1967ம் ஆண்டில் 800க்கும் மேற்பட்ட பொருட்களை சிறு மற்றும் குறுந்தொழில் மூலம் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் என்று மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது. காலப்போக்கில் அதில் இருந்த பொருட்கள் அடுத்தடுத்து நீக்கப்பட்டன. கடைசியாக 20 பொருட்கள் மட்டுமே அந்த பட்டியலில் இருந்தன. அந்த 20 பொருட்களையும் பட்டியலில் இருந்து நீக்கி மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டுள்ளது. பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பொருட்களில் ஊறுகாய், தீப்பெட்டி, பட்டாசு, ஊதுபத்தி, ஸ்டீல் மற்றும் அலுமினிய பாத்திரங்கள், ரொட்டி, நோட்டு புத்தகங்கள், கண்ணாடி வளையல் உள்ளிட்டவை உள்ளன. சிறுதொழிலுக்காக இந்த பொருட்கள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், பெரிய தொழில் நிறுவனங்கள் அதை சட்டவிரோதமாக கொள்முதல் செய்து தங்கள் பிராண்ட் பெயரில் விற்பது நீண்ட காலமாகவே நடந்து வந்ததால் பட்டியலில் இருந்த எல்லா பொருட்களும் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதோடு, சிறுதொழிலுக்கான ஒதுக்கீடு என்பதே லைசன்ஸ் ராஜ்ஜியத்தின் எச்சங்கள், அவற்றை துடைத்தெறிந்துவிட்டோம் என்றும் சொல்லியுள்ளனர்.
அரசின் ஆணையை பெரிய நிறுவனங்கள் மீறுவதை தடுக்க முடியாததால் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக