இரவுக்கும் பகலுக்கும் ஏற்ப மாறும் நமது உடலியக்கம் வெளிச்சத்தின் அளவால் மட்டுமின்றி, மாறும் வானின் நிறத்தாலும் கட்டுப்படுத்தப்படுகிறது என பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இரவுக்கும் பகலுக்கும் ஏற்ப மாறும் நமது உடலியக்கம் வெளிச்சத்தின் அளவால் மட்டுமின்றி, மாறும் வானின் நிறத்தாலும் கட்டுப்படுத்தப்படுகிறது என பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
நிற மாறுதல்கள் உடலியக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதென்று தெரியவந்திருப்பது இதுவே முய்தல் முறை.
மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் சுண்டெலிகளை வைத்து ஆய்வு செய்த விஞ்ஞானிகள் அவற்றுக்கென செயற்கை வானம் ஒன்றை உருவாக்கினர்.
வானத்தின் நிறத்தை மாற்றாமல் வெளிச்சத்தின் அளவை அவர்கள் இஷ்டத்துக்கு கூட்டிக் குறைத்தபோது, அந்த சுண்டெலிகளின் உடலியக்கம் வழமைக்கு மாறாக மாறியது.
ஆனால் வெளிச்சத்துக்கு ஏற்ப வானின் நிறத்தை மாற்றியபோது அவற்றின் உடலியக்கம் தாறுமாறாகவில்லை.
இரவும் பகலும் மாறி மாறி வேலைபார்ப்பதால் பாதிக்கப்படும் தொழிலாளர்கள் மற்றும் விமானப் பயணத்தின் பின்னர் பாதிக்கப்படுவோருக்கும் சிகிச்சையளிக்க இந்த ஆய்வு உதவுமென அதனை வழிநடத்திய டாக்டர்.திமோதி பிரவுன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக