திங்கள், 24 மார்ச், 2014

Credit Rating

வாங்கிய கடனை திரும்பத் தரும் திறன் அல்லது தகுதி ஒரு தனி நபர் அல்லது நிறுவனத்திற்கு எந்த அளவுக்கு உள்ளது என்பதை ஆராய்ந்து கூறுவது ‘credit rating’ என்பதாகும். Standard and Poor’s, Fitch, Moody’s போன்ற பல நிறுவனங்கள் credit rating துறையில் உள்ளன. இந்தியாவில் CRISIL, ICRA போன்றவை இத்துறையில் குறிப்பிடத்தக்க நிறுவனங்களாகும்.
ஒரு நாட்டின் நிதி சந்தையில் பல நிறுவனங்கள் கடன் பத்திரங்களை விற்பனைக்கு வெளியிடுகின்றன. அந்த நிறுவனங்களின் நிதி நிலைமைகளை முழவதுமாக ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வது இயலாத காரியம். இந்த சூழலில் credit rating நிறுவனங்களின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது.
ஒரு நிறுவனம் எதற்காகக் கடன் வாங்குகிறது, அக்கடன் தொகை சரியாக முதலீடு செய்யப்படுமா? அவ்வாறு முதலீடு செய்தால் அதில் உள்ள ரிஸ்க் என்ன? எதிர்பார்க்கபட்ட லாபம் வருமா? இதுவரை அந்நிறுவனம் வாங்கிய கடன்களை எவ்வாறு திருப்பி செலுத்தியுள்ளது இது போன்ற பல கேள்விகளுக்கு பதில் தரக்கூடிய வகையில் credit rating நிறுவனத்தின் அறிக்கை இருக்கவேண்டும்.
 
***********
credit rating நிறுவனங்கள் சுதந்திரமாகவும், திறமையாகவும் செயல்பட வேண்டும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. credit rating நிறுவனங்களுக்கும், கடன் வாங்கும் நிறுவனங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கவேண்டும்; அப்போதுதான் credit rating நிறுவனங்கள் மற்ற நிறுவனங்களின் நிதி பற்றிய முழு விவரங்களையும் ஆராய்ந்து அறிக்கை வழங்க முடியும். இதனாலேயே, இந்த credit rating நிறுவனங்கள் மீது நேர்மையின்மை, தகுதியின்மை போன்ற குற்றச்சாட்டுகள் அவ்வப்போது கூறப்படுகின்றன. 2008-ம் ஆண்டு உலக நிதிச் சிக்கலுக்கு பிறகு credit rating நிறுவனங்கள் மீதான விமர்சனங்களும் அதிகமாகியுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக