பொதுத்துறை வங்கிகள் தங்களது நிதி ஆதாரத்தை பெருக்கிக் கொள்வதற்கு வசதியாக அரசின் பங்கு அளவை 52 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கிகள் பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டலாம். இந்த நடவடிக்கை படிப்படியாக மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.
வங்கிகளில் அரசுக்குள்ள பங்கு அளவை 52 சதவீத அளவுக்குக் குறைப்பதன் மூலம் அரசுக்கு ரூ. 89,120 கோடி கிடைக்கும் என்று தெரிகிறது. பொதுத்துறை வங்கிகளில் அரசுக்கு 56.26 சதவீதம் முதல் 88.63 சதவீதம் வரை பங்குகள் உள்ளன.
2011-ம் ஆண்டிலிருந்து இதுவரை மத்திய அரசு வங்கிகளில் ரூ. 58,600 கோடியை மூலதனமாக விடுவித்துள்ளது.பொதுத்துறை வங்கிகள் 2018-ம் ஆண்டு தங்களது மூலதனத்தை ரூ. 2.40 லட்சம் கோடியாக உயர்த்த வேண்டும். அப்போதுதான் அவை பேசல்-3 என்ற நிலையை எட்ட முடியும். நடப்பு நிதி ஆண்டில் அரசு ரூ. 11,200 கோடியை வங்கிகளுக்கு அளித்துள்ளது.
தற்போதைய விதிகளின்படி பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்கு 51 சதவீதத்துக்கும் கீழாகக் குறையக் கூடாது என்பதாகும். வங்கிகளின் வாராக் கடன் ரூ. 1.64 லட்சம் கோடியாக உள்ளது என்று மற்றொரு கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக