திங்கள், 28 ஜூலை, 2014

தன்னம்பிக்கை - தற்காப்பு - தன்னொழுக்கம்

உலக மானிட சமுதாயத்தின் பரிமாண வளர்ச்சியிலும்,"உலகெல்லாம்" வாழும் மனிதர்களின் மனங்களிலும்,  "உலகம் யாவையும்" தமக்கே, தம் ஆளுகையின் கீழ் என போர் முரசு கொட்டி, வென்று புகழ் கொடி நாட்டிய, உலகம் எல்லாம் ஆண்ட மாமன்னர்களின் பொற்கால ஆட்சியின்,புகழ் பாடும் பொன்னேடுகளிலும், வேராய் இருந்து, பூவாய் பூத்து பொலிந்து, ஓங்கி உயர்ந்து நிற்கும் உண்மை கருத்து என்ன ?

உலகை வாழ்விக்க வந்த உத்தமர்கள்,உன்னதமானவர்கள்,உயர்ந்த உள்ளம் பெற்றோர்கள் உணர்த்த விரும்பிய உண்மை என்ன?  அனைத்து சமுதாயத்தவர்கள்,சாதாரண மக்கள்,குழந்தைகள் முதல் வயதில் முதிந்தவர்கள் வரை விரும்புவது என்ன ?

"ஆர்பாட்டமில்லாத, அமைதியான, நிம்மதியான வாழ்க்கை". அத்தகைய வாழ்க்கைக்கு என்னென்ன தேவை ? வாருங்கள் பார்க்கலாம்..

காட்டில் காட்டு விலங்குகளை விட கீழாகவும், விலங்குகளை போலவும் இருந்த காட்டு மிராண்டிகள், தன்னை விட வலிமைமிக்க வன விலங்குகளான சிங்கம்,புலி,கரடி,யானை போன்வைகளை வெல்லவும், இயற்கையான-இடி,மின்னல்,புயல்,சூறாவளி,பெரு மழை,வெள்ளம்,ஆறு,கடல்,இயற்கை சீற்றம் போன்றவைகளை சமாளிக்கவும்...முதலில் தேவையாயிருந்தது "தன்னம்பிக்கை".

அந்த ஒரு எண்ணம்,உள் உணர்வு வந்தவுடன், தம்மை சுற்றி,தம்மை சார்ந்த குழுக்களை காத்திட, கையில் கிடைத்த கற்கள்,மரக்கட்டைகள்,கூர்மையான மரக்குச்சிகள்,பிறகு உலோகங்களான ஈட்டி,வேல்,வாள் கொண்டு போராட  தொடங்க தேவையாயிருந்தது "தற்காப்பு".

தன்னம்பிக்கை வளர்ந்து,வளர்ந்து.. தற்காப்பு கருவிகள் பெருகி பெருகி..ஆற்றங்கரையில்,மனித சமுதாயம் வளமை பெற்ற காலங்களில்,அவன் சிந்தனைகளின் செழுமை, நாகரிகத்தின் பெருமை, அவனை தனித்தன்மையுடன் வெளிப்படுத்தி காட்டியது..."தன்னொழுக்கம்".

குமரிக்கண்டத்தில் தோன்றி, "பற்றுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து குடரிக் கோடும்,கொடுங்கடல் கொள்ள",நிலப்பரப்பு மாற்றம் கொள்ள,உலகின் மையப்பகுதியான ஆசியா,ஐரோப்பா,ரோம்,எகிப்து,கிரேக்கம்,சீனம்,இந்தியா சென்று, பல்வேறு இன மக்களாய் வாழ்ந்து, நாகரிக தொட்டில்களில்,சிரித்து,செழித்து மலர்ந்த போதும்..தேவைப்பட்டது இந்த
"தன்னம்பிக்கை -தற்காப்பு-தன்னொழுக்கம்". ஆதி காலம் முதல், இன்றைய அணுகுண்டு காலம் வரை, அதன் அவசியம் உணர்த்தப்பட்டே வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக