இந்தியாவைச் சேர்ந்த நிறுவனங்கள் அமெரிக்காவில் 1,500 கோடி டாலர் முதலீடு செய்துள்ளன. இதன் மூலம் 91 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்று இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் கிராண்ட் தார்ன்டன் (ஜிடி) அமைப்பு வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.
நியூ ஜெர்சி, கலிபோர்னியா, டெக்சாஸ், இலினாய்ஸ், நியூயார்க் ஆகிய இடங்களில் உள்ள இந்திய நிறுவனங்களில் அமெரிக்கர்கள் நேரடியாக வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர். ``அமெரிக்க மண்ணில் இந்திய வேர்’’ என்ற தலைப்பில் கேபிடல் ஹில்லில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் இத்தகவல் வெளியிடப் பட்டுள்ளது.
மொத்தம் 100 இந்திய நிறுவனங் களில் 91 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவின் 35 மாகாணங்களில் செயல்படு கின்றன. இந்த 100 நிறுவனங்களின் மொத்த முதலீடு 1,530 கோடி டாலராகும். நியூ ஜெர்சியில் உள்ள நிறுவனம் மூலம் 9,278 பேருக்கும், கலிபோர்னியாவில் உள்ள நிறுவனம் 8,937 பேருக்கும் வேலை வாய்ப்பை அளித்துள்ளது. டெக்சாஸ் (6,230), இலினாய்ஸ் (4,799), நியூயார்க் (4,134) நகரங்களில் அதிகபட்ச எண்ணிக்கையிலானோருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
டெக்சாஸில் அதிகபட்சமாக 384 கோடி டாலரும், பென்சில்வேனியாவில் 356 கோடி டாலரும், மின்னசோட்டாவில் 180 கோடி டாலரும், நியூயார்க்கில் 101 கோடி டாலரும், நியூ ஜெர்சியில் 100 கோடி டாலரும் முதலீடு செய்யப்பட்டுள்ளன.
சராசரியாக ஒவ்வொரு மாகாணத்திலும் 44 கோடி டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 85 சதவீத நிறுவனங்கள் கூடுதலாக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன.
90 சதவீத நிறுவனங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் பல உள்ளூர்வாசிகளுக்கு அதாவது அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளன.
இந்நிறுவனங்களில் 40 சதவீதம் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களாகும். லைஃப் சயின்ஸைச் சேர்ந்த 14 சதவீத நிறுவனங்கள் செயல்படுகின்றன. உற்பத்தித் துறையில் 14 சதவீதமும், ஆட்டோமொபைல் துறையில் 4 சதவீத நிறுவனங்களும் இங்கு செயல்படுவதாக அறிக்கை தெரிவிக்கிறது.
டெக்சாஸ், பென்சில்வேனியா, மின்னசோட்டா, நியூயார்க், நியூஜெர்சி ஆகிய நகரங்களில் இந்திய நிறுவனங்களின் அந்நிய நேரடி முதலீடு (எப்டிஐ) அதிக அளவில் உள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. முதல் முறையாக ஒவ்வொரு நகரம் மற்றும் மாகாணத்தில் இந்திய நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள முதலீடுகள் மற்றும் அவற்றின் மூலம் கிடைத்துள்ள வேலை வாய்ப்பு உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அமெரிக்க பொருளாதார வளர்ச்சியில் இந்திய நிறுவனங்களின் பங்களிப்பு என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட இந்தக் கருத்தரங்கில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர். இதில் சிஐஐ பிரதிநிதிகள் மற்றும் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்திய நிறுவனங்கள் வெறுமனே இங்கு முதலீடு செய்து அதன் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை. அமெரிக்க பொருளாதார வளர்ச்சியில் ஒரு அங்கமாக அவை மாறியுள்ளன என்று இந்திய தூதர் அருண் கே சிங் தெரிவித்தார்.
சிஐஐ வெளியிட்டுள்ள இந்த அறிக்கையானது, அமெரிக்காவில் இந்திய நிறுவனங்களின் தாக்கம் மற்றும் இரு நாடுகளிடையேயான உறவை வலுப்படுத்தும் விதமாக உள்ளதாக அவர் மேலும் கூறினார்.
அமெரிக்காவில் முதலீடு செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக விளங்குகிறது. இது வர்த்த கத்தில் மிகவும் ஆரோக்கியமான சூழலை உருவாக்க உதவும். அத்துடன் பொருளாதார வளர்ச் சிக்கும் உறுதுணையாக இருக் கும் என்று அமெரிக்க ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மார்க் வார்னர் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக