புதன், 9 ஜூலை, 2014

அண்ணா நூலகம்

‘‘வீடுகளை அழி, அவன் அடையாளம் இல்லாமல் போகட்டும்
பள்ளிக்கூடங்களை அழி, அவன் பண்பாடு இல்லாமல் போகட்டும்
நூலகங்களை அழி, அவன் வரலாறே இல்லாமல் போகட்டும்!’’


***************
தமிழகத்தில் 4,028 பொது நூலகங்களும் 12,620 ஊராட்சி நூலகங்களும் இருக்கின்றன. ஆனால்இன்றைய நவீன உலகில், ‘நூலகம்’ என்ற சொல்லுக்கு உள்ள விரிவான அர்த்தத்தைக்கொண்டு இருப்பது அண்ணா நூலகம் மட்டும்தான். 172 கோடியில், 3.75 லட்சம் சதுர அடிகள் பரப்பளவில், 9 தளங்களில் அமைந்து இருக்கும் இது ஆசியாவின் இரண்டாவது பெரிய நூலகம். ஏறத்தாழ 12 லட்சம் புத்தகங்களைவைக்கும் கொள்ளள வைக்கொண்ட இதில்,இப்போது 5.5 லட்சம் புத்தகங்கள் இருக்கின்றன. இவற்றில் தமிழ்ப் புத்தகங்களின் எண்ணிக்கை மட்டும் 1.5 லட்சம். இங்கு உள்ள புத்தகங்களின் மதிப்புக்கு ஓர் உதாரணம் ‘என்சைக்ளோபீடியா ஆஃப் ஹ்யூமன் பயாலஜி’. மருத்துவம் தொடர்பான இந்த நூல் தொகுதியின் விலை எவ்வளவு தெரியுமா? 1,99,545.

உலகின் முக்கியமான பதிப்பகங்களான ஆக்ஸ்ஃபோர்டுகேம்பிரிட்ஜ் பதிப்பகங்கள் வெளியிட்ட முக்கியமான நூல்கள் அத்தனையும் அண்ணா நூலகத்தில் உண்டு. யுனெஸ்கோவின் உலக இணைய நூலகத்துடன் இணைக்கப் பட்ட இதன் மூலம்உலகின் முக்கியமான நூலகங்கள் எதையும் தொடர்புகொள்ள முடியும்.
*******************
ச்சயமாக கருணாநிதியின் சாதனைதான்... அண்ணா நூலகம். மருத்துவமனையின் பெயரால் அதை அழித்துவிடுவதாலேயே கருணாநிதியின் பெயரையும் அழித்துவிட முடியும் என்று ஜெயலலிதா நம்பினால்அது அறியாமை.

அமெரிக்காவின் லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் நூலகம் பிரிட்டிஷ் படைகளால் அழிக்கப் பட்டபோதுஅமெரிக்காவின் முன்னாள் அதிபர் தாமஸ் ஜெபர்சன் சொன்னார்: ''மக்களின் தேவைகளை அறிந்துகொள்ளஉலகில் எந்தெந்தத் துறைகளில்என்னென்ன புத்தகங்கள் இருக்கின்றனவோ,அவ்வளவையும்கொண்ட நூலகமாக இதை மீண்டும் நிர்மாணிப்போம்.''

தன்னுடைய வார்த்தைகளுக்காக ஜெபர்சன் கடுமையாக உழைத்தார். அவருக்குப் பிந்தைய அமெரிக்க அதிபர்கள் அத்தனை பேரும் உழைத்தார்கள். இன்றைக்கு 460 மொழிகளைச் சேர்ந்த 14.4 கோடிப் புத்தகங்கள்வரைபடங்கள்குறுந்தகடுகள்கையெழுத்துப் பிரதிகளுடன் லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் உலகின் மிகப் பெரிய நூலகமாகத் தலைநிமிர்ந்து நிற்கிறது. ஆட்சியாளர்களுக்குப் புத்தகங்களுடனும் நூலகங்களுடனும் இருக்க வேண்டிய உறவுக்கு உதாரணமாக லைப்ரரி ஆஃப் காங்கிரஸும் ஜெபர்சனும் வரலாற்றில் நினைவுகூரப்படுகிறார்கள். வரலாற்றில் ஜெயலலிதாவும் நினைவுகூரப்படுவார். பண்டைய இந்தியாவின் அறிவுச் சுரங்கமான நாளந்தா நூலகத்தை அழித்து இன்றும் நினைவுகூரப்படும் முஹம்மது பின் பக்தியார் கில்ஜிபோல!
****************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக