நாடு முழுவதும் 12,700 காவல் நிலையங்கள் உள்ளன. இதில் 15.70 லட்சம் காவலர்கள் பணிபுரிகின்றனர். தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளி விவரப்படி, நாடு முழுவதும் கடந்த ஆண்டு மட்டும் 66.40 லட்சம் குற்ற வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. டெல்லியில் உள்ள 177 காவல் நிலையங்களில் 86 ஆயிரத்து 800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புகார் குறித்து 89 லட்சம் தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன.டந்த ஆண்டு மட்டும் ரூ.24,630 கோடி அளவுக்கு ‘சைபர் குற்றங்கள்’ நடந்துள்ளன.
தமிழகத்தில் 7 லட்சம் வழக்குகள்
வாய்வழி புகார் 56,066, எழுத்து மூலம் புகார் 3,52,470, எண் ‘100’க்கு வந்த அழைப்புகள் 3,066, காவல்துறையே நடவடிக்கை எடுத்த வழக்குகள் 2,85,076, பதிவான மொத்த வழக்குகள் 6,96,678. இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகள் 2,03,579. சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகள் 4,93,099, மொத்தம் 6,96,678. இது அகில இந்திய அளவில் பதிவான வழக்குகளில் 10.49 சதவீதம் ஆகும்.
தேசிய அளவில் பதிவான வழக்குகள்
புகார்கள் 1,86,84,289, இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகள் 26,47,722, சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டத் தின் கீழ் பதிவான வழக்குகள் 39,92,656, மொத்தம் 66,40,378.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக