வியாழன், 4 ஜூன், 2015

வீராணம் ஏரிப் படுகை

வீராணத்திலிருந்து சென்னைக்குத் தண்ணீர் எடுக்க எதிர்ப்புத் தெரிவிக்கும் விவசாயிகள், மறுபுறம் வீராணம் தண்ணீருக்கு சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாகம் ராயல்டி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். லிட்டருக்கு ஒரு பைசாவில் ஆரம்பித்த ராயல்டி கோரிக்கை, இப்போது ஐந்து பைசாவில் வந்து நிற்கிறது.
இந்தக் கோரிக்கைக்காகவும் விவசாயிகளைத் திரட்டி உண்ணாவிரதம் இருந்த வீர. இளங்கீரன், ‘‘வீராணம் தண்ணீரை விநியோகித்து சென்னை மக்களிடமிருந்து தண்ணீர் வரியாக கோடிக் கணக்கில் மெட்ரோ வாட்டர் நிர்வாகம் வருவாய் ஈட்டுகிறது. அதில் ஒரு பகுதியைத்தான் ராயல்டியாக கேட்கிறோம். ராயல்டி கிடைத்தால் ஏரியைத் தூர்வாரலாம், வீராணம் பாசன விவசாயிகளுக்கு கூடுதலாக பயிர்க் கடன்களை வழங்கலாம்.
கடந்த திமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் இந்தக் கோரிக்கையை ரவிக்குமார் எம்எல்ஏ முன்வைத்தபோது, அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன், ‘வீராணம் தண்ணீருக்கு ராயல்டி கொடுத்தால், காவிரித் தண்ணீருக்காக கர்நாடகாவுக்கும் ராயல்டி கொடுக்க வேண்டி வருமே’ என்று மழுப்பலாக பதிலளித்து சமாளித்தார்” என்றார் இளங்கீரன்.
37 ஆண்டுகளாக பந்தாடப்பட்ட திட்டம்
1967-ல் தமிழக முதல்வராக அண்ணா இருந்தபோதே வீராணம் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருந்தார். ஆனால், 37 ஆண்டுகள் அரசியல் பந்தாட்டத்தில் சிக்கி, 2004-ல்தான் இந்தத் திட்டம் அமலுக்கு வந்தது.
எம்ஜிஆரின் குற்றச்சாட்டு
1970-ல் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் வீராணம் திட்டத்தில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டன. இதற்காக செக்கோஸ்லேவியா நாட்டில் இருந்து பிரத்யேக குழாய்கள் இறக்குமதி செய்யப்பட்டன. 1972-ல் திமுகவிலிருந்து விலகிய எம்ஜிஆர் முன்வைத்த ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி திமுக அரசைக் கலைத்ததுடன், அந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க சர்க்காரியா ஆணையத்தையும் நியமித்தார்.
இதன்காரணமாக, வீராணம் ஏரியிலிருந்து குழாய் அமைக்கும் பணி 25 சதவீதம் முடிந்திருந்த நிலையில், திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
ரூ. 6 கோடி நிர்வாகப் பிழை- சர்க்காரியா அறிக்கை
ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்த சர்க்காரியா ஆணையம், ‘‘கருணாநிதி தனது முதல்வர் பதவியை தவறாகப் பயன்படுத்தியுள்ளார். சத்ய நாராயணா பிரதர்ஸ் என்ற ஒப்பந்ததாரருக்கு ஒப்பந்தத்தைக் கொடுக்க வேண்டுமென கருணாநிதிக்கு விருப்பம் இருந்தது என்பதில் சந்தேகமில்லை. அது ஒரு மிகப் பெரும் நிர்வாகப் பிழை. ரூ. 6 கோடி பொதுப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இப்பிரச்சினையால் ஏற்பட்ட மன அழுத்தம் தாளாமல், ஒப்பந்ததாரர் சத்ய நாராயணா தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர், 1993-ல் முதல்வர் ஜெயலலிதாவின் முதல் ஆட்சிக் காலத்தில் வீராணம் திட்டக் கோப்புகள் பரிசீலிக்கப்பட்டு “புதிய வீராணம் திட்டம்” வகுக்கப்பட்டது. இத்திட்டத்துக்காகவும் சென்னையின் குடிநீர் விநியோக வசதிகளை மேம்படுத்தவும் ரூ. 1,638.04 கோடி தேவைப்படும் என்று மதிப்பீடு செய்யப்பட்டு, அதில் ரூ. 1,073 கோடி உலக வங்கியிடமிருந்து கடனாகக் கோரப்பட்டது.
ஆனால், அடுத்து வந்த திமுக அரசு, தெலுகு கங்கைத் திட்டம் அமலுக்கு வரவுள்ளதைக் குறிப்பிட்டு, 1997-ம் ஆண்டில் கடன் ஒப்பந்தத்தை திருத்தியது. இதுகுறித்து உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் “கடன் ஒப்புதல் தரப்பட்டு 6 மாத காலத்தில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெற்றது. புதிய அரசு, வீராணம் திட்டத்துக்குப் பதிலாக கிருஷ்ணா திட்டத்துக்கு முன்னுரிமை அளித்தது. எனவே, இந்திய அரசின் மூலம் வீராணம் திட்டத்துக்கான கடன் தொகையை ரத்து செய்து, சென்னையில் குடிநீர் மற்றும் கழிவுநீர் வசதிகளை மேம்படுத்த நிதி கோரப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தொடர்ந்து வந்த தேர்தல்களில் இது மைய விவாதப் பொருளானது.
18 மாதங்களில் முடிக்கப்பட்ட திட்டம்
தனது முதல் ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட புதிய வீராணம் திட்டத்துக்காக தனது அடுத்த ஆட்சிக் காலத்தில் ரூ. 740 கோடி நிதி ஒதுக்கி, மீண்டும் பணிகளைத் தொடங்கினார் ஜெயலலிதா. திட்டப் பணிகள் 2002, நவம்பர் மாதத்தில் தொடங்கின.
2003 - 2004 ஆண்டில் சென்னையில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவியது. அந்த ஆண்டு வந்திருக்க வேண்டிய கிருஷ்ணா நதி நீரும் வந்து சேரவில்லை. எனவே, தமிழக அரசு புதிய வீராணம் திட்டத்தை நிறைவேற்றுவதில் தீவிரமாக இருந்தது. பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு, பதினெட்டே மாதங்களில் அதாவது, 2004-ம் ஆண்டு ஏப்ரலில் நிறைவடைந்தன.
அண்ணா ஆட்சியில் ஒப்புதல் அளிக்கப்பட்ட வீராணம் திட்டம், 37 ஆண்டுகள் அரசியல் பந்தாட்டத்துக்குப் பிறகு ஜெயலலிதாவின் 2-வது ஆட்சியில் அமலுக்கு வந்தது.
திருத்தம்
நேற்றைய நாளிதழில், ‘20-09-2014 அன்று சென்னையை நோக்கிய தனது சோதனை ஓட்டத்தைத் தொடங்கியது வீராணம் ஏரித் தண்ணீர். 04-10-2014 அன்று முதல் நாளொன்றுக்கு 48 கன அடி வீதம் சென்னை குடிநீருக்காக வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இப்போது, தண்ணீர் திறப்பு 77 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது’ என்று வெளியான தகவல்கள் சரியல்ல.
சோதனை ஓட்டம் 20-09-2004 அன்று தொடங்கியது என்பதும், 04-10-2004 அன்று ஏரியிலிருந்து வினாடிக்கு 48 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது என்பதும், தற்போது தண்ணீர் திறப்பு வினாடிக்கு 77 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்பதுமே சரி.
-- குள. சண்முகசுந்தரம் / வி. சாரதா

**************
Kannan  
வீராணம் ராஜராஜன் என்னும் மாமன்னன் 1150 ஆண்டுகளுக்கு முன்பு சாளுக்கிய மன்னர்கள் மீது போர் தொடுக்க மிக பெரும் சேனையை (சுமார் 2 லட்சம் வீரர்கள்) திரட்டி தற்போதைய வீராணம் ஏரி அருகில் பாசறை அமைத்தான். அங்கு எதிரியின் வரவுக்குக்காக தனது பெரும் சேனையுடன் காத்திருந்தான். அந்த சமயத்தில் சேனை வீரர்கள் வேலையின்றி இருந்தார்கள் அவர்களுக்கும் வேலை அளிக்கவேண்டும் அதே நேரத்தில் பல 100 ஆண்டுகளுக்கு மக்களுக்கு பயன் தரவேண்டும் என்ற சீரிய நோக்கத்தில் உருவானது இந்த கடல்போன்ற வீராணம் ஏரி. அவன் கண்ட கனவு 1150 ஆண்டுகளுக்கு பின்னரும் பயன் தந்து கொண்டு இருக்கிறது. இப்படி ஒரு சாதனை செய்து ராஜராஜன் சாளுக்கியரின் சூழ்ச்சியால் போரில் வீர மரணம் அடைந்தான் அவன் தியாகம் இன்னும் பல 1000 வருடங்களுக்கு புகழ் பாடும். ஆனால் அந்த ஏரியின் மூலம் நம் குடும்பத்திற்கு என்ன லாபம் கிடைக்கும் என எண்ணுபர்களை பற்றி எழுதி அந்த மாமன்னனை இழிவுபடுத்த வேண்டாம் - கண்ணன் ஸ்ரினிவாசலு.

மோடியும் அதானியும்.

இதுவும் ஒரு சாதனைக் கதைதான். மோடியின் குஜராத்தில், எல்லையோர சிறு நகரமான தாரட்டிலிருந்து அகமதாபாத் நோக்கி பிழைப்புக்காகக் குடிபெயர்ந்த ஒரு ஜவுளி வியாபாரக் குடும்பத்தின் கதை. ஒரு தொழில் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய சாமானியனின் கதை. மோடியின் தோழர் கௌதம் அதானியின் கதை.
1988-ல் தொடங்கப்பட்ட அதானி குழுமம் எந்தெந்தத் தொழில்களிலெல்லாம் இறங்கி வெறும் 27 ஆண்டுகளுக்குள் எப்படிக் கிட்டத்தட்ட 28 நாடுகளில் கிளை பரப்பி நிற்கிறது என்பது ஒரு பெரும் வரலாறு. அதை அப்படியே இங்கே விவரிப்பது சாத்தியம் இல்லை. எனினும், ராகுல் காந்தியின் கூற்றுப்படி, “குஜராத்தில் மோடி ஆண்ட 2002-2014 காலகட்டத்தில் மட்டும் ரூ. 3,000 கோடியிலிருந்து ரூ. 40,000 கோடியாக அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு உயர்ந்தது எப்படி?” என்ற கேள்விக்கு, பின்னாளில் ‘ஃபோர்ப்ஸ்’ வெளியிட்ட ஒரு கட்டுரை பதிலுக்கான திசையைக் காட்டியது. மோடியின் ஆட்சியில் கட்ச் வளைகுடா பகுதியில் மட்டும் அதானி குழுமத்துக்கு 7,350 ஹெக்டேர் 30 வருஷக் குத்தகைக்கு அளிக்கப்பட்டதையும் அப்படி அளிக்கப்பட்ட நிலத்தைக் கிட்டத்தட்ட 15 மடங்கு அதிக தொகைக்கு ‘இந்தியன் ஆயில்’ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அதானி குழுமம் உள்குத்தகைக்கு விட்ட கதையெல்லாம் அந்தக் கட்டுரை சொன்னது. இடையிடையே வெளியான தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கைகளும் மோடி அரசு பெருநிறுவனங் கள் மீது, அதானி குழுமத்தின் மீது காட்டிய பாசத்தையும் அதீத சலுகைகளையும் கூறின. ஆக, அம்பானியின் கதைபோல அதானியின் கதையும் ஒரு வெற்றிக் கதை!
பலரும் மறந்த வெற்றி அத்தியாயம்
இந்த வெற்றிக் கதையில் மோடியின் முதலாண்டு ஒரு அற்புதமான அத்தியாயம். இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் பலரும் மறந்துவிட்ட அத்தியாயம். உண்மையில், அகமதாபாத்திலிருந்து டெல்லி நோக்கி மோடி நகரப்போகிறார்; பாஜகவின் வேட்பாளர் அவர்தான் என்று அறிவிக்கப்பட்டதுமே அந்த அத்தியாயம் புயல் வேகத்தில் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அதானியின் மூன்று நிறுவனங்களின் மதிப்பும் - அதானி என்டர்பிரைஸஸ், அதானி போர்ட் அண்ட் செஸ் லிமிடெட், அதானி பவர் - 85.35% வளர்ச்சி கண்டன. சென்செக்ஸ் வெறும் 14.76% வளர்ச்சி கண்ட காலகட்டம் அது. தேர்தல் களத்தில் அதானி விமானத்தில் பறந்து மோடி முந்த முந்த... பங்குச்சந்தையில் அதானி குழுமம் மேலே மேலே போனது.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான அதே நாளில், தன் நண்பர் மோடியைப் போலவே மிகப் பெரிய சாதனை ஒன்றைச் செய்தார் அதானி. அன்றைய தினம்தான் அவருடைய ‘அதானி போர்ட்ஸ்’ நிறுவனம், ஒடிஸாவில், கிழக்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள ‘தாம்ரா போர்ட்’ துறைமுகத்தை ரூ.5,500 கோடிக்கு வாங்கியது. டாடா ஸ்டீல் மற்றும் எல்&டி நிறுவனங்களுக்குச் சொந்தமான ‘தாம்ரா’ துறைமுகம் கிழக்கு மாநிலங்களின் தாதுப் பொருட்களைக் கொண்டுசெல்லும் மிக முக்கியமான மையம். அரசுக்குச் சொந்தமான மேற்கு வங்கத்தின் ஹல்தியா துறைமுகம் மற்றும் ஒடிஸாவின் பாரதிப் துறைமுகம் ஆகியவற்றுக்குச் சரியான போட்டியாக விளங்கக் கூடியது. 2005-ல் ‘ஸ்கில் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்’ நிறுவனத்திடமிருந்து குஜராத்தில் உள்ள பைபவ் துறைமுகத்தை பெருந்தொகைக்கு ‘ஏபிஎம் டெர்மினல்ஸ் பிவி’ நிறுவனம் வாங்கியதற்குப் பிறகு, துறைமுக வணிகத்தில் நடந்த மிகப் பெரிய வணிகம் இது. அதைவிடவெல்லாம் முக்கியம், அதானியின் நீண்ட நாள் கனவு - காத்திருப்பு அது.
இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்குக் கடற்கரையோரப் பகுதிகளில் பெரிய அளவில் வணிகம் செய்வதற்குச் சரியான மையம் அது என்பது அவருடைய வியூகம். அதானி குழுமம் ஏற்கெனவே குஜராத்தில் ஆசியாவிலேயே மிகப் பெரிய தனியார் துறைமுகமான ‘முந்த்ரா’ உட்பட 5 பெரிய துறைமுகங்களை நிர்வகிக்கிறது. ‘தாம்ரா’ துறைமுகத்தை வாங்கியிருப்பதன் மூலம், 2020 வாக்கில் 200 மில்லியன் டன் கையாளும் இலக்கை எட்ட முடியும்; அதன் மூலம் துறைமுகத் தொழிலில் அசைக்க முடியாத இடத்துக்குச் செல்ல முடியும் என்பது அதானியின் கணிப்பு.
அடுத்த மூன்று மாதங்களில், உடுப்பியிலுள்ள ரூ. 6,000 கோடி மதிப்புள்ள 1,200 மெகாவாட் அனல் மின் உற்பத்தி நிலையத்தை ‘லான்கோ இன்ஃப்ரா’ நிறுவனத்திடமிருந்து அதானி குழுமம் வாங்கியது. அடுத்த மூன்று மாதங்களில், ரூ. 4,200 கோடி மதிப்புள்ள 600 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தை ‘அவந்தா’ நிறுவனத்திடமிருந்து அதானி குழுமம் வாங்கியது. இதன் மூலம் 11,040 மெகாவாட்டாக அந்நிறுவனத்தின் மின் உற்பத்தித் திறன் உயர்ந்தது. நாட்டின் மிகப் பெரிய தனியார் மின் உற்பத்தியாளர் எனும் கனவை அதானி நனவாக்கிக்கொண்டார். “அடுத்து 2020-க்குள் 20,000 மெகாவாட் மின் உற்பத்தி இலக்கை அதானி குழுமம் அடையும்” என்றார். இதற்கிடையிலேயே செப்டம்பரில் இன்னொரு சாதனையையும் அவர் படைத்தார். இந்தியாவின் ‘டாப் 10 பணக்காரர்கள்’ பட்டியலில் நுழைந்தார். அவருடைய சொத்து 152% வளர்ந்திருப்பதாகச் சொன்னது ‘ஹுரூம்’ ஆய்வறிக்கை.
பயணத் தோழர்
மோடியின் ஓராண்டு வெளிநாட்டுப் பயணங்கள் நாம் அறியாதவை அல்ல. அவற்றில் பெரும்பாலான பயணங்களில் அதானிக்குக் கட்டாயம் இடம் உண்டு. ஐ.நா. சபையில் மோடி உரையாற்றிக்கொண்டிருந்தபோதும் சரி, ஜி-20 மாநாட்டுக்கு மோடி சென்றிருந்தபோதும் சரி... அதானி அங்கே இருந்தார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பெரும்பாலான பயணங்களில் அவருடைய இருப்பை மோடி அரசு வெளியிட விரும்புவதில்லை. உதாரணமாக, பிரான்ஸ் பயணத்தின்போது இருதரப்புப் பேச்சுவார்த்தையில் அவர் பங்கேற்றதை பிரெஞ்ச் அரசின் செய்திக்குறிப்பு சொன்னது; இந்தியத் தரப்போ மூடி மறைத்தது. முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோஸி கொடுத்த விருந்தில்கூட அவர் பங்கேற்றதாகச் சொன்னார்கள். கேட்டால், “அதானி அதிகாரபூர்வமாக அல்லாமல் தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளும் பயணங்களையும் நிகழ்ச்சிகளையும் பற்றி நாங்கள் என்ன சொல்ல முடியும்?” என்று கேட்டிருக்கிறார்கள் நம் அதிகாரிகள். கூடவே, “இதென்ன புதிதா? மோடி முதல்வராக இருந்தபோதே சிங்கப்பூர், சீனா, ரஷ்யா என்று உடன் சென்றவர்தானே அதானி” என்றிருக்கிறார்கள்.
அதானியின் ஓராண்டுப் பயணத்தில் முக்கியமான அடுத்த மைல்கல் கார்மைக்கேல் நிலக்கரிச் சுரங்க ஒப்பந்தம். மோடியின் ஆஸ்திரேலியப் பயணத்தின்போது பேசி முடிக்கப்பட்ட பேரம் இது. உலகின் பெரும் திட்டங்களில் ஒன்று என்கிறார்கள். முன்னெப்போதும் இல்லாத வகையில் அதானியின் இந்தத் திட்டத்துக்கு ஒரு பில்லியன் டாலர்களை (கிட்டத்தட்ட ரூ. 6,396,54,50,000) கடனாக அளிக்கவிருப்பதாக அறிவித்தது பாரத ஸ்டேட் வங்கி. ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலின் சரிவையும், நிலக்கரி விலையில் ஏற்பட்ட 50% சரிவையும், சுற்றுச்சூழல் காரணங்களையும் சுட்டிக்காட்டி சிட்டி வங்கி, டாய்ச்சு வங்கி, ராயல் வங்கி, எச்எஸ்பிசி, பார்கிளேய்ஸ் எனப் பல பன்னாட்டு வங்கிகள் கடன் வழங்க மறுத்த திட்டம் இது. சர்வதேச வங்கிகளெல்லாம் மறுத்த ஒரு திட்டத்துக்கு, பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி கடன் வழங்கும் முடிவெடுக்க என்ன காரணம்?
இந்தக் கேள்வியை எதிர்க் கட்சிகள் கேட்டன. மாநிலங் களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் வெளிப்படையாகவே பல கேள்விகளை எழுப்பினார். பிரதமர் மோடியும் ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யாவும் அதானியும் சந்தித்த விருந்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றார். கூடவே, சங்கடமான இன்னொரு கேள்வியையும் அவர் எழுப்பினார். “நிலக்கரியை இந்தியா இறக்குமதிசெய்வது அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் நின்றுவிடும் என்று நிலக்கரித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகிறார். ஆனால், அதானியின் ஆஸ்திரேலியத் திட்டப்பணி மூலம் வெட்டி எடுக்கப்படும் நிலக்கரியில் மூன்றில் இரண்டு பங்கு இந்தியாவுக்கு ஏற்றுமதிசெய்யப்படும் என்கிறார்களே எப்படி?” என்றார். “தொழில்களுக்கு உகந்த ஒரு அரசாக மோடி அரசு இருப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை; ஆனால், தொழிலதிபர்களுக்கான அரசாக - அணுக்கம்சார் முதலாளித் துவ அரசாக - இருப்பது எங்களுக்குப் பிரச்சினை” என்றார்.
அரசிடம் பதில் இல்லை. இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியுமா என்கிறது.
அதானி குழுமத்தின் சாதனைக் கதைகள் தொடர்கின்றன!
சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

வானமும் ஒரு தொலைநோக்கிதான்!




விண்மீன் ஒன்று வெடித்துச் சிதறும் காட்சி திரும்பத் திரும்ப அரங்கேறும் அதிசயம்!
‘கிரவுண்டுஹாக் டே’ என்ற திரைப்படத்தில் வருவதுபோல் அண்டவெளியிலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
1993-ல் பில் முர்ரேயின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘கிரவுண்டுஹாக் டே’. தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் வானிலை அறிவிப்பாளராக இருக்கும் கதாநாயகன் மீண்டும் மீண்டும் ஒரே நாளிலேயே வாழ்ந்துகொண்டிருப்பார். ஹப்பிள் அண்டவெளி தொலைநோக்கியைப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் வானியலாளர்களும் பெருவிண்மீன் வெடிப்பில் (சூப்பர்நோவா) ஒரே விண்மீன் திரும்பத் திரும்ப வெடித்துச் சிதறுவதைக் கண்டதாகச் சமீபத்தில் தெரிவித்திருக்கிறார்கள். ஐன்ஸ்டைன் ஒளியியல் (ஆப்டிக்ஸ்) கூறும் தோற்றப் பிழைதான் இது.
பிரபஞ்சத்தின் வேறொரு மூலையில் 900 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் வெடித்த பெருவிண்மீன் அது. அண்டவெளியின் உதவியின்றி இவ்வளவு தொலைவில் நிகழ்ந்த ஒரு நிகழ்வை ஹப்பிள் தொலைநோக்கியால் பார்க்க முடியாது. அந்த விண்மீன் வெடிப்பிலிருந்து வெளிப்பட்ட ஒளிக்கதிர்கள் பயணிக்கும் பாதையில் சில விண்மீன் மண்டலங்கள் (கேலக்ஸி) குறுக்கிடுகின்றன. அந்த மண்டலங்களின் ஈர்ப்பு காரணமாக ஒளிக்கதிர்கள் வளைக்கப்பட்டு, பெரிதாக்கப்பட்டு அவற்றின் பல பிம்பங்கள் உருவாகியிருக்கின்றன.
அந்த பிம்பங்களுள் நான்கு, ‘ஐன்ஸ்டைன் சிலுவை’(ஐன்ஸ்டைன் கிராஸ்) என்று அழைக்கப்படும் நெருக்கமான தொகுப்பாகக் காட்சியளிக்கின்றன. அந்த விண்மீன் மண்டலங்களுள் ஒன்றைச் சூழ்ந்து இந்த பிம்பங்கள் காணப்படுகின்றன. விண்மீனிலிருந்து புறப்படும் ஒளிக்கதிர் ஒவ்வொன்றும் வேறுவேறு பாதை வழியாக அந்த இடத்தை வந்தடைவதால், அந்தச் சிலுவையில் உள்ள ஒவ்வொரு பிம்பமும் பெருவிண்மீன் வெடிப்பின் வேறுவேறு தருணங்களைச் சித்தரிக்கின்றன என்றே கருத வேண்டும்.
முதல் முறை
வானியலாளர்கள் ஒரே வெடிப்பைத் திரும்பத் திரும்பக் காண்பதென்பது இதுதான் முதல் முறை. இது போன்ற அரிதான நிகழ்வுகளின் தன்மையைப் புரிந்துகொள்வதில் மட்டுமல்ல, கரும்பொருள் (டார்க் மேட்டர்), பிரபஞ்சம் விரிவடையும் வேகம் போன்ற அண்டவெளிப் புதிர்களைப் பற்றிப் புரிந்துகொள்வதிலும் வானியலாளர்களுக்கு இது உதவும்.
ஹப்பிள் தொலைநோக்கியால் பதிவுசெய்யப்பட்ட படங்களிலிருந்து இந்தப் பெருவிண்மீன் வெடிப்பின் படங்களைக் கண்டறிந்தவர் பெர்க்லியில் உள்ள கலிஃபோர்னியப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த டாக்டர் பேட்ரிக் கெல்லி. “ஆச்சரியத்தில் எனக்குப் பேச்சே வரவில்லை. நான் சற்றும் எதிர்பாராத விஷயம் இது” என்கிறார் அவர். ‘சயின்ஸ்’ என்ற அறிவியல் இதழில் கடந்த மார்ச் மாதம் இந்தப் பெருவிண்மீன் வெடிப்பைப் பற்றிய அவரது ஆய்வுக் கட்டுரை வெளியானது.
“ஈர்ப்புவிசையின் காரணமாக ஒளி வளைவதை நாம் முன்பே பார்த்திருக்கிறோம். பெருவிண்மீன் வெடிப்பையும் பார்த்திருக்கிறோம். உருப்பெருக்கப்பட்ட பெருவிண்மீன் வெடிப்பையும் பார்த்திருக்கிறோம். ஆனால், ஒரே வெடிப்பின் பல பிம்பங்களைப் பார்ப்பது இதுதான் முதல் தடவை” என்கிறார் வானியற்பியலாளர் ராபெர்ட் கிர்ஷ்னர்.
பிரபஞ்சத்தில் நிகழும் மூர்க்கமான, அரிய நிகழ்வுகளுள் பெருவிண்மீன் வெடிப்பும் ஒன்று. ஒவ்வொரு விண்மீன் மண்டலத்திலும் அநேகமாக நூற்றாண்டுக்கு ஒன்று என்ற கணக்கில்தான் பெருவிண்மீன் வெடிப்புகள் நிகழும். விண்மீன் மண்டலங்களை விட மிகவும் பிரகாசமான ஒளியை உமிழக் கூடியவை அந்த நிகழ்வுகள். இந்த நிகழ்வுகளின்போது புதிய கிரகங்கள் உருவாகத் தேவையான ஆக்ஸிஜன், தங்கம் போன்ற அடிப்படைத் தனிமங்கள் உமிழப்படுகின்றன. இந்த நிகழ்வுகளின் எச்சங்களாக நியூட்ரான் விண்மீன்களோ கருந்துளைகளோ உருவாகின்றன.
விண்மீன் மண்டலமே ஆடியைப் போல..
“குறிப்பிட்ட இந்தப் பெருவிண்மீனுக்கும் ஹப்பிள் தொலைநோக்கிக்கும் இடையே விண்மீன் மண்டலங்களின் கொத்தொன்று (கேலக்ஸி கிளஸ்டர்) இருப்பதால்தான் ஒரே பெருவிண்மீன் வெடிப்பை நாம் நான்கு முறை பார்க்கிறோம்” என்கிறார் டாக்டர் கெல்லி. அடுத்த 10 ஆண்டுகளில் வானத்தின் வேறு ஏதாவதொரு பகுதியில் இந்தப் பெருவெடிப்பின் பிம்பம் தோன்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிம்பங்கள் தோன்றும் இடைவெளிகளில் நிலவும் கால தாமதத்தைக் கணக்கிடுவதன் மூலம் பிரபஞ்சம் எந்த வேகத்தில் விரிந்துகொண்டிருக்கிறது என்பதுகுறித்த அளவீடுகளை வானியலாளர்கள் மேலும் துல்லியப்படுத்திக்கொள்ள முடியும் என்கிறார் டாக்டர் கெல்லி. அது மட்டுமல்லாமல், பிரபஞ்சத்துக்குப் பெருமளவு நிறையையும் ஈர்ப்புவிசையையும் வழங்கும் புதிரான கரும்பொருள்குறித்துப் புரிந்துகொள்வதும் இதனால் சாத்தியமாகும் என்று சொல்கிறார் டாக்டர் கெல்லி.
ஆல்பெர்ட் ஐன்ஸ்டைனுக்கு இன்னும் மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்திக்கொண்டுதான் இருக்கிறது விண்வெளி. இந்த ஆண்டின் மார்ச் 14-ல் அவருக்கு 136 வயது நிறைவடைந்திருக்கிறது. அவருடைய மகத்தான சாதனையான பொதுச்சார்பியல் கோட்பாட்டின் நூறாவது ஆண்டு இது. அண்டவெளி, காலம், ஈர்ப்புவிசை போன்றவற்றைப் பற்றிய நமது அறிவை மாற்றியமைத்த கோட்பாடு அது. அந்தக் கோட்பாட்டின் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் ‘சயின்ஸ்’ இதழின் சிறப்பிதழில்தான் டாக்டர் கெல்லியின் ஆய்வுக்கட்டுரை வெளியாகியிருக்கிறது.
பருமனான ஒருவர் உட்காரும்போது மெத்தையில் எப்படிக் குழிவு ஏற்படுகிறதோ அதேபோல் நிறையும் விசையும் அண்டவெளியின் வடிவத்தை வளைக்கின்றன என்றும் இதனால் உருவாகும் விளைவுதான் ஈர்ப்புவிசை என்றும் ஒரு கருதுகோளை ஐன்ஸ்டைன் முன்வைத்தார். ஒளியையும் ஈர்ப்புவிசை வளைத்துவிடுவதும், சூரியன் போன்ற நிறைமிகுந்த பொருளுக்கருகில் ஒளி வளைந்து செல்வதும் இதன் விளைவுதான். 1919-ம் ஆண்டு நிகழ்ந்த சூரிய கிரகணத்தின்போது ஐன்ஸ்டைனின் இந்தக் கோட்பாடு நிரூபணமானது.
இந்த அடிப்படையில் அண்டவெளியே தொலைநோக்கிபோல் ஆகிவிடக் கூடும். இந்த அண்டவெளி தொலைநோக்கி எப்படி இயங்கும் என்பது விண்மீன்களெல்லாம் அமைந்திருக்கும் நிலைகளைப் பொறுத்தது. ஒரு விண்மீனின் ஒளியின் பாதையில் மேற்கண்ட ‘தொலைநோக்கி’சற்றே விலகி அமைந்திருந்தால் அந்த விண்மீனின் ஒளி, வளைவுகள் போன்று தோன்றும். நேர்க்கோட்டில் அமைந்திருந்தால் ‘ஐன்ஸ்டைன் வளையம்’என்றழைக்கப்படும் ஒளிவட்ட மாக அந்தத் தொலைதூர விண்மீன் தோன்றும், அல்லது தனித்தனிப் பிம்பங்களாக ‘ஐன்ஸ்டைன் சிலுவை’போல் தோன்றும்.
ஹப்பிளுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்
ஒட்டுமொத்த விண்மீன் மண்டலக் கூட்டங்களையும், விண்மீன் மண்டலக் கொத்துகளையும் தொலை நோக்கிபோல் கொண்டு அவற்றுக்கு அப்பால் மிகத் தொலைவில் இருக்கும் மங்கலான பொருட்களைப் பார்ப்பது எப்படி என்பதை வானியலாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். இந்த வழிமுறை இல்லை என்றால், தொலைதூரப் பொருட்களெல்லாம் காலத்தின் மூட்டத்தில் தொலைந்துபோய்விட நேரிட்டிருக்கும் அல்லவா!
ஹப்பிள் விஞ்ஞானிகள் இந்த உத்தியை ‘கிளாஸ்’ என்ற ஆய்வில் சமீப காலமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் விண்மீன் மண்டலக் கொத்துகளைத் துழாவி, பிரபஞ்சத்திலேயே மிகவும் நிறை கொண்டதும், ஒளியை மிக அதிக அளவில் வளைக்கவும் உருப்பெருக்கவும் கூடியதுமான விண்மீன் கொத்துகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த உத்தியின் மூலம் கடந்த காலத்தை ஊடுருவிப் பார்ப்பதில் ஹப்பிள் ஏற்கெனவே கொண்டிருந்த அசாத்தியமான திறனை மேலும் வலுப்படுத்தியிருக்கிறார்கள். இதனால், முன்னிலும் அதிக அளவில் தொலை தூரத்தைப் பார்க்கும் திறன் ஹப்பிளுக்குக் கிடைத் திருக்கிறது. பிரபஞ்சம் உருவாகி 50 கோடி ஆண்டுகளே ஆகியிருந்த காலகட்டத்தில் இருந்த விண்மீன் மண்டலத்தை இந்த உத்தியின் மூலம் பார்க்க முடிந்திருக்கிறது.
ஒரு விண்மீன் ஒரு முறைதான் இறக்கும். ஆனால், ஐன்ஸ்டைனின் தொலைநோக்கி மூலம், எங்கே பார்க்க வேண்டுமோ அங்கே சரியாகப் பார்த்தோமென்றால், அந்த விண்மீன் மரண ஓலமிடுவதை என்றென்றுமே காணலாம்.
© ‘தி நியூயார்க் டைம்ஸ்’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை

செவ்வாய், 2 ஜூன், 2015

Unemployment

அமெரிக்காவில் வசிக்கும் ஒரு நண்பர் “அங்கே சிறு சிறு பணிகளுக்கு எல்லாம் ஆட்கள் வேலைக்குக் கிடைப்பது குதிரைக்கொம்பு” என்கிறார். நீண்டகால அடிப்படையில் வேலை செய்யும் வாய்ப்புடன் அமெரிக்காவுக்குப் போகிற பெரிய மனிதர்கள் பலர் இந்தியாவிலிருந்து தங்களுடனே வீட்டுப் பணிப்பெண்களையும் அழைத்துச் செல்கிறார்கள் என்கிறார் அவர்.
வளர்ச்சியடைந்த பணக்கார நாடுகளில் மட்டும்தான் இப்படிப்பட்ட பிரச்சினை என்று நினைக்கலாம் ஆனால், வளரும் நாடான நமது இந்தியாவிலும் அப்படிப்பட்ட போக்கு வருவதைத் தவிர்க்க முடியாது என்றுதான் தெரிகிறது.
வேலையும் ஆளும்
நம் நாட்டில் “எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை” என்று பலர் காத்திருக்கிறார்கள் என்பது உண்மைதான். அதே நேரத்தில் “எங்களுக்கு வேலை செய்வதற்கு ஆட்கள் கிடைக்கவில்லை” என்றும் பலர் காத்துக் கிடப்பதும் உண்மைதான். “கிராமங்களில் நடக்கிற விவசாய வேலைகளுக்குக் கூட இப்போதெல்லாம் பலர் தங்களின் வயல்களில் இயந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள். விவசாயத்தை நம்பிப் பெரும்பான்மையான மக்கள் இருக்கும் இந்த நாட்டில் இயந்திரங்களைப் பயன்படுத்தலாமா” என்றும் சில விவசாயச் சங்கங்கள் குரல் எழுப்புகின்றன.
ஆனால், விஷயம் அதோடு முடிந்துவிடவில்லை. “யார் இப்பல்லாம் விவசாய வேலைக்கு வருகிறார்கள்? யாரும் வராததால்தான் நாங்கள் இயந்திரங்களை வைத்து விவசாயத்தை நடத்துகிறோம்” என்று எதிர் விவாதம் செய்வதற்கும் ஆட்கள் இருக்கவே செய்கிறார்கள்.
திறன்மிக்க உழைப்பு
தனக்கான வேலையைத் தேடும் மனிதர்களின் மனதில் என்னதான் சிந்தனைகள் ஓடுகின்றன என்றும் யோசிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. முக்கியத்துவம் இல்லாத சிறு சிறு வேலைகளைச் செய்வதில் பொதுவாக, மனிதர்களுக்கு விருப்பம் குறைந்துவருவது உலகளாவிய போக்காக இருக்கிறது. இத்தகைய போக்கு இருக்கிற அதே நேரத்தில், ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்குத் திறன் மிக்க உழைப்பாளர்கள்தான் வேண்டும் என் இன்னொருவகையான போக்கிலும் உள்ளன.
இத்தகைய பொருளாதாரத் தேவைகளின் காரணமாக, தங்களின் நாட்டில் உள்ள வேலை செய்யும் சக்தி படைத்த உழைக்கும் மக்களைத் திறன் படைத்தவர்கள், திறன் இல்லாதவர்கள் எனப் பிரித்து ஆராய்கிற முயற்சிகளில் பலநாடுகள் இறங்கி உள்ளன. நாட்டில் உருவாகி உள்ள வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ற வகையில் திறனோடு இருக்கும் உழைப்பாளிகள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதை ஆராய்வதற்காக ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.
இங்கிலாந்தில் 75 சதவீதம் பேரும், ஜெர்மனியில் 80 சதவீதம் பேரும் உள்ளனர். ஆனால், இந்தியாவில் இத்தகைய திறன் படைத்த உழைப்பாளர்கள் 2 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளனர் என்கிறார் மத்திய அரசின் தேசியத் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ள திலிப் செனாய்.
இந்தியாவின் முயற்சிகள்
2014-ம் ஆண்டின் சுதந்திர தினத்தில் பிரதமரின் உரையிலும் இந்தப் பிரச்சினை இடம்பெற்றது. “இந்தியா நவீன நாடாக மாற வேண்டும் என்றால் திறன் மேம்பாடு மூலம் திறன் படைத்த இந்தியாவாக மாற வேண்டும்” என்றார் நரேந்திர மோடி.
நமது நாட்டின் தற்போதைய வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ற முறையில் இளைஞர்களைத் திறன்மிக்க முறையில் வளர்த்தெடுப்பதற்காகத் தேசியக் கொள்கையையும் மத்திய அரசு உருவாக்கியுள்ளது.தற்போது மத்திய அரசின் பல்வேறு துறைகளின் மூலமாக 70க்கும் மேற்பட்ட திட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஏறத்தாழ ஏழாயிரம் கோடி ரூபாய்கள் அளவுக்கு இதற்காகச் செலவழிக்கப்படுகிறது.
தனி அமைச்சகம்
இத்தகைய பயிற்சிகளின் தரத்தை மேம்படுத்தத் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு என்ற பெயரில் தனி அமைச்சகமே உருவாக்கப்பட்டுள்ளது. திறன் மிக்க உழைப்பின் தேவைக்கும் அது கிடைப்பதில் உள்ள பற்றாக்குறைக்குமான இடைவெளியை நிரப்புவதில் இளைஞர்களுக்குப் பயிற்சியளிப்பதில் இந்த அமைச்சகம் கவனத்தைச் செலுத்துகிறது. நாடு முழுவதும் இதற்கான பயிற்சி மையங்கள் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன.
1,500 கோடி ரூபாய் செலவில் 14 லட்சம் மாணவர்கள் உள்ளிட்ட 24 லட்சம் பேருக்குத் திறன் வளர்ச்சிக்கான பயிற்சிகள் அளிக்கப் பட்டு இந்த மையங்களின் மூலம் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்கிறது எம்ப்ளாய்மெண்ட் இதழ்.
திறன் பயிற்சிகள்
தேசியத் திறன் மேம்பாட்டுக்கான கழகம் கடந்த ஐந்தாண்டுகளில் 50 லட்சம் பேருக்குப் பயிற்சி அளித்துள்ளது. ஆனாலும், தேசியத் திறன் வளர்ச்சி பல்கலைக்கழகங்கள், பல்வகைத்திறன்களை வளர்க்கும் நிறுவனங்கள் என்ற பெயர்களில் புதுவகையான பல முயற்சிகள் வர உள்ளன. இவற்றின் மூலம் ஒவ்வொரு மாநிலத்துக்கும் உள்ள தனித்தன்மையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற வகையில் திறன்மிக்க உழைப்பாளர்களையும் சிறப்பான தொழில் முனைவோர்களையும் சமூகத்தில் அடித்தளத்தில் படைப்பாக்கத் திறன் கொண்ட புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்குபவர்களையும் ஊக்கப் படுத்தும் வகையிலான பயிற்சிகளை இத்தகைய நிறுவனங்கள் அளிக்கும். தனியார் மற்றும் வெளிநாடுகளின் அனுபவங்களையும் உதவிகளையும் பங்களிப்புகளையும் இந்தப் பணிக்காகப் பயன்படுத்திக்கொள்ள முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கும் மாணவரா நீங்கள்? அல்லது படித்து முடித்து வேலை வாய்ப்புகளைத் தேடிக்கொண்டு இருக்கும் இளைஞரா நீங்கள்? வேலைவாய்ப்புத் துறையில் நடைபெற்றுவரும் இத்தகைய மாற்றங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு உங்களின் அணுகுமுறையை அமைத்துக் கொண்டீர்கள் என்றால் உங்களின் தொழில் வாழ்க்கை சிறப்பானதாக அமையும்.

water source

2050 வாக்கில் 400 கோடி மக்கள் நீராதாரம் இல்லாத நிலையில் அவதிப்படுவார்கள்
ஒவ்வொரு நாளும் எவ்வளவு நீர் அருந்த வேண்டும்? கிட்டத்தட்ட இரண்டு லிட்டர் என்பது சரியானதுபோல் தோன்றுகிறது அல்லவா? உங்கள் உடலில் அதிக அளவுக்கு நீரிழப்பு ஏற்பட்டால், ஏற்படக்கூடும் என்று நீங்கள் நினைக்கும் பிரச்சினைகளையெல்லாம் ஒதுக்கித் தள்ளுவதற்காக உங்கள் அலுவலகத்தில் உங்கள் மேசைக்கு அருகே ஒரு தண்ணீர் பாட்டிலை வைத்துக்கொண்டு அவ்வப்போது ஒரு மடக்கு என்று நாள் முழுக்கக் குடிக்கலாமல்லவா?
பிரிட்டனின் பொதுமருத்துவர்களிடையே தேசிய நீரூட்ட மையம் சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. அந்த மருத்துவர்களிடம் சிகிச்சைக்காக வருபவர்களில் ஐந்தில் ஒருவர் களைப்பு, தலைவலி, கவனச் சிதறல் போன்றவற்றால் அவதியுறுவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். போதுமான அளவு நீர் அருந்தாததால் ஏற்படும் பிரச்சினைகள் என்று இவை கருதப்படுகின்றன. தேசிய நீரூட்ட மையம் என்பது பாட்டில் தண்ணீர் நிறுவனங்களின் கூட்டமைப்பு என்ற தகவல், பொருட்படுத்த வேண்டாத தகவலாக நாம் விட்டுவிட முடியாது. நாம் எவ்வளவு குறைவாக நீர் அருந்துகிறோம் என்பதுகுறித்து நம்மைக் கவலையுறச் செய்வது அவர்களது தொழிலுக்கு முக்கியமல்லவா! அதே நேரத்தில் நிறையத் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது என்று சொல்லும் எளிய அறிவுரைக்கு எதிராக வாதிடுவது அவ்வளவு எளிதல்ல.
தினமும் இரண்டு லிட்டர்?
துரதிர்ஷ்டவசமாக, இந்த எளிய அறிவுரையை நிரூபிக்கும்படியான வலுவான அறிவியல் ஆதாரங்கள் ஏதும் இல்லை. ‘தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர்’ என்ற தாரக மந்திரம் அறிவுபூர்வமான யூகமாக மட்டுமே இருக்க முடியும். முதலாவதாக, நாம் உட்கொள்ளும் அனைத்திலிருந்தும் நமக்கு நீர் கிடைக்கிறது - காபி, பழச்சாறு, பியர், சாப்பாடு. அதனால் நமது தினசரி அளவைப் பின்பற்றுவதற்காகத் தினமும் இரண்டு லிட்டர் தண்ணீரை ‘மடக் மடக்’கென்று குடிக்கத் தேவையே இல்லை. மிக முக்கியமாக, நமது உடலின் நீர் அளவை நிலையாக வைத்திருப்பது எப்படி என்று நம் உடலுக்குத் தெரியும். அதிக அளவில் நாம் தண்ணீர் குடித்தால், தேவைக்கு மிஞ்சிய நீரை நமது சிறுநீரகங்கள் வெளியேற்றிவிடும். போதுமான அளவு நீரை உட்கொள்ளவில்லையென்றால், நமது உடல் முடிந்தவரை சமாளித்துக்கொள்ளும், நமக்குத் தாகம் எடுக்கும் அதே வேளையில், குறைந்த அளவே சிறுநீர் கழிப்போம்.
நீரிழப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டாலோ, வெப்பமான இடத்தில் நாம் இருந்தாலோ, மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் பாதி தூரம் வந்துவிட்டாலோ தவிர, நாம் நீரைப் பற்றி அதிகமாகக் கவலைப்படத் தேவையில்லை. லிட்டர் லிட்டராகத் தினமும் தண்ணீர் குடித்தால் மிகவும் நல்லது என்ற கருத்து, நல்ல நோக்கத்தில் சொல்லப்பட்டாலும்கூட, சற்றே அர்த்தமற்றதுதான். ‘ஆக்ஸிஜன் நல்லது’ என்பதால் தினமும் வழக்கத்தைவிட அதிக அளவில் ஆக்ஸிஜனைச் சுவாசிக்கலாமா?
நீருடன் நமக்கு நெருக்கமான உயிரியல் உறவு இருக்கிறது. நம் உடலில் மூன்றில் ஒரு பங்கு நீர்தான். நமது செல்களின் அமைப்புகளிலும் செயல்பாடுகளிலும் நீரும் நேரடிப் பங்கேற்பாளரே. புரதங்களும் டிஎன்ஏவும் முறையாக இயங்கும்படி செய்வது, ஆற்றலையும் ஊட்டச்சத்துக்களையும் கடத்துவது போன்ற செயல்களை நீர் புரிகிறது. இந்தச் சமநிலையைப் பராமரிப்பது மிகவும் அவசியம். ஆனால், மனிதர் - நீர் உறவு என்றால் நம் மனதில் முதன்மையாகத் தோன்ற வேண்டியது இதுவல்ல.
தண்ணீராய் செலவழியும் நீர்
நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் நீர் செலவிடப்பட்டிருக்கிறது. உணவுப் பயிர்களுக்கு நீர் வேண்டும், ஆடை தயாரிக்க, அலுவலகங்கள், வீடுகள் கட்ட, கார் தயாரிக்க மற்றும் நாம் உறவு கொள்ளும் அனைத்தையும் உருவாக்க, நீர் மிகவும் அவசியம். நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் பெரும்பாலான நீரை நாம் கண்ணால் காணவோ, தொடவோ மாட்டோம். ஒரு கிலோ மாட்டிறைச்சியை உருவாக்க 16,000 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. ஒரு டம்ளர் தேநீருக்கு 36 லிட்டர் நீர்; ஒரு தாளுக்கு 10 லிட்டர் நீர்; நமது மடிக்கணினியில் இருக்கும் மைக்ரோசிப்புகளில் ஒன்றை உருவாக்க 30 லிட்டர் நீர் தேவைப்படுகிறது.
ஒரு கிலோ பருத்தி உற்பத்தியில் 10,000 லிட்டர் நீர் சராசரியாகச் செலவிடப்பட்டிருக்கிறது. இந்தக் கணக்கு இடத்துக்கு இடம் மாறுபடும். இந்தியாவில் ஒரு கிலோ பருத்திக்கு 22,500 லிட்டர் நீர் செலவாகிறது. இதுதவிர, வீட்டில் ஒரு தடவை தூவல்நீரில் குளித்தால் 190 லிட்டர் நீர் செலவாகும். பல் துலக்கும்போது 10 லிட்டர் நீரும், கழிப்பறையில் 10-லிருந்து 30 லிட்டர் நீரும் செலவாகிறது.
புதுப்புது வழிகள்
பூமியின் மேற்பரப்பில் 150 கோடி கன கிலோமீட்டர் நீர் இருந்தாலும் அதில் 1 சதவீதத்துக்கும் குறைவான நீரே நமக்குப் பயன்படுகிறது. மீதமுள்ளவையெல்லாம் உப்பு நீராகவோ, துருவங்களில் பனிக்கட்டிகளில் உறைந்தோ இருக்கிறது. இந்தச் சிறிய அளவு நீரை நம்மோடு இந்த உலகத்தில் இருக்கும் தாவரங்கள், விலங்குகள் போன்றவற்றோடு பகிர்ந்துகொண்டாக வேண்டும். மனிதர்கள் விவசாயத்தை மேற்கொள்ளத் தொடங்கியதிலிருந்து, அதாவது 12,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து, மனிதர்கள் வளர்ந்துவரும் தங்கள் நாகரிகங்களைக் கட்டமைப்பதற்காக நீரை வீணடிப்பதில் புதுப்புது வழிகளைக் கண்டறிந்திருக்கிறார்கள். நதியின் போக்கைத் திருப்பியும், அதிகரித்துக்கொண்டே வந்த மக்கள்தொகையின் தேவைக்கு ஈடுகொடுப்பதற்கான உணவுப் பயிர்களை வளர்ப்பதற்காக நீண்ட தொலைவுக்கு நீரை அனுப்பியும்தான் நகரங்களும் சாம்ராஜ்யங்களும் எழுப்பப்பட்டிருக்கின்றன. கி.மு. 6000-த்தில் ஒட்டுமொத்த உலகின் மக்கள் தொகையே 10 லட்சம்தான். தண்ணீரை அப்போது வீணடித்ததில் ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால், இப்போது பூமியில் 700 கோடி மக்கள் அதே அளவிலான நீர் வளத்துக்காக அடித்துக்கொள்கிறார்கள்.
தண்ணீரை அதிக அளவில் வீணடிப்பது வளர்ச்சியடைந்த நாடுகளில்தான் அதிகம். சராசரியாக ஒவ்வொரு அமெரிக்கரும் தினமும் 575 லிட்டர் நீரைப் பயன்படுத்துகிறார். ஐரோப்பியர்கள் 250 லிட்டர் நீரைப் பயன்படுத்துகிறார்கள். வளர்ந்துவரும் நாடுகளில் உள்ள 100 கோடி மக்களுடன் இதையெல்லாம் ஒப்பிட்டுப் பாருங்கள். அவர்கள் ஒரு நாளைக்குச் சராசரியாக 19 லிட்டருக்கும் குறைவாகவே பயன்படுத்துகிறார்கள். இதைவிட இரண்டு மடங்கு மக்களோ அடிப்படைச் சுகாதார வசதிகளைப் பெறக்கூட வழியற்றவர்கள்.
பருவநிலை மாற்றம் காரணமாக உலகெங்கும் அதிகரித்துவரும் வெப்பநிலையால் விவசாய நிலங்கள் பெருமளவு பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. நீராதாரங்கள் குறைந்துகொண்டே வருவதைச் சமாளிக்க முடியாமல், ஏழை நாடுகளில் உள்ளவர்கள் திண்டாட்டத்துக்கு உள்ளாவார்கள். இந்தியாவில் தற்போது கடும் வெயிலுக்கு நாடு முழுவதும் 1,800 பேர் பலியாகியிருக்கிறார்கள். இதில் பலியானவர்களெல்லாம் பெரும்பாலும் சிறுவர்கள், முதியோர், மற்றும் ஏழைகளே. நீர்த் தட்டுப்பாடு வெப்பத்தின் கடுமையையும், வெப்பத்தின் கடுமை நீர்த் தட்டுப்பாட்டையும் தீவிரப்படுத்தியிருக்கின்றன.
2050 வாக்கில் 50 கோடி மக்கள் நீராதாரம் இன்றி பாதிக்கப்படுவார்கள் என்று 1995-ல் ஐ.நா. கணித்தது. இந்தக் கணிப்பை 2005-ல் ஐ.நா. மறு ஆய்வுக்கு உட்படுத்தி அந்த எண்ணிக்கையை 400 கோடியாக மாற்றியது. இந்த உலகத்தைக் கட்டமைக்க நீரைப் பயன்படுத்தியிருக்கிறோம். ஒட்டுமொத்த மனித நாகரி கத்தின் வரலாற்றைப் பற்றிய நினைவில்லாமல் அதை வீணடித்திருக்கிறோம். ஏதும் நடக்காததுபோல் தப்பித்துக்கொள்ளவும் பார்க்கிறோம். அந்த யுகத்தின் இறுதியை நோக்கி இப்போது ஓடிக்கொண்டிருக்கிறோம். நம் உடல்கள் அவற்றின் நீரைச் சமாளித்துக்கொள்வதால் நீர் என்ற விலைமதிப்பில்லா ஆதாரத்தைப் பற்றி யோசிக்கவே நமக்கு அவகாசமில்லாமல் போய்விட்டது. துரதிர்ஷ்டவசமாக, மனித சமூகங்களுக்கு அப்படிப்பட்ட சொகுசு இனியும் கிடைக்காது.
- அலோக் ஜா
‘தி கார்டியன்’ இதழின் முன்னாள் செய்தியாளர், ஐடிவி-நியூஸ் சேனலின் அறிவியலுக்கான செய்தித் தொடர்பாளர்,
‘தி வாட்டர் புக்: தி எக்ஸ்ட்ரார்டினரி ஸ்டோரி ஆஃப் அவர் மோஸ்ட் ஆர்டினரி சப்ஸ்டன்ஸ்’ நூலின் ஆசிரியர்.
‘தி கார்டியன்’, தமிழில்: ஆசை

water source

2050 வாக்கில் 400 கோடி மக்கள் நீராதாரம் இல்லாத நிலையில் அவதிப்படுவார்கள்
ஒவ்வொரு நாளும் எவ்வளவு நீர் அருந்த வேண்டும்? கிட்டத்தட்ட இரண்டு லிட்டர் என்பது சரியானதுபோல் தோன்றுகிறது அல்லவா? உங்கள் உடலில் அதிக அளவுக்கு நீரிழப்பு ஏற்பட்டால், ஏற்படக்கூடும் என்று நீங்கள் நினைக்கும் பிரச்சினைகளையெல்லாம் ஒதுக்கித் தள்ளுவதற்காக உங்கள் அலுவலகத்தில் உங்கள் மேசைக்கு அருகே ஒரு தண்ணீர் பாட்டிலை வைத்துக்கொண்டு அவ்வப்போது ஒரு மடக்கு என்று நாள் முழுக்கக் குடிக்கலாமல்லவா?
பிரிட்டனின் பொதுமருத்துவர்களிடையே தேசிய நீரூட்ட மையம் சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. அந்த மருத்துவர்களிடம் சிகிச்சைக்காக வருபவர்களில் ஐந்தில் ஒருவர் களைப்பு, தலைவலி, கவனச் சிதறல் போன்றவற்றால் அவதியுறுவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். போதுமான அளவு நீர் அருந்தாததால் ஏற்படும் பிரச்சினைகள் என்று இவை கருதப்படுகின்றன. தேசிய நீரூட்ட மையம் என்பது பாட்டில் தண்ணீர் நிறுவனங்களின் கூட்டமைப்பு என்ற தகவல், பொருட்படுத்த வேண்டாத தகவலாக நாம் விட்டுவிட முடியாது. நாம் எவ்வளவு குறைவாக நீர் அருந்துகிறோம் என்பதுகுறித்து நம்மைக் கவலையுறச் செய்வது அவர்களது தொழிலுக்கு முக்கியமல்லவா! அதே நேரத்தில் நிறையத் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது என்று சொல்லும் எளிய அறிவுரைக்கு எதிராக வாதிடுவது அவ்வளவு எளிதல்ல.
தினமும் இரண்டு லிட்டர்?
துரதிர்ஷ்டவசமாக, இந்த எளிய அறிவுரையை நிரூபிக்கும்படியான வலுவான அறிவியல் ஆதாரங்கள் ஏதும் இல்லை. ‘தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர்’ என்ற தாரக மந்திரம் அறிவுபூர்வமான யூகமாக மட்டுமே இருக்க முடியும். முதலாவதாக, நாம் உட்கொள்ளும் அனைத்திலிருந்தும் நமக்கு நீர் கிடைக்கிறது - காபி, பழச்சாறு, பியர், சாப்பாடு. அதனால் நமது தினசரி அளவைப் பின்பற்றுவதற்காகத் தினமும் இரண்டு லிட்டர் தண்ணீரை ‘மடக் மடக்’கென்று குடிக்கத் தேவையே இல்லை. மிக முக்கியமாக, நமது உடலின் நீர் அளவை நிலையாக வைத்திருப்பது எப்படி என்று நம் உடலுக்குத் தெரியும். அதிக அளவில் நாம் தண்ணீர் குடித்தால், தேவைக்கு மிஞ்சிய நீரை நமது சிறுநீரகங்கள் வெளியேற்றிவிடும். போதுமான அளவு நீரை உட்கொள்ளவில்லையென்றால், நமது உடல் முடிந்தவரை சமாளித்துக்கொள்ளும், நமக்குத் தாகம் எடுக்கும் அதே வேளையில், குறைந்த அளவே சிறுநீர் கழிப்போம்.
நீரிழப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டாலோ, வெப்பமான இடத்தில் நாம் இருந்தாலோ, மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் பாதி தூரம் வந்துவிட்டாலோ தவிர, நாம் நீரைப் பற்றி அதிகமாகக் கவலைப்படத் தேவையில்லை. லிட்டர் லிட்டராகத் தினமும் தண்ணீர் குடித்தால் மிகவும் நல்லது என்ற கருத்து, நல்ல நோக்கத்தில் சொல்லப்பட்டாலும்கூட, சற்றே அர்த்தமற்றதுதான். ‘ஆக்ஸிஜன் நல்லது’ என்பதால் தினமும் வழக்கத்தைவிட அதிக அளவில் ஆக்ஸிஜனைச் சுவாசிக்கலாமா?
நீருடன் நமக்கு நெருக்கமான உயிரியல் உறவு இருக்கிறது. நம் உடலில் மூன்றில் ஒரு பங்கு நீர்தான். நமது செல்களின் அமைப்புகளிலும் செயல்பாடுகளிலும் நீரும் நேரடிப் பங்கேற்பாளரே. புரதங்களும் டிஎன்ஏவும் முறையாக இயங்கும்படி செய்வது, ஆற்றலையும் ஊட்டச்சத்துக்களையும் கடத்துவது போன்ற செயல்களை நீர் புரிகிறது. இந்தச் சமநிலையைப் பராமரிப்பது மிகவும் அவசியம். ஆனால், மனிதர் - நீர் உறவு என்றால் நம் மனதில் முதன்மையாகத் தோன்ற வேண்டியது இதுவல்ல.
தண்ணீராய் செலவழியும் நீர்
நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் நீர் செலவிடப்பட்டிருக்கிறது. உணவுப் பயிர்களுக்கு நீர் வேண்டும், ஆடை தயாரிக்க, அலுவலகங்கள், வீடுகள் கட்ட, கார் தயாரிக்க மற்றும் நாம் உறவு கொள்ளும் அனைத்தையும் உருவாக்க, நீர் மிகவும் அவசியம். நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் பெரும்பாலான நீரை நாம் கண்ணால் காணவோ, தொடவோ மாட்டோம். ஒரு கிலோ மாட்டிறைச்சியை உருவாக்க 16,000 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. ஒரு டம்ளர் தேநீருக்கு 36 லிட்டர் நீர்; ஒரு தாளுக்கு 10 லிட்டர் நீர்; நமது மடிக்கணினியில் இருக்கும் மைக்ரோசிப்புகளில் ஒன்றை உருவாக்க 30 லிட்டர் நீர் தேவைப்படுகிறது.
ஒரு கிலோ பருத்தி உற்பத்தியில் 10,000 லிட்டர் நீர் சராசரியாகச் செலவிடப்பட்டிருக்கிறது. இந்தக் கணக்கு இடத்துக்கு இடம் மாறுபடும். இந்தியாவில் ஒரு கிலோ பருத்திக்கு 22,500 லிட்டர் நீர் செலவாகிறது. இதுதவிர, வீட்டில் ஒரு தடவை தூவல்நீரில் குளித்தால் 190 லிட்டர் நீர் செலவாகும். பல் துலக்கும்போது 10 லிட்டர் நீரும், கழிப்பறையில் 10-லிருந்து 30 லிட்டர் நீரும் செலவாகிறது.
புதுப்புது வழிகள்
பூமியின் மேற்பரப்பில் 150 கோடி கன கிலோமீட்டர் நீர் இருந்தாலும் அதில் 1 சதவீதத்துக்கும் குறைவான நீரே நமக்குப் பயன்படுகிறது. மீதமுள்ளவையெல்லாம் உப்பு நீராகவோ, துருவங்களில் பனிக்கட்டிகளில் உறைந்தோ இருக்கிறது. இந்தச் சிறிய அளவு நீரை நம்மோடு இந்த உலகத்தில் இருக்கும் தாவரங்கள், விலங்குகள் போன்றவற்றோடு பகிர்ந்துகொண்டாக வேண்டும். மனிதர்கள் விவசாயத்தை மேற்கொள்ளத் தொடங்கியதிலிருந்து, அதாவது 12,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து, மனிதர்கள் வளர்ந்துவரும் தங்கள் நாகரிகங்களைக் கட்டமைப்பதற்காக நீரை வீணடிப்பதில் புதுப்புது வழிகளைக் கண்டறிந்திருக்கிறார்கள். நதியின் போக்கைத் திருப்பியும், அதிகரித்துக்கொண்டே வந்த மக்கள்தொகையின் தேவைக்கு ஈடுகொடுப்பதற்கான உணவுப் பயிர்களை வளர்ப்பதற்காக நீண்ட தொலைவுக்கு நீரை அனுப்பியும்தான் நகரங்களும் சாம்ராஜ்யங்களும் எழுப்பப்பட்டிருக்கின்றன. கி.மு. 6000-த்தில் ஒட்டுமொத்த உலகின் மக்கள் தொகையே 10 லட்சம்தான். தண்ணீரை அப்போது வீணடித்ததில் ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால், இப்போது பூமியில் 700 கோடி மக்கள் அதே அளவிலான நீர் வளத்துக்காக அடித்துக்கொள்கிறார்கள்.
தண்ணீரை அதிக அளவில் வீணடிப்பது வளர்ச்சியடைந்த நாடுகளில்தான் அதிகம். சராசரியாக ஒவ்வொரு அமெரிக்கரும் தினமும் 575 லிட்டர் நீரைப் பயன்படுத்துகிறார். ஐரோப்பியர்கள் 250 லிட்டர் நீரைப் பயன்படுத்துகிறார்கள். வளர்ந்துவரும் நாடுகளில் உள்ள 100 கோடி மக்களுடன் இதையெல்லாம் ஒப்பிட்டுப் பாருங்கள். அவர்கள் ஒரு நாளைக்குச் சராசரியாக 19 லிட்டருக்கும் குறைவாகவே பயன்படுத்துகிறார்கள். இதைவிட இரண்டு மடங்கு மக்களோ அடிப்படைச் சுகாதார வசதிகளைப் பெறக்கூட வழியற்றவர்கள்.
பருவநிலை மாற்றம் காரணமாக உலகெங்கும் அதிகரித்துவரும் வெப்பநிலையால் விவசாய நிலங்கள் பெருமளவு பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. நீராதாரங்கள் குறைந்துகொண்டே வருவதைச் சமாளிக்க முடியாமல், ஏழை நாடுகளில் உள்ளவர்கள் திண்டாட்டத்துக்கு உள்ளாவார்கள். இந்தியாவில் தற்போது கடும் வெயிலுக்கு நாடு முழுவதும் 1,800 பேர் பலியாகியிருக்கிறார்கள். இதில் பலியானவர்களெல்லாம் பெரும்பாலும் சிறுவர்கள், முதியோர், மற்றும் ஏழைகளே. நீர்த் தட்டுப்பாடு வெப்பத்தின் கடுமையையும், வெப்பத்தின் கடுமை நீர்த் தட்டுப்பாட்டையும் தீவிரப்படுத்தியிருக்கின்றன.
2050 வாக்கில் 50 கோடி மக்கள் நீராதாரம் இன்றி பாதிக்கப்படுவார்கள் என்று 1995-ல் ஐ.நா. கணித்தது. இந்தக் கணிப்பை 2005-ல் ஐ.நா. மறு ஆய்வுக்கு உட்படுத்தி அந்த எண்ணிக்கையை 400 கோடியாக மாற்றியது. இந்த உலகத்தைக் கட்டமைக்க நீரைப் பயன்படுத்தியிருக்கிறோம். ஒட்டுமொத்த மனித நாகரி கத்தின் வரலாற்றைப் பற்றிய நினைவில்லாமல் அதை வீணடித்திருக்கிறோம். ஏதும் நடக்காததுபோல் தப்பித்துக்கொள்ளவும் பார்க்கிறோம். அந்த யுகத்தின் இறுதியை நோக்கி இப்போது ஓடிக்கொண்டிருக்கிறோம். நம் உடல்கள் அவற்றின் நீரைச் சமாளித்துக்கொள்வதால் நீர் என்ற விலைமதிப்பில்லா ஆதாரத்தைப் பற்றி யோசிக்கவே நமக்கு அவகாசமில்லாமல் போய்விட்டது. துரதிர்ஷ்டவசமாக, மனித சமூகங்களுக்கு அப்படிப்பட்ட சொகுசு இனியும் கிடைக்காது.
- அலோக் ஜா
‘தி கார்டியன்’ இதழின் முன்னாள் செய்தியாளர், ஐடிவி-நியூஸ் சேனலின் அறிவியலுக்கான செய்தித் தொடர்பாளர்,
‘தி வாட்டர் புக்: தி எக்ஸ்ட்ரார்டினரி ஸ்டோரி ஆஃப் அவர் மோஸ்ட் ஆர்டினரி சப்ஸ்டன்ஸ்’ நூலின் ஆசிரியர்.
‘தி கார்டியன்’, தமிழில்: ஆசை

திங்கள், 1 ஜூன், 2015

மருத்துவம் மற்றும் பொது சுகாதாரம் -- கல்வி மற்றும் அறிவியல்

மருத்துவம் மற்றும் பொது சுகாதாரம்


உலகில் வாழும் மக்களில் 17% பேர் இந்தியாவில் வாழ்கின்றனர். ஆனால், பல்வேறு நோய்களால் வாழும் மக்களின் எண்ணிக்கையை எடுத்துக்கொண்டாலோ, மக்கள்தொகை விகிதத்தைவிட அது அதிகம். உதாரணமாக, தொழுநோயாளிகளில் 68%, காசநோயாளிகளில் 30% பேர் இந்தியர்கள். பேறுகாலத்தில் இறக்கும் தாய்மார்களில் 20% பேர் இந்தியாவில்தான் இறக்கின்றனர். தடுப்பூசிகளின் மூலம் தடுக்கப்படக்கூடிய நோய்களால் உலகில் இறக்கும் குழந்தைகளில் 26% குழந்தைகள் இந்தியக் குழந்தைகள். ஒவ்வொரு நாளும் இங்கு 160 பெண்கள் கர்ப்பம் தொடர்பான காரணங்களால் இறக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இங்கு 7.6 லட்சம் பச்சிளங்குழந்தைகள் பிறந்த 28 நாட்களுக்குள்ளேயே இறந்துவிடுகின்றன. அதேசமயம், இது உலக ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கினர் வாழும் நாடு. ஆக, இந்திய அரசு சுகாதாரத் துறையில் செயல்பட வேண்டிய வேகமும் தீவிரமும் அதிகம். ஏழை எளிய மக்களின் மருத்துவத் தேவைகளை நிறைவுசெய்ய வேண்டும் எனில், அதற்கு அதிக நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்வது அவசியம்.
பாஜக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் சுகாதாரத் துறையைப் பற்றி நிறையப் பேசியிருந்தது. ஆனால், செய்ததோ குறைவு. முன்னதாக, மன்மோகன் சிங் அரசு 2014 -15 இடைக்கால பட்ஜெட்டில் மக்கள் நல்வாழ்வுத் துறைக்காக ஒதுக்கிய நிதியில் 20%-ஐ (ரூ. 2,500 கோடியை) ஆட்சிக்கு வந்ததுமே குறைத்தது மோடி அரசு. பின்னர், அது உருவாக்கிய பட்ஜெட்டிலும் ரூ. 6,000 கோடியைக் குறைத்தது. 2014-15-ல் மக்கள் நல்வாழ்வுத் துறைக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ. 39,238 கோடி. 2015-16-ல் இது ரூ. 33,152 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது நமது சுகாதாரத் துறைக்குப் பெரும் பாதிப்பை உருவாக்கும்.
ஒருபுறம், இப்படிப் பொதுமக்களின் சுகாதாரத்தில் தன்னுடைய பங்களிப்பைக் குறைத்துக்கொள்ளும் அரசு, மறுபுறம் மக்கள் மருத்துவத்துக்காகச் செலவிடும் தொகையும் உயர வழிவகுக்கிறது. அதாவது, மருத்துவத்தைக் காப்பீட்டு நிறுவனங்களின் கைகளில் ஒப்படைக்கும் நடவடிக்கைகளைத் தூக்கிப் பிடிக்கிறது. உதாரணமாக, முன்னதாக, ரூ.15,000 பிரிமியம் செலுத்தினாலே, மருத்துவக் காப்பீட்டுக்கான வருமான வரிவிலக்கு வழங்கப்பட்டது. இப்போதோ அது ரூ. 25,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. பிரிமியத் தொகை அதிகரிக்கவும் மக்கள் கூடுதல் செலவை நோக்கி நகரவும் இது வழிவகுக்கும். இதேபோல, தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ. திட்டத்தை ஒழித்து, அதற்கு மாற்றாக தனியார் காப்பீட்டை ஊக்கப்படுத்த மத்திய அரசு முயல்கிறது (1.86 கோடி தொழிலாளர்களும் அவர்களைச் சார்ந்த 7.21 கோடிப் பேரும் பயனடையும் திட்டம் இ.எஸ்.ஐ.).
மோடி அரசின் `தேசிய நல்வாழ்வுக் கொள்கை 2015' மக்கள் விரோதக் கொள்கைகள் பலவற்றைக் கொண்டிருக்கிறது. உதாரணமாக, அரசாங்கமே நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்துவதற்குப் பதில், மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான நிதியை அதிகரிக்க தனித் தீர்வை வரி (செஸ்) வசூலிக்க இது பரிந்துரைக்கிறது. இதெல்லாம் எரியும் பிரச்சினையில் எண்ணெய் ஊற்றும் செயலாக அமையும்.
அதேபோல, மருந்து விலை நிர்ணய தேசிய ஆணையத்தின் விலை நிர்ணய அதிகாரம் பறிக்கப் பட்டிருக்கிறது மிகத் தவறான முடிவு. 509 மருந்துகளின் விலையை உயர்த்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது மக்களைப் பெரும் பாதிப்பில் தள்ளும். தொடர்ந்து, இத்துறையில் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சாதகமாக வர்த்தகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர முயல்வது, நமது மருந்து உற்பத்தி நிறுவனங்களைப் பெரிதும் பாதிக்கும். இந்தியாவில், 70%-க்கும் மேலான மருத்துவ உபகரணங்களை ரூ. 10 கோடிக்கும் குறைவான முதலீட்டில் இயங்கும் சிறிய நிறுவனங்களே உற்பத்தி செய்கின்றன. இந்நிலையில், மருத்துவ உபகரணங்கள் உற்பத்தித் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவு நமது இந்திய நிறுவனங்களை ஒழித்துக்கட்டுவதோடு, இத்துறையைப் பெருநிறுவனங்களின் கைகளுக்குக் கொண்டுசென்றுவிடும்.
இந்தியாவில் 80% புறநோயாளிகள் சேவையும் 60% உள்நோயாளிகள் சேவையும் தனியார் மருத்துவத் துறையால்தான் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், மூன்றாம் நிலை உயர் சிறப்பு மருத்துவ சிகிச்சைகளை முழுமையாகத் தனியார்மயமாக்கிடவும், அரசு மருத்துவ மனைகளின் பல்வேறு சேவைகளை வெளிக்கொணர்வு மூலமாக வழங்கவும் பாஜக அரசின் தேசிய நலவாழ்வுக் கொள்கை 2015 வலியுறுத்துகிறது. கூடவே, இப்போது 14% ஆக இருக்கும் தனியார் மருத்துவத் துறையின் வளர்ச்சியை அடுத்த 10 ஆண்டுகளில் 21% ஆக அதிகரிக்க அரசு விரும்புவதாகச் சொல்கிறார்கள். இதன் விளைவுகளையெல்லாம் நினைத்தால் பெரும் அச்சமும் கவலையும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
மோடி அரசின் முதலாண்டில் சுகாதாரத் துறையில் நடந்திருக்கும் சந்தோஷமான செயல்பாடு என்றால், அனைத்து மாநிலங்களிலும் ‘எய்ம்ஸ்’ போன்ற மருத்துவமனைகளைத் தொடங்குவதற்கான நடவடிக்கையைச் சொல்லலாம். எண்ணற்ற மக்களுக்கு இது நல்வாழ்வு அளிக்கும். இந்த மருத்துவமனைகளில் ஒன்று தமிழகத்தில் அமையவிருப்பது இரட்டை மகிழ்ச்சி தருவது!
- டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்,
பொதுச் செயலாளர், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம்,
தொடபுக்கு: daseindia2011@gmail.com

************

பாஜகவின் 2014 தேர்தல் அறிக்கையில் எனக்குப் பிடித்திருந்த ஒரே அம்சம், அதன் கல்வி மற்றும் அறிவியல் பற்றிய பார்வைதான்.
40 பக்க அறிக்கையில் அது கல்விக்கும் அறிவியலுக்கும் 5 பக்கங்கள் ஒதுக்கியிருந்தது. என்ன செய்யப்போகிறோம் என்பதைச் சற்று விரிவாகவே சொல்லியிருந்தது. குறிப்பாக, கல்வியைப் பொறுத்த அளவில். மூட நம்பிக்கைகள், வன்முறை வெறுப்பு போன்றவற்றிலிருந்து விடுபட்டுச் சிந்திக்க வேண்டிய தேவையை அது அறிவுறுத்தியிருந்தது.
நமது நாட்டின் சொத்து அதன் இளைஞர்களும் குழந்தை களும்தான். அவர்களுக்குத் தடையற்ற, தரமான, அதிகச் செலவெடுக்காத கல்வி மிகவும் அவசியம் என்ற தெளிவு அறிக்கையில் இருந்தது. தொழில்கல்வியை நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என்ற உறுதிகொண்டிருக்கிறோம் என்றும் பாஜக அறிவித்திருந்தது. அதற்காக இணையத்தின் மூலம் படிப்பதற்கான வசதிகளை உருவாக்குவோம் என்று அறிக்கை கூறியது. இதேபோல, வறுமையை ஒழிக்க, நகரத்துக்கும் கிராமத்துக்கும் இடையே உள்ள வேற்றுமையை அழிக்க, உணவு உற்பத்தியைப் பெருக்க, நோய்களின் தாக்கத்தைக் குறைக்க அறிவியலைப் பயன்படுத்துவோம்; இளைஞர்களை அறிவியல் பக்கம் திருப்புவோம்; உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சிக் கூடங்களை உருவாக்குவோம் என்றெல்லாம் தேர்தல் அறிக்கை சொன்னது.
ஒரு வருடத்தில் நடந்தது என்ன? ஸ்மிருதி இரானிக்கும் கல்வித் துறை வல்லுநர்களுக்கும் இடையே அடிக்கடி நடைபெறும் கத்திச் சண்டைகளைப் பற்றி நான் ஏதும் சொல்ல விரும்பவில்லை. ஆனால், இரானி கல்வித் துறையை மேம்படுத்தக் கேட்ட பணம் பட்ஜெட்டில் கிடைக்கவில்லை என்பதைப் புள்ளிவிவரங்கள் தெளிவாக்குகின்றன. கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு இந்த வருடம் சென்ற வருடத்தைவிட சுமார் ரூ. 13,700 கோடி குறைந்துவிட்டது. அனைவருக்கும் கல்வித் திட்டத்துக்கு 22% குறைப்பு; மதிய உணவுத் திட்டத்துக்கு 16.5% குறைப்பு; இடை நிலைக் கல்வித் திட்டத்துக்கு 29% குறைப்பு என்றால், உயர்நிலைக் கல்வித் திட்டத்துக்கு 48% குறைப்பு. சசி தரூர் தனது கட்டுரை ஒன்றில் அனைவருக்கும் கல்வித் திட்டத்துக்கு அமைச்சகம் கேட்ட தொகை ரூ. 50,000 கோடி; கிடைத்ததோ ரூ. 22,000 கோடி என்று குறிப்பிடுகிறார்.
இந்தியாவில் கல்வி நிலை மிகவும் மோசமாக இருக்கிறது என்பதற்கு எந்த ஆராய்ச்சியும் தேவையில்லை. பக்கத்தில் இருக்கும் அரசுப் பள்ளிக்குச் சென்று எட்டாம் வகுப்பு மாணவ - மாணவியரிடம் நான்கு வரிகள் அவர்களுக்குத் தெரிந்த மொழியில் எழுதச் சொல்லுங்கள். எளிய கணக்குகளைக் கொடுத்து விடை கேளுங்கள். அறிவியலிலும் சமூகவியலிலும் எளிய கேள்விகளைக் கேளுங்கள். 60% சதவீதத்தினர் தேற மாட்டார்கள். இது காலம் காலமாகப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கச் செய்ய வேண்டும், ஆனால் அவர்கள் எப்படிப் படிக்கிறார்கள், ஆசிரியர்கள் எப்படிச் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்பவற்றைப் பற்றி கண்டுகொள்ள வேண்டிய தேவையில்லை என்ற எண்ணத்தோடு அரசுகள் தொடர்ந்து இயங்கியதன் விளைவு. பல வருடங்களாகத் தொடர்ந்துவரும் வியாதியை ஒரு வருடத்தில் குணம் செய்துவிடலாம் என்று நினைப்பது முட்டாள்தனம். ஆனால், குணம் செய்ய முயற்சிகள் செய்யப்படுகின்றனவா என்பது அர்த்தமுள்ள கேள்வி.
மனிதவள மேம்பாட்டுத் துறையின் வலைதளத்தில் முயற்சி களுக்கான எந்தத் தடமும் கிடைக்கவில்லை. இதேபோல, பள்ளிகளில் தொழிற்கல்வியைத் துவங்குவதற்கும் தொழிற் கல்விக் கூடங்களை அமைப்பதற்குமான வழிமுறைகள் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. அவற்றுக்கான வேலைகளும் ஆமை வேகத்தில் நடைபெறுகின்றன. உயர் கல்வியைப் பொறுத்தவரையில், மத்தியப் பல்கலைக் கழகங்களைச் சீர் செய்ய வேண்டும் (அவை கட்டாயம் சீரமைக்கப்பட வேண்டும் என்பது உண்மை) என்ற சாக்கில், அவற்றின் உரிமைகளைப் பறித்துக்கொள்ள மத்திய அரசு முயற்சி செய்கிறது என்ற செய்தி வந்திருக்கிறது. இது உண்மையானால், மத்திய அரசு பல்கலைக்கழகங்களிலும் மாநிலப் பல்கலைக்கழகங்களைப் போல ஆமாம் சாமிகள் மிக விரைவில் பெருகிவிடுவார்கள்.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு மன்றத்தின் தலைமை இயக்குநர் பதவி ஓய்வுபெற்று ஒரு வருடத்துக்கு மேல் ஆகியும், இன்று வரை நிரந்தரத் தலைமை இயக்குநர் நியமிக்கப்படவில்லை. மேலும், ஆய்வு மன்றத்தின் கீழ் 39 ஆய்வுக் கூடங்கள் இயங்குகின்றன. இவற்றில் 12 ஆய்வுக் கூடங்களுக்கு இயக்குநர்கள் இல்லை. இதே போன்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமும் தலைவர் இல்லாமல் செயல்படுகிறது. இந்திய ஆணைக் குழுவின் அதிகாரி ஒருவர் இன்று அந்த நிறுவனத்தை இயக்குகிறார். இது அரசு அறிவியலாளர்கள் மீது எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. எனவே, இந்திய ஆராய்ச்சியாளர்களில் 40% வெளிநாட்டில் வேலை செய்கிறார்கள் என்ற புள்ளிவிவரம் நமக்கு எந்த வியப்பையும் தராது.
இவற்றுக்கெல்லாம் இடையில் சின்ன ஆறுதல், ஆறு மாநிலங்களில் மருத்துவ அறிவியல் நிறுவனங்கள் (தமிழகத்தில் மதுரையில்) அமைக்கப்படும் என்ற அறிவிப்பு, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் தொடர்பான கள சோதனைகளுக்கு இந்தியாவில் அளிக்கப்பட்டிருக்கும் அனுமதி போன்றவற்றைச் சொல்லலாம். மொத்தத்தில் உடைத்துச் சொல்ல வேண்டும் என்றால், கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சித் துறையில் அரசின் சாதனைகளைத் தேடத்தான் வேண்டியிருக்கிறது!
- பி.ஏ. கிருஷ்ணன், எழுத்தாளர்
‘புலிநகக்கொன்றை’, ‘கலங்கிய நதி’ ஆகிய நாவல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: tigerclaw@gmail.com

************************
வெளியுறவில் வெகு மும்முரமாகச் செயல்பட்ட ஒரு ஆண்டுக்குப் பிறகு, நரேந்திர மோடி அவரது முன்னவர் மன்மோகன் சிங் ஒருமுறை சொன்னதுபோல இந்த முடிவுக்கு வரக்கூடும்: “இந்தியா சிறப்பாகச் செயல்பட வேண்டு மென்று உலகம் எதிர்பார்க்கிறது. ஆனால், நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்களெல்லாம் நமது தாயகத்தில்தான் இருக்கின்றன.”
சர்வதேச உறவுகளையும் வெளியுறவுக் கொள்கையையும் இப்படிப் பார்ப்பது இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவம் குறித்து மதிப்பிட உதவுகிறது. சர்வதேச உறவு என்பதை ‘அரசுக்கும் அரசுக்கும் இடையிலான உறவு’ (அ-அ-உ), ‘மக்களுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு’ (ம-ம-உ), ‘தொழில் துறைக்கும் தொழில் துறைக்கும் இடையிலான உறவு’ (தொ-தொ-உ) என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
நாடுகளுக்கு இடையிலான உறவுகள் எப்படி இருக்கின்றன என்பதை இந்த மூன்று வகைகளைக் கொண்டு மதிப்பிடலாம். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு இந்த 3 பிரிவுகளிலும் உச்சத்தில் இருக்கிறது. முன்பு ரஷ்யாவுடன் இப்படிப்பட்ட உறவில் இந்தியா இருந்தது. 1970-களில் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நெருக்கமான அ.அ. உறவு இருந்தபோது, இந்த மூன்று பிரிவுகளிலுமே சோவியத் ஒன்றியம் உச்சத்தில் இருந்தது. இரு நாடுகளுக்கு இடையிலும் அ.அ. உறவு நன்றாக இருந்தாலும் தொ.தொ.உறவும் ம.ம. உறவும் தொடர்ந்து சரிவுக்குள்ளாயின. 1962-க்குப் பிறகு சீனாவுடன் 3 பிரிவுகளிலும் உறவு மிகவும் மோசமடைய ஆரம்பித்தது. கடந்த இரண்டு தசாப்தங்களிலும் அ.அ. உறவில் முன்னேற்றமடைய ஆரம்பித்தது. ஆனால், தொ.தொ. உறவில் ஏற்பட்ட படுவேகமான ஏற்றத்தால் மற்ற இரண்டு பிரிவுகளிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.
ஆசியாவின் புவியரசியலில் சீனாவின் நிலைகுறித்தும் எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுவதுகுறித்தும் இந்தியா சங்கட உணர்வின்றி இருக்கும்போதுதான் இந்தியா வுக்கும் சீனாவுக்கும் இடையிலான அ.அ. உறவு மேம்படும். இதைக் கணக்கிலெடுத்துக்கொண்டு பார்க்கும்போது, இந்திய-சீன உறவில் தொ.தொ. உறவும் ம.ம. உறவும் முதலில் மேம்படட்டும்; அதன் மூலம் இருதரப்பு உறவில் பெருமளவு நம்பிக்கை ஏற்படும் என்று நினைத்து, எல்லைப் பிரச்சினை கொஞ்ச காலம் காத்திருக்கட்டும் என்று மோடி முடிவுசெய்ததுபோல் தோன்றுகிறது.
இந்தியப் பொருளாதார மேம்பாட்டுக்கான களத்தை விரிவுபடுத்துவதும், அதற்கேற்ற பிராந்தியச் சூழ்நிலையை ஏற்படுத்துவதும் வெளியுறவுக் கொள்கையின் நோக்கங்கள் என்பதால், பரஸ்பரத் தன்மையற்ற ‘ஒருதரப்பு தாராளமய மாக்கல்’ என்ற அணுகுமுறையை சீனாவிடம் மோடி மேற்கொண்டார். கடந்த காலத்தில் இந்த அணுகுமுறை ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் இருந்த வளர்ச்சியடையாத நாடுகளிடையே மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. நல்லுறவு ஏற்படும் வகையில், பரஸ்பரம் நன்மை தரும் விதத்தில் ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் நிலையையும் அமைப்பு களையும் உருவாக்குவதே இந்தக் கொள்கையின் நோக்கம்.
மோடியின் நிர்வாகத்தையும் அவரது பொருளாதாரக் கொள்கையையும் பற்றி நேரெதிர்க் கருத்துகள் நிலவுகின்றன. அவரது விமர்சகர்கள் மதப் பிரிவினைவாதம், விவசாயிகளின் துயரம் போன்றவற்றைச் சுட்டிக்காட்டுகிறார்கள். அவரது ஆராதகர்களோ ஓரங்கட்டப்பட்ட ஒரு மேட்டிமைக்குழுவின் குற்றச்சாட்டுகளாகவே இவற்றைப் பார்க்கிறார்கள். உள்நாட்டுக் களத்தில் மோடியின் செயல்பாடுகளில் நன்மை தீமை இரண்டுமே கலந்து காணப்படுகின்றன. பொருளா தாரத்தில் முன்பைவிட நிச்சயம் முன்னேற்றம் காணப்படுகிறது. ‘இந்தியாவில் தயாரியுங்கள்’ என்பதற்குப் பதிலாக, ‘தூய்மை இந்தியா’ பிரச்சாரத்தைப் போலவே, ‘இந்தியாவில் தயாரித்து இந்தியாவை உருவாக்குவோம்’ என்ற கோஷத்துடன் ‘தேசத்தைக் கட்டமைப்போம்’ என்ற அறைகூவலை விடுத் திருந்தால் பிரதமரும் பொருளாதாரத்துடன் தொடர்புடைய அவரது அமைச்சர்களும் இன்னும் விரிவாகச் செயல் படுவதற்கான அரசியல் களம் கிடைத்திருக்கும்.
முதலீடு, சேமிப்பு போன்றவற்றை நோக்கியும், குடிமக்கள் அதிக அளவில் செலவு செய்யும் நிலையை நோக்கியும் பொருளாதாரம் நகர வேண்டியது அவசியம். எதிர்பார்ப்புகளெல்லாம் மிகவும் தீர்மானமான விதத்தில் நேர்மறையாக மாற வேண்டும் என்பதுதான் இதன் அர்த்தம். ஆகவே, ‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்’ என்ற கோஷத்தை நடைமுறையாக்குவதற்கு இன்னும் நிறைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மனிதர்கள் ரொட்டியினால் மட்டுமே வாழ்வதில்லை. நாடுகளும் அப்படியே. ஆகவே, பொருளாதாரத்தில் இந்தியா என்ன சாதிக்கிறது என்பது மட்டுமல்ல, உலக நாடுகளுட னான நம் உறவைத் தீர்மானிப்பது, உலகத்துக்கு இந்தியா என்ன சொல்கிறது என்பதும்தான். இந்தியா என்ற கருத்தாக் கத்தை சர்வதேசச் சமூகம் கொண்டாடுகிறது. இந்தியாவின் பொருளாதார எழுச்சி தவிர, மதச்சார்பின்மை, சுதந்திரச் சமூகம், பன்மைத்துவ ஜனநாயகம் ஆகியவற்றில் இந்தியா அடையும் வெற்றியும் இனம், நிறம், மதம் போன்ற பிரிவினை களால் துண்டாடப்பட்டிருக்கும் உலகத்தால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக, அரசு இனியும் தாமதிக்க முடியாது. அரசு முன்னே சென்றே ஆக வேண்டும், இந்தியப் பன்மைத்துவத்தை முன்பைவிட அதிகமாக உள்வாங்கிக் கொண்டு!
© ‘தி இந்து’ (ஆங்கிலம்), சுருக்கமாகத் தமிழில்: ஆசை
##########
புதுவெளிச்சக் கீற்றாக மலர்ந்திருக்கிறது மோடியின் முதலாண்டு ஆட்சி. இனி, வரப்போகும் நான்காண்டுகளுக்குத் தெளிவான கட்டியம் கூறுகிறது இந்த ஓராண்டு.
மன்மோகன் சிங்கின் பத்தாண்டு ஆட்சியின் முதல் குறைபாடு, யார் ஆட்சியில் இருக்கிறார், யார் கொள்கைகளை வகுக்கிறார், யார் தேசமென்னும் வண்டியின் ஓட்டுநர் என்ற தெளிவு இல்லாமல் இருந்ததுதான். முக்கியமான இலாகாக்கள் எவை எவை தங்களுக்கு வேண்டும் என்று கூட்டணிக் கட்சிகள் பேரம் பேசிப் பிடுங்கிக்கொண்டன. சோனியா காந்தியின் விசுவாசிகள், சீனியர் காங்கிரஸ்காரர்கள் மன்மோகன் சிங்கிடம் பல விஷயங்களைக் கலந்து ஆலோசிக்கவே இல்லை என்று மன்மோகன் சிங்கின் பிரதமர் அலுவலக அதிகாரிகளே எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொரு அமைச்சரும் ‘தன் இலாகாவின் பிரதமராக’ தன்னைக் கருதிக்கொண்டு, மன்மோகன் சிங்கின் அறிவுரைகளை முற்றாக மறுத்து, தாம் வைத்ததே சட்டம் என்று நடந்துகொண்டனர். குரூப் ஆஃப் மினிஸ்டர்ஸ் (ஜி.ஓ.எம்) என்ற சிறு அமைச்சர் குழுக்கள் கேபினெட் மற்றும் பிரதமர் கீழ் உள்ள அதிகாரங்களை ஹைஜாக் செய்துகொண்டன. பல துறைகளில் ஊழல் தலைவிரித்தாடியது. சில துறைகளில் அமைச்சர்கள் பணிக்கே வரவில்லை. இவை அனைத்தும் மோடியின் முதல் மாதத்துக்கு உள்ளாகவே சரிசெய்யப்பட்டுவிட்டன. பிரதமர் தான் தேசத்தை வழிநடத்துபவர் என்பது தெளிவானது. திறமை மிக்கவர்கள் அமைச்சர்கள் ஆக்கப்பட்டனர். இன்று மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல், உள்கட்டமைப்பு அமைச்சர் நிதின் கட்கரி, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் தத்தம் துறையை எவ்வாறு வெகுவாக முன்னெடுத்துச் சென்றுள்ளனர் என்பதைப் புள்ளி விவரங்கள் காட்டும். நிலக்கரி, அலைக்கற்றை ஆகியவற்றில் நடந்த வெளிப்படையான ஏலங்கள், ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடியாத ஆட்சி என்பதைத் தனித்துக் காட்டுகின்றன.
ஆண்டுக்கு ஒரு கோடி புதிய வேலைகளை உருவாக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கூட்டுக் கடமை யாகிறது. இதற்கான முன்னேற்பாடுகளில் இறங்கியுள்ளது அரசு.
இந்தியப் பொருளாதார அமைப்புமுறை தன் போக்கை மாற்ற வேண்டியிருக்கிறது. சென்ற ஆட்சியின் பத்தாண்டுகளில் நிதிப் பற்றாக்குறை அதிகரித்துக்கொண்டே போனது. கையில் வருமானமே இல்லாமல் நலத்திட்டங்கள் என்ற பெயரில் எல்லாவற்றுக்கும் உரிமைகள் கொடுக்கிறேன், கேரண்டி கொடுக்கிறேன் என்று அரசு கஜானாவைத் திறந்துவிட்டது. பற்றாக்குறை அதிகரிக்க, அரசு வாங்கும் கடன்கள் அதிகரித்தன. இதன் காரணமாகவும் கடுமையான பணவீக்கம் காரணமாகவும் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகமாகவே வைத்திருந்தது. இதன் காரணமாகத் தனியார் நிறுவனங்கள் கடன் வாங்கித் தொழில்களை வளர்ப்பது சாத்தியமற்றதாக இருந்தது. மோடியின் ஓராண்டில் பணவீக்கம் கடுமையாகக் குறைந்துள்ளது. அரசின் நிதிப் பற்றாக்குறை வாக்குறுதி அளித்த அளவுக்குள் இருக்கிறது. இதனால், ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைப் பல ஆண்டுகள் கழித்துக் குறைத்துள்ளது. அடுத்த சில மாதங்களில் இந்த வட்டி விகிதம் மேலும் குறையும்போது குறுங்கடன்கள் பெறும் ஏழைகள், வீட்டு, வாகனக் கடன்கள் பெறும் மத்திய வர்க்கம், தொழிலுக்கான கடன் பெறும் சிறு, பெரு நிறுவனங்கள் என அனைவருமே நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள்.
மத்திய-மாநில உறவுகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கட்சிரீதியாக அரசியலில் கடும் போட்டி இருந்தாலும், எந்த மாநில அரசு வளர்ச்சித் திட்டங்களைக் கோரினாலும் அதற்கான அனுமதியும் நிதியுதவியும் உடனடியாக வழங்கப்படும் என்று உத்தரவாதம் கொடுத்திருக்கிறார் மோடி. ஸ்மார்ட் சிட்டி திட்டம், சாலைகள், மின் உற்பத்தி போன்ற கட்டமைப்புத் திட்டங்கள் என அனைத்துமே இந்தியா முழுமையிலும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சீராகப் பிரித்துத் தரப்பட்டுள்ளன. இதற்கு முன் ஒவ்வொரு மாநில அரசும் திட்டக் குழு என்ற அமைப்பின்முன் கையேந்தி நிற்க வேண்டும். திட்டக் குழு கலைக்கப்பட்டு, இப்போது நிதி ஆயோக் என்ற ஆலோசனை கூறும் அமைப்பு மட்டும் உருவாக்கப்பட்டிருக்கிறது.
நேரு, குஜ்ரால், வாஜ்பாய் முதலியோர் பிரதமராக இருக்கும்போதும் வெளியுறவின் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினர். மோடி அவர்களைப் போலவே உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் இந்தியாவின் பிம்பத்தைக் கட்டமைக்க முற்படுகிறார். இதுவரை அவர் சந்தித்துள்ள முக்கியமான நாடுகளின் தலைவர்கள் அனைவரையுமே மோடி வெகுவாகக் கவர்ந்துள்ளார். பாகிஸ்தானுடனான உறவில் மேம்பாடு வருவது சாத்தியமில்லை என்றாலும், வரும் நான்காண்டுகளில் சீனாவுடனான உறவில் மிகப் பெரும் மாற்றம் வரும் என்று தெரிகிறது.
முந்தைய அரசு செய்த நல்ல செயல்கள், மோடி ஆட்சியின் பார்வையுடன் பொருந்திப்போகும்போது அவை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, ஆதார் அட்டை திட்டம், ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்குத் திட்டம் வங்கதேசத்துடனான நில மாற்றல் திட்டம் போன்றவை. வளமான தேசத்தை, வலிமையான பாரதத்தை உருவாக்கும் மாபெரும் முயற்சியில் ஓய்வறியாது உழைக்கிறார் மோடி. அதில் ஒரு துளியும் சந்தேகமில்லை!
- பத்ரி சேஷாத்ரி, பதிப்பாளர், விமர்சகர், தொடர்புக்கு: bseshadri@gmail.com