வெள்ளி, 22 மே, 2015

http://kidsactivitiesblog.com/

Aeronautics and Astronautics

உலகம் - Writer ஜி.எஸ்.எஸ்.

கியூபா

மேற்கிந்திய தீவுகள் என்பது ஒரு நாடு - இப்படித்தான் தீவிர கிரிக்கெட் ரசிகர்களில் சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு.
கியூபா, ஜமைக்கா, ஹைதி, டொமினிகன் குடியரசு, பியூர் போரிகோ, வாஜின் தீவுகள், செயின்ட் கிட்ஸ், நெவிஸ் போன்ற பல தீவுகளும் இணைந்ததுதான் மேற்கிந்தியத் தீவுகள். இப்படி ஒரு பொதுவான அரசியல் பெயர் இதற்குக் குறைந்த காலத்துக்குதான் இருந்தது. அதாவது பிரிட்டிஷ் காலனிகளாக இவை இருந்தபோது ஜனவரி 3, 1958 முதல் 1962 மே 31 வரை இப்படி அழைக்கப்பட்டது. இவையெல்லாம் கரிபியன் கடல் பகுதியில் உள்ளன. தோராயமாக தென் அமெரிக்காவுக்கு மேலாகவும், வட அமெரிக்காவுக்குக் கீழாகவும் உள்ள நடுப்பகுதி.
முதலில் கியூபாவைப் பார்ப்போம்.
கியூபா நாட்டு மக்களால் இன்னமும்கூட அந்த மாற்றத்தை முழுவதுமாக நம்பமுடியவில்லை. மீண்டும் மீண்டும் தொலைக்காட்சியை உற்றுப் பார்க்கிறார்கள். ஐம்பது வருடப் பகைமை முடிவுக்கு வந்திருக்கிறதா?!
அமெரிக்காவும், கியூபாவும் கடும் பகைவர்களாகவே இருந்து வந்தன. ஒரு டஜன் அமெரிக்க அதிபர்கள் அடுத்தடுத்து ஆட்சியைப் பிடித்தும் விரோதம் மாறவில்லை. அந்த நிலை இப்போது மாறியிருக்கிறது. சமீபத்தில் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியான ஓர் அறிக்கை இதை உறுதிப்படுத்தி இருக்கிறது. அது - ‘‘தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளின் பட்டியலிலிருந்து கியூபாவின் பெயர் நீக்கப்படும்’’.
அமெரிக்காவில் இப்படி ஓர் பட்டியல் உண்டு. அதில் ஈரான், சிரியா, சூடான் போன்ற நாடுகள் உள்ளன. இந்தப் பட்டியலில் உள்ள நாடுகளுடன் தூதரக நல்லுறவை அமெரிக்கா வைத்துக் கொள்ளாது. மேற்படி அறிவிப்பைத் தொடர்ந்து அமெரிக்காவும் கியூபாவும் தங்களுடைய தூதரக உறவுகளை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘‘இது நியாயமான முடிவு. சொல்லப்போனால் இந்தப் பட்டியலில் எங்கள் நாடு இடம் பெற்றிருக்கவே கூடாது’’ என்று கூறியுள்ளார் கியூபாவின் அதிபரான ரவுல் காஸ்ட்ரோ.
பாரீஸில் சார்லி ஹெப்தோ பத்திரிகை அலுவலகத்தில் புகுந்த தீவிரவாதிகள் பலரை சுட்டுக் கொன்ற சம்பவத்தை, ‘’அராஜகமான தாக்குதல்’’ என்று கியூபா வர்ணித்தது அந்நாட்டின் தீவிரவாதத்துக்கு எதிரான மனநிலையைக் காட்டுகிறது என்று கூறுகிறது வெள்ளை மாளிகை.
நெல்சன் மண்டேலா இறந்தபோது தென்னாப்ரிக்காவில் ஒருமுறை ஒபாமாவும், காஸ்ட்ரோவும் கைகுலுக்கிக் கொண்டார்கள். மற்றபடி அமெரிக்க அதிபர்களும், கியூபா அதிபர்களும் ஒருவருக்கொருவர் புன்னகைத்துக் கொண்டதுகூட இல்லை.
அமெரிக்காவின எதிர்கட்சியான குடியரசுக் கட்சியினர் ஒபாமாவின் செயல்பாட்டை விமர்சித்துள்ளார்கள். கியூபாவுடன் நெருக்கம் கொண்டால் அது அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்து என்பது அவர்கள் வாதம்.
அமெரிக்காவின் தெற்கு நுனியில் உள்ள ஃப்ளோரிடாவிலிருந்து 140 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தீவு கியூபா. அமெரிக்காவின் பரப்பளவில் பத்தில் ஒரு பங்குகூட இல்லாத குட்டி நாடு. இதன் தலைநகர் ஹவானா. இரண்டாவது பெரிய நகர் சாண்டியாகோ. கியூபாவின் அதிகாரப்பூர்வ மொழி ஸ்பானிஷ். பல புயல்களை எதிர்கொண்ட நாடு (நிஜமாகவும், உருவகமாகவும்).
அமெரிக்கா ஒதுக்கி வைத்ததனால் பொருளாதாரம் சீர்குலைந்த நாடு கியூபா. அதன் அரசியல்கூட இதனால் பெருமளவில் சிதைந்தது. என்றாலும்கூட கியூபா என்றவுடன் புரட்சி வீரர்களுக்கு இதெல்லாம் மனதில் தைக்காது. அவர்கள் நினைவில் எழும் உருவம் ஃபிடல் காஸ்ட்ரோ. சோவியத் ரஷ்யா துண்டு துண்டாகிவிட்ட நிலையிலும்கூட நம்பிக்கை இழக்காமல் கம்யூனிஸத்தை ஆதரிக்கும் ஒரே நபர் ஃபிடல் காஸ்ட்ரோ.
அவரை அழிக்க அமெரிக்கா பல முயற்சிகள் எடுத்ததாகக் கூறுவார்கள். ஃபிடல் காஸ்ட்ரோ பிடிக்கும் சுருட்டுக்குள் வெடிவைத்து அவர் முகத்தை சின்னாபின்னமாக்கக்கூட ஒரு முயற்சி நடந்ததாகக் கூறுவார்கள். ஆனால் பலிக்கவில்லை.
ஏன் இந்தப் பகைமை என்பதற்கு சில முக்கிய வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டியே ஆகவேண்டும்.
(உலகம் உருளும்)
*************
கடந்த 1492-ல்தான் கொலம்பஸ் கியூபாவைக் கண்டுபிடித்தார். பின்னர் (வழக்கம்போல!) அது ஸ்பெயினுக்குச் சொந்தம் என்றார்.
அடுத்த இருபது வருடங்களில் ஸ்பெயின் நாட்டினர் அங்கே கொத்துக் கொத்தாக குடியேறத் தொடங்கினர்.
குடியேறியவர்களில் பெரும்பாலான வர்கள் தேர்ந்தெடுத்தது விவசாயத்தை. கரும்பு, புகையிலை ஆகியவை அங்கு அமோகமாக விளைந்தன. நாளடைவில் அங்கு நிறைய பருத்தி மில்கள் செயல்படத் தொடங்கின.
விரைவிலேயே கியூபா பணக்கார நாடானது. ‘அமெரிக்கன் இண்டியன்ஸ்’ எனப்படும் உள்ளூர்வாசிகள் மட்டுமே வேலைக்காக அமர்த்தப்பட்டனர். குறை வான கூலி, மிகக் கொடூரமாக நடத்தப்பட்ட விதம் ஆகியவற்றின் காரணமாக நாள டைவில் இவர்களின் எண்ணிக்கை சுருங்கிப் போனது. மாற்று ஏற்பாடாக, ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து அடிமைகளை இறக்குமதி செய்து, அவர்களின் உழைப்பில் கொழிக்கத் தொடங்கினார்கள், கியூபாவில் குடிபுகுந்த ஸ்பானிஷ்காரர்கள்.
1527-ல் இப்படிக் கடும் வேலைகளைச் செய்வதற்காக ஆப்ரிக்காவிலிருந்து கியூபாவுக்கு வரவழைக்கப்பட்ட அடிமை கள், தாங்கள் மிகக் கேவலமாக நடத்தப் படுவதைக் கண்டு புரட்சியில் ஈடுபட, அது அரசால் நசுக்கப்பட்டது. 1607-ல் கியூபாவின் அதிகார பூர்வமான தலைநகரமாக ஹவானா அறிவிக்கப்பட்டது.
1649-ல் அங்கு பரவிய கொள்ளை நோயால் கியூபாவில் வசித்தவர்களில் கிட்டத் தட்ட மூன்றில் ஒரு பங்கினர் உயிரிழந்தனர்.
சுமார் நானூறு வருடங்கள் கியூபாவை ஸ்பெயின் ஆண்டது. அவ்வப்போது புரட்சிகள் ‘மினி’ சைஸில் வெடிப்பதும், தன் ‘மாக்ஸி’ படைகளைக் கொண்டு அவற்றை ஸ்பெயின் அடக்குவதும் வாடிக்கையானது.
பக்கத்து நாடான ஐமைகாவுடன் வணிகம் செய்ய வசதியாக இருக்கும் என்று கருதி பிரிட்டிஷ்காரரின் படைகள் கியூபாவின் நகரமான சாண்டியாகோவை தங்கள் வசம் கொண்டு வந்தார்கள். இதை ஸ்பெயின் எதிர்த்தது. ஆனால் நாளடைவில் ஐமைகா இங்கிலாந்துக்குச் சொந்தமானது என்பதை ஸ்பெயின் வெளிப்படையாக அங்கீகரித்தது. பதிலுக்கு சாண்டியா கோவிலிருந்து பிரிட்டிஷ் படைகள் பின்வாங்கின.
‘’கியூபாவை நாமே ஆக்கிரமித்தால் என்ன?’’ - இப்படியொரு எண்ணம் தென் அமெரிக்காவின் அப்போதைய (1826) தளபதியான சைமன் பொலிவியருக்குத் தோன்றியது. அவரும், அதே கருத்தைக் கொண்ட மெக்ஸிகோ நாட்டுத் தலைவர் களும் சேர்ந்து ஒரு ராணுவத்தை உருவாக்கினார்கள். கியூபாவுக்குச் சென்று ஸ்பெயினுக்கு எதிராகத் தாக்குதல் நடத்த இந்த படை தயாரானது.
நடுவில் அமெரிக்கா புகுந்தது. சண்டை மூண்டால் ஸ்பெயினுக்கே தன் ஆதரவு என்று அறிவித்தது. வேறு வழியில்லாமல் தென் அமெரிக்கா - மெக்ஸிகோ கூட்டுப்படை பின்வாங்கிவிட்டது. நாளடைவில் ‘’கியூபாவை நம்முடனேயே இணைத்துக் கொண்டால் நன்றாயிருக்குமே’’ என்று கருதத் தொடங்கியது அமெரிக்கா! ஆனால் ஸ்பெயின் ஆர்வம் காட்டவில்லை.
அதேசமயம், கொடுமைக்குள்ளான கியூபாவின் உள்ளூர்வாசிகள் சுதந்திரத் துக்கு ஏங்கினார்கள், கிளர்ச்சி செய்தார்கள்.
1898-ல் ஹவானா கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்கக் கப்பல் ஒன்று வெடித்தது. கியூபாவிலுள்ள தங்கள் நாட்டுக்காரர்களைப் பாதுகாப்பதற்காக அமெரிக்கா அனுப்பிய ராணுவக் கப்பல் இது. மர்மமான முறையில் அந்தக் கப்பல் வெடித்துச் சிதறியதில் 275 அமெரிக்கர்கள் உயிரிழந்தனர்.
வெடித்த கப்பலின் பெயர் MAINE. எதனால் வெடித்தது? இன்றுவரை தெரியவில்லை. என்றாலும் அமெரிக்கா ஸ்பெயின் மீது போர் பிரகடனம் வெளி யிட்டது. ஆக ஸ்பானிய - அமெரிக்கப் போர் தொடங்கியது. (கியூபாவை அப்போது ஆட்சி செய்தது ஸ்பெயின்தானே).
ஸ்பெயின் ராணுவம் சரணடைந்தது. ‘பாரிஸ் ஒப்பந்தம்’ இரு தரப்பினராலும் கையெழுத்திடப்பட்டது. கியூபா மீது தான் கொண்டிருந்த சகல உரிமைகளையும் விட்டுத் தந்தது ஸ்பெயின்.
கியூபாவில் தனது ராணுவ ஆட்சியை ஏற்படுத்தியது அமெரிக்கா. சில வருடங்கள் தான். கியூபாவாசிகள் ஸ்பெயினுக்காகக் காட்டிய அதே சிவப்புக் கொடியை அமெரிக் காவுக்கும் காட்டினார்கள். அமெரிக்கா பணிந்தது. கியூபா தன்னைத் தானே ஆளட்டும் என்று விட்டுக் கொடுத்தது.
ஆனால் ’கியூபாவிலுள்ள காண்டனமோ விரிகுடா என்ற இடத்தை அமெரிக்காவுக்கு நிரந்தரக் குத்தகைக்கு விடவேண்டும். அங்கே அமெரிக்கா தனது கடற்படையை நிறுத்தி வைக்கலாம்’ என்பது போன்ற நிபந் தனைகளை விதித்தது. அன்றைய அவசரத் துக்கு கியூபா இதற்கு ஒப்புக்கொண்டது.
படிஸ்டா என்பவர் சுதந்திர கியூபாவின் அதிபரானார். தான் வைத்ததுதான் சட்டம் என்று அவர் ஆட்சி நடத்த ஆரம்பித்த போது மக்கள் நொந்து நூலாகிப் போனார்கள்.
இதைக் கண்டு குமுறினார் ஓர் இளம் வழக்கறிஞர். குறிப்பாக வெளிநாட்டு முதலீடு களை படிஸ்டா வரவேற்பதற்கு எதிர்ப்பு காட்டினார். படிஸ்டாவுக்கு எதிராகப் புரட்சி யில் ஈடுபட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து விடுதலையானவுடன், மெக்ஸிகோவுக்குச் சென்று திட்டங்களைத் தீட்டிய அந்த இளம் வழக்கறிஞர் பிடல் காஸ்ட்ரோ!.
(உலகம் உருளும்)
****************
யாருக்கும் இல்லாத ஒரு பெருமை பிடல் காஸ்ட்ரோவுக்கு உண்டு. உலகின் மேற்குப் பாதியில் முதன்முதலாக ஒரு கம்யூனிஸ தேசத்தை உருவாக்கியவர் அவர்.
1926 ஆகஸ்ட் 13 அன்று பிறந்தவர். இளம் வயதிலேயே தடாலடிச் செயல்களைச் செய்தவர்.
படித்தது மதபோதகப் பள்ளிகளான ஜெசூட் கல்வி அமைப்புகளில்தான். படிப்பில் நிறைய நாட்டம் கொண்டவர். முக்கியமாக ஸ்பானிஷ் மொழியில் மிகுந்த தேர்ச்சி கொண்டவர். விவசாயம் மற்றும் வரலாறு ஆகிய பாடங்கள் என்றால் அவருக்கு மிகவும் விருப்பம். பாடங்கள் ஒருபுறமிருக்க பாடமல்லாத விஷயங்களிலும் மிகுந்த அக்கறை காட்டினார்.
அரசியலில் மாளாத ஆர்வம். தவிர தடகளப் போட்டிகளிலும் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். ஆனால் இத்தனை இருந்தும் அவர் கூச்ச சுபாவம் கொண்டவராக இருந்தாராம். பிறருடன் எளிதில் பழகமாட்டார். ஆனால் இந்தக் கூச்சமெல்லாம் கல்லூரியில் சேரும் வரையில்தான்.
1945-ல் கியூபாவின் தலைநகரில் இருந்த ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை எடுத்துப் படித்தார். அந்த ஊர் சட்டக் கல்லூரியிலும் வன்முறை, அரசியல், கோஷ்டி மோதல் ஆகியவை நீக்கமற நிறைந்திருந்தன.
பிடல் காஸ்ட்ரோவும் ஓர் புரட்சி இயக்கத்தில் சேர்ந்தார். அதன் பெயர் The Union Insurreccional Revolucionaria என்பதாகும். இந்தக் காலகட்டத்தில் பிடல் காஸ்ட்ரோ மீது சரியாகவோ தவறாகவோ சில குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவற்றில் முக்கியமானது எதிரணியைச் சேர்ந்த ஒரு மாணவர் தலைவனை அவர் கொலை செய்தார் என்பது. பரவலாகப் பேசப்பட்டா லும் இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப் படவில்லை.
கல்லூரிப் பருவத்தில் பிடல் காஸ்ட்ரோவின் அபாரமான பேச்சுத் திறமை வெளிப்பட்டது. கல்லூரியில் அவர் மாணவர் சங்கத் தலைவர் பதவியை வகிக்கவில்லை. அப்படிப்பட்ட ஆசை அவருக்கு இல்லை என்பதில்லை. சிலமுறை மாணவர் சங்கத் தேர்தலில் நின்றும் அவர் ஜெயிக்கவில்லை.
என்றாலும் பிடல் காஸ்ட்ரோவின் புகழ் பரவிக் கொண்டேவந்தது. அவரது அரசியல் ஆசையும் பெருகிக் கொண்டே வந்தது.
ரஃபேல் ட்ரூஜில்லோ என்பவர் டொமினி கன் குடியரசை ஆண்டு வந்தார் (மேற் கிந்தியத் தீவுகளில் கியூபாவுக்கு அடுத்த பெரிய நாடு இது). இவரது அரசின் அடக்கு முறையை எதிர்த்து பிரபல எழுத்தாளர் ஜுவான் போஷ் என்பவர் உருவாக்கிய புரட்சிப் படையில் சேர்ந்து கொண்டார் பிடல் காஸ்ட்ரோ.
இதற்காக அவர் தற்காலிகமாக பல்கலைக்கழகப் படிப்பிலிருந்து விலகினார். (இப்போதெல்லாம் பணியிலிருந்து சிறிது காலம் விலகி மீண்டும் அதில் சேரும் sabbatical என்ற வசதி சில நிறுவனங்களில் இருப்பதுபோல் அப்போது ஹவானா பல்கலைக்கழகத்திலும் இருந்திருக்க வேண்டும்!)
ஆனால் டொமினிகன் குடியரசை நோக்கி கப்பலில் இந்தப் புரட்சிக் குழு பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென்று `இப்போது செயல்பாடு வேண்டாம்’ என்ற ஆணை வந்தது.
அப்போது பிடல் காஸ்ட்ரோ எதிர்பாராத ஒரு செயலைச் செய்தார். கடலில் குதித்தார். தன் தலைமீது துப்பாக்கியை சுமந்தபடி வெகுதூரம் கடந்து கரையை அடைந்தார். அந்தப் பகுதியில் சுறாமீன்கள் அதிகம் என்பதும் இந்தத் தகவல் பிடல் காஸ்ட்ரோவுக்குத் தெரியும் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
அதற்கு அடுத்த ஆண்டு பிடல் காஸ்ட்ரோ பலவித செயல்களில் ஈடுபட்டார். அந்தச் செயல்களைப் புரட்சி என்று கூறி சிலிர்ப்பதோ, வன்முறை என்று கூறி வெறுப்பதோ அவரவர் பார்வையைப் பொறுத்தது.
கொலம்பியாவில் லிபரல் கட்சித் தலைவர் ஜார்ஜ் கெய்டான் என்பவர் படுகொலை செய்யப்பட அந்த நாடே பற்றி கலவரங்களில் எரியத் தொடங்கியது. அந்தக் கலவரங்களில் முக்கிய பங்கெடுத்துக் கொண்டார் பிடல் காஸ்ட்ரோ. தெருக்களில் வீடுவீடாகச் சென்று அமெரிக்காவுக்கு எதிரான அறிக்கைகளை விநியோகித்தார்.
கொலம்பிய ஆட்சியாளர்கள் கியூபா மாணவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுப்பதற்காக அவர்களைத் துரத்த, அவர்கள் கொலம்பியாவில் உள்ள கியூபா தூதரகத்தில் சரணடைந்தனர். பிறகு அங்கிருந்து ஹவானா வந்து சேர்ந்த பிடல் காஸ்ட்ரோ தனது சட்டப் படிப்பைத் தொடர்ந்தார்!
பல்கலைக்கழகத்தில் பயின்றபோது கம்யூனிசத்தைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொண்ட பிடல் காஸ்ட்ரோ அதனால் ஈர்க்கப்பட்டார். கூடவே அரசியலில் நேரடிப் பங்கேற்கும் ஆர்வமும் வந்தது.
கியூபாவில் அப்போது ஆர்டொடாக்ஸோ கட்சி என்ற ஒன்று இருந்தது. நாட்டிற்கு பொருளாதார சுதந்திரம் தேவை என்றது அந்தக் கட்சி. சமூக நீதியை முன்வைத்தது. ஆட்சிக்கு வந்ததும் ஊழலை ஒழிப்பது தன் தலையாய பணி என்றது. பிடல் காஸ்ட்ரோ இந்தக் கட்சியின் சித்தாந்தங்களினால் ஈர்க்கப்பட்டார்.
(உலகம் உருளும்)

Government school achivement

அரசுப் பள்ளி மாணவ - மாணவியர் என்றாலே, இளக்காரமாகப் பார்க்கும் கலாச்சாரத்துக்கு ஓங்கி ஒரு அடி கொடுத்திருக்கிறார்கள் பாரதிராஜா, வைஷ்ணவி, ஜெயநந்தனா. அரசுப் பள்ளி மாணவ - மாணவியரான இவர்கள் இந்த ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில், 499/500 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றவர்கள்.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகேயுள்ள சின்னக் கிராமம் பரணம். இங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மாணவரான எஸ். பாரதிராஜா, விவசாயக் குடும் பத்தைச் சேர்ந்தவர். அப்பா சேகர், அம்மா கவிதா இருவருமே விவசாயிகள்.
“அம்மா அப்பா ரெண்டு பேருமே காலையில வேலைக்குப் போனா ராத்திரிதான் திரும்பி வருவாங்க. கஷ்டப்படுற குடும்பம் எங்களுது. ‘படிப்புதான் நம்ம குடும்ப சூழ்நிலையை மாத்தும்டா’னு எங்க தாத்தா, பாட்டி அடிக்கடி சொல்வாங்க. வைராக்கியத்தோடத்தான் படிச்சேன். எங்க பள்ளிக்கூடம் ஒண்ணும் பெரிய வசதியான பள்ளிக்கூடம் இல்ல.
ஆனா, எங்க டீச்சர்லாம் ரொம்ப ஈடுபாட்டோட பாடம் நடத்துறவங்க. குறிப்பா, ஹெச்எம் ராஜம் நிறைய உற்சாகப்படுத்துவாங்க, உதவிசெய்வாங்க. நல்லா படிச்சு கலெக்டர் ஆகணும்; எங்களை மாதிரி ஏழை மக்களுக்கு உதவணும். நம்ம பள்ளிக்கூடம் மாதிரியான அரசுப் பள்ளிக்கூடங்கள் எல்லாத்தையும் எல்லா வசதிகளும் கொண்டதா மாத்தணும்கிறது என் கனவு. இன்னைக்கு என்னாலேயே எங்க பள்ளிக்கூடம் மேல எல்லார் கவனமும் திரும்பியிருக்குறது ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணா” என்கிறார் பாரதிராஜா.
ரொம்பலாம் மெனக்கெடலை!
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர். வைஷ்ணவி. வீடியோகிராஃபராக இருந்த தந்தை வி. ரவிச்சந்திரன் சில ஆண்டுகளுக்கு முன் மாரடைப்பால் மரணமடைய தாய் காந்திமதிதான் இவருக்கு எல்லாமும். வைஷ்ணவி கதையில் ஒரு சுவாரஸ்யம் உண்டு. தனியார் பள்ளி வேண்டாம் என்று அடம்பிடித்து அரசுப் பள்ளிக்கு வந்தவர் இவர். “அஞ்சாவது வரைக்கும் ஒரு தனியார் பள்ளியிலதான் படிச்சேன். எதுக்கெடுத்தாலும் கண்டிப்பு. பிடிக்கலை.
அம்மாகிட்ட சொல்லி அடம்பிடிச்சு அரசுப் பள்ளியில சேர்ந்தேன். இங்கே நல்ல டீச்சர்ஸ். நல்லாவும் சொல்லிக்கொடுத்தாங்க, ஜாலியாவும் இருக்க விட்டாங்க. அன்னைஅன்னைய பாடத்தை அன்னைஅன்னைக்கே படிச்சுடுவேன். அவ்வளவுதான். ரொம்பலாம் மெனக்கெடலை. இப்படி முதலிடம் பிடிப்பேன்லாம் எதிர் பார்க்கலை. எனக்கே ஆச்சரியமா இருக்கு” என்று சொல்லும் வைஷ்ணவிக்கு மருத்து வராவது ஆசை. “கிராமங்கள்ல போய் நிறைய பேருக்கு உதவணும்ணா” என்கிறார்.
படிப்பு, விளையாட்டுனு ஒரே ஜாலிதான்
சேலம் மாவட்டம், வாழப்பாடி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி மாணவி ஜெயநந்தனா. அப்பா இளங்கோ - அம்மா தமிழ்ச்செல்வி. ஜெயநந்தனாவின் கதையும் கிட்டத்தட்ட வைஷ்ணவி கதைபோலத்தான். ஐந்தாவது வரை தனியார் பள்ளியில் படித்த ஜெயநந்தனாவை அரசுப் பள்ளியில் சேர்த்தவர் அவருடைய அப்பா. “எங்கப்பா ஒரு அரசு ஊழியர் (உணவுப் பாதுகாப்பு அலுவலர்).
ஒரு அரசு ஊழியர் பொண்ணு அரசுப் பள்ளியிலதான் படிக்கணும்னு சொல்லி திடீர்னு இங்க கொண்டுவந்து சேர்த்துவிட்டுட்டாங்க. எனக்கும் இது சந்தோஷம்தான். ஏன்னா, நான் நிறைய விளையாடுவேன். அதனால, படிக்குற நேரத்துல படிப்பு; மத்த நேரத்துல விளையாட்டுன்னு ஜாலியாதான் படிச்சேன். எங்க டீச்சர்ஸ் கொடுத்த உற்சாகம் இப்போ முதலிடத்துக்குக் கொண்டுவந்து சேர்த்துடுச்சு” என்று சொல்லும் ஜெயநந்தனாவின் கனவு விஞ்ஞானியாவது. “நாட்டுக்கு எதாவது பெரிசா செய்யணும்” என்கிறார்.
மதிப்பெண்களைவிடவும் உண்மையில் இவர்களைக் கொண்டாடவைப்பவை இந்த வார்த்தைகள்தான்: “ஏழை மக்களுக்கு உதவணும்”; “கிராமங்களுக்குப் போய் நிறையப் பேருக்கு உதவணும்”; “நாட்டுக்கு எதாவது பெரிசா செய்யணும்”...
கனவுகள் நனவாகட்டும் செல்லங்களே!
- சி.கதிரவன், வி. சீனிவாசன், எஸ்.எஸ். லெனின்

எனக்குத் தெரிந்து ஓர் உதாரணம்: ஜோ. செந்தில்நாதன்

ஒரு பயணத்தின்போது, அந்த அற்புதமான பள்ளியை நான் கண்டேன். அப்படி ஒரு பிரம்மாண்டமான கட்டடம் ஓர் ஊராட்சி ஒன்றியப் பள்ளிக்கானது என்றால், பலர் நம்ப மறுப்பார்கள். உள்ளே ஒரு குடில். ‘சுனாமியின்போது உயிரிழந்த எங்கள் குழந்தைகள் 80 பேர் நினைவாக அமைக்கப்பட்ட குடில் இது’ என்றார் தலைமையசிரியர் பாலு. நினைவுத் தூணில் உள்ள பெயர்ப் பட்டியலைப் படித்தபோது, சுனாமியின் கோர முகம் கண் முன் வந்து சென்றது.
தமிழ்நாட்டிலேயே அதிகமாக உயிரிழப்புகளைச் சந்தித்த இடங்களில் ஒன்று கீச்சாங்குப்பம். சுனாமி அவ்வூர் பள்ளியையும் நிர்மூலமாக்கியது. மீண்டும் அங்கு இன்னொரு பள்ளிக்கூடம் கட்டும் சூழலில்தான், பாலு அங்கு தலைமையாசிரியராக வந்திருக்கிறார். தனித்துவமிக்க பள்ளியாக அது உருவெடுக்க வெறும் கட்டிடம் மட்டுமே போதாது என்பதை உணர்ந்தவர் பள்ளியை அனைத்து வகையிலும் தன்னிறைவு பெறவைக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்.
அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர்களுக்கு நாற்காலி மேஜைகளில் தொடங்கி கழிப்பறை வசதி, கணினி கல்வி வரை கொண்டுவந்திருக்கிறார். சுனாமி மறுவாழ்வுக் குடியிருப்பிலிருந்து மாணவர்கள் பள்ளிக்கு வர அரசுப் பேருந்தையும், சொந்த செலவில் வேன் வசதியையும் செய்துகொடுத்திருக்கிறார். கற்பித்தலிலும் சிறப்புக் கவனத்தை அவர் கொடுக்க அனைத்து வகுப்புகளும் ‘ஸ்மார்ட் கிளாஸ்’களாக மாறி இன்றைக்குத் தலைநிமிர்ந்து நிற்கிறது இந்த அரசுப் பள்ளி.
எவ்வளவோ ஆசிரியர்கள் பாலுவைப் போல இருக்கிறார்கள். எவ்வளவோ பள்ளிகள் இந்தப் பள்ளியைப் போல இருக்கின்றன. இதையெல்லாம் பேச யாரும் இல்லை என்பதுதான் நம் சாபக்கேடு. ‘தி இந்து’ அந்தக் குறையைப் போக்கிவிட்டது. ஒவ்வொரு ஆசிரியரும் இப்படித் தன் பள்ளியை மாற்ற முனைந்தால் அரசுப் பள்ளிகளில் உள்ள சகலப் பிரச்சினைகளும் முடிவுக்கு வந்துவிடும். அரசுப் பள்ளி நம் பள்ளி. நம் கல்வி நம் உரிமை!

அஜிதனும் நியாஸும் கொடுத்துவைத்தவர்கள்! மு. சையது அபுதாஹிர்

இன்று நான் தமிழகத்தின் பெரிய பல்கலைக் கழகம் ஒன்றின் ஆராய்ச்சி மாணவன். எனது தந்தை பீடி வேலை செய்பவர். அவர் மிகவும் கஷ்டப்பட்டுதான் படிக்கவைக்கிறார். என் தந்தைக்கு என்னைப் பற்றி ஏராளமான கனவுகள் உண்டு. ஆனால், அவர் எனது ஆர்வத்தையும் திறமையையும் உணர்ந்தவர் இல்லை. எனது தந்தையைப் போல், பெரும்பாலான தந்தையர்கள் பெரும் கனவுகளுடன், பெரும் எதிர்பார்ப்புகளுடன் தங்களது பிள்ளைகளைப் படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
என்னைப் போல் பெரும்பான்மை மாணவர்கள் அவர்களுக்கு விருப்பமான பாடத்தைப் படிக்காமல் வேறு ஒரு துறையில் பயணம் செய்துகொண்டிருக்கின்றார்கள். இந்தப் பயணம் எத்தகைய வெற்றியைக் கொடுக்கும், மனதுக்கு எத்தகைய சந்தோஷத்தைக் கொடுக்கும் என்று தெரியவில்லை.
என் பள்ளிக்கூட வாழ்க்கை சந்தோஷமாக அமைந்ததில்லை. எனது பள்ளி வாழ்க்கை என்னிடம் என்ன திறமை இருக்கிறது என்பதை எனக்குச் சொல்லிக்கொடுக்கவும் இல்லை. நான் பேசும்போது தெரிகிறது, எனக்கு மட்டுமல்ல; பல மாணவர்கள் இதே நிலையில் இருக்கிறார்கள் என்று.
நாம் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 12 வருடங்களைப் பள்ளியில் செலவழிக்கிறோம். இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? எனக்குத் தெரியவில்லை. அந்த வகையில் அஜிதனும், நியாஸ் அஹமதுவும் கொடுத்து வைத்தவர்கள்.

பெற்றோர்களுக்கு ஒரு மடல்! வெண்மணி மாணிக்கம்

கல்வி என்பது ஒருவரை நல்ல மனிதராக உருவாக்கப் பயன்பட வேண்டும். ஆனால், இன்றைய கல்விச் சூழல் மாணவர்களை சுயநலவாதிகளாகவும் ஏற்றத்தாழ்வு மனப்பான்மை உள்ளவர்களாகவும் உருவாக்கிக்கொண்டிருக்கிறது. அரசுப் பள்ளிகள் மீதான நம்முடைய வெறுப்புக்குப் பின் நிறையவே கற்பிதங்கள் இருக்கின்றன.
‘அரசுப் பள்ளி மாணவர்களே மோசம்’ என்ற சித்தரிப்பு யாரால் எப்படி உருவாக்கப்பட்டது என்று தெரியாது, ஆனால் பலரது மனங்களில் வேரூன்றி நிற்கிறது. இவர்களுடைய அவதூறுகளுக்கெல்லாம் மாறாக அரசுப் பள்ளி மாணவர்கள் சாதித்து நிற்கும்போதுகூட, அரசுப் பள்ளிகளையோ அரசுப் பள்ளி மாணவர்களையோ இவர்கள் அங்கீகரிப்பதில்லை. கள்ள மவுனம் சாதிப்பார்கள்.
தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகள் படிப்பதைப் பெருமையாகக் கருதும் பெற்றோர்களே, உங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளுக்கு மாற்றுங்கள் என யாரும் கட்டளையிடவில்லை. ஆனால், நீங்கள் தேர்ந்தெடுக்கும் பள்ளிகள்தான் உயர்வானவை என்கிற போலி பெருமிதத்தை நிஜமாக்க அரசுப் பள்ளிகள் மீதும் அங்கு படிக்கும் மாணவர்கள் மீது காழ்ப்பைக் கொட்டி, பிள்ளைகளை வளர்க்காதீர்கள். ஏனென்றால், ஏற்றத்தாழ்வைப் போற்றி வளர்ப்பதல்ல; ஏற்றத்தாழ்வுகளை முடிவுக்குக் கொண்டுவருவதே நல்ல கல்வியின் முதன்மைப் பணி. நீங்கள் ஏனைய பிள்ளைகளை மட்டப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு, உங்கள் பிள்ளைகளுக்கே தீங்கிழைப்பவர்களாக மாறிவிடுகிறீர்கள்!

உண்மையைக் கண் கொண்டு பார்ப்போம்! - ஜே. ஆர். வி. எட்வர்ட்

இந்திய தொழில்நுட்பக் கழக நுழைவுத் தேர்வில் சென்னை மண்டலத்தில் இரண்டாம் நிலைத் தேர்வுக்குத் தகுதியானவர்களாகத் தேறியவர்களில் சுமார் 10% மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இது அதிர்ச்சி தரும் செய்தியாக இருக்கலாம்; ஆனால், வழக்கமான செய்திதான்.
பல ஆண்டுகளாகவே ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வில் தமிழக மாணவர்களின் நிலை இதுதான். ஐ.ஐ.டி. தேர்வில் தேறுவோர் விழுக்காட்டை வைத்து மட்டும் கல்வியின் தரத்தை எடை போட முடியாது என்றாலும், இன்றைய கல்வியின் யதார்த்த நிலை குறித்து கவலைப்பட வேண்டியதின் அவசியத்தை உணர்த்தும் செய்தியாக இதைக் கருத வேண்டியிருக்கிறது.
ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் மட்டுமல்லாது அகில இந்திய அளவிலான மருத்துவ நுழைவுத் தேர்வு உள்ளிட்ட பல தேர்வுகளிலும்கூட இதுதான் இன்றைய யதார்த்தம். நம்முடைய மெட்ரிக் பள்ளிகளுக்கே இந்தப் பெருமைகளுக்கான அங்கீகாரமெல்லாம் போய்ச்சேர வேண்டும்.
மதிப்பெண்களுக்காக மாணவர்களின் படைப்புத் திறனையும் சிந்தனைத் திறனையும் நசுக்கியடித்து, உருப்போடும் இயந்திரக் கலாச்சாரத்தைத் தோற்றுவித்தவர்கள் அவர்கள்தானே? உலகிலேயே நல்ல கல்வியைக் கொடுக்கிறோம் பேர்வழி என்று மெட்ரிக் பள்ளிகளைத் தேடித் தேர்ந்தெடுக்கும் பெற்றோர் உண்மையில் நம் பிள்ளைகளுக்கு என்ன மாதிரியான கல்விமுறையைக் கொடுக்கிறோம் என்பதைக் கண்கொண்டு பார்க்க வேண்டும். நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை நாமே நசுக்கும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!
கைகோப்போம், துணைநிற்போம்! - சீ.நா. ராம்கோபால், புதுச்சேரி
தொடர்ந்து அரசுப் பள்ளிகள் குறித்து எதிர்மறையான கருத்துகள் வந்துகொண்டிருக்கும் காலகட்டத்தில், அரசுப் பள்ளிகளின் முக்கியத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் ‘தி இந்து’வுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மிகப் பெரிய பணி இது. என்னால் முடிந்த பணியாக ‘நம் கல்வி நம் உரிமை’ தொடரில் வெளிவந்த எல்லாக் கட்டுரைகளையும் பிரதியெடுத்து நான் பணிபுரியும் அலுவலகத்தில் நண்பர்களுக்குக் கொடுத்துள்ளேன். உங்களின் மகத்தான பணிக்கு நாங்கள் எப்போதும் துணைநிற்போம்!

எழுச்சி வரட்டும்! - ஹரிகரன், தோகா-கத்தார்

மிகப் பெரிய பணியைச் செய்கிறது ‘தி இந்து’. ‘நம் கல்வி… நம் உரிமை’ தொடர் கட்டுரைகள் மிகவும் முக்கிய மானவை. அரசுப் பள்ளிகளை நோக்கி நம் மக்களின் பார்வையைத் திருப்ப இந்தக் கட்டுரைகள் பெரும் ஊக்கமாக அமையும். அதுவே அரசுப் பள்ளிகளின் மறுஎழுச்சிக்கும் வழியாக அமையட்டும்!

உரக்கச் சொல்வோம் மீண்டும்! வே. தேன்மொழி, கோவை

நம் ஊரில், நம் வீட்டருகே, நம் கண் பார்வையில் நடைபெறும் நமக்கான அரசுப் பள்ளிகளை, நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும்? அரசுப் பள்ளிகளின் மூலம் கல்வி பெற்ற தலைமுறையைச் சார்ந்தவர்கள்தான் நாம் - இன்றைய பெற்றோர். அப்போது நம்மை அறிவின் வெளிச்சத்துக்கு அழைத்துச் சென்ற அரசுப் பள்ளிகளை, இன்று அழியும் நிலை நோக்கி நகர்த்திக்கொண்டிருப்பது சரிதானா?
ஆங்கிலத்தின் வழியே தனியார் பள்ளிகளில் பயின்றால்தான் , நம் பிள்ளைகள் முன்னேற முடியும் என்பதற்கு உண்மையில் என்ன ஆதாரம், அல்லது அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதற்குதான் என்ன ஆதாரம்? இதையெல்லாம் உரக்கப் பேச வேண்டிய காலம் உருவாகிவிட்டது. அதற்கான களத்தை ‘தி இந்து’ அமைத்துவிட்டது. அரசுப் பள்ளி நம் பள்ளி. இதை உரக்கச் சொல்வோம் மீண்டும் மீண்டும்!
- சி.கதிரவன், வி. சீனிவாசன், 
எஸ்.எஸ். லெனின்

Indian Railway - (www.localcircles.com)

ரயில்வே துறையை நவீனப் படுத்துவதற்காக ரயில்வே நிர்வாகம் தொடங்கியுள்ள சமூக வலைதளம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று ள்ளது. இதில், ஒரு வருடத்துக்குள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக சேர்ந்துள் ளதோடு, வலைதளத்தில் தெரி விக்கப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.
ரயில்வே துறையை சீரமைத்து நவீனப்படுத்தும் வகையில், ‘லோக் கல் சர்க்கிள்’ (www.localcircles.com) என்ற சமூக வலைதளத்தை ரயில்வே துறை தொடங்கியுள்ளது. இதில், ‘ரயில்வே துறையை நவீனப்படுத்துவோம்’ (Make Railway Better) என்ற தலைப்பின் கீழ் பொதுமக்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. ரயில்வே துறையின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் இந்த வலைதளம் தொடங்கப்பட்ட நிலையில், ஓராண்டுக்குள் ஒரு லட்சத்து 3 ஆயிரம் பேர் இதில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். இந்த வலைதளத்தின் முக்கிய நோக்கம் குறித்து, ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அதிவேக ரயில்கள் இயக்குவது, சொகுசான, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வது, டிக்கெட் முன்பதிவை நவீனப்படுத்துவது உள்ளிட்ட நோக்கங்களை அடிப்படையாக கொண்டு நவீனமயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போதைய சேவைகளை மேலும் மேம்படுத்துவது குறித்தும் ரயில்வே நிர்வாகம் தீவிரமாக யோசித்து வருகிறது.
பொதுமக்களின் கருத்தை அறிந்து அதன் அடிப்படையில் சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக தொடங்கப்பட்டுள்ள ‘லோக்கல் சர்க்கிள்’ என்ற சமூக வலைதளத்தில் பொதுமக்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துகொண்டு தங்களது கருத்துகள், ஆலோசனைகள், புகார்களை தெரிவிக்கலாம். இவற்றை ரயில்வே நிர்வாகம் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
இதுகுறித்து, மண்டல ரயில்வே ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினர் கே.பாஸ்கர் கூறியதா வது: இந்த வலைதளத்தில் தெரிவிக்கப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப் படுகிறது. அண்மையில் இந்த வலைதளத்தில், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் குடிநீர் குழாய்கள் அமைந்துள்ள இடங்கள் மிகவும் அசுத்தமாக உள்ளதாக புகார் தெரிவித்தேன். உடனடியாக இப்புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு சரி செய்யப்பட்டது.
இதேபோல், கோவை விரைவு ரயிலில் ஏராளமான இருக்கைகள் காலியாக இருக்கும் போதுகூட, ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்தால், அவர்களுக்கு ஒரே வரிசையில் இருக்கைகள் ஒதுக்கப்படாமல், அடுத்தடுத்த வரிசைகளில் இருக்கைகள் ஒதுக்கப்படுகின்றன. இதுகுறித்து தெரிவிக்கப்பட்ட புகாரை ரயில்வே நிர்வாகம் பரிசீலனைக்கு எடுத்துக் கொண் டுள்ளது. விரைவில் இதற்கும் தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன் என்று அவர் கூறினார்

America Economy

பொருளாதார வீழ்ச்சியிலிருந்து அமெரிக்காவும் பிற நாடுகளும் பாடம் கற்கவில்லை.

இப்போது நாம் சந்திக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள் வழக்கமான சுழற்சிதான் என்பதைத் தவிர வேறு வகையில் சிந்தித்துப் பார்க்கத் தயக்கமாக இருக்கிறது. சிறிது காலமாகவே பொருளாதார நிலைமை சரியில்லை என்று தெரியும், ஆனால் உண்மையில் என்னதான் நடக்கிறது?
அமெரிக்காவின் ஒட்டுமொத்தப் பொருளாதார நிலையைப் பார்க்கும்போது தொழிலாளர்களின் ஊதியம் (உண்மை மதிப்பில்) மிகக் குறைவாகவே அதிகரிக்கிறது, பண முதலீடுகளுக்கான வட்டிவீதம் குறைவாகவே இருக்கிறது, உற்பத்தியில் தொழிலாளர் பங்களிப்பு குறைவாகவே இருக்கிறது – இவையனைத்துமே தற்காலிகமானவை என்று நம்மால் பார்க்க முடிந்த காரணங்களைப் பட்டியலிட்டுத் திருப்திப்படுகிறோம். நிர்வாகம் சீரடைந்தால், பொதுக் கடன் அல்லது வீடமைப்புத் துறையில் குவிந்துள்ள கடன் குறைந்தால் எல்லாமே சரியாகிவிடும் என்று ஒரு சாரார் கூறுகின்றனர்.
கடந்த முறை பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தபோது ஏற்பட்ட சில மாறுதல்களைப் போக்காமல் பொருளாதாரத்தில் அவற்றை அப்படியே நீடிக்க விட்டுவிட்டோம், அதுதான் தவறு. கடந்த காலத்தில் பொருளாதாரக் கொள்கைகளில் செய்த தவறுகளைச் சரிப்படுத்தினாலே இயல்புநிலை திரும்பி விடும் என்று மற்றொரு சாரார் கூறுகின்றனர்.
இரு தரப்பினரின் வாதங்களிலும் சில உண்மைகள் இருக்கின்றன. வீழ்ச்சி என்பது நாம் பாடம் படிப்பதற்காக ஏற்பட்ட ஒரு அனுபவம், அதை நாம் சரியாகக் கவனிக்கத் தவறிவிட்டோம் என்பதே உண்மை. நிதி நெருக்கடி திடீரென்றும், இயல்புக்கு மாறாகவும் மாறியதற்குக் காரணமே நம்முடைய பொருளாதாரத்தின் வலுவற்ற தன்மையும், முறையாகச் செயல்படாத தன்மையும்தான். மெதுவாக, அதே சமயம் நிச்சயமாக இந்த நிலைமைக்கு ஏற்ப நாம் நமது இலக்குகளை மாற்றிக்கொள்ளலாம். கசப்பான சில உண்மைகளை நாம் கண்டுபிடிக்கத் தொடங்கியிருக்கிறோம். டொரான்டோ பல்கலைக்கழகப் பொருளாதார அறிஞர் ரிச்சர்ட் ஃபுளோரிடா பாணியில் சொல்வதானால் “நாம் இப்போது மாற்றுமுறையில் பொருளாதாரத்தை அமைத்துக்கொண்டிருக்கிறோம்”.
நிறுவனங்கள் தங்களுடைய நிர்வாகத்தில் நீக்கு போக்கு இல்லாமல் இருந்தால், மாற்றங்கள் ஒரே நேரத்தில் நடந்துவிடாது, படிப்படியாகத்தான் மாறும். அதே வேளையில் இந்த மாற்றங்களைத் தொடர்ந்து கவனித்துவந்தால் ஒரு தொழில்துறை அல்லது சேவைப் பிரிவு எந்த திசையை நோக்கிச் செல்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
அமெரிக்க உதாரணங்கள்
அமெரிக்கப் பொருளாதாரத்துக்குப் பொருந்தும் உதாரணமொன்று இருக்கிறது. ஃபோர்டு, கிறிஸ்லர், ஜெனரல் மோட்டார்ஸ், கேடர்பில்லர், நவிஸ்டார் (முன்னாள் பெயர் இன்டர்நேஷனல் ஹார்வஸ்டர்) போன்ற நிறுவனங்கள் தங்களுடைய புதிய ஊழியர்களுக்குக் குறைவான சம்பளம் தருகின்றன. இரட்டை அடுக்குத் தொழிலாளர் முறையில் பழைய தொழிலாளர்களின் ஊதியத்தில் பாதியைத்தான் இவர்கள் வாங்குகின்றனர். இத்துடன், அதிக ஊதிய விகிதம் பெறும் தொழிலாளர்களைப் பணியிலிருந்து ஓய்வுபெற வைத்து பணியாளர் பணிவரிசைகளையும் குறைத்து வருகின்றனர்.
இவ்வாறு தொழில்நிறுவனங்கள் தங்களுடைய ஊதியச் செலவைப் பாதியாகக் குறைக்கும் முயற்சியின் பெரும் பளுவை, இளம் தொழிலாளர்கள்தான் தங்களுடைய தோள்களில் ஏற்றிக்கொள்கின்றனர். கல்லூரியில் 4 ஆண்டுகள் படித்து பட்டம் பெற்று வேலைக்கு வரும் இளம் பட்டதாரியின் ஊதியம், 2000-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இப்போது 7% குறைந்துவிட்டது. இளைஞர்கள் வேலைக்கு வரும் எண்ணிக்கையும் குறைந்துகொண்டிருக்கிறது. இதன் மறு விளைவாக ஏராளமான இளைஞர்கள் பெற்றோருடன் பழைய வீட்டில் இருக்கும் காலத்தை மேலும் சில ஆண்டுகளுக்கு நீட்டிக்கின்றனர். அவர்கள் புதிய வீடுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை.
சுருங்கும் பொருளாதாரம்
இந்த உண்மைகள் அனைத்தும் தெரிவிப்பது என்னவென்றால், நம்முடைய பொருளாதாரம் சுருங்கிக் கொண்டிருக்கிறது. நீண்ட கால நோக்கில், நம்முடைய பொருளாதார மந்தநிலை நீங்கி வளம் ஏற்படுவதற்குப் பதிலாக நீண்ட காலத்துக்கு இதே நிலைக்கான சாத்தியக்கூறுகளே தென்படுகின்றன. பொருளாதாரச் சரிவு ஏற்பட்டால் அது பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்பதே நவீன கால பாடமாக இருக்கிறது.
தொடக்க காலத்தில் ஒருவர் குறைந்த சம்பளத்துக்கு வேலைக்குச் சென்றால் அவருடைய வாழ்நாள் முழுக்க அதே விகித ஊதியம்தான் அவருக்குக் கிடைக்கிறது. இளைஞர்களுடைய ஊதியம் குறைவாக இருக்கிறது. சில ஆண்டுகளில் அவர்கள்தான் ஊதியம் பெறுவோரில் கணிசமாக இருக்கப்போகின்றனர். அப்படியானால் எதிர்காலத்திலும் பொருளாதாரம் மீட்சி அடையாமல் இப்படியே நீடிக்குமா?
பொருளாதாரச் சூழல் இப்படித்தான் தன்னைத் தகவமைத்துக்கொள்ளப்போகிறதென்றால் அரசின் கொள்கை இதை மாற்றிவிடாது. கட்டுப்படியாகாத பொருளாதாரக் கட்டுமானங்கள் தளர்ந்து தானாகவே விழ ஆரம்பிக்கும். இப்போதுள்ள அரசியல் சூழலில் பெரிய மாறுதல்களைக் கொண்டுவர முடியாது. ஏதாவது மாறுதல்கள் செய்யப்பட்டாலும் பெயரளவிலான மாறுதலாகத்தான் இருக்கும். பொருளாதாரம் வேறு தடத்தில் பயணப்பட ஆரம்பித்த பிறகு அதை எதிர்த்துப் போராடுவதில் அர்ததமே இல்லை.
ஜெர்மனி தன்னுடைய பொருளாதார முறைமை செயல்படவில்லை என்று கண்டது. தன்னுடைய தொழிலாளர்களுக்குக் குறைந்த ஊதியமே போதும் என்ற நிலையை எடுத்தது. அது இன்றுவரை தொடர்கிறது. ஜெர்மானியத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர்வது தாமதமானது. ஜெர்மானியப் பொருளாதாரம் நீக்குபோக்கானது என்பதால் தொடர்ச்சியான வளர்ச்சி என்ற பாதையில் அது பயணிக்கிறது. இப்போதைக்கு ஜெர்மனியால் அப்படித்தான் இருக்க முடியும்.
பிரான்ஸ் அதற்கு மாற்றாக, அதிக ஊதிய விகிதத்தை அப்படியே பராமரிக்க முயன்றது. இளவயது தொழிலாளர்களுக்கு அதிக ஊதியம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மூத்த தொழிலாளர்களுக்கு ஓய்வுகொடுத்தது. சில துறைகளில் புதியவர்களுக்கு வேலை கொடுப்பதைத் தாமதப்படுத்தியது. ஆனால் இறுதியாகப் பார்க்கும்போது நாட்டின் ஒட்டுமொத்த வேலையில்லாத் திண்டாட்டம் அதிக அளவுக்கு உயர்ந்தது. இது இப்படியே நீடித்தால் தொழிலாளர்களின் ஊதியக் குறைப்பு, நிறையப் பேருக்கு வேலையிழப்பு என்ற நிலைமை ஏற்படும். பிரான்ஸ் நாட்டில் பொருளாதார எதிர்காலம் குறித்து கவலையும் அவநம்பிக்கையும்தான் அதிகமாக இருக்கிறது.
ரோபாட் பொருளாதாரம்
இப்போதைய பொருளாதார விவாதங்கள் எல்லாம் ஊதிய வேறுபாடு பற்றியல்ல; பொருளாதாரம் பழைய நிலைக்குத் திரும்புமா, திரும்பாதா என்பதுபற்றித்தான். அங்கொன்றும் இங்கொன்றுமாக கோடிகாட்டப்படும் சில நிலைகளைப் பார்த்தால் எதிர்காலப் பொருளாதாரம் ‘ரோபாட்’ பொருளாதாரமாகிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. அதிக செல்வாக்கு பெற்றவர்கள் – அதாவது மேட்டுக்குடிகளிடம் அதிகாரம் குவிந்துவிடும். புதிய பொருளாதார முறைமையில் அமெரிக்காவால் ஆதிக்கம் செலுத்த முடியாது. அது அமெரிக்க நிறுவனங்களுக்கும் அமெரிக்கத் தொழிலாளர்களுக்கும் பெருத்த பின்னடைவாக இருக்கும்.
புதிய சூழலுக்குப் பொருளாதாரம் தன்னைத் தகவமைத்துக்கொள்வது எந்த நிலையில், எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் இப்போது கிடைத்துள்ள தரவுகளைக் கொண்டு பெரிய, மிக நிரந்தரமான மாற்றங்கள் குறித்து ஏதும் தெரிந்துகொள்ள முடியுமா என்று தெரியவில்லை.
- © தி நியூயார்க் டைம்ஸ்,
சுருக்கமாகத் தமிழில்: சாரி