வள்ளுவரின், ‘தற்காத்து’ என்னும் சொல்லுக்கு இந்த அஞ்சாமைதான் பொருள். தீமையை எதிர்கொள்ளும் திறன் கல்வி மூலம் கிடைக்காதபோது, வெறும் பட்டறிவால் என்ன பயன்? ‘நிலத்தில் யாருக்கும் அஞ்சாத திமிர்ந்த ஞானச் செருக்கு’ என்று பாரதியும் இதைத்தானே வலியுறுத்துகிறார்? அஞ்சாமை, அறம், அறச்சீற்றம் இவையெல்லாம் கல்வியுடன் போதிக்கப்பட்ட வேண்டும். வீட்டிலும் கற்றுத்தரப்பட வேண்டும். அப்போதுதான் பெண்கள் மீதான வன்முறையும் அடக்குமுறையும் குறையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக