செவ்வாய், 4 நவம்பர், 2014

http://thulirmagazine.com/publications.html -- http://www.tnsf.in/


proud of India


Continent:Asia
Region:South Asia
Capital:New Delhi
Government:Federal Republic
Currency:Rupee INR
TimeZone:IST (UTC+5:30)
Total Area:3,287,263 sq.km.(2.4% of World's land)
Population(2011 Census):1,210,193,422(17.5% of World Population)
GDP(2010 IMF):$4.001 trillion (5.4% of World GDP
********
"We owe a lot to the Indians, who taught us how to count, without which no worthwhile scientific
discovery could have been made."
- Albert Einstein, Scientist
"India is, the cradle of the human race, the birthplace of human speech, the mother of history, the grandmother of legend, and the great grand mother of tradition. our most valuable and most instructive materials in the history of man are treasured up in India only."
- Mark Twain, Author
"India was the motherland of our race, and Sanskrit the mother of Europe's languages: she was the mother of our philosophy; mother, through the Arabs, of much of our mathematics; mother, through the Buddha, of the ideals embodied in Christianity; mother, through the village community, of self-government and democracy. Mother India is in many ways the mother of us all."
- Will Durant, American Historian
"If I were asked under what sky the human mind has most fully developed some of its choicest gifts, has most deeply pondered on the greatest problems of life, and has found solutions, I should point to India."
- Max Mueller, German Sholar
"If there is one place on the face of earth where all the dreams of living men have found a home from the very earliest days when man began the dream of existence, it is India."
- Romain Rolland, French Scholar
"India conquered and dominated China culturally for 20 centuries without ever having to send a single soldier across her border."
- Hu Shih, Former Ambassador of China to USA

மழை தந்த பரிசை - Tamilnadu

பருவ மழை பொய்க்கும் என்றோ குறைவாகப் பெய்யும் என்றோதான் நமக்கு வழக்கமாகச் சொல்லப்படும். அந்தக் கணிப்பையெல்லாம் மீறிப் போதுமான அளவுக்கு இந்த முறை மழை பெய்திருப்பது மகிழ்ச்சியளிக்கும் செய்தி.
தமிழகத்திலும் கர்நாடகத்திலும் பருவ மழை தாராளமாகவே பெய்திருக்கிறது. காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணைக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 100 அடியை இவ்வாண்டில் இரண்டாவது முறையாக எட்டியிருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் கொடைக்கானல் பகுதியில் பெய்த மழையால் பாலாறு, பொருந்தலாறு அணை, வரதமா நதி அணைக்கட்டு போன்றவற்றிலும் நீர்வரத்துப் பெருகியிருக்கிறது. 28 மாவட்டங்களில் வழக்கமான சராசரியைவிட இந்த முறை அதிகமான மழைதான். தமிழகத்தில் இந்தப் பருவத்தில் பெய்யும் சராசரி அளவான 151 மில்லி மீட்டரைவிட 35% கூடுதலாக இந்த முறை மழை பெய்திருக்கிறது.
இவ்வளவு நீரை அள்ளிக்கொடுத்திருக்கிறது பருவமழை. ஆனால், நாம் அதை எப்படிக் கையாள்கிறோம்? காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 53,000 ஏக்கர்களில் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியிருக்கிறது. மழைநீர் தேங்கி, சென்னை நகரச் சாலைகள் மிகுந்த சேதத்துக்குள்ளாகியிருக்கின்றன. பிற மாவட்டங்களிலும் 4,765 கிலோ மீட்டர் நீளத்துக்குச் சாலைகள் ஆங்காங்கே சேதம் அடைந்துள்ளன. ஆக்க சக்தியான நீரை அழிவு சக்தியாக மாற விட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம். மழை கொட்டிக்கொண்டிருக்கும் அதே வேளையில், கேன்களில் அடைக்கப் பட்ட குடிநீருக்காக மக்கள் அல்லாடிக்கொண்டிருக்கும் காட்சிகளும், மாநகராட்சித் தண்ணீர் வாகனங்களுக்காக ஏழை, நடுத்தர மக்கள் அடித்துக்கொள்ளும் காட்சிகளும் அரங்கேறுவதுதான் விசித்திரம்.
தண்ணீர்த் தட்டுப்பாடு என்பது ஏதோ ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலை அல்ல. பல பத்தாண்டுகளாக நிலவும் பிரச்சினை அது. ஆனாலும், இவ்வளவு நாட்களுக்குப் பிறகும் தண்ணீரின் அருமையை நாமும் நமது அரசுகளும் கொஞ்சம்கூட உணர்ந்திருக்கவில்லை என்பது வேதனை. நமது நீர் சேகரிப்பு ஆதாரங்களையும் வடிகால் வழிவகைகளையும் பெரும்பாலும் இழந்து நிற்கிறோம் என்பதற்கான அடையாளங்கள்தான் ஏரிகளையும் குளங்களையும்விட அதிக அளவிலான நீர் தெருக்களிலும் சாலைகளிலும் தேங்கி நிற்பது.
முந்தைய அதிமுக அரசு கொண்டுவந்த மழைநீர் சேகரிப்புத் திட்டம் உண்மையிலேயே அற்புதமான திட்டம். ஆனால், தற்போது அந்தத் திட்டம் பராமரிப்பில்லாத குழந்தையைப் போல சூம்பிப்போய்க் காட்சியளிப்பதுதான் வேதனை. கடந்த ஓராண்டுக்குள் அந்தத் திட்டத்தின் முக்கியத்துவம்குறித்துப் பலமுறை ‘தி இந்து’ தலையங்கம் எழுதியிருக்கிறது.
ஜெயலலிதா கைதைத் தொடர்ந்து மாநில நிர்வாகம் கிட்டத்தட்ட முடங்கிப்போயிருக்கிறது. மாலுமி இல்லாத கப்பல்போலத் தமிழகம் தத்தளிக்கிறது. நெருக்கடியான நேரங்களில்கூட மக்களுக்கு உதவுவதைவிடவும் கட்சியிலும் ஆட்சியிலும் தங்கள் இடத்தை நிலைநிறுத்திக்கொள்வதற்கான பாவனை அரசியல் செய்வதில்தான் அமைச்சர்கள் குறியாக இருக்கிறார்கள். ஜெயலலிதாவுக்கு ஏதாவது நல்லது செய்ய விரும்பினால் அவர்கள் செயலாற்ற வேண்டியது மக்களுக்கு மத்தியில்தான்.
இந்தப் பருவமழை தந்த பரிசைப் பல தலைமுறைகளுக்கான சீதனமாக மாற்ற வேண்டுமானால், அதற்கு அரசு நிர்வாகம் முதலில் இயங்க வேண்டும். இல்லையென்றால், மழையின் பரிசு சாபமாக மாறுவதைத் தடுக்க யாராலும் முடியாது.

திங்கள், 3 நவம்பர், 2014

Know the personalities - India


சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர், காங்கிரஸ் கட்சியைச் சேராதவர் என்றாலும் காந்தியின் பரிந்துரையால் முதல் நிதியமைச்சராக நேருவால் நியமிக்கப்பட்ட ஒரே தமிழர் என்ற சிறப்புகளையெல்லாம் கொண்டவர் ஆர்.கே. சண்முகம் செட்டியார்.
நீதிக் கட்சியில் இருந்த சண்முகம் செட்டியார், 1920-ல் சென்னை மாகாண சட்ட மேலவை உறுப்பினரானார். பிறகு, சுயராஜ்யக் கட்சியில் சேர்ந்தார். 1924-ல் அந்தக் கட்சி சார்பில் போட்டியிட்டு மத்திய சட்டசபை என்று அழைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரானார். மத்திய சட்ட சபையின் துணைத் தலைவர், தலைவர் ஆகிய இரு பதவிகளையும் இவர் வகித்திருக்கிறார். முதல் நிதியமைச்சராக இருந்தபோது இவர் தயாரித்த முதல் பட்ஜெட் அனைவரின் வரவேற்பையும் பெற்றது. காங்கிரஸ் கட்சியைச் சேராதவர் என்றாலும், அவருடைய நிதித் துறை நிர்வாகத்தை காங்கிரஸ் தலைவர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள்.
பெரியாருடைய சீர்திருத்தக் கருத்துகளால் கவரப்பட்டு, தனது பதவிக் காலத்தில் அவற்றை அமல்படுத்தினார். காந்தி, தாகூர், அன்னி பெசன்ட், சித்தரஞ்சன் தாஸ், அவ்வை டி.கே. சண்முகம், சி.என். அண்ணாதுரை என்று பல துறைகளைச் சேர்ந்தவர்களுடனும் சண்முகம் செட்டியார் நட்புகொண்டிருந்தார்.
டெல்லி தமிழ்ச் சங்கம், லண்டன் தமிழ்ச் சங்கம் போன்றவற்றைத் தோற்றுவித்தவர்களில் அவரும் ஒருவர். கோவையில் பஞ்சாலைகள் உருவாகவும் கோவை மாபெரும் தொழில் நகரமாகவும் அவருடைய பங்களிப்புகள் ஏராளம்.
*********************
தமிழ்ப் படைப்பாளி தொ.மு. சிதம்பர ரகுநாதனின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து.
• ‘தினமணி’யில் உதவி ஆசிரியர், வை.கோவிந்தன் நடத்திய ‘சக்தி’ இதழின் ஆசிரியர், ‘சோவியத் நாடு’ இதழின் ஆசிரியர் போன்ற பொறுப்புகளில் செயல்பட்டார்.
• ‘சாந்தி’ என்னும் முற்போக்கு இலக்கிய மாத இதழைத் தொடங்கி நடத்தியவர், அதன் வாயிலாக டேனியல் செல்வராஜ், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன் உள்ளிட்ட அன்றைய இளம் எழுத்தாளர்களை தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமும் செய்தார்.
• தமிழின் முன்னோடி எழுத்தாளரான இவரது முதல் சிறுகதை 1941-ல் ‘பிரசண்ட விகடன்’ இதழில் வெளிந்தது. முதல் புதினம் ‘புயல்’ 1945-ல் வெளியானது. தமிழக கைத்தறி நெசவாளர்களின் துயர வாழ்வை உருக்கமாக விவரிக்கும் ‘பஞ்சும் பசியும்’ இவரது முக்கியமான நாவல். இது ‘செக்’ மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ஏராளமான பிரதிகள் விற்றன. பண்டைய இலக்கியம் குறித்த இவரது படைப்பில் குறிப்பிடத்தக்க ஆய்வு நூல் ‘இளங்கோ அடிகள் யார்?’ என்பதாகும்.
• இடதுசாரிக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட இவர், சோவியத் நாடு பதிப்பகம் மூலம் ரஷ்யப் படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’, லெனின் கவிதாஞ்சலி ஆகியன இவரது முக்கியமான மொழிபெயர்ப்புகள்.
• புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பர். அவரது மறைவுக்குப் பிறகு, அவரது படைப்புகளை சேகரித்து வெளியிட்டு மகத்தான சேவை புரிந்துள்ளார். புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார். இந்த படைப்பு அவரைப் பற்றிய முக்கியப் பதிவாகப் போற்றப்படுகிறது.
• பண்டைய இலக்கியம், நவீன இலக்கியம் ஆகிய இரண்டு தளங்களிலும் ஆழ்ந்த ஈடுபாட்டுடனும் புலமையுடனும் விளங்கியவர்.
• ‘பாரதியும் ஷெல்லியும்’, ‘கங்கையும் காவிரியும்’ ஆகிய படைப்புகள் மூலம் ஒப்பிலக்கியத் தடத்தை தமிழில் விரிவுபடுத்தினார்.
• ‘பாரதி காலமும் கருத்தும்’ என்ற இவரது இலக்கிய விமர்சன நூல் சாகித்ய அகாடமி விருதை வென்றது. சோவியத் லேண்ட் நேரு விருது, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ‘தமிழ் அன்னை’ பரிசு, பாரதி விருது உள்ளிட்டவற்றையும் பெற்றுள்ளார்.
• 4 சிறுகதைத் தொகுப்புகள், 3 கவிதைத் தொகுப்புகள், 3 நாவல்கள், 2 நாடகங்கள் உள்ளிட்ட படைப்புகள் மூலம் தமிழ் இலக்கியத்தில் தனி முத்திரை பதித்த தொ.மு.சிதம்பர ரகுநாதன் 2001-ல் பாளையங்கோட்டையில் காலமானார்.
***************************
# பழமையான தபோவன முறையில் ஆன்மிகக் கல்வி கற்றார். இவரது தந்தை வைஜ்நாத் ஆத்வலே நிறுவிய ஸ்ரீமத் பகவத்கீதா பாடசாலாவில் 22 வயதில் இருந்தே கீதை, உபநிஷத சொற்பொழிவுகள் நிகழ்த்தத் தொடங்கினார்.
# இந்தியாவின் தத்துவஞானி, ஆன்மிக குரு, சமூக மறுமலர்ச்சியாளர் என்று பல்வேறு வகையில் புகழ் பெற்றிருந்த அவரை ‘தாதாஜி’ என்று மக்கள் அன்புடன் அழைத்தனர்.
# ராயல் ஏஷியாடிக் நூலகத்தில் உள்ள மார்க்சிய சித்தாந்தம் முதல் தொன்மையான இந்தியாவின் தத்துவம் குறித்து ஒயிட்ஹெட் எழுதிய படைப்பு வரை அத்தனை இலக்கியங்களையும் 14 ஆண்டுகளில் படித்து முடித்தார்.
# ஜப்பானில் 1954-ம் ஆண்டு நடந்த 2-வது உலக தத்துவ மேதைகள் மாநாட்டில் இந்திய வேதங்கள் மற்றும் பகவத் கீதை குறித்து இவர் ஆற்றிய உரை உலகப் புகழ் பெற்றது. நோபல் பரிசு வென்ற இயற்பியலாளர் டாக்டர் ஆர்தர் ஹோலி காம்ப்டன், இவரது உரையில் கவரப்பட்டு அமெரிக்காவுக்கு அழைத்தார்.
# வேத தத்துவங்களின் அடிப்படையில் ‘ஸ்வத்யாய’ (சுயம் குறித்த ஆய்வு) என்ற அமைப்பை உருவாக்கினார். இது தீண்டாமையை ஒழிக்கப் பாடுபட்டது. நடைபயணமாகவும் மிதிவண்டியிலும் கிராமந்தோறும் சென்று அனைத்து தரப்பு மக்களும் இறைவனின் குழந்தைகளே என்ற கருத்தைப் பரப்பினார்.
# அஹமதாபாத்தில் இவர் தொடங்கிய ‘பவ் நிர்ஜார்’ கல்வி நிலையத்தில் யோகேஷ்வர் ஆலயத்தை எழுப்பினார். அங்கு நடக்கும் வருடாந்திர உற்சவத்தில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்களை பங்கேற்கச் செய்தார்.
# ‘‘வெறும் கோட்பாடுகள் அடிப்படையிலான தத்துவம் நமக்கு தேவையில்லை. நம் அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய தத்துவங்கள்தான் தேவை” என்று பிரச்சாரம் செய்தார். அதையே தானும் பின்பற்றினார்.
# கிராமங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக கூட்டுறவு விவசாயம், மீன்பிடி தொழில், மரம் நடும் திட்டங்களை தொடங்கினார்.
# சமூக மறுமலர்ச்சிப் பணிக்காக 1996-ம் ஆண்டு மகசேசே விருது பெற்றார். ஒரு லட்சம் கிராமங்களில் பகவத் கீதை நெறிகளின் அடிப்படையில் மக்களின் சுய அறிவு மேம்பாட்டுக்கு பாடுபட்டதற்காக 1997-ம் ஆண்டு டெம்பிள்டன் விருது பெற்றார். அதே ஆண்டு பத்மவிபூஷண் விருதும் பெற்றார்.
# இவரது சோதனை முயற்சிகளை (ப்ரயோகா) அடிப்படை யாக வைத்து ஷியாம் பெனகல் 1991-ம் ஆண்டு தயாரித்த திரைப்படம் ‘அந்தர்நாத்’ (அகக்குரல்). கடைசி வரை அடித்தட்டு மக்களுக்காக உழைத்த பாண்டுரங்க வைஜ்நாத் ஆத்வலே 83-வது வயதில் காலமானார்.
******************************************
இந்தியாவின் வேதாந்தக் கருத்துகளை உலகம் முழுவதும் பரப்பிய சுவாமி ராம தீர்த்தரின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துகள் பத்து…
# பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் முராரிவாலா என்ற கிராமத்தில் பிறந்தவர். சில நாட்களில் தாயை இழந்ததால் அண்ணன் பராமரிப்பில் வளர்ந்தார்.
# சிறு வயதிலேயே ஆன்மிக கதை களைக் கேட்பதில் அளவுகடந்த ஆர்வம் கொண்டிருந்தார். ஆன்மிக உரையாற்றும் பெரியவர்களிடம் கேள்விகள் கேட்பதுடன் பல சந்தர்ப்பங்களில் உரிய விளக்கமும் அளிப்பார்.
# இறை பக்தியும், ஆன்மிக நாட்டமும் அவரிடம் ஆழமாக குடிகொண்டிருந்ததைக் கண்ட தந்தை, மகன் துறவியாகிவிடப் போகிறானே என்ற பயத்தில் 10 வயதிலேயே திருமணம் செய்துவைத்துவிட்டார்.
# பள்ளியில் பாரசீக மொழி கற்றுத் தந்த மவுல்விக்கு தட்சணை கொடுக்க பணம் இல்லை. ஒரே ஒரு கறவை எருமை மாட்டின் உதவியுடன்தான் அவர்கள் குடும்பம் நடத்திக்கொண்டிருந்தனர். அப்பாவை சம்மதிக்கவைத்து, அந்த கறவை மாட்டையும் குருவுக்கு காணிக்கையாக கொடுத்துவிட்டார்.
# பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப் படிப்பும், லாகூர் அரசு கிறிஸ்தவ கல்லூரியில் கணிதத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றார். கல்லூரிப் பருவத்தில் கீதையை ஆழ்ந்து படித்ததால் கிருஷ்ண பக்தராக மாறினார்.
# கல்லூரி விடுதிக்கு மாத வாடகை 4 ரூபாய் கொடுக்கமுடியாததால் ஒரு ரூபாய் வாடகையில் பாழடைந்த அறையில் தங்கினார். 2 நண்பர்களுடன் தங்கியிருப்பதாக சக மாணவர்களிடம் கூறியிருந்தார். ஒருநாள் மாணவர் ஒருவர் இவரது அறைக்கு வந்தார். கூரைகூட இல்லாமல் இருந்த இடத்தைப் பார்த்து திடுக்கிட்டார். உங்களுடன் தங்கியிருக்கும் 2 நண்பர்கள் எங்கே என்று கேட்டபோது, அந்த அறையின் பொந்தில் இருந்த 2 பாம்புகளைக் காட்டினார் ராம தீர்த்தர்.
# அதே கல்லூரியில் கணிதப் பேராசிரியராகப் பணியாற் றினார். அப்போது லாகூரில் விவேகானந்தரைச் சந்தித்தார். இந்த சந்திப்பு இவரைத் துறவியாக மாற்றியது. இமய மலைக்குச் சென்று தவம் செய்தார். வேதாந்தக் கருத்துகளை மக்களிடம் பரப்பினார்.
# சாதிப் பாகுபாட்டுக்கு எதிராக குரல் கொடுத்தார். பெண்கள், ஏழைக் குழந்தைகள் கல்வி பெறுவதன் அவசியம் குறித்து பிரச்சாரம் செய்தார். படித்த இளைஞர்கள் இந்தியாவுக்குத் தேவை என்பதை வலியுறுத்தினார். அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிக்கும் இந்திய மாணவர்களின் நலனுக்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தி உதவித் தொகை வழங்கினார்.
# ஜப்பானில் ஒரு மாதம் சுற்றுப்பயணம் செய்து வேதாந்த கோட்பாடுகள் குறித்து உரையாற்றினார். அமெரிக்காவில் ஒன்றரை ஆண்டு காலம் சுற்றுப்பயணம் செய்து, இந்து தர்ம சிறப்புகளை விவரித்தார். அமெரிக்கப் பத்திரிகைகள் இவரைப் பாராட்டி செய்திகள் வெளியிட்டன. இந்தியா திரும்பும் வழியில், எகிப்தில் கெய்ரோ நகர மக்களின் அழைப்பை ஏற்று அங்கு பாரசீக மொழியில் உரையாற்றினார்.
# 33-வது வயதில் சுவாமி ராம தீர்த்தர் உயிர் நீத்தார். தீபாவளித் திருநாளில் இவர் பிறந்தார். சந்நியாசம் ஏற்றது, உயிர் துறந்ததும் தீபாவளி நாளில்தான்.
*******************
இந்தியாவின் ‘இரும்பு மனிதர்’ என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
• குஜராத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். சிறுவனாக இருந்தபோது உடம்பில் கட்டி வந்தது. நாட்டு வைத்தியரிடம் அழைத்துப் போனார்கள். இரும்புக் கம்பியை சூடாக்கி, கட்டியை உடைக்க முற்பட்ட வைத்தியர், சிறுவனின் பிஞ்சு முகத்தைப் பார்த்து தயங்கினார். ‘ஐயா! சீக்கிரம் வையுங்கள். சூடு ஆறிவிடப்போகிறது’ என்றதாம் அந்த இரும்புக் குழந்தை.
• படிப்பில் கெட்டிக்காரர். சட்டக் கல்வி முடித்து வழக்கறிஞர் ஆனார். நல்ல வருமானம் வந்ததால், முதலில் தன் அண்ணனை லண்டன் அனுப்பி சட்ட மேற்படிப்பு படிக்க வைத்தார். அவர் திரும்பியதும் தானும் லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார்.
• அகமதாபாத்தில் வக்கீல் தொழில் நடத்தியபோது உள்ளூர் மக்களின் பிரச்சினைகளுக்கு உதவி, பிரபலமானார். 1917-ம் ஆண்டு மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றார். சுதேசி இயக்கம் உச்சத்தில் இருந்தபோது காந்திஜியின் உரையைக் கேட்டவர், வக்கீல் தொழிலை உதறி சுதேசி இயக்கத்தில் இணைந்தார்.
• குஜராத்தில் கேடா என்ற இடத்தில் பயங்கர பஞ்சம். ஆங்கிலேய அரசிடம் வரி விலக்கு கேட்டு விவசாயிகள் போரா டினர். அரசு பணியாததால் காந்தி, படேல் தலைமையில் வரிகொடாமைப் போராட்டம் வெடித்தது. அரசு பணிந்தது. வரி ரத்தானது. படேலின் முதல் வெற்றி இது!
• பார்டோலி என்ற இடத்தில் விவசாயிகள் நலன் காக்க நடைபெற்ற மற்றொரு சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் படேலுக்கு வெற்றி கிடைத்தது. அப்போதிருந்து மக்களால் ‘சர்தார்’ என்று அன்போடு அழைக்கப்பட்டார். அதன் பிறகு போராட்டங்களும் சிறைவாசமும் அவருக்கு வாடிக்கையாகிப் போனது.
• வட்டமேஜை மாநாட்டு தோல்விக்குப் பிறகு காந்தி, படேல் கைது செய்யப்பட்டனர். எரவாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டபோது இருவருக்கும் நெருக்கம் வளர்ந்தது.
• சுதந்திரப் போராட்டத்தின் சிப்பாய் என்று அழைக்கப்பட்டார். இந்திய விவசாயிகளின் ஆன்மாவாக கருதப்பட்டார். நவீன இந்தியாவை உருவாக்கியவர்களில் முக்கியமானவர். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் பணியாற்றினார்.
• நாடு முழுவதும் ஆங்காங்கே துண்டு துண்டாக மன்னராட்சி நடந்துகொண்டிருந்த 565 ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்ததுதான் உள்துறை அமைச்சராக அவர் ஆற்றிய முதல் பணி. வி.பி.மேனனுடன் இணைந்து அகண்ட பாரதத்தை அமைத்தார்.
• அகண்ட பாரதம் அவ்வளவு எளிதாக அமையவில்லை. அந்த இலக்குக்காக சகல வழிகளையும் பின்பற்றினார். சர்ச்சைகள், எதிர்ப்புகள் எழுந்தாலும் இரும்பு மனிதராக நின்று சமாளித்தார்.
• 75-ம் வயதில் இறந்தார். 1991-ல் படேலுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
*******************
இந்திய அணுவியல் துறை தந்தையாக விளங்கிய ஹோமி ஜஹாங்கீர் பாபாவின் பிறந்த நாளான இன்று, அவரை பற்றிய அரிய முத்துகள்.
• மும்பையைச் சேர்ந்த வசதியான பார்சி குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே வீட்டு நூலகத்தில் இருந்த அறிவியல் சம்பந்தப்பட்ட அத்தனை புத்தகங்களையும் படித்து முடித்துவிட்டார்.
• பட்டப் படிப்பு முடித்தவுடன் மெக்கானிக்கல் இன்ஜினீ யரிங் படிப்பதற்காக அவரை பெற்றோர் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத் துக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவருக்கு இயற்பியலில்தான் ஆர்வம். அப்பாவிடம் அணு இயற்பியல் படிக்க விரும்புவதாக கூறினார்.
• அதன்படியே, பாபாவை அவரது அப்பா இயற்பியல் படிக்க வைத்தார். 1932ல் மேற்படிப்பை முடித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலேயே தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.
• 1934-ஆம் ஆண்டில் டாக்டர் பட்டம் பெற்றார். இந்த கால கட்டத்தில் இவர் நீல்ஸ் போர் என்பவருடன் மேற்கொண்ட ஆய்வுகள் குவாண்டம் கோட்பாட்டுக்கு இட்டுச் சென்றது. மேலும் வால்டர் ஹைட்லருடன் மேற்கொண்ட இவரது ஆராய்ச்சிதான் காஸ்மிக் கதிர்களைப் புரிந்துகொள்வதில் மிக முக்கிய பங்கு வகித்தது.
• இந்தியா திரும்பிய அவர், பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் இயற்பியல் துறை ஆசிரியராக பணியில் சேர்ந்தார். காஸ்மிக் கதிர் ஆராய்ச்சிப் பிரிவைத் தொடங்கினார்.
• அமெரிக்காவில், 1942-ஆம் ஆண்டு அணு உலை சோதனை நடத்தப்பட்ட இரண்டாண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் அணுசக்தி இயற்பியல் ஆராய்ச்சிகள் தொடங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி டாட்டாவுக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து, மும்பையில் இதற்கான ஆய்வுக்கூடம் தொடங்கப்பட்டது. இந்த ஆய்வு நிலையத்தின் இயக்குநராக ஹோமிபாபா பொறுப் பேற்றார்.
• இந்தியா விடுதலை அடைந்த பிறகு உலகம் முழுவதும் உள்ள இந்திய விஞ்ஞானிகளை தாயகம் திரும்பும்படி கேட்டுக்கொண்டார். இவரது அழைப்பை ஏற்று இந்தியா வந்த அவர்கள் இவரது வழிகாட்டுதலின் கீழ் அணுசக்தி வளர்ச்சிக்காக பணிபுரியத் தொடங்கினர்.
• அணுசக்தி ஆணையம், அணுசக்தி துறை ஆகியவற்றை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இந்திய அணுசக்தி ஆணையத்தின் முதல் தலைவராக பொறுப்பேற்றார். இதன் காரணமாக இந்தியாவின் முதல் அணு உலை, 1956ல் மும்பை அருகில் உள்ள டிராம்பேயில் செயல்படத் தொடங்கியது. இது ஆசியாவின் முதல் அணு உலை என்ற பெருமையும் பெற்றுள்ளது.
• 1955ல் ஜெனீவாவில் நடைபெற்ற அணுசக்தியை அமைதி நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் முதல் மாநாட்டுக்கு தலைமை வகித்தார். மேலும், அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உத்தரவை அடுத்து அணுகுண்டு வெடிப்பு சோதனைக்கான ஆரம்பகட்ட முயற்சிகளை விஞ்ஞானிகளின் துணையுடன் மேற்கொண்டார்.
• ஜஹாங்கீர் ஹோமி பாபா ஸ்விட்சர்லாந்தில் நிகழ்ந்த விமான விபத்தில் 56-ஆவது வயதில் மரணமடைந்தார்.
****************
எழுத்துகளை என்றென்றும் இளமை மாறாமல் வைத்திருந்த ‘வாலிபக் கவிஞர்’ வாலியின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...
• பிறந்தது ஸ்ரீரங்கம். இயற்பெயர் டி.எஸ்.ரெங்கராஜன். சிறு வயதிலேயே நாடகம் எழுதுவார். ‘நேதாஜி’ என்ற கையெழுத்துப் பத்திரிகை நடத்தினார். அப்போதே இவரது நாடகங்கள் திருச்சி அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகின.
• சிறந்த ஓவியர். சென்னை ஓவியக் கல்லூரியில் ஓர் ஆண்டு படித்தார். ஓவியர் மாலி போல ஆகவேண்டும் என்பது ஆசை. ரெங்கராஜன், ‘வாலி’யான ரகசியம் இதுதான்.
• சினிமாவுக்கு அழைத்துவந்தவர் டி.எம்.சவுந்தரராஜன். எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகிய இருவருக்குமே வாலியைப் பிடிக்கும். எம்.ஜி.ஆர். இவரை ‘ஆண்டவனே’ என்பார். சிவாஜிக்கோ இவர் ‘வாத்தியார்’. வாலி வீட்டு தோசை - மிளகாய்ப் பொடிக்கு தமிழ்த் திரையுலகில் ரசிகர் பட்டாளமே இருந்தது.
• விருப்ப விளையாட்டு கிரிக்கெட். கிரிக்கெட் விவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பார். ஒரு வீரரின் பலம், பலவீனம் பற்றி விரிவாக, நுணுக்கமாக அலசுவார்.
• காதல், காமம், தாய்மை, தாலாட்டு, பக்தி, சோகம், குத்துப்பாட்டு என வாலியின் வரிகள் பயணிக்காத உணர்வுகளே இல்லை. சூழலைச் சொல்லி முடிப்பதற்குள் பல்லவி முடித்து சரணத்துக்கு போயிருப்பார். எம்.ஜி.ஆர். தொடங்கி தனுஷ் வரைக்கும் பாடல் எழுதிய நான்கு தலைமுறை பாடலாசிரியர்.
• வாலியின் தத்துவப் பாடல்களில் கண்ணதாசன் சாயல் இருக்கும். அதுகுறித்து கேட்டால், ‘தங்கத்துடன்தானே ஒப்பிடுகிறார்கள்.. தகரத்துடன் இல்லையே’ என்பார் பெருமையாக.
• தமிழக அரசின் சிறந்த திரைப்படப் பாடலாசிரியர் விருதை 5 முறை பெற்றவர். பத்ம, பாரதி விருது, கலைமாமணி உள்ளிட்ட விருதுகளையும் பெற்றவர்.
• கோபம் அதிகம். ‘பாரதவிலாஸ்’ படத்தில் ‘இந்திய நாடு என் வீடு’ பாடல் எழுதினார். அந்தப் பாடலுக்கு தேசிய விருது கொடுக்க வாலியிடம் அதிகாரிகள் பயோடேட்டா கேட்டார்கள். ‘‘பாட்டுக்கு தகுதி இருந்தா யாரு.. என்னன்னு விசாரிக்காம தரணும். என்கிட்டயே நான் யார்னு கேட்டு தர்றதா இருந்தா, விருதே வேண்டாம்’’ என்றார் சூடாக!
• 15 ஆயிரத்துக்கும் அதிகமான திரைப்பாடல்கள், 17 திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர். ‘வடைமாலை’ என்ற படத்தை மாருதி ராவுடன் இணைந்து இயக்கினார். ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களை புதுக்கவிதை வடிவில் படைத்தார். சில படங்களிலும் நடித்துள்ளார்.
• பொய் பிடிக்காது. தமிழ்த் திரையுலகில் சுமார் அரை நூற்றாண்டு காலம் ஆதிக்கம் செலுத்தியவர், கடந்த ஆண்டு காலமானார்.

**********
பெண்கள் குறித்த பாரதியாரின் பார்வையில் ஆக்கபூர்வமான மாற்றம் ஏற்படக் காரணமாக இருந்தவர்; இந்திய சுதந்திரத்துக்காகக் குரல் கொடுத்த வெளி நாட்டினர்களில் முக்கியமானவர்; விவேகானந்தரின் முக்கியமான சீடர்: சகோதரி நிவேதிதா.
அயர்லாந்தின் டைரோன் கவுன்ட்டியில் உள்ள டங்கனான் நகரில் 1867-ல் இதே நாளில் பிறந்தவர் நிவேதிதா. இவருடைய இயற்பெயர் மார்கரெட் எலிசபெத் நோபிள். இவரின் தந்தை மத குருவாக இருந்தவர். எலிசபெத்துக்கு இயல்பாகவே கடவுள் பக்தியும் சேவை மனப்பான்மையும் இருந்தது.
ஆசிரியையாகப் பணிபுரிந்த அவர், பின்னர் ஒரு பள்ளியைத் தொடங்கி நடத்திவந்தார்.
1895-ல் சுவாமி விவேகானந்தர் லண்டன் சென்றிருந்தபோது, அவரைச் சந்தித்து ஆன்மிகம் குறித்து நிறைய சந்தேகங்களைக் கேட்டு அவரது கவனத்தை ஈர்த்தார். அதன் பின்னர் விவேகானந்தருடன் கொல்கத்தா நகருக்கு வந்தார். ராமகிருஷ்ணரின் மனைவியும் ராமகிருஷ்ண இயக்கத்தின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியவருமான அன்னை சாரதா தேவியுடனான சந்திப்பு அவரது ஆன்மிக வளர்ச்சிக்கு உதவியது. அதுவரை எலிசபெத் என்று அறியப்பட்ட அவர் ‘சகோதரி நிவேதிதா ’என்று அழைக்கப் பட்டார்.
கொல்கத்தாவில் பெண்கள் பள்ளி ஒன்றைத் தொடங்கினார். அந்நகரில்
1899-ல் பிளேக் நோய் தாக்கியபோது, ஏழை மக் களுக்கு மருத்துவ உதவிகள் உள்ளிட்ட சேவை
களைச் செய்தார். தெருக்களைச் சுத்தம் செய்யும் பணியில் உள்ளூர் இளைஞர்களையும் ஈடுபடுத்தினார்.
ரவீந்திரநாத் தாகூர், ஜகதீஷ் சந்திரபோஸ்,  அரவிந்தர் உள்ளிட்டவர்களுடன் நட்பு ஏற்பட்டது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி தேவையானது என்று ஆரம்பத்தில் கருதி வந்த நிவேதிதா, பிரிட்டிஷாரின் அடக்கு முறையை உணர்ந்ததும் இந்தியாவின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

Know the Personalities - World wide


நவீன கணிதவியல் வல்லுநரும் ‘அல்ஜீப்ரா’ பிதாமகருமான ஜார்ஜ் புல் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
* இங்கிலாந்தில் பிறந்தவர். பள்ளிப் படிப்பின்போதே அறிவாற்றலுடன் விளங்கிய குழந்தை மேதை. 12 வயதில் லத்தீன் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ஜெர்மன், பிரெஞ்சு, கிரேக்க மொழிகளை சிறு பருவத்திலேயே கற்றுத் தேர்ந்தார்.
* தந்தை நடத்திய காலணித் தொழில் நொடித்ததால் 16 வயதில் குடும்பப் பொறுப்பை ஏற்றார். பள்ளியில் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். 20 வயதில் சொந்தமாக ஒரு பள்ளியை நிறுவினார். கணிதம் மீதான ஆர்வத்தால், ஆராய்ச்சிப் புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்தார். லிங்கன்ஸ் மெக்கானிக்ஸ் இன்ஸ்டிடியூட்டில் ஐசக் நியூட்டனின் புத்தகங்களைப் படித்து அல்ஜீப்ராவில் உயர்நிலை கணக்குகளுக்குத் தீர்வு காணத் தொடங்கினார்.
* அவருக்கு சமூக அக்கறையும் அதிகம். சமூக அவலங்களை எதிர்த்தார். பாலியல் தொழிலாளர்களுக்காக மறுவாழ்வு இல்லம் தொடங்கினார்.
* 1838-ல் தொடங்கி கணிதத் துறை வல்லுநர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார். அல்ஜீப்ராவை ஆழ்ந்து படித்தார். பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதினார்.
* மழைக்குக்கூட கல்லூரிப் பக்கம் ஒதுங்காதவர், அயர்லாந்தின் க்வீன்ஸ் கல்லூரியில் கணிதத் துறையின் முதல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். டப்ளின், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவப் பட்டங்கள் வழங்கின. ராயல் சொசைட்டியின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* நுண்கணிதம், இயற்கணிதம், வகையீட்டு சமன்பாடுகள் ஆகியவற்றில் ஆராய்ச்சி மேற்கொண்டு புதிய கோட்பாடுகளை வகுத்தார். 50-க்கும் மேலான அவரது ஆய்வுக் கட்டுரைகள் மிகவும் பிரபலமாயின.
* கேம்பிரிட்ஜ் கணித இதழில் ‘அனலிடிகல் டிரான்ஸ்பர்மேஷன் தியரி’ குறித்த தொடர் கட்டுரைகளை 24-வது வயதில் எழுதினார். தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக இவர் எழுதிய கட்டுரைகள் கணிதத் துறையின் புதிர்களை எளிமையாக புரியவைத்தன.
* 1884-ம் ஆண்டு பிலாஸபிகல் டிரான்ஸாக் ஷன் ஆப் தி ராயல் சொசைட்டி என்ற ஆய்வுக் கட்டுரைக்காக ராயல் சொசைட்டியின் தங்கப் பதக்கம் பெற்றார். அதில்தான் அல்ஜீப்ரா - கால்குலஸ் இணைப்பு குறித்து விளக்கியிருந்தார். தற்போது பூலன் அல்ஜீப்ரா எனப்படும் லாஜிக்கல் அல்ஜீப்ரா குறித்த ஆராய்ச்சியையும் தொடங்கினார்.
* இன்றைய டிஜிட்டல் கம்ப்யூட்டர் சர்க்யூட்களுக்கு அடிப்படை வடிவமைப்பு இவர் உருவாக்கிய பூலன் அல்ஜீப்ரா. அதனாலேயே அல்ஜீப்ராவின் பிதாமகர் என்று அழைக்கப்படுகிறார்.
* கணித மேதையும் தத்துவவாதியுமான ஜார்ஜ், கணினி அறிவியல் துறை தோன்றக் காரணமானவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் 49-வது வயதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.
******************
ஓவியர், சிற்பி, கவிஞர், நாடக ஆசிரியர் என்று பன்முகத் திறமை கொண்ட பாப்லோ பிகாசோவின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
• பிறந்தது ஸ்பெயினில். வாழ்நாளில் பெரும் பகுதியைக் கழித்தது பிரான்ஸில். இவரது ஓவியக் கலை ஈடுபாடு குழந்தைப் பருவத்திலேயே வெளிப்பட்டது. இவர் முதலில் உச்சரித்த வார்த்தை ‘பென்சில்’ என்பதுதானாம். இதை அவரது தாய் பூரிப்போடு சொல்வார். ஓவியப் பள்ளி ஆசிரியரான தந்தையிடம் 7 வயதில் ஓவியப் பயிற்சியைத் தொடங்கினார். 13 வயதிலேயே தந்தையை விஞ்சிய தனயன் ஆனார்.
• பள்ளிப் பருவத்தில், பாடம் என்றாலே இவருக்கு கசப்பு. மோசமான மாணவனாக கருதப்பட்டார். ஒருமுறை சேட்டை அதிகமாகி, தனி அறையில் அடைத்தார்கள். உற்சாகமானவர் நோட்டுப் புத்தகத்தில் வரைய ஆரம்பித்துவிட்டார். ‘‘அந்த தனிமை ரொம்ப பிடித்திருந்தது. நிரந்தரமாக அடைத்து வைத்திருந்தால்கூட மகிழ்ச்சியாக இருந்திருப்பேன்’’ என்று பின்னாளில் கூறியிருக்கிறார்.
• பார்சிலோனா நுண்கலைக் கல்லூரி நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதால் 14 வயது சிறுவன் பிகாசோவுக்கு விதிவிலக்கு அளித்து சேர்த்துக்கொண்டனர். ஆனால், கல்லூரியின் கட்டுப்பாடுகள் பிடிக்காமல் வகுப்புகளை ‘கட்’ அடித்துவிட்டு வீதிகளில் சுற்றித் திரிவார். கண்ணில்பட்ட காட்சிகளை மனதில் பதியவைத்து ஓவியங்களாகத் தீட்டுவார். மாட்ரிட் நகரில் உள்ள சான் பெர்னாண்டோ ராயல் அகாடமியில் ஓவியக் கலை பயின்றபோதும் இதேபோலத்தான்.
• பாரம்பரிய ஓவிய பாணியில் இருந்து 18 வயதில் முழுவதுமாக விடுவித்துக்கொண்டு புதிய முயற்சிகளில் இறங்கினார்.
• ‘யங் லேடீஸ் ஆஃப் அவென்யூ’ என்ற ஓவியம் மூலம் கியூபிசம் எனப்படும் புதிய பாணியை அறிமுகப்படுத்தினார். 5 பாலியல் தொழிலாளர்களை சித்தரிக்கும் இந்த ஓவியம், வெவ்வேறு கோணங்களில் பார்க்கும்போது மாறுபட்ட விஷயங்களை உணர்த்தும். இந்த ஓவியம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், கலை உலகில் புதிய புரட்சியை உருவாக்கியது.
• சிற்பம் வடிப்பது, செராமிக் ஓவியம் தீட்டுவதிலும் தனித்தன்மையுடன் பிரகாசித்தார்.
• அமைதியின் அடையாளச் சின்னமாக ஆலிவ் இலைகள், புறாவை பிரபலப்படுத்தியவர் இவர்தான்.
• ஸ்பெயினின் கெர்னிகா கிராமத்தை ஹிட்லரின் நாஜிப் படை குண்டு வீசி நாசமாக்கியதைக் கண்டித்து ‘கெர்னிகா’ என்ற ஓவியத்தை தீட்டினார். அது இவரது போர் எதிர்ப்பு மனோபாவத்தை வெளிப்படுத்தியது.
• இவரது வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட சில திரைப்படங்களில் ‘தி மிஸ்ட்ரி ஆஃப் பிகாசோ’ திரைப்படம் குறிப்பிடத்தக்கது. இது 1955-ல் வெளியானது.
• 2 ஆயிரம் சிற்பங்கள், 1200-க்கும் மேற்பட்ட ஓவியங்கள், 3 ஆயிரம் மண்பாண்ட சிற்பங்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான கலைப் படைப்புகளுக்கு உயிர்கொடுத்த பிகாசோ, 93-வது வயதில் இறந்தார்.
*************************
வெற்றி சூத்திரங்களின் நாயகன் நெப்போலியன் ஹில்லின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...
* அமெரிக்காவின் தென் மேற்கு வர்ஜீனியாவில் பிறந்தவர். சிறு வயதிலேயே தாய் இறந்து விட்டார். யாருக்கும் அடங்காமல் சுற்றித் திரிந்த சிறுவனை, தந்தையின் 2-வது மனைவிதான் நல்வழிப்படுத்தினார்.
* 15 வயதில் உள்ளூர் பத்திரிகையில் நிருபரானார். அங்கு பணி யாற்றிக்கொண்டே சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். வருமானம் போதாமல் சட்டக் கல்வியை பாதியிலேயே நிறுத்திவிட்டார்.
* 1908-ல் பிரபல சாதனையாளர்களை பேட்டி கண்டு எழுதினார். பிட்ஸ்பர்க் நகரத்தின் பிரபல எஃகு நிறுவன அதிபர் ஆண்ட்ரூ கார்னகியை பேட்டி கண்டது இவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது.
* ஹில்லிடம் ஒரு சவால் விடுத்தார் கார்னகி. ‘‘எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் 20 ஆண்டுகள் தொடர்ந்து வெற்றிக்கான கோட்பாடுகளை ஆவணப்படுத்தி பதிவு செய்ய வேண்டும்’’ என்பதுதான் அது. இதன்மூலம் நிறைய சாதனையாளர்களை ஹில்லிடம் அறிமுகப்படுத்தினார் கார்னகி.
* 20 ஆண்டு காலத்தில் ஏராளமான வாய்ப்புகள் குவிந்தன. தியோடர் ரூஸ்வெல்ட், தாமஸ் எடிசன், ஜான் டி. ராக்ஃபெல்லர், ஹென்றி ஃபோர்டு, அலெக்சாண்டர் கிரஹாம் பெல் உள்ளிட்டவர்களை சந்தித்து வெற்றிக் கோட்பாடுகளைத் திரட்டினார்.
l‘‘இலக்கில் உறுதியோடு இருப்பது, தனக்கு என்ன தேவை என்பதை மிகச் சரியாக தெரிந்து வைத்திருப்பது.. இந்த இரண்டும் இருந்தால் வெற்றி பெறுவது சிரமமாக இருக்காது’’ என்ற கார்னகியின் கோட்பாடுகள்தான் ஹில்லின் சுய முன்னேற்றப் படைப்புகளுக்கு அடித்தளம்.
* வெற்றிக் கோட்பாடுகளுக்காக ஹில் தொடங்கிய பத்திரிகை பெரும் வெற்றி பெற்றது. கடந்த 50 ஆண்டு காலத்தில் மாபெரும் சாதனையாளர்களின் வெற்றி சூத்திரங்கள் அடங்கிய ‘தி லா ஆஃப் சக்சஸ்’ என்ற புத்தகத்தை 1928-ல் வெளியிட்டார். இந்த புத்தகம் விற்பனையில் சாதனை படைத்தது. இவரது இன்னொரு படைப்பு ‘திங்க் அண்ட் குரோ ரிச்’ 1930-ல் வெளியானது. கோடிக்கணக்கான பிரதிகள் விற்றுள்ளது.
* உட்ரோ வில்சன், பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் ஆகிய இரு அமெரிக்க அதிபர்களுக்கு ஆலோசகராக இருந்திருக்கிறார்.
lதனி நபர் சாதனைக்கான இவரது தத்துவம் ஆழமானது, விசாலமானது. ஒருவருக்குள் புதைந்துக்கிடக்கும் ஆற்றலை அவரே கண்டறிய உதவுவதுதான் இவரது படைப்புகள் என்கிறார்கள்.
* இவரது வெற்றித் தத்துவங்கள் உலகம் முழுவதும் பல கோடி பேரை வெற்றியாளர்களாக, செல்வந்தர்களாக மாற்றி வருகின்றன. ‘வெற்றி அறிவியலின் தந்தை’ என்று போற்றப்படும் நெப்போலியன் ஹில் 87-ம் வயதில் காலமானார்.
*****************
அமெரிக்காவின் மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவர் சில்வியா பிளாத். பாஸ்டன் நகரில் 1932-ல் இதே நாளில் சில்வியா பிளாத் பிறந்தார். அவரது தந்தை ஓட்டோ பிளாத். 1940-ல் ஓட்டோ மரணமடைந்தபோது சில்வியாவுக்கு 8 வயதுதான். தந்தையின் மரணம் அவரை வெகுவாகப் பாதித்தது. பின்னாட்களில், தந்தையின் நினைவாக ‘டாடி’ என்ற கவிதையை எழுதினார்.
பள்ளியில் மிகச் சிறந்த மாணவியாகத் திகழ்ந்தார். இளம் வயதிலேயே சிறு கதைகள் எழுதத் தொடங்கினார். அவர் எழுதிய ‘சண்டே அட் மின்டன்ஸ்’ என்ற முதல் சிறுகதை ‘மேட்மோசெல்’ என்ற பெண்கள் இதழில் வெளியானது. ஒரு கோடை விடுமுறையின்போது, கவுரவ ஆசிரியராகப் பணிபுரிய அந்த இதழி லிருந்து அழைப்பு வந்தது. 1950-களில் பிரிட்டனுக்குச் சென்றார். கேம்பிரிட்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்றபோது, டெட் ஹியூக்ஸ் என்ற கவிஞருடன் தொடர்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறி, 1956-ல் அவரைத் திருமணம் செய்து கொண்டார்.
‘கொலாசஸ்’ என்ற தனது முதல் கவிதைத் தொகுப்பை 1960-ல் வெளி யிட்டார் சில்வியா. அதற்குப் பெரும் வரவேற்பு இருந்தது. இதற்கிடையே தனது கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்ததை அறிந்து, சில்வியா அதிர்ச்சி அடைந்தார். சில்வியா - ஹியூக்ஸ் பிரிந்தனர். அப்போது இரண்டு குழந்தை களுக்குத் தாய் அவர். மனது உடைந்த நிலையில் இருந்த சில்வியா, தொடர்ந்து பல கவிதைகள் எழுதினார். 1963-ல் தனது ஒரே நாவலான ‘தி பெல் ஜார்’ என்ற நாவலை வெளியிட்டார். வாழ்வின் நெருக்கடிகள் தந்த வலியின் காரணமாக 1963-ல் தற்கொலை செய்துகொண்டார். அப்போது அவருக்கு வயது 30-தான். அதன் பின்னர், அவரது படைப்புகளைத் தொகுத்து வெளியிட்டார் ஹியூக்ஸ். அவற்றில் ஒன்றான ‘தி கலெக்டட் போயம்ஸ்’ என்ற தொகுப்பு 1982-ல் புலிட்சர் விருதைப் பெற்றது.
*****************
நியுயார்க் நகரின் பிட்ஸ்டவுனில் பிறந்தவர். 12 வயதில் வீட்டை விட்டு வெளியேறிய இவர், எங்கெங்கோ சுற்றி, கிடைத்த வேலைகளைச் செய்து ஒரு மெக்கானிக்காகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
* மெக்கானிக்காக இருந்த அவர் ஓயாமல் ஏதாவது புதிய பொருளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். 1839-ல் இல்லினோயிசில் இருந்தபோது, பாறை துளையிடும் இயந்திரத்தைக் கண்டறிந்தார். அதன் காப்புரிமையை விற்றார். நடிகனாக வேண்டும் என்ற ஆசையால், அந்தப் பணத்தில் ‘மெரிட் ப்ளேயர்ஸ்’ என்னும் நாடகக் குழுவை உருவாக்கி, நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, ஐஸக் மெரிட் என்ற பெயரில் மேடைகளில் தோன்றினார்.
* ஒன்பது வருடங்கள் தொடர்ந்த இந்த நாடகக் குழுவின் தொடர் தோல்விகளால் குழு கலைக்கப்பட்டது. நடிப்புத் தொழில் கை கொடுக்கவில்லை என்பதால் சிங்கர் துவண்டுவிடவில்லை. மீண்டும் மெக்கானிக்காகவும், கண்டுபிடிப்பாளராகவும் மறுஅவதாரம் எடுத்தார்.
* 1949-ல் மரம் மற்றும் உலோகம் செதுக்கும் கருவியை உருவாக்கி அதற்கு காப்புரிமை பெற்றார். சொந்தமாக ஒரு தொழிற்சாலையை உருவாக்கி உற்பத்தியைத் தொடங்கினார். துரதிர்ஷ்டவசமாக, அங்கு ஏற்பட்ட ஒரு வெடி விபத்தில் தொழிற்சாலை தரைமட்டமானது.
* 1950-ல் ஒரு தையல் இயந்திரக் கடையில் பழுது பார்க்கும் மெக்கானிக்காக வேலை பார்த்தார். முதலாளி அவரிடம் தையல் இயந்திரம் ஒன்றைப் பழுது பார்க்கும்படி கூறினார். சிங்கரின் கண்டுபிடிப்பாளர் மூளை உடனே செயல்பட்டது. ஒரு சில நாட்களிலேயே உயர்தரம் வாய்ந்த புதுமையான முறையில் அதை மேம்படுத்தினார். மிகவும் சவுகரியமாகவும், ஒரு நிமிடத்திற்கு 900 தையல் போடக்கூடிய அதி வேகத் திறன் வாய்ந்ததாகவும் அது செயல்பட்டது.
* அதற்கு சிங்கர் தையல் மிஷின் என்று பெயரிட்டார். இதற்கான காப்புரிமைக்காக இவர் விண்ணப்பித்தபோது, இதன் அடிப்படை எலியாஸ் ஹவ் என்பவருடைய கண்டுபிடிப்பு என்பதால், அவர் சிங்கர் மீது வழக்கு தொடர்ந்தார். வழக்கில் எலியாஸ் வென்றார். இந்தத் தோல்வியும் இவரை ஒன்றும் செய்துவிடவில்லை. அதிர்ஷ்டவசமாக, அவர் தான் தயாரித்த இயந்திரங்களைத் உற்பத்திசெய்யக் கூடாது என்று தீர்ப்பில் தடை விதிக்கப்படவில்லை. 1857-ல், எட்வர்ட் கிளார்க் என்பவருடன் கூட்டாகச் சேர்ந்து ஐ.எம். சிங்கர் & கம்பெனியைத் தொடங்கினார்.
* இந்த நிறுவனம் புதுமையான உத்திகளைப் பயன்படுத்தி, உற்பத்திச் செலவைக் குறைத்து, வேலைக்குச் செல்லாத நடுத்தர வர்க்கக் குடும்பப் பெண்களும் வாங்கிப் பயன்படுத்தும் வகையில் குறைந்த விலையில் தையல் இயந்திரத்தைத் தயாரித்து விற்பனை செய்தது.1860-ல் உலகிலேயே மிகப் பெரிய அளவில் தையல் இயந்திரம் உற்பத்தி செய்யும் நிறுவனமாக இது உயர்ந்தது. மேலும் 22 புதிய தயாரிப்புகளுக்கான காப்புரிமைகளை இந்த நிறுவனம் பெற்றது.
* முதன்முதலாக வீட்டு உபயோகத் தையல் இயந்திரத்தை மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்த நிறுவனத்தைத் தொடங்கியவர் சிங்கர். இவரது கண்டுபிடிப்புகளால் அமெரிக்கா அதுவரை கண்டிராத மிகப் பெரிய தொழிற்துறை வளர்ச்சியைக் கண்டது.
* இவர் பல திருமணங்கள் செய்துகொண்டவர். திருமணங்கள் மூலமாகவும் திருமணம் இல்லாமலும் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட வாரிசுகள் உண்டு.
* சிங்கர் ஆறடி ஐந்தங்குலம் கொண்ட ‘உயர்ந்த’ மனிதர். பூஜ்ஜியத்திலிருந்து வாழ்க்கையைத் தொடங்கிய இவர், தன் உழைப்பாலும் புதுமைக் கண்ணோட்டத்தாலும் மேதைமையாலும் மிக உயர்ந்த இடத்தை எட்டினார். தனது 63-வது வயதில் மரணமடைந்தார் இந்தச் சாதனையாளர்.
******************
கணினி ஜாம்பவான் பில்கேட்ஸின் பிறந்த நாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...
• வாஷிங்டனில் பிறந்தவர். அம்மா செல்லம். சிறு வயதிலேயே வாசிப்புப் பழக்கம் தொற்றிக் கொண்டது. பள்ளியில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் ஆச்சர்யமூட்டும் வகையில் அசத்தினார்.
• கணினி நிறுவனம் ஒன்று மாணவர்களுக்குக் கணினிப் பாடம் சொல்லித்தர முன்வந்தது. கணினியைப் பார்த்தவுடனே காந்தம்போலக் கவரப்பட்டார் பில்கேட்ஸ். குறுகிய நாட்களிலேயே அடிப்படை கணினி லாங்குவேஜில் டிக்-டாக்-டோ என்கிற தனது முதல் கணினி நிரலை வடிவமைத்தார்.
• பால் ஆலனைச் சந்தித்தது கேட்ஸுக்கு மட்டுமல்ல... கணினி உலகத்துக்கே திருப்புமுனை. 1970-ல் இருவரும் இணைந்து நகரின் போக்குவரத்தைக் கண்காணிக்கும் கணினி தொழில்நுட்பத்தை உருவாக்கினார்கள். கேட்ஸுக்கு அப்போது வயது 15. இருவரும் இணைந்து நிறுவனம் தொடங்க ஆசைப்பட்டனர். ஆனால், கேட்ஸின் பெற்றோர் ஆசையோ வேறாக இருந்தது. வலுக்கட்டாயமாக வழக்கறிஞர் தொழிலுக்குப் படிக்க அனுப்பிவிட்டார்கள்.
• கணினியை மறக்க முடியாதவர் கல்லூரிப் படிப்பை பாதியில் உதறினார். ஆலன் வேலை பார்த்த நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு ‘ஆல்டர் 8800’ தொழில்நுட்பம் பற்றி கேட்ஸ் அறிந்தார். இதை நியு மெக்சிகோ நகரில் உள்ள மைக்ரோ இன்ஸ்ட்ருமன்டேஷன் அன்ட் டெலிமெட்ரி சிஸ்டம் (எம்.ஐ.டி.எஸ்) என்ற சிறுநிறுவனம் உருவாக்கியிருந்தது.
• 1975-ல் இருவரும் இணைந்து ‘மைக்ரோ சாஃப்ட்’ நிறுவனத்தைத் தொடங்கினர். 1978-ம் ஆண்டு அந்த நிறுவனம் இரண்டரை மில்லியன் டாலர் வருவாய் ஈட்டியது. அப்போது கேட்ஸுக்கு வயது 23.
• மென்பொருள் வடிவமைப்பில் மட்டுமல்லாமல் வியாபார உத்திகளிலும் புரட்சியைப் புகுத்தினார் கேட்ஸ். 1980-ல் ஐ.பி.எம்-உடன் தொழில் ஒப்பந்தம் செய்துகொண்டனர்.
• 1983-ல் பிரிட்டனிலும், ஜப்பானிலும் மைக்ரோசாஃப்ட் கிளை பரப்பியது. போட்டி நிறுவனங்களாக இருந்தாலும், ஆப்பிளும் மைக்ரோசாஃப்டும் கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்து கொண்டன. உங்கள் கைகளில் தவழும் வின்டோஸ் பிறந்தது இப்படிதான்.
• கேட்ஸ் நூலாசிரியரும்கூட. தனது சகாக்களுடன் இணைந்து இரண்டு நூல்களை எழுதினார். தனி நபர் கணினிப் பயன்பாட்டுப் புரட்சி மற்றும் அதிவேகத் தகவல் தொடர்பின் வரவு உலகை எவ்வாறு மாற்றப்போகிறது என்பதைப் பற்றி அவர் அதில் எழுதினார்.
• தன் நிறுவனத்தின் பணிபுரிந்த மெலின்டாவை திருமணம் புரிந்தார். மெலின்டாவின் மனிதநேயம் இவரையும் பற்றிக் கொண்டது. ‘வில்லியம் ஹெச். கேட்ஸ் ஃபவுண்டேஷன்’ மற்றும் ‘பில் அன்ட் மெலின்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன்’ தொடங்கப்பட்டன. உலகம் முழுவதும் நலிவுற்றோருக்கு கல்வியும் மருத்துவமும் அளிக்கின்றன அந்த அமைப்புகள்.
• 20-ம் நூற்றாண்டின் செல்வாக்கு மிகுந்த நபர் என்றது டைம் பத்திரிகை. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் கேட்ஸுக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்கி, கவுரவம் தேடிக் கொண்டன.
***********************
போலந்து நாட்டு வானியல் அறிஞர்
போலந்தின் தலைசிறந்த கணிதவியலாளர் ஜான் ப்ரொஸக் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
 போலந்து நாட்டைச் சேர்ந்த ஜான் ப்ரொஸக் - கணித வியலாளர், வானியலாளர், மருத்துவர், கவிஞர், எழுத்தாளர், இசைக் கலைஞர் என பன்முகப் பரிமாணம் கொண்டவர்.
 தந்தை அளித்த ஊக்கம் இவருக்குள் கற்கும் ஆர்வத்தை பெருக்கெடுக்க வைத்தது. படித்து முடித்த பல்கலைக்கழகத்திலேயே தலைமைப் பொறுப்பு வரை உயர்ந்தார்.
 17-ம் நூற்றாண்டின் தலைசிறந்த கணித அறிஞராக புகழ்பெற்றார். எண் கோட்பாடு, குறிப்பாக நிறைவெண் கோட்பாடு, வடிவவியல் குறித்த இவரது ஆய்வுகள் கணிதத் துறையில் முக்கியமான திருப்புமுனைகளாக அமைந்தன.
 மருத்துவம், புவி அளவியல், இறையியல் தொடர்பாக பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார்.
 தேனீக்கள் ஏன் அறுங்கோண வடிவிலேயே தேன் அடை களை உருவாக்குகின்றன என்பதை ஆராய்ந்தார். திறன் வாய்ந்த வகையில் மெழுகைப் பயன்படுத்தவும், தேனை சேமிக்கவும் மிகச் சிறந்த வழி இதுதான் என்பதை தேனீக் கள் தெரிந்துவைத்திருக்கின்றன என்பதை நிரூபித்துக் காட்டினார்.
 மருத்துவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து இவர் வகுத்த வழிகாட்டி நெறிகள், மருத்துவத் துறையின் முன்னேற்றத்துக்கு பேருதவியாக அமைந்தன. நோய்களைக் கண்டறியும் பரிசோதனை முறைகள், நோய்த் தடுப்பு சிகிச்சை முறைகள் தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். ஒவ்வாமை குறித்த இவரது ஆய்வுக் கட்டுரைகள் அதற்கான சிகிச்சைகளை கண்டறிவதில் முக்கிய பங்கு வகித்தன.
 சிறு வயதில் இருந்தே புத்தகம் சேகரிப்பது இவருக்கு மிகவும் பிடித்தமான விஷயம். ‘‘மேல் அங்கியை விற்றாவது புத்தகம் வாங்கவேண்டும்’’ என்பார். பணத்தை சிறிது சிறிதாக சேமித்து, புத்தகம் வாங்குவார்.
 நல்ல புத்தகமா, மோசமான புத்தகமா என்பதை பார்த்த மாத்திரத்திலேயே சொல்லும் திறன் படைத்தவர். இவரது நூலகத்தில் கலிலியோ, கார்டேசியஸ், மார்கடார், நேபர், டீ சார்கோ போஸ்கோ, கோபர்நிகஸ் உட்பட மிகவும் பிரபலமான, முக்கியமானவர்களின் நூல்கள் இடம்பெற்றிருந்தன. இறுதிக் காலத்தில் தன்னிடம் இருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய நூல்களை ஒரு நூலகத்துக்கு நன்கொடையாக வழங்கிவிட்டார்.
 வானியலாளர் நிகோலஸ் கோபர்நிகஸின் கோட்பாடு களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அந்த கோட்பாடுகளின் முக்கியத்துவத்தை உலகம் முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக பல கட்டுரைகளை வெளியிட்டார். கோபர்நிகஸின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுத வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார். அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. ஆனாலும் கோபர்நிகஸின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய சைமன் ஸ்டார்வால்ஸ்கி என்ற வரலாற்று ஆசிரியருக்கு அரிய தகவல்களை வழங்கி, அந்த நூலை எழுதி முடிக்க பேருதவி செய்தார்.
வாழ்க்கை முழுவதும் மருத்துவம், கணிதம், வானவியல் உட்பட பல்வேறு துறைகளில் இடைவிடாமல் ஆராய்ச்சி செய்து வந்த ப்ரொஸக் 67-ம் வயதில் காலமானார்
*************************
மரபணுவின் குணங்களை ஒவ்வொரு தலைமுறைக்கும் கொண்டு வருவது டி.என்.ஏ.தான் என்பதைக் கண்டறிந்த விஞ்ஞானி ஆஸ்வால்டு தியடோர் ஏவரியின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
# கனடாவில் பிறந்தவர். அமெரிக் காவின் நியூயார்க் நகரில் உள்ள தேவாலயத்தில் தந்தைக்கு வேலை கிடைத்ததால் குடும்பத் தோடு குடிபெயர்ந்தார். சிறுவ னாக இருந்த ஏவரியின் கார்னட் வாத்திய இசை, தேவாலய பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த திறமை அவருக்கு உதவித் தொகை யையும் பெற்றுத் தந்தது.
# 1904-ம் ஆண்டில் மருத்துவக் கல்வி முடித்து மருத்துவ ராகப் பணியாற்றினார். சக மனிதன் குறித்த இவரது கவலை, மருத்துவ ஆராய்ச்சியாளராக களமிறக்கியது.
# குணப்படுத்த முடியாத நோய்கள் தொடர்பாக இவருக்குள் இருந்த அடுக்கடுக்கான கேள்விகள், பாக்டீரியா குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடத் தூண்டியது.
# ப்ரூக்ளினில் உள்ள ஹோக்லாண்ட் மருத்துவ ஆய்வுக்கூடத்தின் இணை இயக்குநர் பொறுப்பை 1907-ல் ஏற்றார். இங்கு நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் ரசாயன மாற்றங்கள் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.
# காசநோய்க்குக் காரணமான பாக்டீரியா குறித்து இவர் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரை, ராக்ஃபெல்லர் மருத்துவ ஆய்வு மைய இயக்குநர் ருஃபஸ்கோலை மிகவும் கவர்ந்தது. அவரது அழைப்பை ஏற்று, அங்கு பணியில் சேர்ந்தார். 1948-ல் ஓய்வு பெறும் வரை ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார்.
# நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்தும் பாக்டீரியா தொடர் பான முக்கிய ஆய்வை வேறு இரண்டு மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் உதவியுடன் மேற்கொண்டார். சுமார் 20 காலன் பாக்டீரியாக்களை ஒவ்வொரு கட்டமாகத் தூய்மைப்படுத்தி ஆய்வு நடத்தியபோது, டிஆக்ஸி ரைபோ நியூக்ளிக் ஆசிட் எனப்படும் டி.என்.ஏ. ரகசியத்தைக் கண்டறிந்தார்.
# மரபணுக்கள் புரோட்டீன்களால் மட்டுமே ஆனவை என்று அதுவரை மருத்துவ உலகம் ஆணித்தரமாக நம்பியிருந்ததை இந்த கண்டுபிடிப்பு தகர்த்தது.
# பரம்பரை அடிப்படையிலான மரபணுவின் குணங்களை ஒவ்வொரு தலைமுறைக்கும் கொண்டு வருவது டி.என்.ஏ.தான் என்பதைக் கண்டுபிடித்தார். ஆனாலும் இதை பகிரங்கமாக அறிவிக்காமல், நெருங்கிய நண்பர்களிடம் மட்டும் பகிர்ந்துகொண்டார்.
# 1944-ல் டி.என்.ஏ. குறித்து இவரும் இவருடைய சகாக்களும் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரைக்கு மருத்துவ ஆராய்ச்சியாளர்களிடம் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. டி.என்.ஏ. குறித்த ஏவரியின் வேறொரு ஆராய்ச்சிக் கட்டுரையால் ஈர்க்கப்பட்ட ஜோஷுவா லெடர்பெர்க் என்ற மருத்துவ மாணவர், பாக்டீரியா அடிப்படையிலான மரபணுவியல் குறித்து ஆய்வு செய்து 1959-ல் நோபல் பரிசு பெற்றார்.
# ஏவரி மேற்கொண்ட டி.என்.ஏ. ஆராய்ச்சியை அடித்தளமாக கொண்டு அடுத்தடுத்து நடத்தப்பட்ட ஆய்வுகள் இவரது வரலாற்றுப் பெருமைவாய்ந்த கண்டுபிடிப்பை உறுதி செய்தன. மரணத்துக்குப் பிறகுதான் அவருக்கு அங்கீகாரம் கிடைத்தது.
- ராஜலட்சுமி சிவலிங்கம்
***********************
ஹாலந்து ஆராய்ச்சியாளர் ஆன்டனி வான் லியூவன்ஹாக்கின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
• வியாபாரக் குடும்பத்தில் பிறந்தவர். ஆரம்பக் கல்வி மட்டுமே படித்தவர், உறவினரிடம் கணிதம், இயற்பியல் கற்றார். தெரிந்த ஒரே மொழி, தாய்மொழி டச்சு.
• 22 வயதில் ஜவுளிக்கடை ஆரம்பித்தார். உள்ளூர் அரசியலிலும் பிரபலமானார். நூல்இழைகளின் தரத்தைப் பரிசோதிக்க ஜவுளி வியாபாரிகள் பூதக்கண்ணாடி பயன்படுத்துவது வழக்கம். இவர் அதுபோலச் செய்தது நூலிழைகளுக்கும் அப்பாற்பட்ட நுணுக்கமான ரகசியங்களைக் கண்டறியும் ஆர்வத்தை தூண்டியது.
• 1668-ல் சாதாரண லென்ஸ்களை தயாரிக்கக் கற்றார். ராபர்ட் ஹூக் எழுதிய ‘மைக்ரோகிராஃபியா’ என்ற புத்தகத்தைப் பார்த்த இவருக்கு மைக்ரோஸ்கோப் தயாரிப்பதில் ஆர்வம் பிறந்தது. மெல்லிய லென்ஸ், மைக்ரோஸ்கோப் தயாரித்து ஆராய்ச்சியில் இறங்கினார். ஒருசெல் உயிரினம் குறித்து முதன்முதலில் அறிவித்தார்.
• பொருளை 30 மடங்கு பெரிதாக்கிக் காட்டும் மைக்ரோஸ்கோப் கருவிகள்தான் இவரது காலத்தில் இருந்தன. இவர் உருவாக்கிய மைக்ரோஸ்கோப் 200 மடங்குக்கும் அதிகமாக பெரிதாக்கிக் காட்டின. இதுகுறித்து லண்டனில் உள்ள ராயல் சொசைட்டி இதழில் கட்டுரை வெளியானதும் பிரபலமடைந்தார்.
• ரத்த அணுக்கள், உயிரினங்களின் விந்தணுக்களை முதன்முதலில் கண்டறிந்தார். ரத்தச் சிவப்பு அணுக்கள் பற்றி முதன்முறையாகப் பதிவு செய்தார். மைக்ரோஸ்கோப் வழியாக உயிரினங்களில் காணும் காட்சிகளை ஓவியர் உதவியுடன் வரைந்து உரிய விளக்கங்களை குறிப்பிட்டு, லண்டன் ராயல் சொசைட்டிக்கு தொடர்ந்து அனுப்பினார்.
• 500-க்கும் மேற்பட்ட ஆப்டிகல் லென்ஸ்களை தயாரித்தார். 25 விதமான மைக்ரோஸ்கோப்களை உருவாக்கினார்.
• ஒரு ஆய்வுக் கட்டுரை, ஆராய்ச்சிப் புத்தகம்கூட இவர் எழுதியது இல்லை. ஆனால், ராயல் சொசைட்டிக்கு இவர் அனுப்பிய 1677 கடிதங்களும் நுண்ணுயிரியலில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு அடித்தளமாக அமைந்தன. ராயல் சொசைட்டி நூலகத்தில் இந்த கடிதங்கள் முக்கிய ஆவணங்களாக இன்றும் பாதுகாக்கப்படுகின்றன.
• அவரது நுணுக்கமான ஆய்வுத் திறனும், தணியாத ஆர்வமும் ‘நுண்ணுயிரியல் தந்தை’ என்ற பெருமையை பெற்றுத் தந்தன.
• அறிவியல் மேதைகள் மட்டும் அங்கம் வகிக்கும் லண்டன் ராயல் சொசைட்டி, இவரது ஆய்வுத் திறனை கவுரவித்து இவரையும் உறுப்பினராக சேர்த்துக்கொண்டது.
• கடைசிவரை நுண்ணுயிரி ஆராய்ச்சியில் ஈடுபட்ட இவர் 90-வது வயதில் இறந்தார்.
*****************
முதன்முதலாக விண்வெளிப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க ஆப்ரிக்க வீராங்கனை மே கரோல் ஜெமிசனின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
• அமெரிக்காவில் ஆப்ரிக்க வம்சாவளித் தம்பதிக்கு பிறந்தவர். குழந்தைப் பருவத்திலேயே அறிவியலில் ஆர்வம் மிக்கவர்.
• விண்வெளி அறிவியல் தொடர்பான தகவல்களை பள்ளி நூலகத்தில் தேடித் தேடிப் படிப்பார். நடனம், நாடகத்திலும் கெட்டிக்காரர். இவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர் பெற்றோர்.
• பள்ளியில் கறுப்பின மாணவ அமைப்பின் தலைவராக இருந்தார். தேசிய உதவித்தொகை பெற்று ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வேதியியல் இன்ஜினீயரிங், ஆப்ரிக்க அமெரிக்கன் ஸ்டடீஸ் என இரட்டை பட்டம் பெற்றார். பின்னர் மருத்துவக் கல்வியையும் முடித்தார். கியூபா, கென்யா, தாய்லாந்தில் மருத்துவ சேவையில் ஈடுபட்டார்.
• லாஸ்ஏஞ்சல்ஸில் பணிபுரிந்தபோது, விண்வெளி ஆசை விஸ்வரூபம் எடுத்தது. நாசா பயிற்சிக்கு விண்ணப்பித்தார். அப்போது, ‘சேலஞ்சர்’ விண்கலம் வெடித்துச் சிதறி 7 பேர் இறந்ததால், பயிற்சித் திட்டத்தை நாசா ஒத்திவைத்தது.
• ஜெமிசனின் லட்சிய தாகத்தை இச்சம்பவம் தணித்துவிடவில்லை. மீண்டும் விண்ணப்பித்தார். ‘‘பலியானவர்களுக்காக வருந்துகிறேன். ஆனால், விண்வெளிப் பயணம் குறித்த எனது ஆர்வம் சிறிதும் குறையவில்லை’’ என்றார்.
• 2000 பேரில் ஜெமிசன் உட்பட 15 பேர் தேர்வாகினர். இவர் உட்பட 7 பேர் எண்டோவர் விண்கலத்தில் 1992 செப்டம்பர் 12-ம் தேதி விண்வெளிக்குப் புறப்பட்டனர். விண்வெளியில் 8 நாள் தங்கியிருந்த ஜெமிசன், விண்வெளி வீரர்களின் எடைக்குறைவு, உடல்நலக்குறைவு குறித்து ஆய்வு செய்தார். உலகமே பதைபதைப்புடன் காத்திருக்க.. செப்டம்பர் 10-ம் தேதி ஜெமிசன் குழுவினர் வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினர்.
• விண்வெளிக்குச் சென்ற முதல் அமெரிக்க, ஆப்ரிக்க வீராங்கனை என்று சாதனை படைத்த இவருக்கு பாராட்டு குவிந்தது. ‘‘ஜெமிசன் கம்பீரமான, புத்திசாலித்தனமான, உண்மையான, உறுதியான இளம்பெண்’’ என புகழாரம் சூட்டியுள்ளார் நாசாவின் முக்கிய அதிகாரி.
• குழந்தைப் பருவ ஊட்டச்சத்து குறைபாட்டைத் தடுக்கும் பணியில் ஜெமிசன் பணியாற்றி வருகிறார். அன்றாட வாழ்வில் தொழில்நுட்பப் பயன்பாடு குறித்த ஆய்வு நிறுவனம் நடத்துகிறார்.
• அமெரிக்காவின் இனவெறிக் கொடுமைக்கு ஜெமிசனும் தப்பவில்லை. ஒருமுறை போக்குவரத்து விதிமீறலுக்காக காரில் இருந்து இவரை இறக்கிய காவல் அதிகாரி, மணிக்கட்டை முறுக்கி கீழே தள்ளி அவமானப்படுத்தினார்.
• இந்த உலகத்தையும் சமுதாயத்தையும் மாற்றக்கூடிய சக்தி படைத்தவர்கள் தாங்கள் என்பதை பெண்கள் இன்னும் உணரவில்லையே என்பதுதான் ஜெமிசனின் ஆதங்கம்
*********************

Learn English

சமீபத்தில் சேலத்தில் உள்ள கல்லூரி ஒன்றுக்கு ஆங்கிலப் பயிற்சியளிக்கச் சென்றிருந்தபோது அதன் தாளாளர் நகைச்சுவையாக ஒரு சம்பவத்தை (கதையை) மாணவர்களிடம் விவரித்தார். “I will give you a ring tomorrow’’ என்று ஓர் ஆசிரியரிடம் அவர் கூற, அந்த ஆசிரியர் ஆர்வத்துடன் விரலைத் தடவியபடி தங்க மோதிரத்துக்காகக் காத்திருந்து, தொலைபேசி அழைப்பை மட்டும் பெற்று ஏமாந்தாராம். (தினசரிப் பேச்சுவார்த்தையில் give a ring என்பது தொலைபேசியில் அழைப்பது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்).
அர்த்தமும் அனர்த்தமும்
சில ஆங்கில வார்த்தைகளை அப்படியே எடுத்துக் கொண்டால் கோபமோ, வருத்தமோ உண்டாவது சகஜம்தான்.
உறவினர் வீட்டுக்கு நண்பரோடு சென்றிருந்தேன். ஏற்கெனவே நண்பரை அறிந்திருந்த உறவினர் “He is a man of his words’’ என்று புகழ்ந்து பேசினார். வீடு திரும்பும்போது நண்பரின் முகம் சிறுத்துக் காணப்பட்டது.
“நான் என்ன பேச்சோடு சரியா? காரியத்திலே சைபரா?’’ என்றார். பிறகு அவருக்கு விளக்கினேன். Man of his words என்றால் நம்பகத் தன்மையோடு பேசுபவர் என்ற அர்த்தம் என்று விளக்கினேன். இயல்பானார்.
ஒருவரின் செல்போன் தொலைந்து விட்டது. அவருடைய நண்பர் அதைப் பல இடங்களிலும் தேடிப் பார்த்தார். தொலைத்தவர் நண்பரைப் பற்றி “He spared no efforts’’ என்று கூற, மனம் வெறுத்துப் போனார் நண்பர். அதற்கு அவசியமில்லை. அந்த வாக்கியத்துக்கு “எந்த முயற்சியும் எடுக்கவில்லை’’ என்ற அர்த்தமில்லை. “எந்த முயற்சியையும் விட்டு வைக்கவில்லை’’ என்ற பாசிட்டிவான பொருள்தான்.
விஷமமும் விபரீதமும்
இதோ ஒரு கற்பனைச் சம்பவம். வெளியில் சென்று விட்டு வீடு திரும்பினர் மெத்தப் படித்த மகனும், மருமகளும். “என்னம்மா கோகுல் ரொம்ப விஷமம் பண்ணாமல் இருந்தானா?’’ என்று அவர்கள் கேட்க, பேரனைப் பாதுகாத்துக் கொண்டிருந்த பாட்டிக்கு ஏனோ தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தை வெளிக்காட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உண்டானது. அவன் செய்த விஷமங்களைப் பட்டியல் இடத் தொடங்கினார். “Gokul kicked the bucket’’ என்று கூற, மருமகள் வீலென்று அலற, பிறகுதான் விவரத்தைப் புரிந்து கொண்டனர். ஆங்கிலத்தில் ‘Kicked the bucket’ என்றால் இறந்துவிட்டார் என்று பொருள். (ஒருவேளை முன்னொரு காலத்தில் தூக்கிலிடும்போது மரண தண்டனைக் கைதியின் காலுக்குக் கீழே உள்ள பக்கெட்டை எட்டி உதைத்து விடுவார்களோ?)
உங்கள் வீட்டில் தங்கியவர் வேறிடத்துக்குச் சென்றுவிட்டார் என்றால் “He is no more here’’ என்று சொல்லுங்கள் தப்பில்லை. ஆனால் மறந்து போய் more என்பதற்கும் here என்பதற்கும் நடுவே பெருத்த இடைவெளியை விட்டுத் தொலைக்காதீர்கள். ‘இங்கு இல்லை’ என்பதற்குப் பதிலாக ‘உலகத்திலேயே இல்லை’ என்கிற அர்த்தம் தோன்றிவிடும்.
“Break a leg” என்றால் காலை உடைத்துக் கொள் என்று அர்த்தமில்லை. “All the best”, “நல்லாப் பண்ணு” என்பது போன்ற அர்த்தம்தான் அதற்கு. நாடகத்தில் நடிப்பவர் களுக்குதான் இந்த வகை வாழ்த்து (?) தொடக்கத்தில் கூறப்பட்டு வந்தது.
பதவியையும் செல்வாக்கையும் பயன்படுத்தி குறுக்குவழியில் காரியத்தைச் சாதித்துக் கொள்பவர்கள் உண்டு. They throw their weight around. (அதாவது அதிக எடை கொண்டவர்கள் என்பதில்லை. ‘அவர் வெயிட்டான பார்ட்டி’ என்று சொல்கிறோமே அந்த அர்த்தம்).
எடுத்துக்காட்டும் சுருக்கமும்
e.g. மற்றும் i.e. ஆகிய இரண்டு பயன்பாடுகளுக்கும் முக்கிய வித்தியாசம் உண்டு.
லத்தீன் மொழியிலுள்ள ‘Exemply–gratia’ என்பதன் சுருக்கம்தான் e.g. இதற்குப் பொருள் ‘எடுத்துக்காட்டாக’ என்பதாகும். அதாவது பல உதாரணங்களைக் கூற முடியும்போது அவற்றில் ஒன்றைக் கூறுவது.
History has seen great orators. e.g. Vivekananda.
Many diseases are spread by mosquitoes. e.g. Malaria
லத்தீன் மொழியிலுள்ள idest (சுருக்கமாக i.e.) என்பதன் அர்த்தம் that is. அதாவது கொடுக்கப்பட்டுள்ள உதாரணம் மட்டுமே அந்த விளக்கத்துக்கு இருக்க முடியும். America was named after the person who discovered it, i.e. Amerigo Vespucci.
Lethal – Fatal
Fatal accident என்று அடிக்கடி நாளிதழில் பார்க்கிறோம். Fatal என்றால் – இறப்பில் முடிந்த என்ற அர்த்தம். அதாவது அந்த விபத்தில் யாரோ இறந்திருக்கிறார்.
Lethal என்பதும் கிட்டத்தட்ட இதே அர்த்தம் கொண்டதுதான். என்றாலும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. Lethal என்றால் இறப்பு நேர்ந்து விட்டது என்று அர்த்தம் அல்ல. இறப்பு உண்டாக வாய்ப்பு உண்டு என்பதைக் குறிக்கிறது அது. Lethal dose of a medicine என்றால் அந்த மருந்தை உட்கொண்டால் இறப்பு உண்டாக வாய்ப்பு உண்டு. அதாவது இறப்பு நேர்ந்து விடவில்லை. நேரிடலாம். ஆனால் fatal என்றால் இறப்பு நேர்ந்துவிட்டது.
ஆங்கிலத்தின் சரியான அர்த்தத்தை உணராமல், அனர்த்தமாகப் புரிந்துகொண்டு விடக் கூடாது.
தொடர்புக்கு: aruncharanya@gmail.com

********
ஒரு வாசகருக்கு சந்தேகம். “பாரதியார் கடந்த காலமா? நிகழ் காலமா? ’’. நல்லதொரு பட்டிமன்றத் தலைப்புதான். ஆனால் வாசகரின் சந்தேகம் வேறு வகை. அது மேற்கோள் தொடர்பானது. அதாவது பாரதியாரின் மேற்கோளை எடுத்தாளும்போது “bharathiyar says’’ என்று கூற வேண்டுமா? அல்லது “bharathiyar said’’ என்று கூற வேண்டுமா?
விடை சிலருக்கு வியப்பளிக்கலாம். என்னதான் பாரதியார் அதைக் கடந்த காலத்தில்தான் கூறினார் என்றாலும், உடலைப் பொருத்தவரை அவரே கடந்த காலமாகிவிட்டார் என்றாலும் கூட, “bharathiyar says’’ என்று குறிப்பிட்டுத்தான் அந்த மேற்கோளை அளிக்க வேண்டும்.
தர்க்கம்
present tense – past tense என்பதைப் பற்றி குறிப்பிடும்போது ஆங்கில மொழிப் பயிற்சி வகுப்பில் நான் சந்தித்த ‘தர்க்கம்’ ஒன்று நினைவுக்கு வருகிறது.
பயிற்சிக்கு வந்திருந்தவர்கள் மேலதிகாரிகள். குறைந்தது பட்டதாரிகள். “எது சரி? we eat என்பதா? அல்லது we eats என்பதா?’’ என்ற கேள்வியை நான் கேட்டதும், அவர்களில் நான்கு பேர் “we eats’’ என்பதுதான் சரி என்றனர்.
கொஞ்சம் திகைப்புடன் அதற்கான காரணத்தை விசாரித்தபோது “we’’ என்பது பன்மை. எனவே eat என்ற வார்த்தையுடன் ‘s’ சேர்க்க வேண்டும் என்றார் ஒருவர்.
பிறகு அவர்களுக்கு விளக்க நேர்ந்தது. nounsகளுக்கு மட்டும்தான் ஒருமை, பன்மை. verbsகளுக்கு அல்ல.
என்றாலும் present tenseல் verbsகளை குறிப்பிடும்போது சில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும்.
எடுத்துக்காட்டாக eat என்ற அதே verbஐ எடுத்துக் கொள்ளலாம்.
i, you, we, they ஆகியவற்றுக்குப் பிறகு நிகழ்காலத்தில் பயன்படுத்துகையில் verb அப்படியே (அதாவது வேறெதுவும் சேர்க்கப்படாமல்) இருக்கும். i eat. you eat. we eat. they eat.
he, she, it போன்றவற்றுக்குப் பிறகு நிகழ்கால verbஐப் பயன்படுத்தும்போது ‘s’ அல்லது ‘es’ சேர்க்க வேண்டும். he eats. radha eats. it eats. gopi does.
அப்படியானால் ram and shyam என்பதற்குப் பிறகு எது வரவேண்டும்? eat? அல்லது eats? ram and shyam eat என்பதுதான் சரியானது. ஏனென்றால் இரண்டு நபர்கள் he ஆக முடியாது. theyதான். present tense வேறு எங்கு பயன்படுத்தப்படும் என்பதையும் பார்ப்போம்.
ஒரு பழக்கத்தைக் குறிப்பிடும்போது present tenseஐப் பயன்படுத்துவோம். அருண் தினமும் காலையில் 5.00 மணிக்கு எழுந்து விடும் பழக்கம் கொண்டவன் என்றால், arun is daily getting up at 5.00 a.m. என்று சொல்லக் கூடாது. (அது present continuous tense).
arun daily gets up at 5.00 a.m. என்றுதான் சொல்ல வேண்டும். இதுபோலத்தான் arun drinks tea every morning என்பதும்.
உலகில் சில பொதுவான உண்மைகள் உண்டு. எடுத்துக்காட்டு - காலையில் சூரியன் கிழக்கில் உதிப்பது. (அறிவியலின்படி பூமிதான் சுற்றுகிறது என்பதையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிடலாம்).
the sun rises in the east என்று present tenseல்தான் இது போன்றவற்றைக் குறிப்பிட வேண்டும்.
personal – personnel - personable
“இது என் பர்சனல் விஷயம். இதிலே தலையிட வேண்டாம்’’ என்று சொன்னால் அதன் பொருள் உங்களுக்குத் தெரியும். இங்கே பெர்சனல் என்பது “தனிப்பட்ட’’ அல்லது “அந்தரங்கமான’’ என்பதைக் குறிக்கிறது.
சில நிறுவனங்களில் “பர்சனல் டிபார்ட்மெண்ட்’’ என்று இருக்கும். (இதைப் பர்ஸோனல் என்று அழைப்பதுதான் சரி). இதற்கான ஸ்பெல்லிங் “personnel department’’ என்பதாகும். அதாவது ஊழியர்கள் தொடர்பான அடிப்படை விவரங்கள் மற்றும் அவர்களின் நலத் திட்டங்கள் போன்றவற்றை இந்தப் பிரிவில் கவனித்துக் கொள்வார்கள்.
personable என்றால் இனிமையான என்று பொருள். அதாவது pleasant.
hair? hairs?

தலைமுடி என்பதை hair என்று சொல்வதா, hairs என்று சொல்வதா? அது பயன்பாட்டைப் பொருத்தது. “என் தலையிலே சுமார் 30 வெள்ளை முடிகள் உள்ளன’’ எனும்போது 30 white (அல்லது grey) hairs என்று பன்மையைப் பயன்படுத்த வேண்டும். மாறாக மொத்தமாக தலைமுடியைக் குறிப்பிடும்போது hair என்ற ஒருமையைத்தான் பயன்படுத்த வேண்டும். my hair has gone grey என்பது போல.

‘பிளேயிங் இட் மை வே - சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதை

சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதை நூலான ‘பிளேயிங் இட் மை வே’ நவம்பர் 6-ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் அந்த நூலில் சச்சின் எழுதியுள்ள சில விவரங்கள் வெளியாகியுள்ளன.

தனது கேப்டன்சி காலத்தில் அடைந்த தோல்விகளினால் கிரிக்கெட் ஆட்டத்தை விட்டே போய் விடலாம் என்று நினைத்ததாக சச்சின் தன் சுயசரிதையில் கூறியுள்ளார்.

"தோல்விகளை கடுமையாக வெறுப்பவன் நான், தொடர்ந்து மோசமாக அணியினர் விளையாடும்போது எனக்கு அதிக பொறுப்பிருப்பதாக உணர்ந்தேன். கவலைக்குரிய விஷயம் என்னவெனில், அணியை வெற்றிப்பாதைக்கு எப்படி அழைத்துச் செல்வது என்பது எனக்குப் புரியவில்லை. என்னால் முடிந்ததை நான் ஏற்கெனவே செய்திருந்தேன். 

நெருக்கமான சில போட்டிகளை நாம் தோற்றது என்னை மிகவும் காயப்படுத்தியது, அச்சமூட்டக்கூடியதாக அந்தத் தோல்விகள் அமைந்தன. தோல்விகளிலிருந்து விடுபட முடியும் என்ற நம்பிக்கையே என்னை விட்டுப் போய் கொண்டிருந்தது. ஒரு சமயத்தில் கிரிக்கெட்டை விட்டே போய் விடலாம் என்று சீரியசாக யோசித்துக் கொண்டிருந்தேன்.” என்றார்.

சச்சின் டெண்டுல்கர் 1997-ஆம் ஆண்டு கேப்டனாக மேற்கிந்திய தீவுகள் சென்றிருந்த போது பெற்ற தோல்விகளே அவரை இந்த முடிவுக்கு வரவைத்தது.

முதல் 2 டெஸ்ட் போட்டிகளை டிரா செய்த இந்தியா 3-வது டெஸ்ட்டில் ஒரு அரிய வெற்றி வாய்ப்பைப் பெற்றது. இலக்கு 120 ரன்களே. ஆனால் இந்தியா அதிர்ச்சிகரமாக 81 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. லஷ்மண் தவிர ஒருவரும் இரட்டை இலக்கத்தை எட்டவில்லை.

இந்த தோல்வி குறித்து சச்சின் கூறும்போது, “மார்ச் 31, 1997- அந்தத் திங்கட் கிழமை இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இருண்ட நாள். என்னுடைய கேப்டன்சி வாழ்வில் மிகவும் மோசமான தினம். முதல் நாள் இரவு பார்படாஸில் உள்ள செயிண்ட் லாரன்ஸ் உணவு விடுதியில் இரவு உணவு எடுத்துக் கொண்டிருந்த போது, வெயிட்டர் ஒருவர் மேற்கிந்திய அணி வெற்றி பெறும் என்று உறுதியாக என்னிடம் கூறினார். கர்ட்லி ஆம்புரோஸ் இந்திய அணியை பவுன்ஸ் செய்து வீழ்த்திவிடுவார் என்று என்னிடம் அவர் கூறினார்.

நான் கூட அதற்கு விளையாட்டாக பதில் கூறினேன், அதாவது முதல் இன்னிங்ஸில் பிராங்க்ளின் ரோஸ் எனக்கு பவுன்சர் வீசினார். அதனை ஸ்டாண்டிற்கு அடித்தேன். எனவே ஆம்புரோஸ் எனக்கு பவுன்சர் வீசினால் அந்தப் பந்தை ஆன்டிகுவாவுக்கே அடிப்பேன் என்று கூறினேன்.

மேலும் அங்கிருந்த ஃபிரிட்ஜைக் காட்டி அதில் ஷாம்பெய்ன் பாட்டில் ஒன்றை வையுங்கள், நாளை இந்தியா வெற்றி பெற்றவுடன் நான் அதனைத் திறப்பேன், கொண்டாடலாம் என்றேன்.

ஆனால் 81 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வி அடைந்தோம். அதுபோன்ற மோசமான பேட்டிங்கிற்கு மன்னிப்பே கிடையாது. அது ஒரு கடினமான பிட்ச் என்பதை ஒப்புக் கொள்கிறேன். நான் யார் மீதும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. அது என்னுடைய வழியல்ல. இருந்தாலும், இது போன்று தோல்வியடைந்த ஒரு அணியில் நான் இருந்தேன், நான் பொறுப்பாக விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தந்திருக்க வேண்டும். என்னுடைய வாழ்க்கையில் மிக மோசமான பேட்டிங் வீழ்ச்சியில் நானும் ஒரு பகுதியாக இருந்ததை இப்போது நினைத்தாலும் பதறுகிறது. 

நானே அந்த டெஸ்ட் போட்டியில் 4 ரன்களுக்கு அவுட் ஆனேன். பந்தை தொட வேண்டும் என்ற ஆவலில் ஆடப்போக எட்ஜ் எடுத்தது. நான் அந்தப் பந்தை விட்டிருக்க வேண்டும், அல்லது எதிர்தாக்குதல் பேட்டிங் ஆடியிருக்க வேண்டும். இந்தத் தோல்வியால் வெகுவாக உடைந்து போனேன், 2 முழுநாட்கள் எனது அறையின் கதவைத் திறக்காமல் முடங்கிப் போனேன். இன்றும் கூட அந்தத் தோல்வி என் மனத்தை பதைபதைக்கச் செய்கிறது.

5 டெஸ்ட்கள் கொண்ட தொடரை 0-1 என்று இழந்து ஒருநாள் போட்டித் தொடருக்குச் சென்றோம். ஆனால் அதிலும் தோல்வி கண்டோம். அதிலும் 3-வது ஒருநாள் போட்டியில் பெற்ற தோல்வி என்னை மேலும் அச்சுறுத்தியது. செயிண்ட் வின்செண்டில் நடைபெற்ற இந்த போட்டியில் கடைசி 10 ஓவர்களில் 47 ரன்கள் தேவை. 6 விக்கெட்டுகள் கையில் இருந்தது. ராகுல் திராவிடும், கங்குலியும் வெற்றிக்கான களத்தை அமைத்துக் கொடுத்தனர். 

ஆனால் நான் எவ்வளவோ பெரிய ஷாட்களுக்குச் செல்ல வேண்டாம், ஓவருக்கு 5 ரன்களுக்கும் குறைவாகவே தேவைப்படுகிறது நிதானமாக ஆடினாலே வெற்றி பெறலாம் என்று வீரர்களுக்கு கூறினேன், ஆனால் பின்கள வீரர்கள் தொடர்ந்து பந்தை மேலே தூக்கி அடித்து வீழ்ந்தனர். தற்கொலைக்குச் சமமான ரன் அவுட்கள் வேறு. வெற்றி பெறும் நிலையிலிருந்து அணி தோல்வியடைந்தது எனக்கு கடும் கோபத்தைக் கிளப்பியது.

ஆட்டம் முடிந்து வீரர்களை அழைத்துக் கூட்டம் கூட்டினேன், அன்று நான் எனது ஓர்மையை இழந்து வீரர்களிடத்தில் சத்தம் போட்டேன். நான் இதயபூர்வமாக பேசினேன், இந்தத் தோல்வியை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றேன். எதிரணியினர் சிறந்த முறையில் ஆடி நாம் தோற்றால் அதனை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் வெற்றி பெறும் நிலையிலிருந்து தோல்வி அடைவது அணியினரிடத்தில் சீரியசான பிரச்சினை இருப்பதாகவே என்னை நினைக்க வைத்தது.

நான் அந்தத் தோல்விக்குப் பிறகு மிகவும் சோர்வடைந்தேன், அன்று மாலை அனில் கும்ப்ளேவும், ஸ்ரீநாத்தும் என் அறைக்கு வந்து என்னைத் தேற்றினர். தோல்விகளுக்கு என்னை நானே குற்றம்காணக்கூடாது என்று என்னிடம் அவர்கள் இருவரும் கூறினர், ஆனாலும் என் மீது தோல்வி விழுந்து அழுத்தவே செய்தது.

என் மனைவி அஞ்சலிதான், எல்லாம் சரியாகி விடும், வரும் மாதங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று ஆறுதல் கூறினார். திரும்பிப் பார்க்கும்போது எனக்கு தோல்விகள் வெறுப்பாகவே உள்ளது” என்று தன் சுயசரிதையில் அந்தத் தொடர் பற்றி எழுதியுள்ளார் சச்சின்.

இந்த சுயசரிதை நூலை அவர் கிரிக்கெட் எழுத்தாளர் போரியா மஜும்தாருடன் இணைந்து எழுதியுள்ளார்.