இந்தியாவில் இணையத்தின் பயன்பாடு மிகவும் அதிகரித்துக்கொண்டு வருவதால், வருங்காலத்தில் டிஜிட்டல் உலகை வடிவமைப்பதில் இந்தியா மிகப் பெரிய சக்தியாக திகழும் என்று மொஸில்லா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மார்க் சர்மான் தெரிவித்துள்ளார்.
இன்னும் பத்தாண்டுகளில், கிட்டதட்ட ஐந்து முதல் ஆறு பில்லியன் மக்கள் இணையத்தைப் பயன்படுத்த கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பேசிய மார்க் சர்மான், “இணையம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி மக்களுக்கு தெளிவான புரிதல் வேண்டும். இதில் இந்தியா சிறந்து விளங்குகிறது”, என்று தெரிவித்தார்.
இந்தியாவுக்கு பல முறை பயணம் மேற்கொண்டுள்ள சர்மான், இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களை கண்டு வியந்துள்ளார். “நான் இந்தியாவுக்கு வந்தபோது, இங்கிருக்கும் தொழில்நுட்ப வல்லுநர்களை பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். குறிப்பாக, மொஸில்லா தன்னார்வலர்கள் தாங்கள் கற்பது மட்டுமின்றி, மற்றவர்களுக்கு கற்றுக்கொடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும், சமீபத்தில் துவங்கிய உலக டிஜிட்டல் கல்வியறிவு திட்டத்தில், இந்தியாவுக்கு முக்கிய பங்கு உள்ளது”, என்று நெகிழ்கிறார்.
இம்மாத தொடக்கத்தில், ‘Maker Parties’ என்ற இணைய கல்வியறிவை பெருக்கும் இரண்டு மாத உலக பிரச்சார நிகழ்ச்சிகளை மொஸில்லா நிறுவனம் துவங்கியது.
உலகம் முழுவதும் உள்ள 350 நகரங்களில் கிட்டத்தட்ட 2,000 நிகழ்ச்சிகளை மொஸில்லா நிறுவனம் நடத்தவுள்ளது.இதில், பெரும்பாலான நிகழ்ச்சிகள் இந்தியாவில் நடக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக