திங்கள், 1 செப்டம்பர், 2014
ஆசை Vs திறமை
ஆசை என்பது ஒரு புள்ளி. சாதனை என்பது இன்னொரு புள்ளி. இந்த இரண்டு புள்ளிகளையும் இணைக்கும் பாலம் ஒன்று இருக்கிறது. அது பல அம்சங்களால் ஆனது. அந்த அம்சங்கள் என்னென்ன?
அம்சங்கள்
திறமை, வாய்ப்பு ஆகியவை அந்தப் பாலத்தின் முக்கியமான பகுதிகள். திறமை என்பது இயல்பான திறமை, முயற்சியால் மெருகேற்றப்படும் திறமை என இரு பகுதிகளால் ஆனது.
வாய்ப்பு என்பது ஏற்கனவே இருப்பது, உருவாக்கப்படுவது என இரு வகைப்படும். ஏற்கனவே இருக்கும் வாய்ப்புகளையும் புதிதாக உருவாகிவரும் வாய்ப்புகளையும் அறிந்துகொள்ள விழிப்புணர்வு இருக்க வேண்டும். இல்லாத வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ளவும் தெரிய வேண்டும். உரிய வாய்ப்பு கிடைப்பது, வாய்ப்புகளை அடையாளம் காண்பது, வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வது, வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்வது ஆகியவை நமது தொழில் வாழ்க்கையைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பவை.
திறமைகளே நம் அடையாளம்
திறமையை வளர்த்துக்கொள்வது பெரும்பாலும் மாணவப் பருவத்தில்தான் தீவிரமாக நடைபெறுகிறது. வாய்ப்பு பற்றிய கவலை அதற்கு அடுத்த கட்டத்தில் வருவது.
சிலருக்குச் சில விஷயங்களில் இயல்பான திறமை இருக்கும். இசை, ஓவியம், பேச்சுத்திறன், நிர்வாகம், விளையாட்டு, கற்பித்தல், உடல் திறன், தொண்டு மனப்பான்மை எனப் பல விதமான திறமைகளாக இவற்றை அடையாளம் காணலாம்.
இந்த இயல்பான திறமைகளைக் கவனமாக வளர்த்தெடுத்தால் இந்தத் திறமைகளே நம் அடையாளமாக மாறி, நம் தொழில் வாழ்வுக்கும் அடிப்படையாக அமையும். உதாரணமாக, இசையில் திறமை பெற்ற ஒருவர் இசைக் கலைஞராகவே தன் வாழ்வை அமைத்துக்கொள்வது. விளையாட்டு, உடல் திறன், வடிவமைப்பு எனப் பல விதங்களிலும் இந்த உதாரணத்தை விரிவுபடுத்திக் கொண்டேபோகலாம்.
பயிற்சியும், முயற்சியும்
ஆசைக்கு ஏற்ற திறமை இயல்பாக அமைந்துவிட்டால் பிரச்சினை இல்லை. அப்படி இல்லாவிட்டால் அதை வளர்த்துக்கொள்ள முனைய வேண்டும். பயிற்சி, முயற்சி என்று மெனக்கெட்டுத் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
ஓவியம், இசை, விளையாட்டு, எழுத்து என்று என ஏதோ ஒரு துறையில் உங்களுக்கு அடங்காத ஆர்வம் உள்ளது. ஈடுபாடு உள்ளது. ஆனால் அதில் அவ்வளவாகத் திறமை இல்லை. அப்படியானால் நீங்கள் அதிகமாக உழைத்து அதை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆவல் எதில் இருக்கிறதோ அதில் சிறிதளவேனும் திறன் இருக்கத்தான் செய்யும். அதை மெருகேற்றுவதே உங்கள் முனைப்பாக இருக்க வேண்டும்.
ஆனால் சில சமயம் ஆவல் இருக்கும் விஷயத்தில் எவ்வளவு முயன்றாலும் திறமை வளராது. உதாரணமாக, பாட்டு. ஒருவர் எவ்வளவுதான் முயன்றாலும் தன் குரலை ஒரு அளவுக்கு மேல் மேம்படுத்தவே முடியாது. குரல் என்பது பெரும்பாலும் இயற்கையின் கொடை. அந்தக் கொடையை மெருகேற்றவே கடுமையாக உழைக்க வேண்டும். இயல்பாக நல்ல குரல் இல்லை என்றால் எப்படி உழைத்தாலும்
ஒரு அளவுக்கு மேல் அதை மெருகேற்ற முடியாது. அப்படிப்பட்டவர்கள் என்ன செய்யலாம்? ஆசையை விட்டுவிடலாமா?
கிளைகளில் கவனம்
அவசியம் இல்லை. எதில் அடங்காத ஆர்வம், இயல்பான ஆர்வம் இருக்கிறதோ அதையே தன் தொழிலாக, தனக்கேற்ற துறையாக அமைத்துக்கொண்டால் வாழ்வில் மகிழ்ச்சி நிலவும். எனவே ஆவல் அதிகமுள்ள துறையையே தேர்ந்தெடுக்கலாம். அந்தத் துறையின் அடிப்படை ஆதாரமான அம்சத்தில் திறமையை வளர்த்துக்கொள்ள முடியாவிட்டால் அந்தத் துறையின் கிளைகளில் கவனம் செலுத்தலாம்.
உதாரணமாக, பாட்டுப் பாடக் குரல் இல்லாவிட்டால் வாத்திய இசையைக் கற்றுக்கொள்ளலாம். இசைக் கலைஞர்களை ஒன்று சேர்த்து இசைக் குழுவை அமைக்கலாம். இசையில் ஞானத்தை வளர்த்துக்கொண்டு இசையமைப்பாளராகலாம். இசையை ரசிக்கும், அலசும் திறனை வளர்த்துக்கொண்டு இசை பற்றி எழுதலாம்.
இதேபோல இதர ஆவல்களையும் அணுகலாம். குறிப்பிட்ட ஆவல் தொடர்பான ஒரு துறையின் அடிப்படையான அம்சத்தில் பெரிதாகத் திறமையை வளர்த்துக்கொள்ள முடியாவிட்டால் அதே துறையில் நம்மால் வேறு என்ன செய்ய முடியும் என்று பார்க்கலாம்.
சினிமா துறை உங்களுக்குப் பிடிக்கும் என்றால் அதில் நடிப்பு, இயக்கம், எழுத்து, இசை, எடிட்டிங், ஒலிப்பதிவு, ஒப்பனை, நடனம் எனத் திரைக்கு முன்னும் பின்னும் பல தொழில்கள் இருக்கின்றன. இதில் ஏதாவது ஒன்றில் திறமையை வளர்த்துக்கொண்டு உங்களுக்குப் பிடித்த துறையில் இருக்கலாம். கணினித் துறை, வடிவமைப்பு, கல்வித் துறை, எழுத்துத் துறை, விற்பனைத் துறை என்று எதை எடுத்துக்கொண்டாலும் இதே அணுகுமுறையைக் கடைப்பிடிக்கலாம்.
ஆர்வத்துக்கும் சாதனைக்கும் இடையே இருக்கும் இடைவெளியை இப்படியும் நிரப்பலாம். ஏதோ ஒன்று வரவில்லையே என ஏங்குவதற்கு பதில் சற்றே வித்தியாசமாக யோசித்தால் தனக்குப் பிடித்த துறையிலேயே ஒருவர் சந்தோஷமாகச் சாதிக்கலாம்.
*******************
*******************
படி தெரிந்து கொள்வது? உங்கள் தொழில் அல்லது துறை சார்ந்த செய்திகள் வந்தடைகிறதா? இல்லாவிட்டால் தேடிச் செல் கிறீர்களா? உங்கள் தொழில் அல்லது வேலை சார்ந்த வல்லுநர்கள் தொடர்பு உண்டா? உங்கள் வேலை அடுத்த 5 ஆண்டுகளில் எப்படியெல்லாம் ஆகும் என கூகுள் செய்திருக்கிறீர்களா?
என் பயிலரங்குகளில் “உங்களுக்குத் துறை சார்ந்த வாசிப்பு இருக்கிறதா?” என்று கேட்டால் பெரும்பாலோர் உதட்டைச் சுளிப்பார்கள். உங்கள் வாசிப்பையும் தேடலையும் தொடர்புகளையும் உங்கள் வேலைக்கு உதவுவது போலவும் அமைத்துக்கொள்ளுதல் அவசியம்.
மாறுதல்கள் ஏமாற்றங்களாக இருக்க அவசியம் இல்லை. வாய்ப்புகளாகவும் இருக்கலாம்.
வருங்காலம் வருந்துங்காலம் ஆகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
********************
Black Money
கடந்த 6 ஆண்டுகளில் சுவிட்சர்லாந்து வங்கிகளில் முதலீடு செய்திருந்த சுமார் ரூ.25 லட்சம் கோடியை வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் வெளியே எடுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
சர்வதேச ஆலோசனை குழுமமான பிரைஸ்வாட்டர் ஹவுஸ்கூப்பர்ஸின் (பிடபிள்யூசி) சுவிட்சர்லாந்து பிரிவு அந்நாட்டின் 90 தனியார் வங்கிகளின் ஆண்டு அறிக்கைகளை ஆய்வு செய்தது. இதன் அடிப்படையிலும் அந்நாட்டு மத்திய வங்கியான எஸ்என்பி உள்ளிட்ட இதர பொது புள்ளி விவரங்களின் அடிப்படையிலும் பிடபிள்யூசி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 6 ஆண்டுகளில் சுவிஸ் வங்கிகளிலிருந்து சுமார் ரூ.25 லட்சம் கோடியை வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் வெளியில் எடுத்துள்ளனர். இதில் இந்தியர்க ளுக்கு சொந்தமானது எவ்வளவு தொகை என்பது பற்றிய விவரம் தெரியவில்லை.
இந்தத் தொகையில், ரகசிய கணக்கு விவரத்தை வெளியிட்ட தற்காக வாடிக்கையாளர்களுக்கு அபராதமாக செலுத்தியது ரூ.7 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.18 லட்சம் கோடி வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் முதலீடு செய்த தொகையாகும்.
சுவிஸ் வங்கிகளுடனான உறவை முறித்துக் கொண்ட வெளிநாட்டு வாடிக்கையாளர்கள், அந்தத் தொகையை வேறு நாட்டு வங்கியிலோ அல்லது தங்களது சொந்த நாட்டிலோ முதலீடு செய்துள்ள னர். இவ்வாறு அந்த ஆய்வறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.
கருப்பு பணத்துக்கு அடைக்கலம் கொடுப்பதாக சுவிட்சர்லாந்து வங்கிகள் மீது உலக நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. அத்துடன் சுவிஸ் வங்கிகளில் ரகசியமாக முதலீடு செய்துள்ள தங்கள் நாட்டினர் பற்றிய விவரங்களை வழங்குமாறு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் அந்நாட்டு அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன.
இதையடுத்து, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விவரங்களை பகிர்ந்து கொள்வதற்கு வசதியாக சம்பந்தப்பட்ட நாடுகளுடனான வரி தவிர்ப்பு ஒப்பந்தங்களில் திருத்தம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் சுவிஸ் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அங்கு முதலீடு செய்துள்ள பணத்தை வெளியில் எடுத்து வருகின்றனர்.
சுவிட்சர்லாந்து தேசிய வங்கியின் (எஸ்என்பி) 2013 புள்ளிவிவரப்படி அந்நாட்டு வங்கிகளில் உள்ள வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் முதலீடு ரூ.90 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. எனினும், சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் முதலீடு 40 சதவீதம் அதிகரித்து ரூ.14 ஆயிரம் கோடியாகி உள்ளது.
சுவிட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி உள்ள கருப்பு பணத்தை மீட்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Foreign Investment - Share Market - India
புதிய அரசாங்கத்தின் சீர்திருத்தங்கள் தொடர்வதால், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எப்.ஐ.ஐ.) இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2014ம் ஆண்டில் மட்டும் 3,000 கோடி டாலர் அந்நிய முதலீடு இந்தியாவுக்கு வந்திருக்கிறது.
இதில் 1,700 கோடி டாலர் (ரூ.1.2 லட்சம் கோடி) இந்திய கடன் சந்தையிலும், 1,300 கோடி டாலர் (ரூ.78,000 கோடி) இந்திய பங்குச்சந்தையிலும் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.
ஆகஸ்ட் மாதத்தில் மொத்த முதலீடு 365 கோடி டாலர்(ரூ.22,082 கோடி). இந்திய பங்குச்சந்தையில் 1992ம் ஆண்டு முதல் அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருகிறார்கள். இதுவரையில் மொத்த முதலீடு 20,001 கோடி டாலர் (ரூ. 9.7 லட்சம் கோடி) ஆகும்.
இந்தியாவுக்கு வந்திருக்கும் மொத்த அந்நிய முதலீட்டில் 15,900 கோடி டாலர் முதலீடு இந்திய பங்குச்சந்தையிலும், 4,200 கோடி டாலர் இந்திய கடன் சந்தையிலும் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. சென்செக்ஸ் 2014ம் வருடத்தில் இதுவரை 26 சதவீதம் உயர்ந்தது. இப்போது 26500 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகிறது. இந்த ஏற்றத்துக்கு அந்நிய முதலீட்டாளர்களும் ஒரு காரணம்.
NSTC
படித்து முடித்துவிட்டு அதிக எண்ணிக்கை யிலான நபர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். அதேபோல தகுதி வாய்ந்த பணியாளர்கள் கிடைக்காமல் பல நிறுவனங்கள் திண்டாடுகின்றன. படிப்புக்கும் திறமைக்கும் சம்பந்தமே இல்லை என்பதை புரிந்துகொள்ளாததுதான் இதற்கு காரணம். 2022-ம் ஆண்டு 50 கோடி இளைஞர்களை தகுதி உள்ளவர்களாக உருவாக்கும் இலக்கோடு ஆரம்பிக்கப்பட்டது. இதற்காக தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (என்.எஸ்.டி.சி). இதன் உறுதுணையோடு செயல்பட்டுவரும் எமர்ஜ் லேர்னிங் சர்வீசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஆர்.கண்ணனை சென்னையில் இருக்கும் அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினோம். அந்த உரையாடலிலிருந்து...
என்.எஸ்.டி.சி. குறித்து பேசுவதற்கு முன்பு உங்களை பற்றி சொல்லுங்கள்? எப்படி கல்வித்துறைக்கு வந்தீர்கள்?
அப்பாவுக்கு ஊட்டியில் வேலை என்பதால் ஊட்டியில் படித்தேன். சி.ஏ. முடித்துவிட்டு அங்கேயே சொந்தமாக நிறுவனம் நடத்தி வந்தேன். நான் சொந்தமாக நிறுவனம் நடத்தும் போதுதான் கணிப்பொறிகள் அறிமுகம் ஆனது. அதனால் நிறுவனங்களின் கணக்குகளை கணினிமயமாக்கும் வேலைகள் செய்தோம். அப்போது ஊட்டியிலே கம்ப்யூட்டர் சென்டர் நடத்தினேன். சென்னையில் இருக்கும் ஒரு கல்வி நிறுவனம் எங்களது ஒரு வாடிக்கையாளர். அந்த நிறுவனத்தில் முக்கியமான பொறுப்பில் இருந்தேன். அங்கிருந்து வெளியேறி, ஏற்கெனவே செயல்பட்டுக்கொண்டிருக்கும் இன்னொரு நிறுவனத்தை வாங்கினேன். அதில் சிறப்பாக செயல்பட்டதால் என்.எஸ்.டி.சி.யின் கடன் கிடைத்தது. இப்போது விரிவாக்க பணிகளில் இருக்கிறோம்.
என்.எஸ்.டி.சி. குறித்து பேசுவதற்கு முன்பு இந்தியாவில் திறமையானவர்கள் பற்றாக்குறைக்கு காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்?
படிப்பும் திறமையும் ஒன்று என்று நாம் தவறாக புரிந்துகொண்டதுதான். மேலும் இந்த வேலை உயர்வு, இன்னொரு தாழ்வு என்ற எண்ணமும் சேர்ந்துகொண்டது. அதனாலயே என்ன படிக்கலாம் என்று கேட்டால் இன்ஜினீயரிங், டாக்டர் என்று சொல்லி அதற்கு மட்டுமே குறிவைத்தோம். நமக்கு இன்ஜினீயரிங் சரி வருமா என்று யோசிக்காமல், வேலை கிடைக்காவிட்டாலும் கூட இன்ஜினீயரிங் படித்திருக்கிறேன் என்று சொல்வதை பெருமையாக கருதுவது மட்டுமல்லாமல் மற்ற வேலைகளை இழிவாகப் பார்க்க ஆரம்பித்தோம். ஆனால் இப்போது நிலைமை மாறி வருகிறது. சந்தையின் தேவை அதிகமாக இருக்கிறது.
எந்த அடிப்படையில் தேசிய திறன் மேம்பாட்டு கழகம் உங்களுக்கு நிதி வழங்கியது?
நாடு முழுக்க 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு நிதி வழங்கப்ப ட்டிருக்கிறது. இதுவரை நாங்கள் என்ன செய்தோம் என்பதை முதலில் ஆராய்ந்தார்கள். அதன் பிறகு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து முடிவு செய்த பிறகே எங்களுக்கு நிதி கிடைத்தது. மேலும் அவர்கள் கொடுக்கும் நிதியில் குறிப்பிட்ட சதவீத தொகையை நாம் முதலீடு செய்ய தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் நிதி கிடைக்கும்.
இதற்காக உங்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் என்ன?
இன்னும் நான்கு ஆண்டுகளில் இந்தியா முழுக்க 140 மையங்களை உருவாக்க வேண்டும். நாங்கள் சேர்க்கும் மாணவர்களில் 70 சதவீத மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகள் இருக்கிறது. செயல்பாடுகள் குறையும் போது நிதி கிடைப்பது குறையும். மேலும், அவர்கள் (என்.எஸ்.டி.சி.) அனுமதி இல்லாமல் கட்டணம் வசூலிக்க முடியாது.
ஒரு பக்கம் மாணவர்களையும் சேர்க்க வேண்டும், இன்னொரு பக்கம் அவர்களுக்கு வேலை வாய்ப்பையும் உறுதி செய்ய வேண்டுமே? இரண்டு பக்கமும் சவால்கள் இருக்குமே?
சவால்தான். ஆனால் இந்தத் றையில் அனுபவமும் நெட்வொர்க்கும் இருக்கும்பட்சத்தில் இதுசாத்தியம். இங்கு வரும் சில மாணவர்களுக்கு பெரிய அக்கறை இருக்காது. அதனால் அவர்களுடன் பேசி பேசி அவர்களுக்கு திறன் குறித்தும் எதிர்காலத்தை குறித்தும் புரிய வைப்போம். இதுதான் சவால். இதை புரிய வைத்த பிறகு எங்களுக்கு பெரிய வேலை இல்லை. அவர்கள் நன்றாக படித்துவிடுவார்கள்.
வேலை விஷயத்தில் எங்கள் முன்னாள் மாணவர்கள், துறையின் தேவை போன்றவை தெரியும். அதனால் மாணவர்களுக்கு வேலை வாங்கித்தரமுடியும். சில சமயம் குறிப்பிட்ட நிறுவனத்துக்கு, இந்த பிரிவில், இவ்வளவு ஆட்கள் தேவை என்ற சந்தையின் தேவையை பொறுத்தும் மாணவர்களை தேடி அவர்களுக்கு பயிற்சி கொடுத்து வேலை வாங்கித்தருவோம்.
எந்தெந்த துறைகளில் நீங்கள் பயிற்சி அளிக்கிறீர்கள்?
என்.எஸ்.டி.சி. 20-க்கும் மேற்பட்ட துறைகளுக்கு பயிற்சி தேவை என்று தெரிவித்திருக்கிறது. நாங்கள் ஹாஸ்பிட்டாலிட்டி, ஹெல்த்கேர், வங்கி மற்றும் நிதி(பி.எப்.எஸ்.ஐ.) மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட நான்கு துறைகளில் பயிற்சி கொடுக்கிறோம்.
உங்களிடம் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது?
உதாரணத்துக்கு ஹாஸ்பிட்டாலிட்டி துறையை எடுத்துக்கொண்டால் ஆரம்ப சம்பளம் 6,500 ரூபாய் முதல் 13,000 ரூபாய்வரை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
உங்களுக்கு எவ்வளவு நிதி, எவ்வளவு வட்டிக்கு வழங்கப்பட்டிருக்கிறது?
அடுத்த 10 ஆண்டுகளில் 40 கோடி ரூபாய் எங்களுக்கு கடன் கொடுக்க ஒப்பந்தம் போட்டிருக்கிறோம். 6 சதவீத வட்டியில் எங்களுக்கு நிதி வழங்கப்பட்டிருக்கிறது. முதல் நான்கு ஆண்டுகளுக்கு வட்டியை மட்டும் செலுத்தினால் போதும். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அசலைத் திருப்பிச் செலுத்த வேண்டும்.
உங்கள் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் என்.எஸ்.டி.சி. உறுப்பினர்கள் இருக்கிறார்களா?
இல்லை. என்.எஸ்.டி.சி. எங்களுக்கு கடன் கொடுத்திருக்கிறது. எங்கள் நிறுவனத்தின் பங்குகளை வாங்கவில்லை. ஆனால் என்.எஸ்.டி.சி. விரும்பினால் எங்கள் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் அவர்கள் இணையலாம்.
உங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குகிறது என்.எஸ்.டி.சி. ஆனால் அதிக விதிமுறைகள் இருப்பது உங்களுக்கு நெருக்கடியாக இல்லையா?
அதை நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதை பொறுத்துதான் இருக்கிறது. மேலும், நாம் சரியாக செய்யும் பட்சத்தில் எந்த பிரச்சினையும் வரப்போவதில்லை. நம்முடைய தினசரி வேலைகளில் அவர்கள் தலையிடப்போவதில்லை. இதன்மூலம் நிறுவனம் பெரியதாக வளர்வதற்குதான் வாய்ப்பு இருக்கிறது. இதைவிட மாணவர்களை பயிற்சிக்கு கொண்டுவருவதுதான் சவால்.
வாசு கார்த்தி, தொடர்புக்கு karthikeyan.v@thehindutamil.co.in
தேசிய திட்டக் குழு -1951
ஆகஸ்ட் 15-ல் செங்கோட்டையில் தேசியக் கொடியினை ஏற்றிவைத்து
உரையாற்றிய பிரதமர், தேசிய திட்டக் குழுவைக் கலைத்துவிடுவதாகவும், அதன் இடத்தில்
காலத்தின் தேவைக்கேற்ப ஒரு புதிய அமைப்பை உருவாக்க இருப்பதாகவும் அறிவித்தார். 130
கோடி மக்களை உள்ளடக்கி, பல சமூக, வர்க்க, பிரதேச, கலாச்சார வேறுபாடுகளை உடைய,
நாட்டில் ஒன்றுபட்ட வளர்ச்சியை உருவாக்குவதில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேல் பெரும்
பங்கு வகித்த ஒரு தேசிய நிறுவனத்தை, தகுந்த தயாரிப்பும் மாற்று ஏற்பாடுகளும் இல்லாத
சூழ்நிலையில் ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்று முடக்குவது சரியா என்ற கேள்வி பல
தரப்புகளிலும் எழுந்துள்ளது.
தேசிய திட்டக் குழு என்பது ஓர் அரசுத் துறை சார்ந்த அலுவலகமல்ல.
அதனுடைய நீண்ட வரலாற்றை அறிந்தவர்கள், சுதந்திர இந்தியாவை உருவாக்கத் தங்கள்
உயிரைத் தியாகம் செய்த அற்புதமான தலைவர்களின் ஏக்கமும் கனவும் அது என்று
தெரிந்துகொள்வார்கள். தேசிய திட்டக் குழு1951-ல் உருவாக்கப்பட்டாலும், அந்த
சிந்தனையின் கரு சுதந்திரத்துக்கு முன்பே உருவானது. 1938-ல் அகில இந்திய காங்கிரஸ்
தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுபாஷ் சந்திர போஸிடம் விஞ்ஞானி பி.சி. மகலானோபிஸ்
ஒரு வினாவை எழுப்பினார். “அரசியல் சுதந்திரம் பெற்ற பின்பு, இந்த நாட்டு ஏழை
மக்களுக்கு சமூக, பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் முன்னேற்றத்தை
எப்படித் தரப்போகிறீர்கள் ? அதற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?” என்று
கேட்டார். திகைத்துப்போன போஸ் அவரிடமே “என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்”
என்று கேட்டார். அப்போது மகலானோபிஸ், “இந்தியாவைப் போன்ற ஒரு பரந்த தேசத்தின்
ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு நீண்ட காலத் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு, ஒவ்வொரு
கட்டத்திலும் அட்டவணைப்படி அந்தத் திட்டம் நிறைவேற்றப்படுகிறதா என்று
மேற்பார்வையிட்டுத் தகுதியான ஆலோசனைகள் வழங்க விஞ்ஞானிகள், பொருளாதார நிபுணர்கள்,
தொழில்முனைவோர், அரசியல் தலைவர்கள் அடங்கிய ஓர் அமைப்பு வேண்டும்” என்று சொல்லி
திட்டமிடுதலின் அவசியத்தை காங்கிரஸ் தலைவர்களுக்கு விளக்கினார். அதன் அவசியத்தை
உணர்ந்த சுபாஷ் சந்திர போஸ், கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த விஞ்ஞானி விஸ்வேஸ்வரய்யா
தலைமையில் ‘தேசிய திட்டக் குழு’வை அமைத்தார். ஒரு விஞ்ஞானி தலைவராக இருப்பதைவிட
இந்திய மக்களின் அபிலாஷைகளையும் தேவைகளையும் உணர்வுகளையும் புரிந்துகொண்ட ஒரு
அரசியல் தலைவர்தான் தலைவராக இருக்க வேண்டும் என்று மகலானோபிஸ் சொன்னதற்கு இணங்க
விஸ்வேஸ்வரய்யா மனமுவந்து தனது பதவியை ராஜினாமா செய்த பிறகு, நேரு அதற்குத் தலைவராக
ஆனார்.
1951-ல் உருவாக்கப்பட்ட தேசிய திட்டக் குழுவுக்குப் பிரதமர் நேருவே
தலைவராக இருந்தார். முரண்பாடுகள் நிறைந்த தேசத்தின் முரண்பாடுகளை அகற்றவும்,
நாடெங்கிலும் மக்களிடையேயும் பிரதேசங்களிடையேயும் இருந்த ஏற்றத்தாழ்வுகளைச்
சரிசெய்யவும், வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களைத் தூக்கி நிறுத்தவும் தேசிய திட்டக்
குழு வரலாற்றுப் புகழ்மிக்க முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டது, இன்று திட்டக்
குழுவின் மரண உத்தரவில் கையெழுத்திட்டிருப்பவர்களுக்குச் சில வரலாற்று உண்மைகள்
தெரிந்தாக வேண்டும்! முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின்போது நிகழந்தவை திட்டக்
குழுவின் பொற்காலத் தயாரிப்புகள்.
தொலைநோக்குப் பார்வை
தன்னலமற்ற அணுகுமுறையும் தொலைநோக்குப் பார்வையும், உலக அறிவும்
நிரம்பப்பெற்றவர்களாக இருந்த பல சாதனையாளர்கள் திட்டக் குழுவில் அங்கம் வகித்து
அதன் பணியைச் செழுமைப்படுத்தினார்கள். அரசு இயந்திரத்தை எந்த வகையிலும் சாராத
தன்னாட்சி அமைப்பாகத் திட்டக் குழு இயங்கியது. அரசுத் துறைகளின் வழக்கமான
‘செக்குமாடு’அணுகுமுறை, எதிர்மறைச் சிந்தனை, எஜமானப் பார்வை இல்லாமல் தன்
செயல்பாட்டை அமைத்துக்கொண்டது. காங்கிரஸ் இயக்கத்தின் தத்துவங்களோடும்
சிந்தனைகளோடும் மிகப்பெரும் கருத்து வேறுபாடுகள் கொண்டவர்கள்கூட திட்டக் கமிஷனில்
இடம்பெற்றிருந்தனர். வி.டி. கிருஷ்ணமாச்சாரி, அசோக் மேத்தா, மகலானோபிஸ்,
பீதாம்பர்பந்த் போன்ற அறிஞர்கள் தத்துவச் சிந்தனைகளையும் அறிவியல்
தொழில்நுட்பத்தையும் ஒன்றிணைத்தனர்.
கால்பிடுரய்த், நிக்கோலஸ் ஜார்ஜ் சூசவ், ரோஜன், ஈ.எஃப். ஷுமாக்கர்,
காலக்கி போன்றவர்கள் ஆலோசகர்களாக இருந்து, உலகம் முழுவதுமிருந்து திரட்டிய
அனுபவங்களை நமது திட்டக் குழுவோடு பகிர்ந்துகொண்டார்கள். இத்தகைய உலக அறிஞர்களோடு
காந்திய, சர்வோதயச் சிந்தனையாளர்களான ஜே.சி. குமரப்பா போன்றவர்களும் அமர்ந்து
இந்தியாவின் முன்னேற்றத்துக்குத் திட்டங்களைத் தீட்டினார்கள். ஒருமுறை, திட்டக்
குழு அலுவலகமான யோஜனா பவனுக்கு அதன் உறுப்பினர் ஜே.சி. குமரப்பா வாடகைக்குப்
பிடித்த குதிரை வண்டியில் வர, காவலர் அவரை உள்ளே விட மறுத்துவிட்டார். திட்டக் குழு
உறுப்பினர் வாடகைக் குதிரை வண்டியில் வருவாரா என்ற சந்தேகம் அவருக்கு. பின்பு,
பிரதமர் நேருவுக்குத் தகவல் தரப்பட்டு, அவர் தலையிட்டுக் குதிரை வண்டியை உள்ளே
விடச் செய்தாராம்.
இந்தத் திட்டக் குழுதான் இந்தியா முழுவதும் உள்ள ஜீவ நதிகளில்
கட்டப்பட்ட பெரும் அணைகளுக்குத் திட்டம் தந்தது; பெரும் பொதுத்துறை நிறுவனங்களை
உருவாக்கியது; கனரகத் தொழிலை வளர்த்தது, சிறு-குறு மற்றும் குடிசைத் தொழில்களுக்கான
ஆதாரங்களை உருவாக்கியது; நிலச்சீர்திருத்தம் வேண்டும் என்று வலியுறுத்தி அதற்கான
சட்டங்களை இயற்ற வலியுறுத்தியது; தேசிய நெடுஞ்சாலைகள், உயர் அழுத்த மின்பாதைகள்,
அனல் மின்நிலையங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் என்று இன்றைய நவீன பாரதம்
உருவாகக் களம் அமைத்துத் தந்தது திட்டக் குழுதான்.
காட்கிலும் தண்டவதேவும்
திட்டக் குழுவின் இரண்டு துணைத் தலைவர்களைப் பற்றிச் சொல்லியே ஆக
வேண்டும். இந்தியப் பொருளாதாரம் எப்படி இயங்க வேண்டும் என்ற வரைபடத்தைத்
தயாரித்தவர்கள் அவர்கள். ஒருவர் பொருளாதார அறிஞர் டி.ஆர். காட்கில். இந்திரா
காந்தியின் கீழ் திட்டக் குழுவின் துணைத் தலைவராக இருந்தார். நமது நிதி ஆதாரங்கள்
எவ்வித முன்னுரிமையில் செலவிடப்பட வேண்டும் என்ற வரைபடத்தைக் கொடுத்தவர் அவர்.
மத்திய அரசின் வருவாயும் நிதி ஆதாரங்களும் மாநில அரசுகளுக்கு எப்படிப்
பிரித்துக்கொடுக்கப்பட வேண்டும் என்ற சூத்திரத்தை உருவாக்கியவர் அவர். இன்றுவரை அது
‘காட்கில் பார்முலா’ என்றே அழைக்கப்படுகிறது. அஸ்ஸாம், ஜம்மு காஷ்மீர், நாகாலாந்து
போன்ற மாநிலங்களைச் சிறப்புவகை மாநிலங்களாக வகைப்படுத்தி, நிதி ஒதுக்கீட்டில்
முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற பரிந்துரையை வழங்கியவர் அவர். மற்றொருவர் சோஷலிஸ்ட்
தலைவர் மது தண்டவதே, வறுமைக்கோட்டு எல்லை எப்படி வரையறுக்கப்பட வேண்டும் என்ற
சமூகநீதிக் கணிதத்தை முதலில் வழங்கியவர்.
பிரதமர் தயவில்…
கால வெள்ளத்தின் நெருக்கடியிலும், அரசியல் சுயநலவாதிகளின்
தாக்குதலிலும் திட்டக் குழு தனது உயர்ந்த அடையாளங்கள் சிலவற்றைத் தொலைத்தது உண்மை.
ஆனால், திட்டக் குழு தோற்றுவிக்கப்பட்டதற்கான காரணங்கள் இன்னும் அப்படியே
இருக்கின்றன. சமூக ஏற்றத்தாழ்வுகளும், மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்ற
மாறுபாடுகளும், நிதி ஆதாரங்களைப் பெருக்குவதிலும் - பங்கிட்டுக்கொள்வதிலும்
மத்திய-மாநில அரசுகளுக்கு இருக்கின்ற கருத்து வேறுபாடுகளும் முழுமையாக
முடிந்தபாடில்லை.
பல்வேறு அரசியல் கட்சிகள், பல சித்தாந்தத் தொகுப்பு கள், பல சமூகப்
பின்புலங்களைச் சார்ந்தவர்கள், மாறுபாடான தேவைகளையுடையவர்கள் என்று எல்லோ ரையும்,
எல்லா மாநிலங்களின் முதலமைச்சர்களையும் நிதி ஆதாரங்களுக்காக ஒரு கோரிக்கை மனுவுடன்
பிரதமரின் தயவுக்காக அவரது வரவேற்பறையில் காக்க வைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுவிடக்
கூடாது. மத்திய-மாநில நிதிப் பங்கீட்டை மத்திய நிதி அமைச்சரின் தலையசைவுதான்
முடிவுசெய்யும் என்ற நிலை வந்துவிட்டால், கூட்டாட்சித் தத்துவம் சிதறிவிடும்.
திட்டக் குழுவை எடுத்துவிட்டு, பிரதமருக்கும் மத்திய அரசுக்கும் ஆலோசனை வழங்க
அறிஞர்கள் அடங்கிய ஒரு ‘சிந்தனைத் தொட்டி’அமைக்கப்படும் என்று கசிய விடப்படும்
தகவல்கள் உண்மையானால் அது மிகப் பெரும் துரதிருஷ்டம்.
பரந்த இந்த தேசத்தின் புவியியல், பொருளியல், சமூகவியல் சார்ந்த
புள்ளிவிவரங்களைத் தொகுத்துத் தரும் தகவல் களஞ்சியமாகவும், தொழில் வளர்ச்சி,
தொழில்நுட்ப விரிவாக்கங்கள், அடிப்படைக் கட்டுமானப் பணிகள், சமூக வளர்ச்சித்
திட்டங்கள், மனிதவள மேம்பாடு போன்றவற்றில் மேலும் பல பரிமாணங்களுடன் 60
ஆண்டுகளுக்கும் மேலாக தேசத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய ஓர் அமைப்பை ஒரே
உத்தரவில் அடித்து நொறுக்குவது புத்திசாலித்தனமான முடிவல்ல. எலிகளுக்குப் பயந்து
எஃகுக் கோட்டையை எடுப்பது எப்படிச் சரியாகும்? திட்டக் குழுவை மாற்றியமைக்க
வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதற்கு மரணம் மட்டும் தீர்வு என்று
சொல்வது நியாயமா?
சா. பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்.
தொடர்புக்கு: spalphonse@yahoo.com
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)