புதன், 8 ஏப்ரல், 2015

உளவியல் நிபுணர் கார்டனர்.

கல்விக்கு எதிரானதா?
கார்டனரின் இந்த ஆய்வு முறைப்படுத்தப்பட்ட கல்விக்கு எதிரான குரலாகத் தோன்றலாம். ஒன்று அல்லது இரண்டு அறிவுத்திறன்களைக் கற்பிப்பதே கடினம். இதில் எட்டு விதமான அறிவுத்திறன்கள் உள்ளன எனும்போது எப்படி சாத்தியப்படும் எனும் கேள்வி எழத்தான் செய்யும். இத்தகைய கேள்விக் கணைகள் கார்டனரை நோக்கி இன்றும் வீசப்படுகின்றன.

ஒரு மாணவரின் ஐ கியூ எனப்படும் மொழி, தர்க்கம் மற்றும் கணித அறிவை மட்டும் கண்டறிந்து அதன் அடிப்படையில் பயிற்றுவிக்கும் போக்கை மாற்ற வேண்டும் என்கிறார் கார்டனர். ஏனெனில் அவை மட்டுமின்றி இசை, உடற்கூறு மற்றும் விளையாட்டு, காட்சி மற்றும் வெளி, மனிதர்களோடு தொடர்பு கொள்ளுதல், தன்னிலை அறிதல், இயற்கை இப்படி எட்டு விதமான அறிவுத் திறன்கள் இருக்கின்றன. ஆகவே, ஒரே முறையில் கஷ்டப்பட்டு படித்தது போதும். இனி இஷ்டப்பட்ட விதங்களில் படிக்கலாம் என்பதுதான் கார்டனர் விடுக்கும் அழைப்பு.
கடந்த 25 ஆண்டுகளாக கார்டனரின் பன்முக அறிவுத்திறன் கோட்பாடு உலகெங்கிலும் பல சர்வதேசக் கல்விக் கூடங்களில் சோதிக்கப்பட்டு வருகிறது. அவ்வளவு ஏன்? இந்தியாவில் சென்னை, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் போன்ற பெரு நகரங்களில் உள்ள சர்வதேசப் பள்ளிகளில் பன்முக அறிவுத்திறன் கற்பித்தல் முறை அறிமுகமாகியுள்ளது. அவை செயல்படும்விதம், மக்களை சென்றடைய வேண்டிய விதம் குறித்துத் தொடர்ந்து பேசலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக