செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: புதிய ஆதாரங்களுக்காக நாசாவை கவுரவித்த கூகுள்
Plots in Tambaram,Chennai - 600-2400 sqft Plots 13 Lac onward in Mannivakkam, West Tambaramwww.titaniumcity.co.in
செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதை கண்டுபிடித்துள்ள நாசாவுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதத்தில் இன்றைய கூகுள் டூடுல் முகப்புப் பக்கம் மாற்றப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பிவைக்கப்பட்ட அமெரிக்காவின் நாசா விண்கலன் நேற்று (திங்கள்கிழமை) புதிய படங்களை அனுப்பியது. அந்தப் புகைப்படங்களில், பள்ளத்தாக்குகளிலும், சரிவுகளிலும் நீண்ட நீரோடைகள் இருப்பதைக் காட்டும் ஆதாரங்கள் இடம்பெற்றிருந்தன.
இது தொடர்பாக வாஷிங்டன்னில் செய்தியாளர்களை சந்தித்த நாசா விஞ்ஞானிகள், "செவ்வாய் கிரகத்தில் திரவ நிலையில் தண்ணீர் இருப்பது உறுதியாகியுள்ளது. கிரகத்தின் மேற்பரப்பில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த நீரானது உப்புக்கரிக்கும் தன்மைகொண்டதாக இருக்க வாய்ப்புள்ளது.
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, அந்த கிரகம் இன்னமும் புவியியல் ரீதியில் உயிர்ப்போடு இருப்பதை உறுதி செய்கிறது.
எனவே, நீரோட்டம் இருப்பதால் செவ்வாய் கிரகத்தில் எளிமையான உயிரிகளும் இருக்கலாம் என்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகியிருக்கின்றன.
இதனைத் தொடர்ந்து அங்கு மனிதர்கள் வசிக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வை விஞ்ஞானிகள் தொடர உள்ளனர்" எனத் தெரிவித்தனர்.
மிகவும் வியக்கத்தக்க, பலன் தரக்கூடிய இந்த செய்தியை பாராட்டும் விதமாக கூகுள் நிறுவனம் இன்றைய டூடுலை தனது முகப்பில் மாற்றியுள்ளது.
கூகுளின் முகப்புப் பக்கத்தில் இருக்கும் அந்த டூடுலை கிளிக் செய்தால், செவ்வாய் கிரகம் குவளையில் இருக்கும் தண்ணீரை ஸ்ட்ரா மூலம் குடிப்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் விண்வெளி ஆராய்ச்சி கண்காணிப்பு மையத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருப்பதாக இந்திய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அத்துடன் அமெரிக்காவின் பல செயற்கைகோள்களும் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளன.
இந்தியாவின் முதல் விண்வெளி ஆராய்ச்சி கண்காணிப்பு மையத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருப்பதாக இந்திய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அத்துடன் அமெரிக்காவின் பல செயற்கைகோள்களும் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளன.
தென்னிந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்திலிருந்து ராக்கெட் மூலம் இவை அனைத்தும் திங்களன்று விண்ணில் ஏவப்பட்டுள்ளன.
அஸ்ட்ரோசாட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி கண்காணிப்பு மையமானது நட்சத்திரக் கூட்டங்களையும், தொலைதூர விண்வெளி கிரகங்களின் செயற்பாடுகளையும் விரிவாக ஆராயும்.
சர்வதேச அளவில் விண்வெளி ஆய்வுத்துறையில் இந்தியாவின் செல்வாக்கை அதிகரிக்கச் செய்யவேண்டும் என்கிற இந்திய அரசின் தொடர் முயற்சியின் ஒருபகுதியாகவே இன்றைய இந்த வெற்றிகரமான விண்வெளி செயற்பாடுகள் பார்க்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கான தனது மங்கள்யான் விண்கலனை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது பெரும் சாதனையாக பார்க்கப்பட்டது.
பிஎஸ்எல்வி சி-30 ராக்கெட் மூலம் விண்வெளி ஆய்வு செயற்கைக்கோள் 'ஆஸ்ட்ரோசாட்' இன்று (28-ம் தேதி) காலை 10 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள்களுடன் 6 வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் சரியான சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.
இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ), இந்தியாவின் முதலாவது விண்வெளி ஆய்வு செயற்கைக்கோளான 'ஆஸ்ட்ரோ சாட்' செயற்கைக்கோளை இன்று காலை 10 மணிக்கு ஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-30 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
ஒன்றரை டன் எடை கொண்ட ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோளுடன் கனடா, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் 2 சிறிய செயற்கைக் கோள்கள், அமெரிக்காவின் 4 நானோ செயற்கைக் கோள்கள் என மொத்தம் 6 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன.
ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் புற ஊதாக்கதிர்கள் மற்றும் எக்ஸ்ரே கதிர் மண்டலங்கள் கொண்ட விண்வெளிப் பகுதியை ஆய்வு செய்யும். பால்வெளி வீதியில் இருப்பதாக நம்பப்படும் கருந்துளை குறித்தும் இது ஆய்வு செய்யும். ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கான 50 மணி நேர ‘கவுன்ட்-டவுன்’ கடந்த சனிக் கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. இன்று விண்ணில் செலுத்தப்படுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தது. திட்டமிட்டபடி சரியாக காலை 10 மணிக்கு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.
விண்வெளி ஆராய்ச்சி துறை யில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய 3 நாடுகள் மட்டுமே இதுவரை விண்வெளி ஆய்வு செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளன. இந்நிலையில், ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டதால், இப்பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நீர் ஓடுவதைக் காட்டும் புதிய தரவுகளை நாசா வெளியிட்டிருக்கிறது. செவ்வாய் கிரகத்தில் எளிமையான உயிரிகள் இருக்கலாம் என்பதற்கான சாத்தியப்பாட்டையும் சிறிய அளவுக்கு இந்த கண்டுபிடிப்பு அதிகப்படுத்தியிருக்கிறது.
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நீர் ஓடுவதைக் காட்டும் புதிய தரவுகளை நாசா வெளியிட்டிருக்கிறது.
செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட சுற்றுகலன் அனுப்பி வைத்திருக்கும் புதிய படங்களில் பள்ளத்தாக்குகளிலும், சரிவுகளிலும் நீண்ட நீரோடைகள் இருப்பதைக் காட்டும் தெளிவான ஆதாரங்கள் காணப்படுகின்றன.
இன்றுவரை மேற்பரப்பில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த நீரானது உப்புக்கரிக்கும் தன்மைகொண்டதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
வாஷிங்க்டனில் இன்று திங்கட்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது இந்த தகவல்களை நாசா விஞ்ஞானிகள் வெளியிட்டனர்.
உப்புகளில் பலவகை உண்டு என்றும், அவரை கரைந்து நீராக ஓடுவதற்கான சுழலை உருவாக்குவதாகவும் விஞ்ஞானிகள் விளக்கினர்.
செவ்வாய் கிரகத்தில் திரவ வடிவில் நீர் இருப்பதானது, அந்த கிரகம் இன்னமும் புவியியல் ரீதியில் உயிர்ப்போடு இருப்பதை உறுதி செய்கிறது.
மேலும் செவ்வாய் கிரகத்தில் எளிமையான உயிரிகள் இருக்கலாம் என்பதற்கான சாத்தியப்பாட்டையும் சிறிதளவுக்கு இது அதிகப்படுத்தியிருக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக