புதன், 9 ஜூலை, 2014

தி ஸ்கூல்

  இந்தியாவின் சிறந்த பள்ளிகளில் ஒன்று அதுஆச்சர்யம்... அதை ஒரு நாளும் அவர்கள் விளம்பரப்படுத்திக்கொண்டதுகிடையாதுஏனென்றால்அவர்களுக்குப் போட்டிகள் ஒரு பொருட்டல்லவெற்றிகள் பொருட்டல்லபரிசுகளும் பொருட்டல்ல! 

         ஐந்து வயது நிரம்பிய ஒரு குழந்தை ‘‘எனக்கு மூடு சரியில்லைவகுப்பில் உட்கார்ந்திருக்கப் பிடிக்கவில்லை’’ என்றுஆசிரியரிடம் சொல்லி--விட்டுபள்ளியின் பூங்காவில் மரத்தடியில் தனிமையில் உலவ முடியும் என்றால்அது ‘தி ஸ்கூலில்மட்டுமே சாத்தியம்சென்னையில் 1973-ல் நிறுவப்பட்ட இந்தப் பள்ளிஜே.கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை நடத்தும் 9பள்ளிக்கூடங்களில் இரண்டாவதாகத் தொடங்கப்பட்டது.  ‘‘சரியான கல்வியானதுதொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ளஊக்குவிக்கும்போதேஅதைவிட மிக முக்கியமான ஒன்றைச் சாதிக்க வேண்டும்அதாவதுவாழ்வின் முழுப் பரிமாணத்தைமனிதன் உணரும்படிச் செய்ய வேண்டும்’’ என்று சொல்வார் ஜே.கே. ‘‘போர்கள் அற்ற அமைதியான உலகம் வேண்டும்என்றால்அது முதலில் போட்டிகள் அற்ற உலகமாக இருக்க வேண்டும்’’ என்பது ஜே.கே-வின் நிலைப்பாடு.  போட்டிகள்கிடையாதுதேர்வுகள் கிடையாதுஒப்பீடுகள் கிடையாதுவெற்றிகள் கிடையாதுதோல்விகள் கிடையாதுபரிசுகள்கிடையாதுதண்டனைகளும் கிடையாது என்று ஜே.கே-வின் எண்ணங்களுக்கு ஏற்ப பள்ளிக்கூடங்களை நடத்துவது என்பதுஇன்றைய சூழலில் அவ்வளவு எளிமையானது அல்லஒட்டுமொத்த உலகின் போக்குக்கும் எதிர் திசையில் பயணிப்பதற்குஒப்பானதுபன்னிரெண்டாம் வகுப்பு வரை படிப்பில் மட்டும் அல்லவிளையாட்டிலும் பாலினப் பாகுபாடின்றிசேர்ந்தேபங்கேற்கும் மாணவ - மாணவியரால் எப்படி விகல்பம் இல்லாமல் பழக முடியும்எட்டாம் வகுப்பு வரை தேர்வுகளேஇல்லாமல் படிப்பவர்களால்பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எப்படி வெற்றிகரமாக எழுத முடியும்அசந்தால்நம் காலின்மேலேயே கண நேரத்தில் ஏறி நின்றுவிடக் கூடிய இன்றைய போட்டிச் சூழ் உலகைபோட்டிகளைச் சந்திக்காமல் வளரும்குழந்தைகள் எதிர்கொள்வது எப்படிஇப்படி எண்ணற்ற கேள்விகளுக்குகுழந்தைகளைப் பதில்களாக்கி நடமாடவிட்டுஇருக்கிறது இந்தப் பள்ளிக்கூடம்.

        ஆசிரியர்களை அண்ணாஅக்கா என்று அழைக்கிறார்கள் குழந்தைகள்ஆசிரியர்கள் மேல் துளி பயம் இல்லாமல்அவர்களை அணுகுகிறார்கள்எதைப் பற்றியாரிடம் வேண்டுமானாலும் கேட்கும் சுதந்திரம் அவர்களுக்கு இருக்கிறது.அவரவருக்கு விருப்பமான உடைகளை அணிந்து இருக்கிறார்கள்பாடங்களைப் படிக்கிறார்கள்பாட்டு - நடனம்கற்றுக்கொள்கிறார்கள்ஓவியங்கள் வரைகிறார்கள்விளையாடுகிறார்கள்மரத்தடியில் அமர்ந்து விவாதம் நடத்துகிறார்கள்,நெசவு நெய்கிறார்கள்... எல்லாமும் அவர்களுடைய  விருப்பப்படியே நடக்கிறதுஆனால்அவர்களிடமிருந்து வெளிப்படும்ஆற்றல் பிரமிக்கவைக்கிறது
    
   
ஆசிரியர்கள் ஒவ்வொருவருமே ஆச்சர்யப்படுத்துகிறார்கள்இந்தப் பணிக்காக மிகப் பெரிய பதவிகளைசம்பளத்தைஎல்லாம் விட்டுவிட்டு பணியாற்றுபவர்கள் நிறையப் பேரைப் பார்க்க முடிகிறதுஎல்லோரிடமுமே நிதானத்தையும்தெளிவையும் பார்க்க முடிகிறதுபள்ளி மைதானத்தில்புழுதி கால்களோடு சின்ன பையனைப் போல்விளையாட்டு ஆசிரியர்வினயன் ஓடிக்கொண்டிருக்கிறார். ‘‘எவ்வளவு வசதிகள் இருந்தாலும் சரி... ஒரு விளையாட்டைச் சுவாரஸ்யமாக நீவிளையாட வேண்டும் என்றால்உன்னை எதிர்த்து ஆட ஆட்டக்காரன் வேண்டும்இதுதான் விளையாட வரும்மாணவர்களிடம் நாங்கள் சொல்லும் முதல் செய்திஎல்லோருக்குமே எல்லோருமே முக்கியம் என்று புரிந்துகொள்வதைவிடவாழ்க்கையில் நல்ல விஷயம் என்ன இருக்க முடியும்?’’ என்று கேட்கிறார் வினயன்ஓவிய ஆசிரியர் தாரித் பட்டாச்சார்யாஇன்னும் வியக்கவைக்கிறார்கரிக்கட்டைகள்களிமண் என்று கைக்குக் கிடைக்கும் பொருட்களை எல்லாம் நம்முடையமுன்னோர்கள் எப்படி அற்புதமான மையாகப் பயன்படுத்தினார்கள் என்பதைக் கற்றுக்கொடுத்திருக்கிறார்ஓவியக்கூடம்அமைந்திருக்கும் பகுதியில் உள்ள  சுவர்கள் முழுவதும் ஓவியங்களாக இருக்கின்றனதேர்ந்த தொழில்முறை ஓவியர்களின்ஓவியங்களுக்குச் சவால் விடுகின்றன அவை. ‘‘காகிதங்களில் வரையக் கற்றுக்கொடுக்கும்போதுகுழந்தைகளுக்கானபடைப்பு எல்லை சுருங்கிவிடுகிறதுஅதனால்தான்மிக நீளமான சுவர்களை உங்கள் திரைகள் ஆக்கிக்கொள்ளுங்கள் என்றுகுழந்தைகளுக்குச் சொல்லி இருக்கிறேன்’’ என்று சிரிக்கிறார் பட்டாச்சார்யாகுழந்தைகள் இங்கே படிக்கும்போதும் சரி,விளையாடும்போதும் சரி... அந்தந்த வகுப்பு சார்ந்து பங்கேற்பது இல்லைஒன்று முதல் நான்காம் வகுப்பு வரைஐந்து முதல்ஏழாம் வகுப்பு வரை என்று கலந்து கலந்துதான் பங்கேற்கவைக்கப்படுகிறார்கள். ‘‘வாழ்க்கையின் எல்லாக்காலகட்டங்களையும் எல்லா வயதினருடனும் சேர்ந்தேதானே எதிர்கொள்கிறோம்எனில்பள்ளிக்கூடமும் அப்படித்தானேஇருக்க வேண்டும்?’’ என்கிறார்கள்குழந்தைகள் சோழர்களைப் பற்றிப் படிக்கும்போது தஞ்சாவூருக்கு அழைத்துச்செல்கிறார்கள்அவர்களுக்கு காந்தியைப் பற்றிச் சொல்லிக்கொடுக்கும்போது வார்தாவுக்கு அழைத்துச் செல்கிறார்கள். ‘‘கல்விஎன்பது அடிப்படையில் உணர்தல்தான்’’ என்கிறார் முதல்வர் ஜெயஸ்ரீ நம்பியார். 

 
        பொதுத்
 தளத்தில் ‘தி ஸ்கூல்’ தொடர்பாக ஒரு பிம்பம் உண்டு. ‘‘பணக்கார வீட்டுக் குழந்தைகள் படிக்கும்,பணக்காரர்களுக்கான பள்ளிக்கூடம்’’ என்பதே அதுஆனால்கிட்ட நெருங்கிப் பார்க்கும்போது அது உண்மை இல்லை என்றேதோன்றுகிறதுகோடீஸ்வரர்களின் பிள்ளைகளின் மத்தியில்பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய நிலையில் உள்ளகுழந்தைகளும் கல்வி உதவித்தொகையுடன் படிப்பதைப் பார்க்க முடிகிறதுதவிரதன்னுடைய மாணவர்களைத் தாண்டியும்கல்விச் சேவையை எடுத்துச் செல்கிறது ‘தி ஸ்கூல்’. நாட்டின் பொதுக்கல்வித் துறையில் தமிழகம் கொண்டுவந்த முன்னோடித்திட்டமான செயல்வழிக்கற்றல் திட்டம் இங்கிருந்து உருவாக்கம் பெற்றதுதான்அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்புப்பயிற்சிவிளிம்பு நிலையில் இருக்கும் பள்ளிகள் தத்தெடுப்பு போன்ற சில பணிகளையும் முன்னெடுக்கிறது.


        
நம் நாட்டில் 66 ஆண்டுகளாக குழந்தைகள் சுதந்திரத்தைப் பற்றியும் மாற்றுக் கல்விமுறையைப் பற்றியும்பேசிக்கொண்டே இருக்கிறோம்அரசு ஏன் ‘தி ஸ்கூல்’ முறையைப் பின்பற்றக் கூடாதுஇந்தியாவின் நான்கில் ஒரு பள்ளிதனியார் பள்ளி என்கிற அளவுக்கு அரசுப் பள்ளிகளுக்கு இணையாகத் தனியார் பள்ளிகள் வளர்ந்துவரும் காலம் இதுஏன்தனியார் பள்ளிகள் இந்தக் கல்விமுறையை முன்னெடுக்கக் கூடாது?

ஆனந்த விகடன் மார்ச், 2013.


 
ஒரு விண்ணப்பம்:  சென்னையில்தியாஸபிகல் சொசைட்டிக்குச் சொந்தமான இடத்தில் இதுவரை செயல்பட்டுவந்த  'திஸ்கூல்இப்போது அந்த இடத்தைக் காலி செய்ய வேண்டிய சூழலில் இருக்கிறதுநிரந்தரமான ஓர் இடத்தில் செயல்பட  புதியபள்ளிக்கட்டடம் கட்டும் திட்டத்தை ஜே.கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளையினர் மேற்கொண்டுவருகின்றனர்அதற்கு நிதி உதவிஅவர்களுக்குத் தேவைப்படுகிறதுஇப்படி ஒரு பள்ளிக்கூடம் நம்மூரில் ஒரு நிரந்தர இடத்தில் நீடிப்பது முக்கியம்எனவே,முடிந்தவர்கள் அவசியம் உதவுங்கள்
 
விவரங்களுக்கு:
தொலைபேசி எண்: 044 - 2491 5845, 2446 5144
மின்னஞ்சல்:  theschool.kfi.chennai@gmail.com
இணையதளம்http://www.theschoolkfi.org/index.php

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக