புதன், 23 செப்டம்பர், 2015

மாணவர்களுக்கான இணைய தளங்கள்

http://tamil.thehindu.com/general/education/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6757963.ece


http://tamil.thehindu.com/general/education/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6757963.ece

தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தின்கீழ் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு என்று பல வலைத் தளங்கள் உள்ளன. கீழே உள்ள வலைத்தளங்கள் உபயோகமாக அமையும்.
பொதுத்தளங்கள்
அனைத்துப்பாடங்களுக்குமான குறிப்பேடுகள், பவர்பாயின்ட், விடியோ, ஆடியோ ஆகியவை கீழே உள்ள வலைத்தளத்தில் கிடைக்கின்றன .
தமிழ்
இவ்வலைப்பூவில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்ப் பாடத்திட்டம், வினாத்தாள் அமைப்பு, கற்றல் குறைவான மாணவர்களுக்கான வினா-வங்கி, ஒரு மதிப்பெண் கேள்விகள் ஆகியவை இடம்பெறு கிறது. பாடம் தொடர்பான கால்குலேட்டர், பவர்பாயின்ட் , வீடியோ, ஆடியோவும் கிடைக்கும்.
Maths
இத்தளத்தில் கணிதப் பாடக்குறிப்புகள் கிடைக்கும். பாடம் சம்பந்தமான பவர்பாயிண்ட் கிடைக்கிறது.
Science
இத்தளத்தில் அறிவியல் பாடக்குறிப்புகள் கிடைக்கும்.
தொகுப்பு: ரா.தாமோதரன்,
தமிழாசிரியர், தஞ்சாவூர்

மனதின் ஆழத்தை அளந்தவர்!

“பனிப்பாறை போன்றது மனம். ஏழில் ஒரு பங்கு மட்டுமே தண்ணீருக்கு மேலே மிதக்கும்” எனும் சுவாரஸ்யமான ஒப்புமையால் மனதின் ஆழத்தை விளக்கியவர் சிக்மண்ட் பிராய்ட்.
ஆஸ்திரியாவைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான இவர்தான் முதன்முதலில் மனிதர்களின் பல்வேறு செயல்பாடுகளுக்கு முக்கியக் காரணம் மனம்தான் என அறிவியல்பூர்வமாக நிரூபித்தார்.
இயல்பாக இருக்கும் ஒருவர் திடீரென விசித்திரமாக நடந்துகொள்ளக் காரணம் பேய், பிசாசு போன்ற அமானுஷ்யச் சக்திகள் அல்ல; ஆழ்மனதில் ஏற்படும் பாதிப்புகளே என விளக்கினார். ‘இட்’, ‘ஈகோ’, ‘சூப்பர் ஈகோ’ எனும் மூன்று அடுக்குகள் உள்ளன. மற்ற உடல் உறுப்புகள்போல இவற்றுக்கு உருவம் கிடையாது. ஆனால் இவைதான் நம்மைத் தொடர்ந்து வழிநடத்துகின்றன என்றார்.
விழிப்பு நிலைபோலவே தூக்கத்திலும் மனம் மிக உற்சாகமாகச் செயல்படும். அப்போது ஆழ்மனதில் அடக்கிவைத்திருந்த விஷயங்களைக் கிளறி எடுக்கும். அப்படிப்பட்ட உள்மனதின் வெளிப்பாடுகளே கனவு என ’கனவுகளின் விளக்கம்’ புத்தகத்தில் எடுத்துரைத்தார். நவீன மனநல மருத்துவத்தின் தந்தை எனப் போற்றப்படும் பிராய்ட் தனது 83-வது வயதில் 1939 செப்டம்பர் 23-ல் மரணமடைந்தார்.
-சரித்திரன்.

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

விமான விபத்தில் இறக்கவில்லை: 1948 வரை சீனாவில் உயிரோடு இருந்தார் நேதாஜி

விமான விபத்தில் இறக்கவில்லை: 1948 வரை சீனாவில் உயிரோடு இருந்தார் நேதாஜி - மேற்குவங்க அரசு வெளியிட்ட ஆவணத்தில் தகவல்

ஐஏஎன்எஸ்
COMMENT (7)   ·   PRINT   ·   T+  
1
‘‘சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், விமான விபத்தில் இறக்கவில்லை. 1948-ம் ஆண்டு வரை அவர் சீனாவில் வாழ்ந்தார்’’ என்று மேற்குவங்க அரசு வெளியிட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இறுதி காலம் குறித்த மர்மம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் மேற்குவங்க அரசு தன்னிடம் உள்ள 64 முக்கிய ஆவணங்களை கடந்த வெள்ளிக் கிழமை வெளியிட்டது.
அந்த ஆவணங்களின் நகல் கள், கொல்கத்தா போலீஸ் அருங் காட்சியகத்தில் பொதுமக்கள் பார் வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
‘கடந்த 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி, பார்மோசா (இப்போது தைவானில் உள்ளது) என்ற பகுதியில் விமான விபத்தில் நேதாஜி பலியானார்’ என்று அதே ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி டோக்கியோ வானொலியில் செய்தி வெளியானது.
அந்தச் செய்தியை நேதாஜியின் தீவிர ஆதரவாளர்கள் அப்போதே நிராகரித்தனர். அவர் உயிருடன்தான் இருக்கிறார் என்று கூறிவந்தனர்.
இந்நிலையில் மேற்குவங்க அரசு வெளியிட்ட ஆவணங்களில், நேதாஜி 1948-ம் ஆண்டு வரை உயிருடன் இருந்ததாக அவருடைய நெருங்கிய உதவியாளர் தேவ்நாத் தாஸ் என்பவர் கூறிய செய்தி இடம்பெற்றுள்ளது. சீனாவின் மன்சூரியா என்ற இடத்தில் 1948 வரை நேதாஜி உயிர் வாழ் ந்தார் என்று தேவ்நாத் தாஸ் கூறி யுள்ளார். இந்த தகவல் 22-வது எண் கொண்ட ஆவணத்தில் உள்ளது.
விமான விபத்தில் நேதாஜி இறந்துவிட்டதாக தகவல் வெளி யானவுடன், அப்போதைய பெங்கால் அரசு தீவிர புலனாய் வில் இறங்கி உள்ளது.
அப்போது தேவ்நாத் தாஸ் உட்பட பலருடைய தகவல்களை போலீஸ் துணை ஆணையர் அலுவலகம் திரட்டி உள்ளது. அதில், 1948, ஆகஸ்ட் 9-ம் தேதியிட்ட ஆவணத்தில், ‘‘இந்திய தேசிய ராணுவத்தின் முன்னாள் தலைவர் தேவ்நாத் தாஸ், காங்கிரஸுக்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்தவர். அவர்தான், ‘நேதாஜி உயிருடன் இருக்கிறார். சீனாவின் மன்சூரியா பகுதியில் இருக்கிறார்’ என்று கூறிவந்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் விமான விபத்து நடப்பதற்கு முன்பு, இரண்டாம் உலகப் போருக்குப் பின் 3-ம் உலகப் போர் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று நேதாஜி தன்னிடம் கூறியதாக தேவ்நாத் தாஸ் கூறிவந்துள்ளார்.
மேலும், சீனாவில் இருந்து கொண்டே இந்தியாவில் ஏற்படும் மாற்றங்கள், உலக நாடுகளில் ஏற்படும் மாற்றங்கள், சூழ்நிலைகளை நேதாஜி கண்காணித்து வந்தார் என்றும் தேவ்நாத் தாஸ் கூறியுள்ளார். மேலும், தெற்கு கொல்கத்தா தொகுதியில் அப்போது நடை பெற்ற இடைத்தேர்தலில் தேவ் நாத் தாஸ் போட்டியிடலாம் என்ற பேச்சு அடிபட்டதாக அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட் டுள்ளது.
எனினும், தேவ்நாத் தாஸ் அப்போதைய இந்திய அரசை கண்டித்து ஆவேசமாக பேசிய தகவல்கள் மட்டும் தான் ஆவணங்களில் குறிப்பிடப் பட்டுள்ளன. ஆனால், காங் கிரஸுக்கு எதிராக அவர் செயல்பட்டதற்கான குறிப்புகள் காணப்படவில்லை.
காங்கிரஸ் தலைவராக இருந்த நேதாஜி இரண்டாம் உலகப் போரின்போது பல தலைவர்களை சந்தித்துள்ளார். அத்துடன் ஜப்பான் உதவியுடன் இந்திய தேசிய ராணுவத்தை சிங்கப்பூரில் தொடங்கினார். அதன்பின், பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தை கடுமையாக எதிர்த்தார்.
மேலும், வெளிநாட்டில் தஞ்சம் அடைந்த நிலையிலேயே தற்காலிக அரசை கடந்த 1943-ம் ஆண்டு நேதாஜி நிறுவி செயல்படுத்தி வந்தார். அந்த அரசில் தேவ்நாத் தாஸ் முக்கிய உறுப்பினராக செயல்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது

-------

உத்தரப் பிரதேசத்தின் ஆசம்கர் மாவட்டம், முபாரக்பூர் வட்டம், டக்கோவா கிராமம். இங்கேதான் இருக்கிறார் சைபுத்தீன் என்கிற நிஜாமுதீன். அவர் வைத்திருக்கும் பழைய பர்மா பாஸ்போர்ட்டின்படி இப்போது அவருக்கு வயது 115. சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கையோடு பயணித்தவர்களில் முக்கியமான நேரடி சாட்சியங்களில் ஒருவர். அவருடைய மெய்க்காவலர்களில் ஒருவர். போஸ் சம்பந்தமான ஆவணங்களை மம்தா பானர்ஜி அரசு வெளியிட்டது நாடெங்கும் பரபரப்பை உண்டாக்கியிருக்கும் சூழலில், நிஜாமுதீன் பகிர்ந்துகொள்ளும் செய்திகள் போஸ் தொடர்பான மர்ம முடிச்சுகளை மேலும் அவிழ்க்கின்றன.
* சுபாஷ் சந்திர போஸிடம் நீங்கள் பணியில் சேர்ந்தது எப்படி?
பிழைப்புக்காக தம் குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்றுவிட்ட எனது தந்தை அங்கு ஒரு உணவு விடுதி நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆண்ட பிரிட்டிஷ் அரசு என்னுடன் சேர்த்து பல இளைஞர்களை பலவந்தமாக தம் படையில் சேர்த்து கொண்டது. அந்தப் பணியின் போது 1943ஆம் ஆண்டு ஒரு ஆங்கிலேய மேஜர் ஜெனரல், ''படை வீரர்களில் எத்தனை பேர் இறந்தாலும் கவலை இல்லை. ஆனால், பொதி சுமக்கும் ஒரு கோவேறு கழுதை கூட பலியாகி விடக் கூடாது. ஏனெனில், நம் சுமைகளை தூக்கும் அவை இந்தியர்களைவிட முக்கியமானவை!'' என அறிவித்தது எங்கள் மனதை மிகவும் புண்படுத்தி விட்டது. இதற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்த எங்கள் முகாமினர் சில ஆங்கிலேயர்களை சுட்டு வீழ்த்திவிட்டு படையை விட்டு வெளியேறி விட்டோம்.
அப்போது சிங்கப்பூரின் கேத்தோ எனும் அரங்கில் இந்திய தேசியப் படையின் தலைவராகப் பதவி ஏற்ற சுபாஷ் சந்திரபோஸ்ஜியிடம் சென்று இணைந்து விட்டோம். அங்குதான் இந்தியாவின் சுதந்திர கீதம் முதன் முறையாக இந்தியில் பாடப்பட்டது. இதில் அவர் எனது ஆஜானுபாகுவான உடல் அமைப்பை பார்த்து என்னை தமது மெய்க்காப்பாளர்களில் ஒருவராக வைத்துக் கொண்டார். ஆங்கிலேயரிடம் இருந்து தப்ப வேண்டி, சைபுத்தீன் எனும் எனது பெயரை நிசாமுத்தீன் என மாற்றிக் கொண்டேன். பிறகு தம் படைக்கு ஆதரவு கேட்க வேண்டி நீர்மூழ்கி கப்பலில் ஜெர்மன் சென்று ஹிட்லரை சந்தித்தோம். அடுத்து ஜப்பான் சென்று அதன் ஜெனரல் தோஜோவையும் சந்தித்தோம். சிங்கப்பூரின் அருகிலுள்ள ஒரு தீவின் ராஜாவான சுல்தான் என்பவரை நேதாஜியுடன் சந்திக்க சென்றபோது அவர் 12 சிலிண்டர் கொண்ட லேங்கிங் ஜாபர் எனும் காரை பரிசாக அளித்தார். கப்பலில் பர்மாவின் காட்டுக்குக் கொண்டு வரப்பட்ட இந்த காரை முதன் முதலில் ஓட்டத் தொடங்கிய நான் அவரது ஆஸ்தான ஓட்டுநராகவும் ஆகி விட்டேன்.
* பர்மாவில் போஸ் தன் படை அமைத்த விதம் மீது உங்கள் நினைவில் உள்ளவற்றை கூறுங்களேன்?
பர்மாவில் முதல் வேலையாக பல சுரங்கப்பாதைகளை அமைத்தார் போஸ். பல்வேறு வழிகள் கொண்ட இவற்றில் நுழைந்து பர்மாவின் அடர்ந்த காடுகளில் தப்பி விடும்படியாக அவை அமைக்கப்பட்டன. இந்த சுரங்கங்கள் வழியாக இரவு நேரங்களில் கிளம்பி ஆங்கிலேயர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தி விட்டு அவர்கள் ஆயுதங்களைப் பறித்து வந்தோம். இவற்றில் எம்மை பொதுமக்கள் அடையாளம் கண்டால் ஆதரவு தர வேண்டி இந்திய தேசியப் படையின் சீருடைகளை அணிந்தோம். இதற்கு நாம் எதிர்பார்த்ததை விட அதிகமாக பொதுமக்கள் பெரும் ஆதரவு அளித்து பல்வேறு வகையான உதவிகள் செய்தனர். அடர்ந்த காடுகள் நிறைந்த நாட்டின் எல்லையாகவும், அருகில் சீனாவும் இருந்தமையால் போஸ், தாய்லாந்துக்கு அடுத்தபடியாக பர்மாவையும் தம் படையின் தலைமையிடமாக அமைத்தார்.
* நீங்கள் நேதாஜியிடம் கண்ட சிறப்பான குணநலன்கள் என்ன?
சாதி, மத பேதம் இன்றி நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வை முதலில் ஊட்டியவர் போஸ். இவர், தமக்கு எவ்வளவு பெரிய நஷ்டம் ஏற்பட்டாலும், கவலைப்படாமல் புன்முறுவலுடன் அமைதி காப்பார். அவர் கோபப்பட்டதை நான் ஒருமுறை கூடப் பார்த்ததில்லை. எங்கள் படையிலும் ஆங்கிலேயர்களுக்காக உளவு பார்த்த சிலர் இடம் பெற்றிருந்தனர். இதில் ஒருவர் எங்களுக்கு தேநீர் அளிக்க வந்துவிட்டு எங்கள் பேச்சை ஒட்டு கேட்டதை நான் பார்த்து விட்டேன். அவரை உடனடியாக எனது துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தி விட்டேன். இதைக் கண்டு போஸ் அமைதியாக, ''நீ அவசரப்பட்டு விட்டாய்! உளவு பார்த்தவனை உயிரோடு பிடித்து பேசியிருந்தால் அவன் மனம் திருந்தியிருக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். அவன் வீணாக தன் உயிரையும் இழந்திருக்க மாட்டான்.'' எனக் கூறினார். இந்த உளவாளி ஏற்கெனவே சில முறை நாம் தாக்குதல் நடத்து சென்றபோது 'விசில்' அடித்து ஆங்கிலேயருக்கு காட்டிக் கொடுத்தான். இதனால், அங்கு நாம் தாக்கப்பட்டு பின்வாங்கிய போதும் அந்த உளவாளி, எதேச்சையாக விசில் அடித்திருக்கலாம் எனக் கூறி எங்களை அமைதி காக்க வைத்தார்.
நேதாஜி தினமும் மாலை 4.00 மணிக்கு தம் படை வீரர்கள் இடையே நிகழ்த்திய தேசபக்த உரை மிகவும் உணர்ச்சிகரமானது. நாங்கள் நடத்தும் தாக்குதலில் காயம்பட்ட அல்லது உயிரிழந்தவர்களை அக் களத்தில் இருந்து தூக்கிக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்துவார். முழு இரவிற்கும் நேதாஜி ஒரே இடத்தில் உறங்க மாட்டார். பாதுகாப்பு கருதி, குறைந்த பட்சம் இரு இடங்களுக்கு மாறுவார். அவருடன் செல்லும் எங்களுக்கு உரிய நேரம் உறக்கம் கிடைக்கும்படி பார்த்துக் கொள்வார்.
* அவரிடம் பணி செய்த போது நீங்கள் இன்னும் மறக்காத நிகழ்ச்சி சிலவற்றை கூற முடியுமா?
நேதாஜியுடன் படைகளில் உதவி புரிய வந்த ஜப்பானியர்கள் முக்கியமானக் கட்டங்களில் முன்னே சென்று போரிடாமல் பின் வாங்கி கொண்டனர். அங்கு இந்தியர்களே முன் வரிசையில் போரிட வேண்டியதாயிற்று. நேதாஜி இறுதியாகப் போரிட்ட மணிப்பால் போர் மறக்க முடியாதது. இதில் நதியைக் கடக்கும் போது ஏற்பட்ட மழையின் காரணமாக நாம் அதிகம் பேர் பலியானோம். இத்துடன் எங்களுடன் போரிட்ட பெண் வீராங்கணைகளை காப்பதிலும் பாதிப்பு அதிகரித்தது. இவை அனைத்தையும் மீறி நாம் ஆங்கிலேயப் படையினரில் அதிகமானவர்களை வீழ்த்தி இருந்தோம்.
* போஸுடனான உங்கள் கடைசி சந்திப்பை நினைவு கூற முடியுமா?
பதில்: கடைசியாக நேதாஜியை நான் 1947 ஆம் ஆண்டு, (மாதம் நினைவில் இல்லை) பர்மாவின் சித்தான் நதியில் தயாராக இருந்த படகில் ஏற்றி அனுப்பி வைத்தோம். இந்த நதியின் இருகரைகளிலும் வளர்ந்திருந்த அடர்ந்தமரங்கள் அதில் பயணம் செய்பவர்களை மேலிருந்து யாரும் பார்த்திடா வண்ணம் மறைத்து விடும். இதற்காக லேங்கிங் ஜாபர் காரில் கொண்டு சென்றதுதான் நாங்கள் அவருடன் நடத்திய கடைசி சந்திப்பு ஆகும். மிகவும் குறுகலான நதியான அது இந்திய எல்லையில் உள்ள கடலில் போய் கலக்கிறது. அங்கு அவரை எங்கோ அழைத்துச் செல்ல ஒரு நீர்மூழ்கிக் கப்பல் தயாராக இருந்ததாகக் கூறப்பட்டது. சித்தான் நதிக்கரையில் நேதாஜியை நாம் விட்ட சில நிமிடங்களில் நின்றிருந்த கார் மீது மேலே பறந்து வந்த போர் ஜெட் விமானம் குண்டு வீசிவிட்டு பறந்து சென்றது. இதனால், அந்தக் கார் வீணானதுடன், அதில் இருந்து ஒருசிலரும் உயிர் இழந்தனர். நாங்கள் மட்டும் அதிர்ஷ்டவசமாக தப்பி விட்டோம்.
* அப்போது போஸுடன் படகில் சென்றவர்கள் யார் எனக் கூற முடியுமா?
அவரது மெய்க்காப்பாளராகவும், உதவியாளராகவும் பணியாற்றி வந்த சுவாமி என அழைக்கப்பட்ட ஒரு மதராஸி இருந்தார். சுமார் 10 ஜப்பானிய மற்றும் சில சீக்கிய வீரர்களும் அந்த படகில் போஸுடன் சென்றனர். நானும் அவருடன் வரும் விருப்பத்தை தெரிவித்தேன். இதற்கு மறுத்த போஸ், ‘நீ என்னுடன் வர வேண்டாம். நான் மீண்டும் உங்களை வந்து சந்திப்பேன். நீ இங்குள்ள நம் படை வீரர்கள் அனைவரையும் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அனுப்புவதில் மற்றவர்களுடன் சேர்ந்து உதவியாக இரு. நம் படை மற்றும் போர்களின் மீதான அனைத்து ஆதாரங்களையும் அழித்து அப்பாவி பொதுமக்கள் போல் நடந்து கொள்ளுங்கள். இல்லையேல், இந்தியாவில் நீங்கள் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் உங்கள் அனைவரையும் கைது செய்து கொன்று விடுவார்கள்’ என எச்சரித்து சென்றார்.
* போஸ் உங்களை விட்டுச் சென்ற பின் நடந்தது என்ன?
அவர் கூறியதை போலவே நாம் தலைமையிடத்தின் பெரும்பாலான தஸ்தாவேஜ்களை அழித்தோம். எங்களிடம் இருந்தவற்றையும் எரித்தோம். பிறகு பலரையும் கப்பலில் பாதுகாப்பாக இந்தியா அனுப்பி வைத்தோம். இதனால், நானும் எனது இந்திய தேசிய படையின் அடையாள அட்டை ஒன்றை தவிர அனைத்தையும் எரித்து விட்டேன். பிறகு, பர்மாவின் தலைநகரான ரங்கூனுக்கு வந்து அங்கிருந்த சீனா நாட்டு வங்கியில் ஓட்டுநர் பணியில் இணைந்து பணியாற்றி வந்தேன். பிறகு மணமுடித்து எனது குடும்பத்தாருடன் 1965-ல் நான் சொந்த கிராமமான இங்கு குடும்பத்துடன் வந்து தங்கி விட்டேன். ஆங்கிலேயருக்கு பயந்து நான் நேதாஜியின் படையில் செய்த பணி குறித்து முற்றிலும் மறைத்து விட்டேன். பிறகு கான்பூரில் வாழ்ந்து வந்த எங்கள் படையின் முன்னாள் பெண் கமாண்டர் லஷ்மி சேகாலை 2005 ஆம் ஆண்டு சந்திக்க சென்றபோது எனது விஷயம் முதன் முறையாக வெளியாகி விட்டது.
* சுதந்திரத்திற்கு பின் ஆங்கிலேயர்கள் உங்கள் படையினரை தேடும் முயற்சியில் ஈடுபட்டார்களா?
பெரும் முயற்சியில் ஈடுபட்டனர். நாள்தோறும் வீடு வீடாகச் சென்று ஒளிந்திருக்கும் எங்கள் படையினர் பிடிபட்டால் அவர்களைப் பிடித்து அடித்துக் கொன்று காட்டில் வீசினர். ஜப்பானியர்களை மட்டும் கொல்லாமல் சிறையில் அடைத்தும், துப்புறவுப் பணிகளிலும் ஈடுபடுத்தினர். பிறகு ஒரு கட்டத்தில் அனைவரையும் ஒரே சமயத்தில் விடுதலை செய்து ஜப்பானுக்கு அனுப்பி வைத்ததன் காரணம் இன்று வரை எனக்கு புரியாமல் உள்ளது. இதில், எனது சந்தேகம் என்னவெனில், நேதாஜிக்கு ஆதரவளித்து வந்த ஜப்பானின் பிரதமர் தோஜோவுடன் ஆங்கிலேயர்களுக்கு ஏதாவது ரகசிய உடன்படிக்கை ஏற்பட்டிருக்கலாம்.
* ஆகஸ்ட் 18, 1945-ல் போஸ் விமான விபத்தில் மறைந்ததாக வெளியான செய்தியைக் கேட்டு நீங்கள் எண்ணியது என்ன?
இந்த தகவல் இந்திய வானொலியில் ஒலிபரப்பான போது அதை போஸ்ஜியுடன் சேர்ந்து நாம் பலரும் பர்மாவின் காடுகளில் உள்ள முகாமில் கேட்டுக் கொண்டிருந்தோம். இதை கேட்ட போஸ்ஜி, ‘பாருங்கள் நான் விமான விபத்தில் இறக்கடிக்கப்பட்டு விட்டேன்.’ எனக் கூறி புன்முறுவல் பூத்தார். அதில் போஸுடன் இருந்ததாக ஹபீபுர் ரஹ்மான் என்பவர் பெயரும் வெளியானது. இவர், போஸுடன் இருந்த வரையில் ஆங்கிலேயர்களுக்கு உளவு பார்த்ததாக எங்களுக்கு சந்தேகம் இருந்து வந்தது. இந்தியரான அவர் இடையில் காணாமல் போனார். பிறகு ஆங்கிலேயரிடம் 'விலை' போனதால் அவரை சாட்சியாக வைத்து விமான விபத்து வெளியிடப்பட்டிருக்கலாம்.
* இதை கேள்விப்பட்ட போஸ், அந்த விபத்து பொய் என்றும் தாம் உயிருடன் இருப்பதாகவும் பொதுமக்களிடம் உண்மையைக் கூற முன்வராதது ஏன்?
இதன் தெளிவானக் காரணம் எனக்கு தெரியவில்லை. ஆனால், 1945-க்கு பின் உலகம் முழுவதும் காலனி ஆதிக்கம் முடிவிற்கு வரத் தொடங்கியது. இதனால், நம் நாட்டில் இருந்தும் ஆங்கிலேயர்கள் வெளியேறி விடுவார்கள் பிறகு நாம் இந்தியா திரும்பலாம் என போஸ் காத்துக் கொண்டிருந்தார். ஆனால், அவரை திரும்பினால் தாம் பதவியில் அமர முடியாது என சில காங்கிரஸார் திட்டமிட்டு சதி செய்யத் துவங்கினர். நேரு, காந்திஜி மற்றும் ஆங்கிலேயர்களுக்கு இடையே சுதந்திரம் அளிப்பதற்கான ஒப்பந்தத்தில் நாடு திரும்பும் ஆங்கிலேயரிடம் போஸ்ஜியை ஒப்படைக்க வேண்டும் என்றானதாகவும் அவருக்கு ஒரு தகவல் கிடைத்திருந்தது. இதனால், வேறு வழியின்றி போஸ், பர்மாவில் இருந்து வெளியேறி தப்பும் முயற்சியில் இறங்க வேண்டியதாயிற்று. ஏனெனில், அதற்கு சற்று முன்பாக நடந்த இம்பால் போரில் போஸுக்கு ஏற்பட்ட படுதோல்விக்கு பின் ஜப்பானியர்கள் ஆங்கிலேயர்களிடம் சரண் அடைந்து விட்டனர். இதனால், இந்திய தேசிய படை கிட்டத்தட்ட முடிந்து போனது. பிறகு போஸுடன் நாம் பர்மியக் காடுகளில் தலைமறைவாகத்தான் இருந்தோம் எனக் கூறலாம். எனவே, அவர் தலைமறைவு வாழ்க்கைக்கான முடிவு எடுத்திருக்கலாம்.
* இதன் பிறகு நீங்கள் உட்பட அவருக்கு நெருக்கமானவர்கள் போஸை தேடும் முயற்சியில் ஈடுபட்டீர்களா?
நான் எனது சொந்த முயற்சியில் 1955 ஆம் ஆண்டில் ஒருமுறை கல்கத்தா வந்து அவரை தேடிச் சென்றேன். யாரிடமும் போஸ் பற்றி விசாரிக்காமல் அவர் என் கண்களில் எங்காவது தென்படுகிறாரா எனத் துழாவிப் பார்த்தேன். அப்போது, அவரது குடும்பத்தாரின் வீட்டை சுற்றி இருந்த உளவு போலீஸாரிடம் சிக்கினேன். அவர்கள் விசாரணையில் நான் ஒரு பிச்சைக்கார நாடோடி என நாடகமாடி நம்ப வைத்து விட்டு தப்பி மீண்டும் பர்மாவிற்கு திரும்பி விட்டேன்.
* உபியின் பைஸாபாத்தில் வாழ்ந்த கும்நாமி பாபா தான் நேதாஜி எனக் கூறப்படுவதை நம்புகிறீர்களா?
எனக்கு அவர் மீது நம்பிக்கை இல்லை. நிச்சயமாக போஸ் அயோத்தி வரை வந்து யாரையும் தொடர்பு கொள்ளாமல் இருந்திருக்க மாட்டார். அந்த பாபா இறந்த பின் இவர் தான் போஸா? என உறுதி செய்யும் பொருட்டு அவரது போட்டோக்கள் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதை பார்த்த போது, பாபாவின் முகம் முற்றிலும் வேறு மாதிரியாக இருந்தது எனக்கு தெரிய வந்தது. ஒருவேளை அந்த பாபா உயிருடன் இருக்கும் போது என்னை அழைத்து கேட்டிருந்தால் அவரது உடல் அங்கங்களைப் பார்த்தே அவர் நேதாஜியா? இல்லையா? என்பதை உறுதி செய்திருப்பேன்.
* இந்த கும்நாமி பாபா தான் நேதாஜி என உறுதி செய்யாமலேயே அவருக்கு நினைவுச்சின்னம் கட்டும் உபி அரசின் செயல் குறித்து தங்கள் கருத்து என்ன?
இதன் காரணம் எனக்குப் புரியவில்லை. இதை சமாஜ்வாதி அரசு செய்வது ஏன் என நானும் அறிய ஆவலாக இருக்கிறேன்.
* நேதாஜியின் மணவாழ்க்கை குறித்து கூற முடியுமா?
அவர் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக உலவும் செய்திகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. காரணம், அவர் எங்களுடன் இருந்தவரை முற்றிலும் பிரம்மச்சாரியாகவே இருந்தார். சைவ உணவுகளை மட்டும் அருந்தினார். அவரை தனியாகத்தான் நாம் அனைவரும் பார்த்து வந்தோமே தவிர, ஒருமுறை கூட போஸுடன் அவரது குடும்பத்தாரைப் பார்த்ததில்லை. அவர்களைப் பற்றி போஸ் எங்களிடம் பேசியதும் கிடையாது. ஆனால், அவர் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்திருந்ததை அனைவரும் அறிந்திருந்தோம்.
* தற்போது போஸின் கொள்ளுப் பேத்தியான ராஜ்யஸ்ரீயுடன் உங்கள் போன்றவர்கள் இணைந்து அவரது தேடலுக்காக தொடங்கிய அமைப்பின் பலன் என்ன?
இன்னும் சொல்லும்படியான பலன் கிடைக்கவில்லை. ஆனால், அவரை பற்றிய மர்மங்களை விலக்கும் எங்கள் முயற்சியின் மீது நல்ல விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இதன்மூலம், நேதாஜி மீதான கோப்புகள் சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் இங்கிலாந்து மற்றும் ஜெர்மன் ஆகிய நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட கோப்புகளை வெளிப்படுத்தும் நிலை உருவாகி வருவது மகிழ்ச்சி. இத்துடன் தற்போது 118 வயதாகும் நேதாஜி என்னவானார் என்பதும் தெரிய வரும் என்பது எங்கள் நம்பிக்கை.
* சுதந்திரப் போராட்டத் தியாகிகள் பெறும் அரசு பலன் உங்கள் படையினருக்கு கிடைக்காமல் இருப்பது குறித்து தங்கள் கருத்து?
இது மிக, மிக வேதனையான ஒரு விஷயம். ஏனெனில், ஆங்கிலேயர்களிடம் இருந்து நம் நாட்டை விடுவிக்க வேண்டி அவர்களுடன் நேரிடையாகப் போரிட்டதும், உயிரிழந்ததும் நேதாஜியின் இந்திய தேசியப் படையினர் தான். ஆனால், நம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பொதுமக்கள் அனைவரும் மகிழ்வுடன் இருக்க, எங்களுக்கு மட்டும் தலைமறைவு வாழ்க்கை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. உண்மையிலேயே நாட்டின் சுதந்திரத்திற்காக போரிட்ட நேதாஜி இங்கு திரும்பி வரவும் முடியாமல் போனது. இதற்கு, காந்திஜி மற்றும் நேருஜியின் சேர்ந்து நடத்திய பதவி அரசியல் காரணமானது. நேதாஜி மட்டும் சுதந்திரத்துக்குப் பின் இங்கு வந்திருந்தால் இந்த நாட்டைப் பிரிக்க அனுமதித்திருக்க மாட்டார். இந்த பிரிவு இல்லாமல் நம்முடன் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் இணைந்திருந்தால் நாம் தான் உலகின் பலம் வாய்ந்த நாடாக இருந்திருப்போம். இதுவும் முகம்மது அலி ஜின்னாவின் பதவி அரசியலால் ஏற்பட்டது. இதற்காக எங்கள் படையினர் அவர்களை என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள். நமக்கு கிடைத்த சுத்ந்திரம், அஹிம்சை மற்றும் தர்ணா போராட்டத்தில் அல்ல தவிர எங்கள் படையினர் நடத்திய போர் மற்றும் உயிரிழப்பு என்பது எங்கள் கருத்து.
நேதாஜியின் மீதான உண்மைகள் மறைக்கப்பட்டதன் பின்னணியில் சுதந்திரத்திற்கு பின் அடையும் பதவி அரசியல் மறைந்து இருந்ததை தற்போது பொதுமக்கள் மெல்ல, மெல்ல புரிந்துகொண்டு வருகிறார்கள். இதன் முழு உண்மை ஆதாரங்களுடன் விரைவில் வெளியாகும் நாளும் அதிக தூரம் இல்லை. அப்போதுதான் எங்களுக்கு தியாகிகளுக்கான அரசு சலுகை கிடைக்கும் எனில், இதை அனுபவிக்க நாம் உயிருடன் இருப்போமா எனத் தெரியவில்லை. ஆனால், மக்களவை தேர்தலில் போட்டியிட நரேந்திர மோடி முதன்முறையாக வாரணாசி வந்த போது என்னை மேடையில் அழைத்து பொதுமக்கள் முன் ஆசி பெற்றார். இதனால், அவர் எங்கள் படையினருக்கு கண்டிப்பாக ஏதாவது செய்வார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்.
* உங்கள் காலத்திற்கும், இப்போது உள்ள மக்களுக்கும் இடையே இருக்கும் தேசபக்தியில் நீங்கள் காணும் பெரிய வித்தியாசம் என்ன?
அன்றைய மக்கள் நம் நாடு ஆங்கிலேயரிடம் இருந்து விடுபட்ட பிறகு, நாம் அனைவரும் நமது சொந்த சட்ட, திட்டங்களை வகுத்து கொண்டு நிம்மதியாக இருப்போம் எனத் எண்ணியிருந்தோம். ஆனால், அந்த நிலை இன்னும் மாறவில்லை. நம் நாட்டில் இருந்து வெளியேறினாலும் தனது சட்டங்களை நம் நாட்டின் அரசுப் பதவிகளில் அமர்த்தி ஆங்கிலேயர்கள் சென்று விட்டனர். அவர்கள் இல்லை என்றாலும் அவர்களது ஆட்சி நம் இந்தியர்களால் தொடர்ந்து வருகிறது.
ஆர்.ஷபிமுன்னா - தொடர்புக்கு: shaffimunna.r@thehindutamil.co.in

என்னைச் செதுக்கிய மாணவர்கள்: ஆய்வுக்கூடக் கோமாளிகள் - ஆயிஷா இரா. நடராசன்

ஆயிஷா இரா. நடராசன்
COMMENT (1)   ·   PRINT   ·   T+  
2
ஓவியம்: வெங்கி
ஓவியம்: வெங்கி
சரியா, தவறா என உலகம் இதுவரை வைத்துள்ள அறிவைப் பரிசோதிக்கும் வகுப்பறையாக அறிவியல் கல்வி இல்லாமல் அறிவியல் பாடங்களை கட்டளைகள் போல மாணவர்கள் முன்வைக்கிறது. அவற்றைக் குருட்டு மனப்பாடம் செய்து பள்ளித்தேர்வில் நகல் செய்வதுபோல மாறிவிட்டது. இது துரதிர்ஷ்டவசமான சூழல்
-இந்தியக் கல்விமுறையை ஆராய்வதற்கு மத்திய அரசு 1964-ல் நியமித்த கோத்தாரி குழுவின் அறிக்கை.
தமிழகத்தில் ஒவ்வொரு உயர்நிலைப்பள்ளியிலும் குறைந்தபட்சம் இரு ஆய்வகங்கள். மேல்நிலைப்பள்ளியில் இயற்பியல், வேதியியல், உயிரியல் என மூன்றுக்கும் தனித்தனியாக ஆய்வகங்கள் வேண்டும். அதுதான் அரசாங்க விதிமுறை. அப்படிப் பார்த்தால் நம்மிடம் லட்சக்கணக்கான ஆய்வுக்கூடங்கள் இருக்கின்றன.
அப்படியிருந்தும் நம் குழந்தைகள் படைப்பாற்றலைப் பயன்படுத்தி புதிதாக எதையுமே கண்டுபிடிக்க முடியாதது ஏன்?
அறிவியல் நாடகம்
யாரோ, எங்கோ, செய்து பார்த்த ஆய்வுகளை அப்படியே திரும்பச் செய்து பார்த்து மனப்பாடம் செய்து அவர்கள் வந்தடைந்த அதே முடிவுகளை மாணவர்கள் எட்டுகிற தற்போதைய செய்முறை அறிவியல் ஒரு நாடகம் போல இருக்கிறது.
நம் அறிவியல் வகுப்பறைகள் பாடப்பொருள் எனும் வரையறையை கடப்பதே கிடையாது. அந்த ஆய்வுக்கூடங்களுக்குள் நுழையும் குழந்தைகள் தங்களை விஞ்ஞானிகளாக எப்படி உணர்வார்கள்? இதற்கு மாற்றுவழியைத் தேட என்னைத் தூண்டியவர்கள்தான் ஆய்வுக்கூடக் கோமாளிகளான மகேந்திரனும் இஸ்மாயிலும்.
ஆய்வுக்கூடங்கள் மதிப்பெண்களைத் துரத்தும் கல்வியின் அங்கமாகி விட்டன. வீட்டு மின்சாரத்தில் பியூஸ் போனால் போடத்தெரியாத மின் பொறியாளர். தனது இருசக்கர வாகனம் பழுதடைந்தால் ஆட்டோ மொபைல் பொறியியல் படித்தவர் ஒரு படிக்காத மெக்கானிக்கை நாடுகிறார். இத்தகையோரை உற்பத்திசெய்கிறது அறிவியல் கல்வி. பள்ளிப் பருவத்தின் இயல்பான அறிவியல் தேடலை பாதுகாத்து வளர்க்கும் இடங்களாக ஆய்வுக்கூடங்களை பயன்படுத்த முடியும். அப்படி பயன்படுத்தினால் உண்மையான அறிவியல் கல்வி மூடநம்பிக்கைகளுக்கு எளிதில் பலியாகும் (படித்த) ஏமாளிகளை உருவாக்காது.
சுனாமியும் அறிவியலும்
நம் அன்றாட வாழ்வில் கலந்துபோன மேட் இன் சைனா பொருட்களை மேட் இன் இந்தியாவாக மாற்றிடும் சக்தி உண்மையான அறிவியல் கல்விக்கு உண்டு. இதை எனக்குப் போதித்தவர்கள்ஆய்வுக்கூடக் கோமாளிகள் என்று நாங்கள் அழைத்த மகேந்திரனும், இஸ்மாயிலும்.
சுனாமி எனும் பேரழிவு எங்கள் ஊரைத் தாக்கிய வருடம். தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்காக, ஆய்வுகள் சமர்ப்பிக்க பள்ளி சார்பில் பலரைத் தேர்வுசெய்தோம். அதில் 11-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மகேந்திரனும், இஸ்மாயிலும் ஒரு தனி அணியாகச் செயல்பட அனுமதி கேட்டனர். அவர்கள் மீனவக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் சுனாமியில் பல உறவினர்களைப் பலிகொடுத்தவர்கள் என்பதும் எனக்குத் தெரியாது.
இது மாதிரி நேரங்களில் ஆசிரியர்கள்தான் ஏதாவது ஒரு தலைப்பைக் கொடுப்பார்கள். ஒரு கட்டுரையையே ஆய்வுக்கட்டுரை மாதிரி எழுதி ஏழெட்டு அட்டைகளில் படங்கள் வரைந்து அனுப்புவார்கள். அறிவியல் மாநாட்டு பங்கேற்பும் ஒரு சடங்கு போலவே நடக்கும்.
ஆனால், மகேந்திரனும், இஸ்மாயிலும் ‘சுனாமிக்குப் பின் கடல்’ என்று புதிய தலைப்பு சொல்லி அதற்கு அனுமதி கேட்டனர். நடக்கப்போவதை அறியாமலேயே ஒரு தலைமை ஆசிரியனாக, நான் யந்திரத்தனமாகத் தலையசைத்தேன்.
பாத்திரக்கடை யானைகள்
ஒரு வாரம் அவர்கள் பள்ளிக்கே வரவில்லை. வீட்டிலும் காணவில்லை எனப் பெற்றோர்கள் பதறினார்கள். ஆசிரியர்கள் அதிர்ந்தார்கள். எங்கிருந்தோ ஒருநாள் மதியம் இருவரும் சீருடை இல்லாமல் பல நாள் உறங்காத கண்களோடு பள்ளி வந்தனர். விதவிதமான மீன்களைக் கொண்டுவந்தனர். கடலில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் பலவிதச் சூழல்களில் எடுக்கப்பட்ட கடல்நீர் மாதிரிகள் பாட்டில்களில் வந்தன. , கப்பி, மண், ஷெல், சங்குகளை அவர்கள் வேதியியல் ஆய்வுக்கூடத்தில் கொட்டினார்கள்.
தண்ணீரில் பலவித உப்புகளின் அளவு, மண்ணின் கருப்புநிற மாற்றத்துக்கான காரணம் என நிஜமான சோதனைகளை அவர்கள் நடத்தினார்கள். உயிரியல் ஆய்வுக்கூடத்தில் புதிய வகை மீன்களை ஃபார்மலின் கரைசலில் இட்டு ஆராய்ந்தனர். இயற்பியல் ஆய்வுக்கூடத்தில் கடல்நீரின் மின்கடத்தும் திறன் மாறியதை ஆய்ந்தறிந்து அறிவித்தனர்.
ஆய்வகத்தின் ‘புனிதத்தை’ கெடுத்துப் பாத்திரக்கடையில் புகுந்த யானைகள்போல பொருட்களைச் சிதறடித்து ஆய்வுக்கூடக் கோமாளிகள் என்ற அவர்களின் பெயரை நிரூபித்தனர். நூற்றுக்கணக்கான மீனவர்களோடு நேர்காணல்கள் செய்து முடிவுகளை ஆட்சித்தலைவரிடம் அவர்கள் சமர்ப்பித்தனர். அந்த நாட்கள்தான் எங்கள் பள்ளி ஆய்வுக்கூடங்களின் பொற்காலம். அவர்களது ஆய்வுதான் தேசிய விருதும் பெற்றது.
ரப்பர் ஸ்டாம்புகள்
இந்தியாவின் முதல் பொறியியல் கல்லூரியைக் கோவையில் தொடங்கிய ஜி.டி நாயுடு. ஒரே ஒரு வருடம் கோட்பாடியல் (Theory) போதும். அடுத்த மூன்றாண்டுகள் ஆய்வுக் கூடங்களை உற்பத்தி நிலையங்களாக்கி, அந்த மாணவர்களை நேரடி மின்சாதன உற்பத்தியில் ஈடுபடுத்தி, உழைப்பூதியம் தரும் கல்வியாகவே பொறியியல் கல்வியை அவர் அறிமுகம் செய்தார். நாம் அதைச் சட்டமாக்கிப் பின்பற்றத் தவறினோம்.
அதைத்தான் சீனா இப்போது செய்கிறது. அங்கே பள்ளி, ஐ.டி.ஐ, பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சக்தியை உற்பத்தி சக்தியாகப் பயன்படுத்தி ‘மேட் இன் சீனா’ பொருட்கள் செய்யப்படுகின்றன. நமது ஆய்வுக்கூடங்களோ வெறும் மதிப்பெண்களை வழங்கும் ரப்பர் ஸ்டாம்புகளாகிவிட்டன.
நமது பள்ளி ஆய்வகங்களை முறைப்படி நாம் பயன்படுத்தமுடியும் என எனக்குக் காட்டிய, வாய்ப்பு கிடைத்திருந்தால் நோபல் பரிசு வரை போயிருக்க வேண்டிய அந்த ஆய்வுக்கூடக் கோமாளிகளில் இன்று மகேந்திரன் பி.எஸ்.ஸி வேளாண்மை கல்வி முடித்து விவசாயத்துறை வித்தகராகவும், இஸ்மாயில் கடல் பொறியாளராகிக் கப்பல் ராஜாவாகவும் இருக்கிறார்கள்.
தொடர்புக்கு: eranatarasan@yahoo.com

ஐ.டி. துறையில் மிகக் குறைந்த ஊதியம் வழங்குவதில் உலக அளவில் இந்திய நிறுவனங்கள் முன்னிலை

இன்ஜினீயரிங் படிப்பவர்களின் வாழ்க்கைக் கனவே முன்னணி ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றுவதுதான்.
அந்த நிறுவனங்களில் எவ்வளவு நபர்கள் பணியாற்றுகிறார்கள், அவர்களின் சந்தை எங்கு உள்ளது என்பது உள்ளிட்ட பல தகவல்கள் உங்களுக்காக.... (இந்தியாவில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் முதல் 3 நிறுவனங்கள்)


ஐ.டி. ஊழியர்களுக்கு மிகக் குறைந்த ஊதியம் வழங்குவதில் உலக அளவில் இந்திய நிறுவனங்கள் முன்னிலையில் உள்ளன. ஐ.டி. துறையின் ஊதிய அளவீடுகளில் இந்திய நிறுவனங்கள் மோசமான போக்கைக் கொண்டிருப்பது ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
மிகக் குறைந்த ஊதியம் வழங்கி, உலகின் மிகவும் மோசமான நிலையில் உள்ள நாடுகளில் முதல் 10 இடங்களுக்குள் இந்தியா இடம்பெற்றுள்ளது. இடைப்பட்ட நிலையில் பணிபுரியும் இந்திய ஐ.டி. மேலாளரின் சராசரி ஆண்டு ஊதியம் 41,213 டாலர்கள் (சுமார் ரூ.27 லட்சம்) எனில், சுவிட்சர்லாந்து மேலாளர் அதைப் போல நான்கு மடங்குக்கும் அதிகமான ஊதியத்தைப் பெறுகிறார்.
'மைஹைரிங்கிளப்.காம்' எனும் வேலைவாய்ப்பு வலைதள நிறுவனம் 2015-ம் ஆண்டில் ஐ.டி. ஊழியர்களுக்கான உலக அளவிலான ஊதிய ஆய்வை மேற்கொண்டது.
அதில், இந்தியா மிகவும் குறைவான சம்பளத்தைப் பெறுபவர்கள் பிரிவில் ஏழாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்திய ஐ.டி. மேலாளர்களின் சராசரி ஊதியம் 41,213 டாலர்களாக (சுமார் ரூ.27 லட்சம்) இருக்க, பல்கேரியா வெறும் 25,680 டாலர்கள் (சுமார் ரூ.17 லட்சம்) சம்பளத்துடன் முதல் இடத்தில் உள்ளது. 30,938 மற்றும் 34,423 டாலர்கள் ஊதியத்தோடு முறையே வியட்னாம் மற்றும் தாய்லாந்து அதற்கடுத்த இடங்களைப் பிடித்திருக்கின்றன.
அதைத்தொடர்ந்து இந்தோனேசிய நாட்டின் சராசரி சம்பளம் 34,780 டாலர்களாகவும், பிலிப்பைன்ஸ் (37,534 டாலர்கள்), இந்தியா (41,213 டாலர்கள்), சீனா (42,689 டாலர்கள்), செக் குடியரசு (43,219 டாலர்கள்) மற்றும் அர்ஜென்டீனா (51,380 டாலர்கள்) அடுத்தடுத்த இடங்களிலும் இருக்கின்றன.
மேலும் இது குறித்து ஆய்வு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் குமார் கூறும்போது, "மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் ஐ.டி. துறையின் அவுட்சோர்சிங், உலகளாவிய ஊதியத்தை நிர்ணயிக்கிறது.
கீழ்நிலை பொறுப்புகள், திறமைகள் மலிவாகக் கிடைக்கும் குறிப்பிட்ட சில பகுதிகளை ஆக்கிரமித்து விட்டன. மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் குறைவான அளவிலேயே மீதம் இருக்கும் வேலைகளுக்கு, அதிக தேவைகள் உருவாகிவிட்டன. இருந்தாலும் இந்தியா வளர்ச்சிப் பாதையில் மெல்ல மெல்ல நகர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால் எதிர்கால வளர்ச்சிக்கு, பணம் மட்டுமே பிரதானமாக இருக்கும் நிலை மாற வேண்டும்" என்கிறார்.
அதேநேரத்தில், சிறந்த ஊதியம் பெறும் ஐ.டி. ஊழியர்களின் வரிசையில் சுவிட்சர்லாந்து முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. சுவிஸ் ஐடி ஊழியர்களின் சராசரி ஆண்டு வருமானம் 1,71,465 டாலர்கள் (சுமார் ரூ.1 கோடியே 12 லட்சம்). அதற்கடுத்த இடத்தில் இருக்கும் பெல்ஜிய ஊழியர்களின் வருமானம் 1,52,430 டாலர்கள் (சுமார் ரூ.1 கோடி).
டென்மார்க் 1,38,920 டாலர்கள் ஆண்டு வருமானத்தோடு, சிறந்த ஊதியம் பெறும் ஐடி ஊழியர்களின் வரிசையில் மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. 1,32,877 டாலர்கள் மற்றும் 1,29,324 டாலர்களோடு, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.
குறைவான செலவு என்னும் காரணி காரணமாக, இந்தியா சிறந்த அவுட்சோர்சிங் நாடாக விளங்கினாலும், எதிர்காலத்தில் இந்நிலை மாறும்" என்கிறது அந்த ஆய்வு.
2015, ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான கால இடைவெளியில், 40 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 9,413 நிறுவனங்களில் பணிபுரியும் இடைநிலை ஐ.டி. ஊழியர்களின் ஆண்டு ஊதியம் மற்றும் ஊக்கத் தொகையின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



பெரியவர்களிடம் பேசுவோம்;

சமஸ்
COMMENT (4)   ·   PRINT   ·   T+  
2
அலுவலக வரவேற்பறையிலிருந்து, “செ.கணேசலிங்கன் வந்திருக்கிறார்” என்று தகவல் வந்தது. தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். ஈழத்தில் மார்க்சியப் பார்வையுடன் எழுத ஆரம்பித்தவர்களில் முன்னோடி. நாவல், சிறுகதை என்று புனைவுகளில் மட்டும் இல்லாமல், சமயம், சமூகவியல், அரசறிவியல், பெண்ணியம், கலை, திறனாய்வு என்று சகலப் பிரிவுகளிலும் எழுதிக் குவித்தவர். எல்லாவற்றையும்விட ஈழப் போராட்டத்தின் முக்கியமான சாட்சியங்களில் ஒருவர். ஒருகாலத்தில் போராளிகளுக்கு அரசியல் பாடம் எடுத்தவர். வயது இப்போது 87 ஆகிறது.
கணேசலிங்கன் நல்ல பேச்சாளியும்கூட. ஒரு காபி உள்ளே போனால், இலங்கை, மஹிந்த ராஜபட்ச விக்கரமசிங்க உள்கதைகள், புலிகள் விட்டுப்போன தங்கச் சுரங்கம் என்று வெள்ளமாகப் பேச்சு பாயும். வரவேற்பறைக்குச் சென்றபோது, கையில் ஒரு புத்தகத்துடன் சிரித்துக்கொண்டிருந்தார். “கொழும்பு போய் வந்தேன். இது புது நாவல். ‘சுசிலாவின் உயிரெச்சம்’. போன முறை கொடுத்துவிட்ட ‘பாலுமகேந்திரா’ புத்தகம் வாசிச்சீங்களா?” புத்தகத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுப்பதற்காக பேனாவை எடுக்கும்போது விரல்களில் அத்தனை நடுக்கம்.
பிரமிப்பாக இருந்தது. கடந்த ஒரு வருஷத்தில் அவர் எழுதியிருக்கும் மூன்றாவது புத்தகம் இது. கணேசலிங்கன் சென்ற பின் சகாக்களிடம் இதுபற்றிப் பேச்சு ஓடியது. சாரி சொன்னார், “அந்த உயிரிடம் சொல்ல அவ்வளவு இருக்கிறது; அவற்றை முடிந்தவரை யாரிடமாவது சொல்லிவிட அது துடிக்கிறது; அதுதான் அவரைத் தொடர்ந்து இயக்குகிறது.”
ஊரில் வீட்டுக்கு முன் குளம். இக்கரையில் பிள்ளையார் கோயில்; அக்கரையில் கனகாம்பாள் கோயில்; நடுவே ஆலமரத்தடி. மூன்றுமே பெரியவர்கள் உட்காரும் இடங்கள். வீட்டில், பள்ளிக்கூடங்களில் இருந்த நேரத்தைக் காட்டிலும் பிள்ளைகள் இங்குதான் அதிகம் கிடப்போம். பெரியவர்களின் பேச்சில் சொக்கிக்கிடப்போம்.
நகர்மய வாழ்க்கையில் கோயில் திண்ணைகளும் மரத்தடிகளும் சீந்துவாரற்றுப் போய்விட்டன. பிள்ளைகளைப் பள்ளிக்கூடங்கள் தின்றது போக, டிவியும் வீடியோ கேம்களும் பங்கிட்டுக்கொள்கின்றன. பெற்றவர்கள் நாம் முன்பைவிட நிறையப் பேசுகிறோம்; கேட்கிறோம்; தொலைபேசியில், செல்பேசியில், முகநூலில், மின்னஞ்சலில்.. மெய்நிகர் உலகம் ஆக்கிரமித்திருக்கும் இந்த உரையாடல் நேரில் நிற்கும் மனிதர்களைப் புறந்தள்ளிவிடுகிறது. பேச்சு கேட்டல் கவனித்தல் வார்த்தைகளின் வழியே அந்த உலகில் பிரவேசித்தல் அதில் வாழ்தல் எனும் அன்றைய பேச்சு மரபு அருகிவருகிறது; மாறாக, பேச்சு கேட்டல் உடனடியாகப் பதில் சொல்லுதல் எனும் புது வழக்கத்துக்கு மாறுகிறோம். பேச்சு வெறும் தகவல் சார்ந்த / உள்ளே நுழைய முடியாத வெற்று அரட்டையாக உருமாறும்போது பெரியவர்கள் அந்நியர்கள் ஆகிவிடுகிறார்கள்.
உலகில் பல நாடுகளிலும் / சமூகங்களிலும் இந்த மாற்றம் நிகழ்கிறது. எனினும், இந்தியர்களைப் போன்ற ஒரு சமூகத்துக்கு இது கூடுதல் பேரிழப்பு. ஏனென்றால், பிற சமூகங்களைப் போல, எதையும் பதிவுசெய்துவைக்கும் / ஆவணப்படுத்திவைக்கும் மரபு நம்மிடம் இல்லை. நம்முடைய தொன்மையான கலை இலக்கியங்கள், மருத்துவக் குறிப்புகளில் தொடங்கி குடும்ப வரலாறு வரை எல்லாமே கர்ணப்பரம்பரையாகத் தொடர்வதுதான். இந்த வாய்வழி மரபில் பேச்சு மூலமாகவே ஒரு தலைமுறையிடமிருந்து இன்னொரு தலைமுறைக்கு எல்லாச் செய்திகளும் கடத்தப்படுகின்றன. ஆக, இங்கே ஒரு பெரியவர் பேச யாருமற்றவராக ஆகும்போது, அவருடன் அவர் காலத்துச் செய்திகள் மட்டும் முடிந்துபோவதில்லை; கூடவே தலைமுறை தலைமுறையாகக் கடந்துவந்து அவரிடத்தில் நிரம்பியிருக்கும் செய்திகள் யாவும் முடிந்துவிடுகின்றன. கணேசலிங்கன் போன்ற சிலர் இதை அப்படி விட்டுவிடுவதாக இல்லை. எப்படியாவது தங்களுக்குள் இருக்கும் விஷயங்களைக் கடத்திவிடத் துடிக்கிறார்கள்.
ஏ.வி. தனுஷ்கோடி வகுப்பு எடுக்கிறார். அவருக்கு 5 மொழிகள் தெரியும். தமிழ், ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு, இந்தி. கூடவே பொருளியல், வணிகவியல் தெரியும். ஓவியம் தெரியும். புகழ்பெற்ற பல ஓவியக்காட்சிகளில் அவருடைய ஓவியங்கள் இடம்பெற்றிருக்கின்றன. நாடகம் தெரியும். நடிப்பு தெரியும். ‘மெட்றாஸ் பிளேயர்ஸ்’, ‘மேக்ஸ்முல்லர்பவன் தியேட்டர் குரூப்’பின் ஏராளமான ஆங்கில ஜெர்மன் நாடகங்களில் நடித்தவர் அவர். சில ஆங்கில பிரெஞ்சு படங்களிலும் நடித்திருக்கிறார். ‘கூத்துப்பட்டறை’யில் நாடகங்களை இயக்கியிருக்கிறார். ‘தி இந்து’, ‘ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ்’, ‘டிரஷர்’, ‘அசைட்’ ஆங்கிலப் பத்திரிகைகளில் பல ஆண்டுகள் நாடக விமர்சனங்கள் எழுதியிருக்கிறார். மொழிபெயர்ப்பு தெரியும். உலகின் உன்னதமான அதேசமயம் மிகச் சிக்கலான படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் பிரான்ஸ் காஃப்காவின் ‘விசாரணை’யை ஜெர்மனிலிருந்து நேரடியாகத் தமிழுக்குக் கொண்டுவந்தவர் அவர்.
தனுஷ்கோடிக்கு இப்போது 78 வயதாகிறது. தனக்குத் தெரிந்ததில் எது ஒன்றைக் கற்றுத்தரவும் தயாராக இருக்கிறார். இதற்கு அவர் தேர்ந்தெடுத்துக்கொண்ட வழி தனிவகுப்பு. தனுஷ்கோடியின் வகுப்புகள் வித்தியாசமானவை. ஒரு மணி நேரம் வகுப்பு என்றால், அந்த ஒரு மணி நேரமும் முழுக்க முழுக்க அந்த ஒரு மாணவருக்கே உரியது. ஒரு நாளைக்குக் குறைந்தது ஆறு மாணவர்களுடானாவது உரையா டுகிறார். “நம் ஒவ்வொருவரிடமும் சொல்லிக் கொடுக்க ஏதோ ஒன்று நிச்சயம் இருக்கும். அதைச் சொல்லிக்கொடுத்துவிடுவது கடமை.
என்னுடைய அப்பா ஏ.வி.லோகநாதன். நேர்மையான ஆட்சியர் என்று காமராஜரிடம் பெயரெடுத்தவர். மதிப்பீடுகள் இல்லாவிட்டால் வாழ்க்கைக்கே அர்த்தமில்லை என்று சொல்வார். மதிப்பீடுகள் என்கிற வார்த்தையே காலாவதியாகும் ஒரு காலகட்டத்தில் வாழ்கிறோம். எந்த வழியிலாவது பிள்ளைகளுக்கு மதிப்பீடுகளைச் சொல்லிகொடுத்துவிட வேண்டும்!” என்கிறார். வகுப்பெடுக்கும்போது அவரது மெல்லிய குரல் பல தருணங்களில் உடைகிறது. ஆனாலும், தளராமல் விஷயங்களைக் கடத்துகிறார் தனுஷ்கோடி.
காந்தியின் கடைசி நாட்களில் அவருடைய தனிச்செயலராக இருந்த வி.கல்யாணத்தைச் சமீபத்தில் சந்தித்தேன். வயது 95 ஆகிறது. வீட்டில் தனி மனிதராக இருக்கிறார். “இங்கே எல்லாமே நான்தான். நானே சமைப்பேன். நானே பாத்திரம் விளக்குவேன். நானே துவைப்பேன். நானே முடி வெட்டிக்கொள்வேன்” என்று உற்சாகம் கொப்பளிக்கப் பேசும் கல்யாணம் காலையில் 4 மணிக்கெல்லாம் எழுந்துவிடுகிறார். வீட்டில் தான் வளர்க்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுகிறார். பழுத்த இலைகளைப் பறிக்கிறார். உதிர்ந்த இலைகளைப் பெருக்கி உரமாக்குகிறார். காலை வேளை முழுவதும் அவருடைய செடிகளுக்கானது. எளிமையாக, அற்புதமாக சமைக்கிறார். “மூன்றே நிமிஷம். இங்கே கண்ணை மூடிக்கொண்டு நான் சமைப்பேன்” என்று சொல்லியவாறே அவர் நுழையும் சமையல் அறை கச்சிதமாக இருக்கிறது. பாத்திரங்களை எண்ணிவிடலாம்.
பிரிட்டீஷ் இந்தியாவில் அவர் அம்மா வாங்கிய குக்கரில் பிடியளவு அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகளை அடுத்தடுத்த அடுக்குகளில் வைத்து வேகவிடுகிறார். போத்தலில் இருக்கும் ஊறுகாய் இணை சேரும்போது எளிய உணவின் சுவை எங்கோ கூட்டிச் செல்கிறது. “மகாத்மாகிட்ட கத்துக்கிட்ட அனுபவங்களைவிட நான் சொல்ல ஏதாவது வேண்டுமா என்ன?” என்று கேட்கும் கல்யாணம் பள்ளி கல்லூரி மாணவர் களைத் தேடித்தேடிச் சென்று பேசுகிறார். சந்தித்த நாளில்கூட அன்றைக்குத்தான் கேரளம் சென்று திரும்பியிருந்தார். “கண்ணூருக்குப் பள்ளிக்கூட நிகழ்ச்சி ஒன்றுக்காகப் போயிருந்தேன். பிள்ளைகள்கூடத்தான் அதிகம் பேச வேண்டும் என்பார் மகாத்மா” என்கிறார்.
எல்லோரும் கணேசலிங்கன்கள், தனுஷ் கோடிகள், கல்யாணங்களாக மாறி நம்மைத் தேடி வர முடியுமா? பெரியவர்களிடம் பேசுவோம்; பிள்ளைகளை அவர்களிடம் பேசவைப்போம்; தேச நலன் கருதியேனும்!
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in