிவியல் துறையில் நோபல் பரிசு பெற்ற கணிதவியல் மேதை ஜான் நேஷ் கார் விபத்தில் மரணமடைந்தார். அவருக்கு வயது 86.
அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் டர்ன்பைக் என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த கார் விபத்தில் அவரும் அவரது மனைவி அலிசியாவும் (82) உயிரிழந்தனர்.
ஜான் நாஷ் 1928-ம் ஆண்டும் மேற்கு வர்ஜீனியா மாகாணத்தில் பிறந்தார். நாஷ் ஈகுவிலிபிரியம் (Nash Equilibrium) அதாவது கேம் தியரி (Game theory) என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் கணித சூத்திரத்தில் ஜான் நேஷ் மேற்கொண்ட ஆய்வுப் பணி பல தலைமுறைகளைச் சேர்ந்த கணிதவியலாளர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு வழிகாட்டியாக பயன்படுகிறது. 1994 ஆம் ஆண்டு அவருக்கு பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
பேரனாய்ட் ஸ்கிஷோஃப்ரெனியா என்ற நோயால் பெரும் பாதிப்புக்குள்ளாகி மீண்ட ஜான் நாஷ் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட "ஏ பியூடிஃபுல் மைண்ட்" (A Beautiful Mind)என்ற திரைப்படம், ஆஸ்கர் விருது வென்றதுடன் உலகப் புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 24 மே, 2015

Famous Life Path 11's

The Life Path 11 has the potential to be a source of inspiration and illumination for people. 
*********************
Famous Life Path 11's
Al Gore, Bill Clinton, Colin Powell, Jackie Kennedy, Michael Jordan, Prince Charles, Robert Monroe, Ronald Reagan, Rose Kennedy, Rush Limbaugh, Terri Irwin, Tim McGraw
**********************

20-July-1982 : Life path number : 11

As a Life Path 11, you possess an inordinate amount of energy and intuition. There is so much going on in your psyche that you are often misunderstood early in life, making you shy and withdrawn. You have far more potential than you know. You galvanize every situation you enter. You inspire people, but without your conscious effort. Energy seems to flow through you without your controlling it. This gives you both power and sometimes emotional turmoil. 

You are a channel for information between the higher and the lower, between the realm of the archetype and the relative world. Ideas, thoughts, understanding, and insight - all of these can come to you without your having to go through a rational thought process. There seems to be a bridge, or connection, between your conscious and unconscious realms, attuning you to a high level of intuition through which even psychic information can flow. All of this amounts to a great capacity for invention. Many inventors, artists, religious leaders, prophets, and leading figures in history have had the 11 prominent in their chart.

Because you are so highly charged, you experience the consequences of a two-edged sword. You possess great abilities, but indulge in much self-reflection and self- criticism. You often feel highly self-conscious. You are aware on some level that you stand out. Even when you try to blend with your environment, you often feel conspicuous, alien, and out-of-place. 

You Must Develop Yourself

You are blessed with a message, or a specific role to play in life. But you must develop yourself sufficiently to take full advantage of that opportunity. Until that time, your inner development takes precedence over your ability to materialize the great undertaking you were chosen to perform. Consequently, 11s seem to develop slowly, but they simply have more to accomplish in their evolution than the average person. Thus, your real success does not usually begin until maturity, between the ages of 35 and 45, when you have progressed further along your path.

Your Life Path Challenges

You may often be frustrated, largely because you have extremely high expectations of yourself. But these expectations can be unrealistic, and can prevent you from accomplishing anything. You can be very impractical, envisioning a skyscraper when all that was necessary was a two-story house. 

You may also suffer from bouts of confusion and lack of direction. This gives rise to loss of confidence and the onset of deep depression. The cause of these emotional problems is your lack of understanding of your own sensitivity and potential. Your desire to achieve some great ambition is enormous. However, a lack of confidence in your own ability to realize this dream may cause you much frustration. You sense the enormous potential you possess, which requires equally enormous confidence in your ability to materialize your dream. Confidence is the key that unlocks your potential. 

Stay Calm

On a strictly physical level, you must protect your nervous system, which is inordinately vulnerable to stress because of your acute sensitivity. Depression is often the result of long periods of stress that have gone unrelieved. Seek out peaceful and harmonious environments, relaxing music, and follow a healthful diet in order to restore balance and peace. As an 11 Life Path, you are a highly charged version of the 2 and possess many of the characteristics and talents of that number.

You can be extremely diplomatic and tactful. You are also patient and cooperative. You work well with groups and somehow find a way of creating harmony among diverse opinions. You enjoy music and poetry and require a harmonious environment. You have an eye for beauty and a fine sense of balance and rhythm. 

You Are Sensitive

You have healing capabilities, especially in such fields as massage, acupuncture, physical therapy, and counseling. You are a sensitive and passionate lover; your perceptiveness makes you aware of your partner's needs and desires, which you are able to fulfill with almost magical delicacy. However, when you feel you have been mistreated or jilted, you can react with devastating power, sometimes using personal criticisms vindictively.

You are a fine companion and possess a good sense of humor. When you have found your niche in life and begun to realize your true potential, your rewards will more than compensate for your trials earlier in life.
Content courtesy of Hans Decoz. Copyright protected.