“அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தமிழகத்தில் இதுவரை 33
நிறுவனங்களுடன் ரூ.31,706 கோடிக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டி
ருக்கின்றன. இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின் ஆய்வுப்படி, ஜூன் 2011
முதல் ஜனவரி 2013 வரை தமிழகத்தில் ஈர்க்கப்பட்ட முதலீட்டின் அளவு ரூ. 1.46 லட்சம்
கோடி. தமிழ்நாடு, முதலீட்டில் 18.2% வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இது குஜராத்,
மகாராஷ்டிரம், கர்நாடகத்தைவிடவும் அதிகம்” என்று சொல்லும் ஜெயலலிதா, தான் காண
விரும்புவதாகக் குறிப்பிடும் தேசத்தைப் பற்றிய விவரணைகளில் முதன்மையாக
இடம்பெற்றிருப்பது திறந்த சந்தையான தேசம். இது முக்கியமான ஒரு சமிக்ஞை. மோடி
எப்படியோ தானும் அப்படியே ‘வளர்ச்சியின் பிம்பம்’ என்கிற சமிக்ஞை.
மோடியை எந்தத் தொழில்துறை தூக்கிப்பிடிக்கிறதோ, அந்தத் தொழில்துறை
மோடி இல்லாத சூழலில், ஜெய லலிதாவைத் தாங்கிப் பிடிக்குமா? ஆம். நிச்சயம்
பிடிக்கும். ஏனென்றால், குஜராத் எப்படித் தொழிலதிபர்களின் பேட்டையாக இருக்கிறதோ,
அப்படித்தான் தமிழகமும் தொழிலதிபர்களின் பேட்டையாக இருக்கிறது. ஒரு சின்ன உதாரணம்,
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தொடர்பான ஒப்பீடு. குஜராத்தில், பூர்வாங்கமாக
அனுமதி தர ஏற்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் 43, சிறப்புப் பொருளாதார
மண்டலங்கள் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டவை 30, சிறப்புப் பொருளாதார
ஏற்றுமதி மண்டலங்கள் 18. தமிழகத்தில் பூர்வாங்கமாக அனுமதி தர ஏற்கப்பட்ட சிறப்புப்
பொருளாதார மண்டலங்கள் 67, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்று அதிகாரபூர்வமாக
அறிவிக்கப்பட்டவை 53, சிறப்புப் பொருளாதார ஏற்றுமதி மண்டலங்கள் 33. தேசிய ஊடகங்கள்
குஜராத்துடன் தமிழகத்தை ஒப்பிட்டு இன்றைக்கு எழுதும் ‘வளர்ச்சிக் கதைகள்’ இந்தப்
பின்னணியோடு இணைத்துக் கவனிக்க வேண்டியவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக