வடக்கில் வெள்ளம் என்றால், தெற்கில் பஞ்சம். இதுதான் இந்தியா. இரண்டு பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு காலத்தில் பெருமளவு தண்ணீர் யாருக்கும் பயனின்றி கடலில் கலக்கிறது. இதற்கு விடிவுகாலமாக, நதிகள் இணைப்பு செயல்வடிவம் பெறுவதற்கான முயற்சி, துளிர் விடத் தொடங்கியுள்ளது. அதற்கான அறிவிப்பு மக்களவையில் வெளியாகியுள்ளது. கென் - பெட்வா, தாமன்கங்கா - பிஞ்சால், பார்தாவி - நர்மதா ஆகிய நதிகளை இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு கண்டறிந்துள்ளது. இந்த நதிகள் இணைப்பு தொடர்பான விரிவான ஆய்வு திட்ட அறிக்கைகளை தயாரிக்கும் பணியில் தேசிய நீர் மேம்பாட்டு அமைப்பு ஈடுபட்டது. இந்த திட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் ஒப்புதல் அளித்தால்தான் செயல்படுத்த முடியும். இந்த மூன்று திட்டங்களை செயல்படுத்தினால், 8.64 கோடி ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். 34 ஆயிரம் மெகாவாட் நீர் மின் உற்பத்தி செய்யலாம். இதுதவிர, குடிநீர் பிரச்னையை சமாளிக்கலாம். இதேபோல், தமிழகத்தில் நதிகள் இணைப்பு திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தியது. கரூர் மாவட்டம் மாயனூர் காவிரியாற்றில் இருந்து குண்டாறுடன் இணைக்க திட்டமிடப்பட்டது. 2009ல் இத்திட்டம் துவக்கப்பட்டு கடந்த மாதம் கதவணை சாலைப் பாலத்துடன் திறந்து வைக்கப்பட்டது.
அடுத்த கட்டமாக, நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு கால்வாய் வெட்டும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் காவிரி - குண்டாறு இணைப்புக்கான பணிகள் முதலில் மேற்கொள்ளப்படுகிறது. கால்வாய் அமைக்கும் பணிக்காக பொதுப்பணித்துறையில் யி5,200 கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, தமிழக அரசின் பரிந்துரைக்காக காத்திருக்கிறது. தமிழகத்தில் ஓடும் வைப்பாற்றுடன் கேரளாவின் பம்பா - அச்சன்கோவில் ஆறுகளை இணைக்க திட்டம் முன்வைக்கப்பட்டு உள்ளது. ஆனால், இதற்கு கேரளா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. வேற்றுமையில் ஒற்றுமை காணுவது இந்தியா. வேற்றுமை பல இருந்தாலும், எல்லோருக்கும் பயன்தரக்கூடிய நதி நீர் திட்டத்தை நிறைவேற்ற அனைத்து மாநிலங்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது அவசியம். அதன் பலனை நாடு பெறும்போது, மக்களின் தாகம் தீரும். தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைப்பதுடன், நாடே வளமாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக