அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் நடப்பு நிதி ஆண்டில் 58,425 கோடி ரூபாயைத் திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதில் 43,425 கோடி ரூபாய் பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாகவும், 15,000 கோடி ரூபாயை மற்ற அரசு நிறுவனங்களில் இருக்கும் பங்குகளை விற்பதன் மூலமும் திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
கடந்த பிப்ரவரியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் 51,925 கோடி ரூபாயை திரட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
இப்போதைக்கு செயில் நிறுவனத்தில் ஐந்து சதவீத பங்குகளை விற்பதற்கு முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. பங்கு விலக்கல் துறை கோல் இந்தியா நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை விற்பதை பற்றி யோசித்துவருகிறது.
ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ஐந்து சதவீத பங்குகளை விற்பதன் மூலம் 17,000 கோடி ரூபாய் திரட்ட முடியும் எழன் அமைச்சரவைக் குறிப்பு தெரிவிக்கிறது.
பொதுத்துறை நிறுவனங்களில் பொதுமக்களின் பங்கு குறைந்தபட்சம் 25 சதவீதம் இருக்க வேண்டும் என்று செபி உத்தரவிட்டிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக